ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Wednesday, 9 August 2017

பலப்படுத்தக் கூடிய சகோதர உறவ

ஒரு கதை...

தலைப்பு இல்லை;  நீங்களே ஒரு தலைப்பை இடுங்கள்.

கதை ஆரம்பம்....

ஒரு ஊரில் ஒரு கிணறு இருந்தது. அதில் தான் அவ்வூர் வாசிகள் தண்ணீர் குடித்து வந்தனர்.

ஒரு நாள்...

அவர்கள் நீர் அள்ள கயிற்றை கிணற்றில் விட்டதும் வாளியின்றி கயிறு மட்டும் வெளியே வந்தது.

இவ்வாறு நடக்க காரணம் என்ன? என்பது அறியப்படாமலேயே பல முறை இந்நிகழ்வு நடந்தது....

இதனால் அவ்வூர் மக்கள் "இக்கிணற்றில் ஒரு ஜின் வசிக்கிறது" என தமக்குள் பேசிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர் " எங்களில் ஒருவர் இக்கிணற்றில் இறங்கி உண்மையான தகவலை அறிந்து வர வேண்டும் " எனக் கூறினார்.

உள்ளே சென்றால் காணாமல் போய்விடுமோ என்ற பயத்தால் ஒருவரும் கிணற்றில் இறங்க முன்வரவில்லை.

ஆயினும் ஒருவர் ஒரு கயிற்றை கட்டி அதன் உதவியுடன் கிணற்றில் இறங்க  இணங்கினான்.

எனினும் அவனிடம் ஒரு நிபந்தனை இருந்தது.

அது என்னவெனில் அவன் கட்டி இறங்கும் கயிற்றை அவர்களுடன் சேர்ந்து அவனுடைய சகோதரனும் பற்றி பிடிக்க வேண்டும் என்பதாகும்.

ஊர் மக்கள் அவனுடைய நிபந்தனையைக் கேட்டு வியந்தனர்.

ஏனெனில் கயிற்றை விடாது இறுக பற்றிப் பிடிக்கக் கூடிய பலசாளிகளாக அவர்கள் இருந்தனர்.

அவனை எவ்வளவு தான் திருப்பதி படுத்த முயன்றும் அது பயனளிக்கவில்லை.

அவ்விடத்திற்கு அவனது சகோதரன் சமூகமளித்திருக்கவும் இல்லை.

கடைசியில் அவனையும் கயிற்றை பிடிக்க அழைத்து வர ஒப்புக் கொண்டு அவனை அழைத்து வந்தனர்.

பின்னர் அவன் உண்மை செய்தியை அறிய அக்கிணற்றில் இறங்கினான்.

அதனுள் ஒரு குரங்கு இருந்தது.

அதுதான் இதுவரைக் காலமும் வாளிகள் காணாமல் போக காரணம்.

அவன் தகவலை அறிவிக்காது அக்குரங்கை தலையில் வைத்துக் கொண்டு கயிற்றை மேலே இழுக்குமாறு கூறினான்.

கிணற்றின் மேற்பாகத்தை அடையும் போது;  விசித்திரமான  ஒன்றைக் கண்ட மக்கள் அது தான் ஷைத்தான் என என்னி  கயிற்றை விட்டு விட்டு விரண்டோடினர்.

அவனுடைய சகோதரனைத் தவிர
வேறு எவரும் கயிற்றை பிடிக்க அவ்விடத்தில் இருக்கவில்லை. 

அவன் சகோதரனுக்கு என்ன நடந்ததோ என்று பயந்து தொடர்ந்து கயிற்றை பிடித்துக் கொண்டே இருந்தான்.

கடைசியில் அவனுடைய சகோதரன் கிணற்றிலிருந்து வெளியே வந்தான்.

அதன் போது மக்கள் அனைவரும் அவனுடைய வெற்றிக்கு அல்லாஹ் அவனுடைய சகோதரனை ஒரு காரணியாக வைத்ததை உணர்ந்தனர்.

இல்லையேல் அவர்கள் கயிற்றை விட்டு விட்டு விரண்டோடிய சமயத்தில் அவன் கிணற்றில் விழுந்து இறந்திருப்பான்.

கதை முடிவடைந்தது....

ஆனால் இதிலிருந்து நாம் பெறக்கூடிய படிப்பினை என்ன?

இவ்வசனத்தைக் கொஞ்சம் அவதானியுங்கள்.

"உம் சகோதரனைக் கொண்டு உம் புஜத்தை நாம் வலுப்படுத்துவோம்"

அல் குர்ஆன் (28:35)

இது யாரால் யாருக்கு எச்சந்தர்பத்தில் கூறப்பட்டது என்று தெரியுமா?

அல்லாஹ்வால்
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு...

அவர்கள் பிர்அவ்னிடம் தனியாகச் செல்லப் பயப்பட்டு தன்னுடன் தன் சகோதரனையும் அனுப்புமாறு கேட்ட போது கூறப்பட்டது.

அல்லாஹ் அவருடைய சகோதரனைத் தவிர சொந்த பந்தங்களில் வேறு எவரைக் கொண்டும் அவரைப் பலப்படுத்த நாடவில்லை.

அது ஏன்?

இதிலிருந்து என்ன விளங்குகின்றது?

உலகில் எங்களை பலப்படுத்தக் கூடிய ஒரு  உறவு  தான் எங்கள் சகோதரர்கள். 

அவர்களைப் போன்ற  உறவை நாங்கள் ஒரு போதும் பெற மாட்டோம்...

இதனையும் கொஞ்சம் அவதானியுங்கள்.

அவரின் சகோதரயிடம் "நீ அதனை பின் தொடர்ந்து செல்" என்று அவள் கூறினாள்.

அல் குர்ஆன் (28:11)

இது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய் அவர்களின் சகோதரிக்கு  அவர்கள் ஆற்றில் போடப்பட்ட சந்தர்பத்தில் கூறியதை அல்லாஹ் குர்ஆனில் நினைவுபடுத்தியுள்ளான்.

எங்கள் நிலமைகளை கண்காணித்து ஆராய்ந்து அமைதி அடையக்கூடிய ஒரு உறவு தான் எங்கள் சகோதரி.

அவளின் பாசத்தை  பெறுவதில் நாம் ஆர்வம் காட்ட முயல வேண்டும்.

கடைசியாக ஒரு கேள்வி?

அல்லாஹ் ஏன் இவ்விரு உறவுகளைப் பற்றியும் குர்ஆனில் குறிப்பிட வேண்டும்???

எங்கள் தாய் தந்தையருக்கு பிறகுள்ள அழகான உறவு தான்  எங்கள் சகோதர சகோதரிகள்.

அவர்களுடன் சிறந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

எங்களது வெற்றிக்கு அவர்களையும் அல்லாஹ் ஒரு காரணியாகா வைத்துள்ளதை நாம் மறந்து விடக்கூடாது.

எங்களை சுற்றி எத்தனை தான் உறவுகள் இருந்தாலும் எங்களுக்கு என்றே இருக்கக் கூடிய உறவுகள் தான் எம் சகோதர சகோதரிகள்.

விலை மதிப்பற்ற சிறு சிறு விடயங்களுக்காக அவர்களது அன்பை உறவை இழந்து விடாதீர்கள்!

படித்ததில் என்னைக் கவர்ந்ததை சிறு மாற்றங்களுடன் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

No comments:

Post a Comment