ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Sunday, 22 December 2019

இஸ்லாமியர்களின் தேசப்பற்று பாடல்கள்

*📍தேசப்பற்று பற்றி பேசும் பாஜகவினருக்கு ஒரு நினைவூட்டல்.........*

"ஜெய் ஹிந்த் " என்ற மாபெரும் முழக்கம் கொண்ட இந்த வார்த்தையை உருவாக்கியவர் 1941ல்  "ஆபித் ஹசன் சப்ரானி" எனும் இஸ்லாமியர்....

"இங்குலாப் ஜிந்தாபாத்" எனும் சொல்லை உருவாக்கியவர் "ஹஸ்ரத் மொஹானி" எனும் இஸ்லாமியர்....

"மா தேரே வதன் பாரத் மாத்தா கி ஜெய்" எனும் மாபெரும் எழுச்சிமிகு வார்த்தையை முதன் முதலில் உச்சரித்தவர் "அஸீமுல்லா கான்" எனும் இஸ்லாமியர்....

மகாத்மா காந்தியின் பெயரில் சொல்லப்படும் (QUIT INDIA) "குய்ட் இந்தியா" எனும் தலைப்பை உருவாக்கியவர் சுதந்திர போராட்ட வீரரும், 1942ல் பம்பாய் மேயருமாயிருந்த "யூசுப் மெஹர் அலி" எனும் இஸ்லாமியர்....

"சாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" எனும் தேசப்பற்று மந்திரத்தை நமக்கு எழுதித்தந்தவர் "முஹம்மது இக்பால்" எனும் இஸ்லாமியர்....

சுதந்திர போராட்ட வீரர்களை உற்சாகத்தின் எல்லை வரை கொண்டு சென்ற, இன்றும் கேட்கும்போது நம்மை இந்தியனென்று கர்வம் கொள்ளச்செய்யும் "சர்பரோஷ் கி தமன்னா" என்கிற தேசபக்தி பாடலை 1921ல் எழுதியது உருது கவிஞர் "பிஸ்மில் அஸ்மாதி" எனும் இஸ்லாமியர்....

ஏய், இவங்களெல்லாம் கிடையாது நாங்க  மட்டும் தான் தேசப்பற்றாளர்கள் என்று ஊளையிடும் ஜந்துக்களின் காதுகளுக்கு இன்னொரு செய்திகூட இருக்கு கேட்டுக்கோங்க....

இந்திய முழுவதும் சுதந்திர போராட்டத்தில் வீர மரணமடைந்த சுதந்திர போராட்ட தியாகிகள் 95300 பேரின் பெயர்கள் "இந்திய கேட்டில்" செதுக்கி வைக்கப்பட்டுள்ளது...

இஸ்லாமியர்கள் : 61,395 பேர் 
இந்துக்கள் : 25,895 பேர் 
சீக்கியர்கள் : 8,050 பேர் 

இனி சொல்லுங்கள் நாங்கள் யாரிடம் தேசபற்றிற்கான சான்றிதழ் வாங்க வேண்டும்....

சரித்திரத்தை சரிவர புரட்டிப்பாருங்கள் RSS நம் நாட்டிற்கு செய்த துரோகங்கள் பட்டியல் அளந்திட முடியாது....

#நன்றி Mohamed Rafi

*📰காகிதம்*

Thursday, 19 December 2019

ஸுஹைப் இப்னு ஸினான்.

ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ (صهيب بن سنان الرومي)

தம் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவுடன் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,

மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவிற்கு வந்தபோது முதலில் தங்கியது குபா எனும் சிற்றூரில். மதீனா நகருக்கு வெளியே சுமார் மூன்று கி.மீ. தொலைவில் இருந்தது குபா. நபியவர்கள் ஏறக்குறைய 20 நாட்கள் அங்குத் தங்கியிருந்துவிட்டு, பின்னரே யத்ரிப் நகருக்குப் புறப்பட்டார்கள். அப்படி அவர்கள் குபாவில் தங்கியிருக்கும்போது வானவர் தலைவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், நபியவர்களிடம் இறைவன் அனுப்பிவைத்த வசனமொன்றைக் கொண்டுவந்து சேர்ப்பித்தார்.

"இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்" பின்னாளில் குர்ஆனில் இரண்டாவது அத்தியாயத்தில் 207ஆவது வசனமாக இடம்பெற்ற இறைவாசகம் அது. நபியவர்கள் அதைத் தம் தோழர்களிடம் அறிவித்துவிட்டுச் செய்தியொன்று சொன்னார்கள். தோழர்கள் ஆச்சரியத்துடன் அறிந்து கொண்ட செய்தி.

அதேநேரம் அல்லது அதற்குச் சிலநாள் முன்னர் மக்காவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஒருநாள் இரவு உறங்கிக் கொண்டிருந்த காவலர்களில் ஒருவன் அலறி அடித்துக்கொண்டு எழுந்து, "நம் ஆள் தப்பிவிட்டான்; ஓடிவிட்டான்" என்று தன் சகாக்களை எழுப்ப, அரக்கப் பரக்க எழுந்தார்கள் அவர்கள். அவசர அவசரமாய்க் குதிரைகளில் சேணம் பூட்டி, அந்த ஆள் தப்பித்துச் சென்றிருக்கும் திசை எதுவாக இருக்கும் என்பதை யூகித்து, அத்திசை நோக்கிப் பறக்க ஆரம்பித்தார்கள். அவர்களது ஊகம் தப்பவில்லை!

மக்காவிலிருந்து தப்பித்துச் சென்று கொண்டிருந்த அவர், தமக்குப் பின்னால் குதிரை ஒலிகள் நெருங்குவதைக் கேட்டார். பரந்த வெளியில் பதுங்கி மறைய ஏதும் இடம் இருப்பதாய் அவருக்குத் தெரியவில்லை. சிக்கினால் தப்பிப்பது கஷ்டம்; மக்காவிற்கு இழுத்துச்சென்று பிழிந்து எடுத்துவிடுவார்கள். சட்டென்று அருகில் தென்பட்ட செங்குத்தான குன்று ஒன்றின்மீது தாவி, ஓடி ஏறி நின்றுகொண்டார். அவரிடம் ஏதும் பயணப் பொருட்கள் இருந்ததாய்த் தெரியவில்லை. ஆனால் ஆயுதங்களை மட்டும் கவனமாக எடுத்து வந்திருந்தார். வில்லில் அம்பைப் பூட்டி ஏந்திக் கொண்டு அங்கிருந்தே இரைந்து கத்தினார் - "ஏ குரைஷிக்குல மக்கா! அல்லாஹ்வின்மீது ஆணையாகக் கூறுகிறேன். நான் ஒரு மிகச் சிறந்த வில்லாளி என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். என் குறி தப்பாது. நீங்கள் என்னை நெருங்குவதற்குமுன் எனது அம்புகள் உங்களைத் தாக்கும். ஒவ்வொருவரையும் எண்ணி எண்ணித் தாக்குவேன். மீறி நெருங்கினால் எனது வாள் உங்களுடன் உரையாடும். நீங்கள் என்னை உயிருடன் பிடித்துவிடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள்"

திகைத்து நின்றார்கள் அவர்கள்; வேகம் மட்டுப்பட்டது. அவர்களில் ஒருவன் கத்தினான். "நீ உனது செல்வத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களிடம் ஓடிவிட நாங்கள் அனுமதிக்க முடியாது"

சட்டெனப் புரிந்தது அவருக்கு. "இதுதான் உங்கள் பிரச்சினையா?" எளிது; அதைத் தீர்ப்பது அவருக்கு எளிது.

"எனது பணம், செல்வம் அனைத்தையும் உங்களுக்கு இனாமாகத் தந்துவிடுகிறேன். பிறகு நான் என் போக்கில் செல்லலாம்தானே?"

ஏக மகிழ்வுடன் தலையாட்டினார்கள் அவர்கள். குன்றிலிருந்து இறங்கி வந்தார் அவர்.

oOo

உபுல்லா நகர்!

நினைவிருக்கிறதா? "ஆம்" என்பவர்கள் முதுகில் தட்டிக் கொள்ளுங்கள். இல்லை என்பவர்களுக்காக சுருக்கமாய் இங்கு:

பாரசீகப் பேரரசின் முக்கியத் துறைமுக நகரம் உபுல்லா. அவர்களது வலுவான, தலையாய கோட்டைநகர். இராக் நாட்டில் அமைந்திருந்தது. உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சியின்போது அந்நகரைக் கைப்பற்ற உத்பா பின் கஸ்வான் (ரலி) தலைமையில் ஒரு படை புறப்பட்டுச் சென்றது என்பதையும் அதுசார்ந்த நிகழ்வுகளையும் அவரது வரலாற்றில் விரிவாய்ப் பார்த்தோம்.

மக்காவில் முஹம்மது நபிக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்நகருக்கு ஆளுநர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஸினான் இப்னு மாலிக். இவர் ஓர் அரபியர். நுமைர் கோத்திரத்தைச் சேர்ந்தவர். பாரசீக மன்னன் குஸ்ரோ அரபியர் ஸினானை அந்நகருக்கு ஆளுநராக நியமித்திருந்தான்.

பாரசீகத்தின் ஆளுநர் என்பதால் ஸினானிடம் வளமான பொருட் செல்வம்; இறையருளால் ஏராளமான பிள்ளைச் செல்வம். ஏகப்பட்ட பிள்ளைகளில் ஒருவர் ஸுஹைப். ரோசாக் கன்னம், செம்பு போன்ற தலைமுடி, துறுதுறு குறும்பு என்றிருந்த ஐந்து வயது ஸுஹைப், ஆளுநரின் செல்லப்பிள்ளை. கதைகளில் காட்சிகளில் காண்பதுபோல் அலுவல், அதிகாரம், இல்லம், குழந்தைகளுடன் விளையாட்டு என்று இன்பமாய்க் கழிந்து கொண்டிருந்து ஸினான் இப்னு மாலிக்கின் வாழ்க்கை.

நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் கோடை விடுமுறை வந்ததும் பிள்ளைகளுடன் ஊர்ப்புறங்களில் இருக்கும் தாத்தா, பாட்டி வீட்டிற்குச் செல்வது இன்றும் வழக்கமாய் இருக்கிறது இல்லையா, அதைப்போல் அன்றும் ஸினான் வீட்டில் அந்தப் பழக்கம் இருந்திருக்கிறது. நல்லதொரு கோடை காலம். ஆளுநர் ஸினானி்ன் மனைவி, "நான் அம்மா வீட்டிற்குப் போய்வருகிறேன். நீங்கள் சமையல்காரர் சமைத்துத் தருவதைச் சாப்பிட்டு, உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தம் பணியாட்கள், பணிப்பெண்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிக்கொண்டு, ஸுஹைபையும் தூக்கிக் கொண்டு தானீ எனும் தனது கிராமத்திற்குக் கிளம்பிவிட்டார்.

பயணம் கிளம்பி வந்தார்கள். சொந்த பந்தம் என்று பார்த்துப் பேசி, சிரித்து விளையாடி, உண்டு களித்து, ஏகாந்தமாய் பொழுது கழிந்து கொண்டிருந்தது.

அமைதியான ஒருநாளில், வழக்கமான ஒரு பொழுதில் தானீயை நோக்கி எங்கிருந்தோ சரேலெனப் பாய்ந்து வந்தது ரோமர்களின் குறும்படை ஒன்று. பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் தீராத பழி, மாறிமாறி தாக்கிக் கொள்ளும் போர்வெறி என்று தெரியுமில்லையா? ஏதோ ஒரு பழிவாங்கும் செயல்போல் வந்தார்கள் ரோமர்கள். ஒரு கொள்ளைக் கூட்டம் கிராமத்தைக் கொள்ளையடிக்கும் என்று படிப்போமே அதைப்போல் குதிரைகளில் கிளம்பிப் பறந்துவந்து அந்தக் கிராமத்தினுள் நுழைந்தது அந்தப்படை. காவலுக்கு இருந்த வீரர்களைச் சகட்டுமேனிக்கு வெட்டித்தள்ளிச் சாய்த்தார்கள். வீடுவீடாய்ப் புகுந்து அகப்பட்டப் பொருள்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு சிலபல மக்களைக் கடத்தினார்கள். பொருட்களையும் மக்களையும் குதிரைகளின்மேல் தூக்கி வைத்துக்கொண்டு போயே போய்விட்டார்கள். கடத்தப்பட்ட மக்களில் சிறுவர் ஸுஹைபும் ஒருவர்.

புயல்கடந்த பூமியாய் மாறிப்போனது தானீ.

இப்பொழுதெல்லாம் கடத்தப்பட்ட வாகனங்களைக் கழட்டிப்போட்டு விற்பதற்கென்றே நகரங்களில் சில பேட்டைகள் இருக்கிறதே அதைப்போல் அன்று கடத்தப்பட்ட மக்களையெல்லாம் சந்தைக்குக் கொண்டுவந்து விற்றுவிடுவது வழக்கம். அதற்குமுன் ராசா வீட்டுக் கன்றுக்குட்டியாக இருந்திருக்கலாம்; எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். பிடிக்கப்பட்டு விற்கப்பட்டால் தீர்ந்தது விஷயம் - அவனோ அவளோ அடிமை. என்றென்றும் அடிமை. ஆளுநரின் செல்ல மகனாய், அனைத்து வசதிகளுடனும் வாழ்ந்து கொண்டிருந்த சிறுவர் ஸுஹைபின் வாழ்க்கை சடுதியில் மாறிப்போனது. அடிமைச் சந்தையில் ரோமர்களிடம் விலைபோனார் அவர்.

அக்காலத்தில், ஒரே எசமானனிடம் ஓர் அடிமை பலகாலம் அடிமைப்பட்டுக் கிடப்பதும் உண்டு. அல்லது ஓர் அஃறிணைபோல் பண்டமாற்றாய், நன்கொடையாய் கைமாற்றிக் கொள்ளப்படுவதும் உண்டு. ரோம நாட்டின் மேட்டுக்குடியினரும் குறிப்பிட்ட அடிமைகளின் முகத்தையே நாள்தோறும் பார்த்துக்கொண்டிருப்பது சலிப்படைய வைக்கிறது என்று அடிமைகளை விற்று, வாங்கி மாற்றிக் கொண்டிருந்தார்கள். இதனால் எசமானன் மாற்றி எசமானன் என்று அடிமையாய்க் கைமாறிக் கொண்டிருந்தார் ஸுஹைப்.

ஆனால் அந்தக் கடும் விதியே பெரும் பாடமாய், ஞானம் புகட்டியது ஸுஹைபுக்கு. ஆடம்பரமும் பகட்டுமாய் வாழ்ந்து கிடந்த அந்தச் சமூகத்தை அதன் பளபளப்பைத் தாண்டிப் பார்க்கும் தூரநோக்கு அவருக்கு அமைந்து போனது. அடிமைகள் எசமானர்களுடன் அனைத்துப் பொழுதிலும் உடன் இருக்க நேர்வதால் அவர்களது அந்தரங்க வாழ்வை, ஒளிவு மறைவின்றி, எவ்வித இரகசியமும் இன்றிப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டு, உயர்ந்த மாளிகைச் சுவர்களின் பின்னே நடைபெறும் அக்கிரமங்கள் அனைத்தும் அடிமைகளாக வாழ்வோருக்கு அத்துப்படியானது.

ரோமர்களின் மத்தியில் நாகரீகம் என்ற பெயரில் நிகழ்ந்து கொண்டிருந்த அனாச்சாரங்களையும் ஆபாசங்களையும் அட்டூழியங்களையும் சீர்கேடுகளையும் பார்த்துப் பார்த்து வெறுப்பின் உச்சத்தை அடைந்தார் ஸுஹைப். ‘அப்படியே முழுக்க முற்றிலுமாய் ஒரு வெள்ளம் வந்து மூழ்கடித்தால் மட்டுமே இந்த சமூகத்தைத் தூய்மைப்படுத்த முடியும்’ என்பார் அவர். அந்தளவிற்கு ரோம நாகரீகத்தின்மீதும் அந்தக் கேடுகெட்ட வாழ்க்கை மீதும் அவருக்குக் கோபம் ஏற்பட்டுப்போனது.

அன்றைய ரோம சமூகம் இருக்கட்டும், இன்று நாகரீகத்தின் உச்சம் என்று சொல்லிக் கொள்கின்றனவே மேற்கத்திய நாடுகளும் அவற்றை முன்னோடியாகப் பின்பற்றும் இதரர்களும் - என்ன செய்கிறார்கள்? ஆபாச நரகலில் மூழ்கி, ஒருகாலத்தில் மனிதன் கற்பனைகூட செய்திராத அக்கிரமங்களை எல்லாம் நாகரீகம் என்ற போர்வையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாவங்களையெல்லாம் நியாயங்களாக்கிப் பெருமிதமாய் உலா வந்துக்கொண்டிருக்கிறது மனித சமூகம்! அறிவியல் முன்னேற்றமும் சி்ந்தனா மாற்றமும் நவீன வசதிகளுடன் பெரும்பாலான மக்களை அஞ்ஞானத்தில் மூழ்கடிக்க மட்டுமே உதவிக் கொண்டிருக்கின்றன. உள்ளத்தில் ஏக இறைநம்பிக்கையும் இம்மை தாண்டிய இலட்சியம் அடிப்படையாகவும் அமைந்தாலொழிய நாள்காட்டியானது நூற்றாண்டுகளை எண்களில் மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கும்.

சிறு வயதிலேயே அந்நிய நாட்டு மக்களிடம் அடிமையாகிவிட நேர்ந்ததில் ஸுஹைபுக்கு, அவரது தாய்மொழியான அரபுமொழி அந்நியமாகிப்போனது. ஆயினும் அரபும் அரபியர்களும் தன் மொழி, தன் மக்கள் என்ற தன்னிரக்கம் மட்டும் அவருக்கு அடங்கவில்லை. பல ஆண்டுகளாய் ரோமர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தாலும் தான் ஓர் அரபியன் என்ற எண்ணம் அவர் மனதில் வேர்விட்டுக் கிடந்தது. விடுதலைக்கு மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு வாய்ப்பு அமைந்தால் போதும் தப்பித்துவிடலாம் என்று காத்துக் கிடந்தார்.

மதீனாவில் இருந்த யூதர்கள் தங்களது வேதம் முன்னறிவித்தபடி நபியொருவர் வரப்போகிறார் என்பதை அறிந்து எப்படிக் காத்திருந்தார்களோ அதைப்போல் ரோம நாட்டின் கிறித்தவப் பாதிரிகளும் மதகுருமார்களும் அச்செய்தியை அறிந்திருந்தனர். அதைப்பற்றி அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது வழக்கம்.

ஒருநாள் பாதிரி ஒருவர் மற்றொருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ‘மக்காவில் திருநபி ஒருவர் தோன்றப் போகிறார் என்பதை மத அறிஞர்கள் பலர் எதிர்பார்த்துள்ளனர்’ என்று கூறியதை ஸுஹைப் கேட்க நேர்ந்தது. 'அப்படி அங்குத் தோன்றப்போகும் தூதுவர், மர்யமின் மகன் ஈஸாவின் செய்திகளை உறுதிப்படுத்துவார், மக்களை அறியாமை எனும் இருளிலிருந்து உண்மையான ஒளியின் பக்கம் அழைப்பார்’ என்றெல்லாம் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்க, அது ஸுஹைபின் ஆர்வத்தை மேலும் மேலும் அதிகப்படுத்தியது. தப்பிக்கும் எண்ணமும் நேர்வழி காண வேண்டும் என்ற எண்ணமும் ஒருங்கிணைந்தால் என்னாகும்? அவரது மனதில் உறுதியொன்று வலுப்பெற்றது. வலுப்பெற்று, வலுப்பெற்று ஒருநாள் நல்லதொரு வாய்ப்பு வந்தமைய, தப்பித்தார் ஸுஹைப்.

ரோம நாட்டிலிருந்து கிளம்பியவர் நேராக மக்காவை நோக்கி ஓடினார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அக்காலத்தில் மக்காதான் அரேபியா நாட்டின் அனைத்துப் பயணிகளும் சந்தித்துக்கொள்ளும் இடமாக இருந்தது. இரண்டாவது அந்த மதகுருமார்கள் பேசிக்கொண்டபடி நபியொருவர் தோன்றப் போவது அந்த மண்ணில்தான் என்று அவர் அறிந்துகொண்டிருந்த உண்மை.

மக்காவில் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் என்றொருவர் இருந்தார். வாணிபத் தொழிலதிபர். அவரிடம் வந்துசேர்ந்தார் ஸுஹைப். ஸுஹைபின் புத்திக் கூர்மையையும் கடின உழைப்பையும் கண்டு அவருக்கு விடுதலை அளித்துத் தம்முடன் வாணிபத்தில் சேர்த்துக் கொண்டார் அப்துல்லாஹ். கடகடவென தொழிலில் முன்னேறினார் ஸுஹைப். மக்காவில் உள்ளவர்களெல்லாம் ஸுஹைப் ரோமர்களிடமிருந்து ஓடிவந்தவர் என்பதை அறிந்திருந்தார்கள். அவரது சிவந்த தலைமுடியும் வெளிர் நிறமும் அந்நியமான அரபு உச்சரிப்பும் எல்லாமாகச் சேர்ந்து அவர் ஒரு ரோமர் என்றே அரபுகள் மனதில் பதிந்துபோய் அவரை ஸுஹைப் அர்-ரூஃமி (ரோம நாட்டினன்) என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அதைப்பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளாத ஸுஹைபுக்கு மனதில் ஒரேயொரு கவலை மட்டும் பெருங்கவலையாக ஆக்கிரமித்திருந்தது. அது,

'ஏன் இந்தத் தாமதம்? எப்பொழுது தோன்றப்போகிறார் அந்த நபி?'

வர்த்தக நிமித்தமாய் அடிக்கடிப் பயணங்கள் மேற்கொள்வது ஸுஹைபின் வாடிக்கை. அவ்விதம் வெளியூர் சென்று மக்கா திரும்பும் போதெல்லாம் உடனே கடை வீதிகளுக்குச் சென்று அங்குள்ள இளைஞர்களை எல்லாம் சந்தித்து, பேச்சு கொடுப்பார். அவ்வளவு ஆவல்! ‘அப்புறம் என்ன சேதி? சொல்லு என்ன விசேஷம்?’ என்று, தான் இல்லாத நேரத்தில் மக்காவில் ஏதாவது முக்கிய மாற்றம் நிகழ்ந்துவிட்டதா எனத் தெரிந்து கொள்ளும் நைச்சியப் பேச்சு.

அப்படியான ஒரு பயணத்திலிருந்து அவர் மக்கா திரும்புவதற்குள் நல்லதொரு நாளில் இங்கு அந்த மீளெழுச்சி துவங்கியிருந்தது. அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மது என்பார் அல்லாஹ்வின் இறுதி நபியாகத் தம்மை மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்ள ஆரம்பித்திருந்தார், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அந்தப் புதுச்செய்தி மக்கா நகரில் அனைவரையும் உலுக்க ஆரம்பித்திருந்தது. ஊரெங்கும் அச்செய்தி பெரும் பேச்சாகிப் போனது. இதையெல்லாம் அறியாமல் பயணத்திலிருந்து திரும்பிய ஸுஹைபை நெருங்கிய அவரது நண்பர்கள் தாங்களே முந்திக்கொண்டு அச்செய்தியை அறிவித்தார்கள். "வாங்க ஸுஹைப் வாங்க! கேளுங்கள் இந்தச் செய்தியை.." என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

'அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தெரியுமில்லையா, அவர் நாமெல்லாம் ஒரே இறைவனையே வணங்க வேண்டும் என்று கூறுகிறார்; பண பரிவர்த்தனைகளில் நேர்மையாக இருக்க வேண்டுமாம்; மக்களிடம் அன்பாகவும் பெருந்தன்மையாகவும் நடந்து கொள்ள வேண்டுமாம். அதுவாவது தேவலாம். நமது வாழ்க்கைமுறை ஒழுக்கக்கேடாம்; பாவமாம். எனவே ஒழுக்கக்கேடு புரியக்கூடாது; பாவங்களிலிருந்து தடுத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறுகிறார்'

படபடவென அவர்கள் ஸுஹைபிடம் தெரிவித்த செய்தியின் கரு இது.

உடனே நண்பர்களிடம் கேட்டார், "இந்த முஹம்மது, அல்-அமீன் என்று அழைக்கப்படுபவரா?”

"ஆம்!"

ஸுஹைபை இன்ப அதிர்ச்சி தாக்கியது! தேடிவந்ததும் காத்திருந்ததும் வீணாகவில்லை. "எங்கிருப்பார் அவர்? எங்குச் சென்றால் அவரைச் சந்திக்கலாம்?"

சஃபா குன்றுக்கு அருகிலிருந்த அர்கமின் இல்லத்தை நோக்கிக் கைகாட்டிய நண்பர்கள், அதிர்ச்சியுடன் அவரைத் தடுத்தார்கள், "அங்கெல்லாம் நீ போகாதே, கெட்டுப் போய்விடுவாய்"

"அங்குப் போகத்தான் போகிறேன்! அவரைச் சந்திக்கத்தான் போகிறேன்!" என்று இரண்டு கால்களிலும் உறுதியாக நின்றார் ஸுஹைப்.

அவரைப் பரிதாபமாகப் பார்த்த அவரின் நண்பர்கள், "அப்படியானால் யார் கண்ணிலும் படாமல், நீ எங்குச் செல்கிறாய் என்று யாரிடமும் தெரிவிக்காமல் போ. யாராவது குரைஷி உன்னைப் பார்த்துவிட்டால் உன் பாடு பெரும் பாடு; புரட்டி எடுத்துவிடுவார்கள். இங்கு உனக்குப் பாதுகாவல், ஆதரவு என்று அளிக்க எந்தக் கோத்திரமும்கூட இல்லை. ஒருவனைக் கொலை செய்தால் அதற்குப் பழிவாங்க யாருமில்லை என்று தெரிந்தால் குரைஷிகளின் கொடுமைக்கு எல்லையே இல்லாமல் போகும்"

முன்னரே பார்த்திருக்கிறோம்; அந்தச் சமூகத்தின் நடைமுறையில் தமது கோத்திரம் அல்லது தமக்கு ஆதரவு அளிக்கும் கோத்திரம் என்ற அடிப்படையிலேயே ஒருவரது உயிருக்குப் பாதுகாவல் அடங்கியிருந்தது. நபியவர்களுக்கே அவரது பெரியப்பா அபூதாலிபின் ஆதரவு தேவைப்பட்டிருந்தது.

நண்பர்களின் ஆலோசனை ஏற்படுத்தியிருந்த எச்சரிக்கையில் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கி அர்கமின் வீட்டை அடைந்தார் ஸுஹைப். கதவருகே சென்றுவிட்டார். அப்பொழுதுதான் அவரைப் பார்த்தார். அந்த வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார் ஒருவர். முன்னமேயே அவரைப் பார்த்துள்ளதால் அடையாளம் தெரிந்தது. திடுக்கிட்டவர் சமாளித்துக் கொண்டு தயக்கத்துடன் கேட்டார்.

"இங்கு என்ன செய்கிறீர் அம்மார்?” அங்கு நின்று கொண்டிருந்தவர் அம்மார் பின் யாஸிர்.

"இங்கு நீர் என்ன செய்கிறீர்?” என்று அதே கேள்வி பதிலாகத் திரும்பி வந்தது.

"ஒருவரைச் சந்திக்க வந்தேன். அவர் என்ன சொல்கிறார் என்று அறிய வேண்டும்” என்றார் ஸுஹைப்.

"நானும் அதற்காகவே வந்தேன்” என்றார் அம்மார்.

"நல்லது. இருவரும் சேர்ந்தே செல்வோம். நமக்கு அல்லாஹ் அருள்புரிய வேண்டிக்கொள்வோம்"

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமைச் சந்தித்துத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள் இருவரும். அங்குக் கூடியிருந்த தோழர்களுடன் அமர்ந்து நபியவர்களின் அறிவுரைகளைக் கேட்கக் கேட்க அந்த எளிய உண்மை அவர்களைக் கவர்ந்தது; புரிந்தது. அன்றே அப்பொழுதே இஸ்லாத்தினுள் நுழைந்தார்கள் இருவரும். ரலியல்லாஹு அன்ஹுமா!

பகலில் அந்த வீட்டினுள் நுழைந்தவர்கள் இரவுவரை நபியவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; ஒவ்வொரு வார்த்தையும் பாடமாய் அவர்களது நெஞ்சங்களில் புகுந்தது. நகரில் இருள் பரவிக் கவிழ்ந்ததும்தான் வெளியேறினார்கள். ஆனால் அவர்களது உள்ளங்களில் மட்டும் பேரொளி; இவ்வுலகையே பிரகாசமடைய வைக்கும் அளவிற்கு இறை நம்பிக்கைப் பேரொளி!

எத்தனை நாள் குரைஷிகளுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கமுடியும்? ‘ஸுஹைப் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்; முஹம்மதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்’ என்று தெரிந்ததும் அவர்களது கொடூர ஆட்டத்திற்கு ஸுஹைப் ரலியல்லாஹு அன்ஹுவும் ஒரு விளையாட்டுப் பொருளாக ஆகிப்போனார். கப்பாப் பின் அல்அரத், பிலால், அம்மார், அம்மாரின் தாயார் சுமைய்யா போன்ற, பாதுகாவலுக்கு வழியில்லாத தோழர்களுடன் அவர்களுக்கு இணையாக ஸுஹைபும் குரைஷிகளிடம் கடும் சோதனையை எதிர்கொள்ள வேண்டிவந்தது. கடுமையான சித்திரவதை, அடி, உதை என்று என்னென்ன கொடுஞ்செயல்கள் உண்டோ அத்தனையும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

ஆனால் எந்தளவிற்குக் கொடுமைப்படுத்தப்பட்டாரோ, எந்தளவிற்கு உடலெங்கும் காயமும் ரணமும் பரவியதோ அந்தளவிற்கு அவரது மனம் திடமடைந்தது. சொர்க்கத்தின் பாதை அவ்வளவு எளிதல்ல என்று புரிந்து போனதால் அத்தனை அடி, உதை, சித்திரவதை என்பதையெல்லாம் தாங்கிக் கொண்டு உறுதியாய், சாந்தமாய், மலையாய் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தார் ஸுஹைப் இப்னு ஸினான். ரலியல்லாஹு அன்ஹு.

oOo

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் அணுக்கத் தோழர் அபூபக்ருவுடன் மதீனா புலம்பெயரப் போகிறார்கள் என்ற திட்டம், குறிப்பிட்டத் தோழர்களுக்கு மட்டும் தெரியவந்தது. அவர்கள் இருவருடன் தாமும் சேர்ந்து கொள்ளவேண்டும் என்று கருதினார் ஸுஹைப். ஆனால் அதற்குரிய வாய்ப்பு அமையவில்லை. நபியவர்களும் அபூபக்ருவும் மக்காவிலிருந்து கிளம்பிச் சென்றதும் மற்ற முஸ்லிம்களும் மெதுமெதுவே தப்பிச்செல்வதை அறிந்து கொண்ட குரைஷிகள் காவலை பலப்படுத்த ஆரம்பித்தனர். முக்கியமான சிலருக்குத் தனிப்பட்ட முறையிலெல்லாம் சிறப்புக் காவலர் பாதுகாப்புபோல் ஆள் அமர்த்திவிட்டார்கள். ஸுஹைபுக்கும் சிறப்புக் காவல் போடப்பட்டது. இரா, பகல் என்று அனைத்து நேரமும் குரைஷிகளின் கழுகுப் பார்வையின்கீழ் சிக்கிப்போனார் ஸுஹைப்.

வெறுங்கையுடன் அடிமையாய் மக்காவிற்கு வந்திருந்த ஸுஹைப், பின்னர் விடுதலையடைந்து வாணிபத்தில் சிறந்து விளங்கியதால் நிறையப் பொருள் ஈட்டியிருந்தார்; செல்வம் சேர்ந்திருந்தது. எனவே ஸுஹைப் தப்பித்துப் போய்விடக்கூடாது என்ற எண்ணம் குரைஷியருக்கு ஒருபுறம் இருக்க, அத்தனை செல்வத்தையும் பொருளையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட அனுமதிக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணம் அதைவிட மேலோங்கியிருந்தது.

ஆனால் ஸுஹைபுகோ ஒரே எண்ணம். 'நபியவர்களைப் பின்தொடர்ந்து எப்படியும் மதீனா சென்றுவிட வேண்டும்'

அதற்கு என்ன வழி? இந்தக் குரைஷியர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பிப்பது எப்படி? என்று அவர் மனமெங்கும் கவலை பரவ ஆரம்பித்தது. பரிதவிப்புடன் தினமும் யோசித்துக் கொண்டிருந்தவருக்குத் திட்டமொன்று உருவானது.

ஒருநாள் இரவு. நன்றாக இருள் கவியும்வரைக் காத்திருந்தார் ஸுஹைப். வீட்டைவிட்டு வெளியே வந்தவர், நடக்க ஆரம்பித்தார். தம் வீட்டை நோட்டம்விட்டுக் கொண்டு வெளியே எதிரிகள் காத்திருப்பார்கள், தம்மைப் பின்தொடரப் போகிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். மறைவாய்ப் பின்தொடர்ந்தனர் குரைஷி உளவாளிகள். அக்காலத்தில் இயற்கை உபாதையைக் கழிக்க, ஊருக்கு வெளியே சற்று ஒதுக்குபுறமாய்ச் செல்லவேண்டும். அங்குச் சென்றார் ஸுஹைப். காத்திருந்தனர் எதிரிகள். சற்றுநேரம் கழித்து அவர் வீடு திரும்ப, திருப்தியுடன் தங்களது இடத்தில் சென்று அமர்ந்து கொண்டனர் அவர்கள்.

சற்று நேரம் கழித்து மீண்டும் வீட்டைவிட்டுக் கிளம்பினார் ஸுஹைப். மீண்டும் பின்தொடர்ந்தனர் எதிரிகள். அதேபோல் வீடு திரும்பினார் ஸுஹைப்.

இதேபோல் பலமுறை செய்ய ஆரம்பித்துவிட்டார் ஸுஹைப். நொந்துபோன காவலாளிகள் சிரித்துக் கொண்டார்கள். "நம் கடவுளர்கள் அவரது குடலைக் கெடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது. விடு! இன்றிரவு அவர் எங்கும் ஓடிப்போகப்போவதில்லை” என்று தங்களது இடத்திற்குத் திரும்பிவந்து கண்ணயர்ந்தனர். அதற்காகவே காத்திருந்த ஸுஹைப் அவர்கள் அயர்ந்து உறங்கிவிட்டார்கள் என்பது உறுதியானதும் சட்டெனக் கிளம்பிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து உறங்கிக் கொண்டிருந்த காவலர்களில் ஒருவன் எழுந்து ஸுஹைபைக் காணவில்லை என்றதும் அலறி அடித்துக்கொண்டு தன் சகாக்களை எழுப்ப, அவர்கள் அனைவரும் அவசர அவசரமாய்க் குதிரைகளில் சேணம் பூட்டி மதீனாவின் திசை நோக்கிப் பறக்க ஆரம்பித்தார்கள். அவர்களது ஊகம் தப்பவில்லை.

தப்பித்துச் சென்று கொண்டிருந்த ஸுஹைப் தமக்குப் பின்னால் குதிரை ஒலிகள் நெருங்குவதைக் கேட்டார். பரந்த வெளியில் பதுங்கி மறைய ஏதும் இடம் இருப்பதாய் அவருக்குத் தெரியவில்லை. மாட்டினால் தப்பிப்பது கஷ்டம். சட்டென்று அருகில் தென்பட்ட செங்குத்தான குன்று ஒன்றின்மீது தாவி ஓடி ஏறி நின்றுகொண்டார். வில்லில் அம்பைப் பூட்டி ஏந்திக் கொண்டு அங்கிருந்தே இரைந்து கத்தினார்,

"ஏ குரைஷிக்குல மக்கா! அல்லாஹ்வின்மீது ஆணையாகக் கூறுகிறேன். நான் ஒரு மிகச் சிறந்த வில்லாளி என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். என் குறி தப்பாது. நீங்கள் என்னை நெருங்குவதற்குமுன் எனது அம்புகள் உங்களைத் தாக்கும். ஒவ்வொருவரையும் எண்ணி எண்ணித் தாக்குவேன். மீறி நெருங்கினால் என் வாள் உரையாடும். நீங்கள் என்னை உயிருடன் பிடித்துவிடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள்"

திகைத்து நின்றார்கள் அவர்கள்; வேகம் மட்டுப்பட்டது. அவர்களில் ஒருவன் கத்தினான். "நீ உனது செல்வத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு முஸ்லிம்களிடம் ஓடிவிட நாங்கள் அனுமதிக்க முடியாது"

சட்டெனப் புரிந்தது அவருக்கு. "இதுதான் உங்கள் பிரச்சினையா?” எளிது; அதைத் தீர்ப்பது அவருக்கு எளிது. "எனது பணம், செல்வம் அனைத்தையும் உங்களுக்கு இனாமாகத் தந்துவிடுகிறேன். பிறகு நான் என் போக்கில் செல்லலாம்தானே?”

ஏக மகிழ்வுடன் தலையாட்டினார்கள் அவர்கள். குன்றிலிருந்து இறங்கி வந்தார் அவர். தனது செல்வப் பொருட்களையெல்லாம் மக்காவில் ஓரிடத்தில் பத்திரமாக மறைத்து வைத்திருந்தார் ஸுஹைப். அதன் விபரங்களை அவர்களுக்குத் தெரிவிக்க, அதையெல்லாம் கைப்பற்றிக் கொண்ட அவர்கள், 'இப்பொழுது நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்’ என்று அவரை விடுவித்தார்கள்.

இங்கு நாம் கவனித்து உணர செய்தி ஒன்று உண்டு. இறைவனும் நபியும் கட்டளைகளும் நமக்கெல்லாம் இரண்டாம் பட்சமாகி, செல்வமும் உலக வாழ்க்கையின் வெற்றியுமே முக்கியம் என்று நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறோம் நாம். மீந்த பொழுதுகளே சோம்பலான இறை வணக்கத்திற்குப் போதுமானதாய் இருக்கின்றன.

இவரோ உண்மையைத் தேடி ரோம நாட்டிலிருந்து மக்காவிற்கு ஓடிவருகிறார். பிறகு அத்தனை காலம் வியர்த்து, களைத்து, ஓடியாடி உழைத்து ஈட்டியிருந்த தமது அத்தனை செல்வத்தையும் துச்சமென அவர்களுக்குத் தாரை வார்த்துவிட்டு, மனமெங்கும் இஸ்லாம் நிரப்பிய இறை நம்பிக்கையையும் மகிழ்வையும் மட்டுமே சுமந்துகொண்டு வெறுங்கையுடன் மதீனாவிற்குப் பயணம் கிளம்பிச் செல்கிறார். ரலியல்லாஹு அன்ஹு.

மக்காவிலிருந்து மதீனாவின் தூரமும் குறைவானதில்லை; பாதையும் புல்வெளிகளால் நிரம்பியதில்லை. பாலையும் மணலும் குன்றும் பாறையும் என்று கடினமான பயணம். சோர்வில் துவண்டு விழுந்தன அவரது கால்கள். இதற்குமேல் முடியாது என்று களைப்பின் உச்சத்தை எட்டும் போதெல்லாம், இனி காலத்திற்கும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இணைந்திருக்கப் போகிறோமே என்று நினைத்துப் பார்க்க, உற்சாகம் ஒன்று பொங்கியெழுந்து அவரது உடலெங்கும் பரவும்; பயணம் உத்வேகத்துடன் தொடரும்.

மதீனாவின் புறநகர்ப் பகுதியான அல்-ஹர்ரா எனும் இடத்தில் உமரும் இதர சில தோழர்களும் மக்காவிலிருந்து வந்துகொண்டிருந்த ஸுஹைபைச் சந்தித்தார்கள். மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர்கள், "நிச்சயமாக உமது வாணிபம் வெற்றிபெற்றது" என்றனர்.

புரியவில்லை ஸுஹைபிற்கு. "அல்லாஹ் உங்களுடைய வாணிபத்தையும் வெற்றிகரமாக ஆக்கிவைப்பானாக" என்று பதிலுக்கு வாழ்த்தியவர், "என்ன செய்தி?" என்று விசாரித்தார்.

இறைவன் அருளிய வசனத்தைப்பற்றித் தெரிவித்த உமர், "ஓ ஸுஹைப்! உமது வாணிபம் வெற்றியடைந்தது" என்றார் மீண்டும். அப்பொழுது மதீனா நகருக்கு வெளியே அமைந்திருந்த குபா நகரின் பள்ளியில் தங்கியிருந்தார்கள் நபியவர்கள். அங்கு வந்தடைந்தார் ஸுஹைப். அவரை அன்புடனும் ஆதுரவுடனும் வரவேற்றவர்கள், "நீர் நல்ல லாபகரமான கொள்முதல் செய்துவிட்டீர் அபூயஹ்யா" அதை வலியுறுத்தும்விதமாக இரண்டுமுறை கூறினார்கள் நபியவர்கள். வியந்துபோனார் ஸுஹைப்!

"அல்லாஹ்வின்மீது ஆணையாகக் கூறுகிறேன். நான் வந்தபாதையில் யாரும் என்னைக் கடந்து மதீனா வரவில்லை. எனவே அங்கு என்ன நடந்ததென்று வானவர் ஜிப்ரீலைத் தவிர யாரும் தங்களுக்குத் தெரிவித்திருக்க வாய்ப்பேயில்லை"

அதன்பிறகு நபியவர்கள் கலந்து கொண்ட போர்களிலெல்லாம் ஸுஹைப் இடம்பெறாமல் இருந்ததே இல்லை. நபியவர்களுக்கு மக்கள் பிரமாணம் அளிக்க நேர்ந்த அனைத்துத் தருணங்களிலும் ஸுஹைப் தவறாமல் இடம்பெற்றவர். நபியவர்கள் சிறுபடைகளை அனுப்பிவைக்கும் போதெல்லாம் அதில் ஸுஹைப் நிச்சயமாக இடம்பெற்றிருந்தார். நபியவர்களுடன் போருக்குச் சென்றால் அவர்களுக்கு வலப்புறமோ இடப்புறமோ ஸுஹைப் நிச்சயம். போரில் நபியவர்களை எந்த எதிரியும் அண்மிவிட ஸுஹைப் அனுமதித்ததே இல்லை. படை அணிவகுப்பில் ஸுஹைப் முற்பகுதியில் இருந்தால் அவரைமீறித் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் நிகழ்ந்து விடாது என்று முஸ்லிம்படையினர் நம்பினர். அதுவே முஸ்லிம்களுக்கும் மிகப்பெரும் ஆன்ம பலமாக அமைந்து போனது. அதுவே அவர் படையின் பின்பகுதியில் இடம்பெற்றால் தங்களுக்குப் பின்னாலிருந்து எதிரிகளால் எந்த ஆபத்தும் அண்டிவிட முடியாது என்ற உறுதி அவர்களுக்கு ஏற்படும்.

நபியவர்களின் தோழர்களில் ஆலோசனை வழங்குபவர்கள் பலர் இருந்தனர். அக்குழு நிறம், இனம், மொழி சார்ந்தெல்லாம் அமையாமல் தோழர்களது மனதில் வேரூன்றியிருந்த ஏகத்துவம், ஆழ் நம்பிக்கை, இறை பக்தி ஆகியனவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தது. யாரெல்லாம் அக்குழு? குரைஷி குலத்தைச் சேர்ந்த அபூபக்ரு, பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த அலீ இப்னு அபூதாலிப், எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிலால், பாரசீகத்தைச் சேர்ந்த ஸல்மான், செல்வந்தர் உதுமான், வறியவர்கள் அம்மார், எவ்வித வாழ்வாதாரமும் அற்ற திண்ணைத் தோழர்கள் மற்றும் இவர்களுடன் ஸுஹைப் அர்-ரூஃமி.

பெருந்தன்மையும் தாராள குணமும் அளவில்லாமல் அமைந்து போனார் ஸுஹைப். தமக்கெனக் கிடைக்கும் வருமானத்தையெல்லாம் முஸ்லிம்களின் கருவூலத்திற்கும் அல்லாஹ்வின் பாதையிலும் செலவிட்டுவிட வேண்டும் அவருக்கு. வறியவருக்கும் அனாதைகளுக்கும் அவலநிலையில் உள்ளவர்களுக்கும் அவர் அள்ளி அள்ளிச் செலவிட்டுக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த உமர் ஒருமுறை கேட்டார், "நீர் மிகத் தாராளமாய் மக்களுக்கு உணவளிப்பதையும் உதவுவதையும் காண்கிறேன் ஸுஹைப்"

"அல்லாஹ்வின் தூதர், 'ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உணவளிப்பவர் உங்களில் சிறப்பானவர்' என்று சொன்னதை நான் கேட்டிருக்கிறேன் உமர்" என்றார் ஸுஹைப். அவர்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொள்ள ஆரம்பித்தார் உமர்.

ஒருநாள் காலை உமர், ஸுஹைபைச் சந்திக்க வந்தபோது அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது உமர் கலீஃபாவாய் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலம். ஸுஹைபை எழுப்பாமல் கொள்ளாமல் அருகில் அமர்ந்து கொண்ட கலீஃபா, அவர் உறக்கம் கலைந்து எழும்வரை அமைதியாகக் காத்திருந்தார். விழித்தெழுந்த ஸுஹைப் திடுக்கிட்டுவிட்டார். "ஸுஹைப் உறங்கிக் கொண்டிருக்க அமீருல் மூஃமினீன் அமர்ந்து காத்திருப்பதா!" என்று சங்கடத்துடன் கூற, "உமது உறக்கத்தை நான் கலைக்க விரும்பவில்லை. அந்த இளைப்பாறுதல் உமக்குத் தேவை என்று கருதினேன்" என்றார் உமர்.

உமர் கத்தியால் குத்தப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த நேரம். அடுத்து கலீஃபாவாக யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான சூழல்.

நபியவர்களின் அன்பிற்கு மிகவும் உரியவர்களான, பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட ஆறு பேரை உமர் தேர்ந்தெடுத்தார். அலீ, உதுமான், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅத் பின் அபீ வக்காஸ், ஸுபைர் இப்னுல் அவ்வாம், தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லஹு அன்ஹும். அவர்கள் அனைவருமே அடுத்து கலீஃபாவாய் தேர்ந்தெடுக்கபட தகுதி வாய்ந்தவர்களாய்க் கருதப்பட்டவர்கள்.

'இவர்கள் தங்களில் ஒருவரின் வீட்டில் குழுமி கலந்து பேசிக்கொள்ள வேண்டும். அவர்களுடன் அப்துல்லாஹ் இப்னு உமர் இருப்பார்; ஆனால் அவருடைய பணி ஆலோசனை தேவைப்படின் அதை வழங்குவது மட்டுமே. மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூ தல்ஹா அல்-அன்ஸாரீ ஆகிய இருவரும் அந்த ஆறுபேரும் தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் தேர்தல் நிகழ்வை மேற்பார்வையிட வேண்டும்' என்று நியமித்தார் உமர்.

தம் மரணத்திற்குப்பின் அவர்களுக்கு மூன்று நாள் மட்டுமே அவகாசம் என்றார் உமர். அதற்குள் அவர்கள் பேசி முடிவெடுத்து கலீஃபாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிட அதிக அவகாசம் தேவைப்படும் நிலை ஏற்பட்டால் அது ஆழ்ந்த கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திவிடும் என்று கருதிய உமர், "நாலாவது நாள் வருவதற்குள் உங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துவிடுங்கள்" என்று உத்தரவிட்டார்.

அந்த மூன்று நாளும் தொழுகையின் இமாம் யார் என்றும் அறிவித்தார் உமர்.

பள்ளிவாசலின் இமாம் என்று இன்று நமக்கு அறிமுகமாகியுள்ளதே ஒரு வழக்கம் அப்படியொன்று அன்று இருந்ததில்லை. கடைச் சிப்பந்திகள்போல் இமாம்கள் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டதில்லை. தொழுகையின் இமாம் மக்களின் தலைவராய் இருந்தார். அது அவரது தலையாயப் பணியினுள் ஒன்று. மக்கள் அவருக்குக் கட்டுப்பட்டுப் பின்பற்றி நடந்தனர். மதீனாவைப் பொருத்தவரை கலீஃபாதான் இமாமாக நின்று தொழவைப்பார். இதர ஊர்களுக்கும் பிராந்தியங்களுக்கும் அங்கங்கு உள்ள ஆளுநர்கள் இமாமாகத் தொழ வைத்தனர். ஓர் ஆளுநர், பதவி விலக நேர்ந்தாலோ, போருக்காக அல்லது ஹஜ்ஜுக்காகப் பயணப்பட நேர்ந்தாலோ, ஒருவரைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அவரைத் தொழுகைக்கு தலைமையேற்க நியமிப்பார்.

உமரின் மரணத்திற்குப்பிறகு அடுத்த கலீஃபா தேர்ந்தெடுக்கப்படும்வரை மிகவும் பொறுப்பான ஒருவர் மக்களுக்கு இமாமாக நின்று தொழவைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கு உமர் தேர்ந்தெடுத்த தோழர், ஸுஹைப் இப்னு ஸினான்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு மரணம் அடைந்தவுடன், அவருக்கு நிகழ்த்தப்பெற்ற இறுதித் தொழுகையை ஸுஹைப் முன்நின்று நடத்தினார். அதன்பிறகு கலீஃபாவைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கடந்துபோன மூன்று நாள்களும் ஸுஹைப் ரலியல்லாஹு அன்ஹு இமாமாகத் தலைமை தாங்கித் தொழவைத்தார்.

"அல்லாஹ்வின்மீது அவருக்கு அச்சம் அற்றுப் போனாலுங்கூட அவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்க மாட்டார்" என்று ஸுஹைபைப் பற்றி உமர் குறிப்பிடுவது வழக்கம். அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து அவனது கட்டளைகளுக்கு மாறுபுரியாமல் அடிபணிவது வேறு. ஆனால் அல்லாஹ்வின் மீது ஏற்பட்டுவிடும் அளவற்ற அன்பினால் அவனுக்கு முழுமுற்றிலும் அடிபணிந்துவிடுவது இருக்கிறதே அது பக்தியின் உச்சம். இறைநம்பிக்கையின் மகா உன்னதம் அது.

இதைப் புரிந்து கொள்வது கடினம்போல் தோன்றலாம். தோராயமான இந்த உதாரணம் உதவும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பணிவிடை புரிந்து கொள்கிறார்கள். அதை அவர் முகம் சுளிக்கக்கூடாதே, கோபப்படக் கூடாதே என்பதற்காக மட்டுமே செய்து கொள்ளலாம். ஆனால் அதே உபச்சாரத்தைக் காதல் மேலீட்டால் செய்து கொள்ளும்போது எப்படி இருக்கும்? ஒப்பிட்டு யோசித்தால் சற்று விளங்கும். பின்னதில் அன்பு அடிப்படையாகிப் போகிறதல்லவா?

அல்லாஹ்வின்மீது அத்தகைய அன்பில் மூழ்கி வாழ்ந்து மறைந்தார் ஸுஹைப் இப்னு ஸினான்.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

சத்தியமார்க்கம்.காம்-ல் 15 மார்ச் 2011 அன்று வெளியான கட்டுரை


Saturday, 14 December 2019

மிருகத்திடம் மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள்

மனிதன்_கற்றுக்கொள்ள வேண்டிய_21_பாடங்கள் ..!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,

கொக்கிடம் இருந்து இரண்டையும்,

கழுதையிடம் இருந்து மூன்றையும்,

கோழியிடம் இருந்து நான்கையும்,

காக்கையிடம் இருந்து ஐந்தையும்,

நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது,

நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்,

வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்,

தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல்,

தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல்,

தேவையான பொருள்களை சேமித்து வைத்தல்,

யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,

தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல்,

உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல்,

நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்,

தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

இது நான் சொல்லலைங்க ..!

Friday, 22 November 2019

தக்கலை பீர்முஹம்மது அப்பா

சூஃபி கவிஞர்:

தக்கலை பீர்முஹம்மது அப்பா ரலியல்லாஹு அன்ஹு.

      திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள கணிகபுரத்தில் 1574 ல் பிறந்தார்கள். தந்தை பெயர் சிறுமலுக்கர்.இவர்கள் சுல்தான் அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்களின் வழித்தோன்றல்.

      பீர் முகம்மது அப்பா அவர்கள் முறையாக கல்வி கற்றவரா என்பதும், யாரிடம் கற்றார் என்பதும் தெரியவில்லை. ஆனால், கற்றார்க்கும் வசப்படாத கவித்திறம் கொண்டிருந்தார்கள். உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அறிவிக்கும் தத்துவ மேதையாய், மெய்ஞ்ஞான வள்ளலாய் விளங்கினார்கள் 

     சிறுவயதிலேயே தேடல் மிக்கவராய், அவர் வீட்டிலிருந்து வெளியேறினார். கேரளத்துக் காடுகளில் கடுந்தவமியற்றினார்கள்.உண்ணாமல், உறங்காமல் ஆன்ம சாதனைகள் மேற்கொண்டு உயர்நிலை அடைந்தார்கள். பதினெட்டாண்டு காலம் சுயமாய் மேற்கொண்ட பயிற்சிகள் அவரைப் பக்குவப்படுத்தின. அங்கே அவர் தங்கியிருந்த யானைமலைப் பகுதி அவருடைய பெயரால் 'பீர்மேடு' என்று அழைக்கப்படுகிறது.

      பீர் முகம்மது அப்பா அவர்கள், கீழக்கரை சதக்கத்துல்லா அப்பா அவர்களின் சம காலத்தவர்.

     பீரப்பா தமிழில் 18000 பாடல்கள் இயற்றியுள்ளார். அவை, ஞானப் புகழ்ச்சி, ஞானமணி மாலை, மஃரிபத்து மாலை, ஞானரத்னக் குறவஞ்சி, ஞானப்பால், திரு மெய்ஞ்ஞான சரநூல், ஞானத் திறவுகோல் என்று பல நூல்களாகத் தொகுக்கப் பெற்றன. அவர்களின் பெரும்பாலான பாடல்கள் மறைபொருள் கொண்டவை (மெய்ஞ்ஞானக் கருத்துக்கள்)

     மலையாள பூமியில் இருந்து தக்கலை என்னும் ஊர் திரும்பிய பீரப்பா, ஓர் எளிய குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்கள்.குடும்பம் நடத்துவதற்கான பொருளை நெசவுத் தொழில் செய்து ஈட்டினார். அவர் பள்ளிவாசலில் தொழுகைக்குச் செல்லாமல், ஆன்ம விசாரம் பண்ணுவதாய் ஊர் மக்கள் குறைபட்டனர்.

      பீரப்பாவிடம் வெறுப்பு கொண்ட சிலர் அதுபற்றி சதக்கத்துல்லா அப்பாவிற்குத் தகவல் தெரிவித்தனர். அதன்படி தக்கலை வந்து அப்பா அவர்களைச் சந்தித்தார்கள் சதக்கத்துல்லா அப்பா.
பீரப்பாவை சந்தித்த சதக்கத்துல்லா அப்பா அவர்களுக்கு பீரப்பாவின் உன்னத ஞானம் சதக்கத்துல்லா அப்பா அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. 'இவர் இறையருள் பெற்ற மகான்' என்பதை அவர்கள் கண்டு கொண்டார்கள். ஊராருக்கு அச்செய்தியை அறிவிக்கவும் செய்தார்கள்.அப்போதிருந்து தக்கலை வட்டாரம் மட்டுமின்றித் தமிழகமே பீரப்பாவை மதித்துப் போற்றுகிறது.

   அவர்கள் இவ்வுலகில் இருந்து 1664 இல் மறைந்தார்கள். தொண்ணூறு வயதிற்கு மேல் வாழ்ந்திருக்கிறார்கள்.

         -சூஃபி ஞானம் -- தேடலும் கண்டடைதலும் -

                  (இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்)

Wednesday, 20 November 2019

பழுதடையாமலிருந்த இரு சஹாபிகளின் புனித உடல்கள்..."

"பதின்மூன்று நூற்றாண்டுகளாக பழுதடையாமலிருந்த இரு புனித உடல்கள்..."

பக்தாதிலிருந்து 40 மைல் தொலை தூரத்தில் ஹஸ்ரத் ஸல்மான் ஃபார்ஸி (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது. இதன் காரணமாக அந்த ஊர் "ஸல்மான் பாக்" என்று அழைக்கப்படுகிறது. இதன் பழைய பெயர் "மதாயின்". இது ரொம்ப காலமாக ஈராக்கின் தலை நகரமாக இருந்து வந்துள்ளது. இங்கிருந்து இரண்டு பர்லாங்கு தொலை தூரத்தில் நாயகத்தோழர்களான ஹஸ்ரத் ஹுதைபத்துல் யமான் (றழியல்லாஹு அன்ஹு) ஹஸ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (றழியல்லாஹு அன்ஹு) ஆகிய இரு ஸஹாபிகளின் கப்ருகள் உள்ளன. அருகே தஜ்லா நதி ஓடுகிறது.

ஹஸ்ரத் ஹுதைபா (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ரில் தண்ணீர் புகுந்தது. ஹஸ்ரத் ஜாபிர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ரிலும் அது வெளிப்பட்டது. இந்த நிலையில் முதலாம் ஷா ஃபைசல் மன்னர் மற்றும் ஈராக் தலைமை முஃப்தி (நீதிபதி) ஆகியோர் தனித்தனியாக கண்ட கனவில் மேற்படி இரு ஸஹாபாக்கள் தோன்றி "எங்களின் கப்ருகளை இடமாற்றுங்கள்" என்று கூறினார்கள்.

முஃப்தி சாஹிப் அவர்கள் கப்ரை தோண்டி புனித உடல்களை அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற ஃபத்வா கொடுத்தார். மன்னர் அதற்கான தேதி முடிவு செய்து பத்திரிக்கைகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த அரிய நிகழ்ச்சியினை காண துருக்கி மற்றும் எகிப்து நாட்டிலிருந்து அரசாங்க தூது குழுவினர் குறிப்பிட்ட தேதியில் வந்து சேர்ந்தனர். வெளிநாடுகளிலிருந்து எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு கொள்கை கோட்பாடுகளில் உள்ளவர்களுமாக சுமார் ஐந்து லட்சம் பேர் மதாயினில் ஒன்று கூடினர்.

அந்த சிறிய நகரம் இரண்டாம் பக்தாதாக காட்சி அளித்தது. ஹிஜ்ரி 1350. துல்ஹஜ் மாதம் கடைசி பத்தில் 1932 ஏப்ரல் மாதம் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு உலக நாடுகளின் தூதர்கள் ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னர் ஃபைசல் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஹஸ்ரத் ஹுதைபா (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் புனித உடலும் பின்னர் ஜாபிர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் பூத உடலும் கிரேன் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டன. மன்னர் ஃபைசல் ஈராக்கின் தலைமை முஃப்தி துருக்கி குடியரசின் அமைச்சர் முக்தார் பட்டத்து இளவரசர் பாரூக் ஆகியோர் புனித உடல்களை மிகுந்த மரியாதையோடு பெற்று அதற்காக விஷேசமாக உருவாக்கப்பட்ட கண்ணாடி பேழையில் வைத்தார்கள்.

அந்த இரு ஸஹாபாக்களின் புனித உடலை பொதிந்திருந்த கஃபன் துணி மட்டுமல்ல அவர்களின் தாடி முடி கூட நல்ல நிலையில் புத்தம் புதிதாக இருந்ததை பார்த்தால் பதிமூன்று நூற்றான்டு காலத்திற்கு முன்புள்ள பழைமை வாய்ந்த ஒரு ஜனாஸாவாக அது இல்லாமல் சில மணி நேரத்திற்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டதை போன்று புதிய ஜனாஸாக்களாக இருந்தன.

இதில் மிகுந்த ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவென்றால் அந்த இரு ஸஹாபாக்களின் கண்கள் புத்துயிரோடு ஒளி வீசிக்கொண்டிருந்தது தான். பல பேர் அதில் பார்வையை செலுத்தினர். ஆனால் அவர்களால் கூர்ந்து பார்க முடியவில்லை. பெரிய டாக்டர்கள் எல்லாம் இதைக் கண்டு வியந்தனர். ஏனெனில் இறந்து ஆறு மணி நேரத்திற்குள் கண், அதன் பார்க்கும் சக்தியை இழந்து விடும். ஆனால் இங்கு பதிமூன்று நூற்றாண்டு காலமாகியும் அவர்களின் கண்கள் அப்படியே கெடாமல் உள்ளது. ஜேர்மனை சார்ந்த கண் மருத்துவ நிபுணர் இதை கண்ணுற்று உடனே அந்த இடத்திலேயே தலைமை முஃப்தியின் கரம் பற்றி முஸ்லிமாகிவிட்டார். "இஸ்லாம் சத்தியமானது என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் வேறு என்ன தேவையிருக்கிறது?" என்று கூறினார்.

புனித பேழையில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அவர்களின் முகத்திலிருந்து கஃபன் விலக்கப்பட்டது. அந்த புனித உடலுக்கு ஈராக் இராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் கூட்டம் கூட்டமாக வந்து எல்லோரும் ஜனாஸாவை பார்த்து மெய்சிலிர்த்து செய்வதறியாது திகைத்து நின்றனர். வாழ்க்கையின் கிடைப்பதற்கரிய பாக்கியம் கிடைக்கப் பெற்றதை எண்ணி எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்தினர். பின்னர் எல்லோரும் கூட்டமாக சேர்ந்து ஜனாஸா தொழுகை நிறைவேற்றினர். மன்னர்களும் உலமாக்களும் புனித உடல்கள் வைக்கப்பட்டிருந்த அந்த பேழையை தங்களின் தோள் மீது சுமந்தனர்.

பிறகு உலக நாட்டு தூதர்கள் உயர் அதிகாரிகள் தோள்கொடுக்க தொடர்ந்து மற்றவர்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கப்பெற்றது. விமானங்கள் பூக்களை தூவி மலர் அஞ்சலி செலுத்தின. வழிநெடுக பெண்களும் பேழையை ஸியாரத் செய்ய அனுமதியளிக்கப்பட்டது. நான்கு மணி நேரத்திற்குள் இரண்டு புனித உடல்களும் "ஸல்மான் பாக்" கப்ருஸ்தானை அடைந்தது. "அல்லாஹு அக்பர்" என்னும் முழக்கம் விண்ணைப்பிளக்க இஸ்லாத்தின் உயிருள்ள இரு தியாகிகளின் புனித உடல்கள் ஹஸ்ரத் ஸல்மான் ஃபார்ஸி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ருக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
மறுநாள் பக்தாத் திரையரங்குகளில் இந்த விடயம் திரையிடப்பட்டு காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கண்ணுற்ற பக்தாத் வாழ் முஸ்லிமல்லாத பல பிரமுகர்களின் குடும்பங்கள் இஸ்லாத்தில் இணைந்தன.

(மஆரிஃப் மாத இதழ், ஜனவரி 1979, அஃஜம்கட் டெல்லி)

"மெளலானா உஸ்மான் மஃரூஃபியின் "ஏக் ஆலமீ தாரீக்" எனும் உர்து கிதாபிலிருந்து..."

Friday, 15 November 2019

இஸ்லாமிய நீதியும் ஜனாதிபதி அலியும்

புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும்....
==================================

இஸ்லாமிய சமூகத்தின் நான்காவது கலீபா அலி(ரலி) அவர்கள் ஆட்சி காலம் . அப்போது கூபா நகரத்தின் நீதிபதியாக இருந்தவர் அறிஞர் சுரைஹ் ...

ஜனாதிபதி அலி (ரலி) அவர்களின் உருக்கு சட்டை ஒன்று தொலைந்து விட்டது 

பல போர்களில் அலி அவர்கள் அந்த உருக்கு சட்டையை கேடயமாக பயன் படுத்தி உள்ளார்கள். அவர்கள் அதிகம் விரும்பும் ஒரு பொருளாக அந்த உருக்கு சட்டை இருந்தது.

எந்த உருக்கு சட்டையை அலி அவர்கள் தொலைத்தார்களோ அதே உருக்கு சட்டை ஒரு யூதனின் கரத்தில் இருந்ததையும்  அந்த உருக்கு சட்டையை விற்பனை செய்வதற்காக அந்த யூதன் சந்தைக்கு கொண்டு வந்திருப்பதையும் அலி (ரலி) அவர்கள் கண்டார்கள் ..

சந்தையில் யூதனின் கரத்தில் இருந்த உருக்கு சட்டையை அலி(ரலி) அவர்கள் கண்டதும் அது தமது உருக்கு சட்டை தான் என்று அறிந்து கொண்டு அந்த யூதனிடம் சென்று குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் அந்த உருக்கு சட்டையை தாம் தொலைத்து விட்ட தகவலை சொல்லி தமக்கு உரிய உருக்கு சட்டையை திருப்பி தருமாறு ஜனாதிபதி அலி அவர்கள் வேண்டி கொண்டார்கள்.

அந்த யூதனோ இல்லை இல்லை இது எனக்கு உரியது என்று மறுத்து விட்டு இதை நீங்கள் பலவந்தமாக அடைய விரும்பினால் நான் நீதி மன்றம் செல்வேன் என்று யூதன் கூற ஜனாதிபதி அலி அவர்கள் அதை ஒப்பு கொண்டு நீதி மன்றம் சென்றார்கள்.

வாதி ஜனாதிபதி அலி அவர்கள்...

பிரதி வாதி நாட்டின் ஜனாதிபதி அலி அவர்களின் ஆளுகையின் கீழ் வாழும் ஒரு சிறுபான்மை சமுகத்தை சார்ந்த யூதன்....

வழக்கு ஆரம்பமானது..... 

நீதிபதி அறிஞர் சுரைஹ் அவர்கள் வழக்கு விசாரணையை தொடங்கினார்.

ஜனாதிபதி அலி அவர்கள் தமது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்கள் .

யூதன் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கூர்ந்து கவனித்த நீதிபதி சுரைஹ் அவர்கள் ஜனாதிபதி அலி அவர்களை நோக்கி ,"அலி அவர்களே !
நீங்கள் உண்மையாளர் சத்தியத்தை தான் பேசுவீர்கள் என்பதை நான் அறிவேன் ஆனால் வழக்கு நீதிமன்றம் என வந்து விட்டால் நல்லவர் கெட்டவர் உண்மையாளன் பொய்யன் என்பதை எல்லாம் கவனத்தில் கொள்ள முடியாது நீதிமன்ற வழக்குகளில் ஆதரங்களும் சாட்சிகளும் தான் பேசும்
உருக்கு சட்டை குறிப்பிட்ட யூத சமூகத்தை சார்ந்த நண்பரின் கரத்தில் உள்ளது "...

"அது உங்களுக்கு சொந்தமானது என்றால் அதற்கு சாட்சிகள் தேவை".. என நீதிபதி ஜனாதிபதி அலி அவர்களிடம் சொல்ல..
அலி (ரலி) அவர்களும் " ஆம் 
அதற்கு என்னிடம் சாட்சி இருக்கிறது " என கூறிவிட்டு குன்புர் என்ற ஒரு சகோதரரையும் தனது மகன் ஹஸனையும் சாட்சியாக விசாரிக்க சொல்கிறார்கள் அதிபர் அலி அவர்கள்...

இங்கு குறுக்கிட்ட நீதிபதி சுரைஹ் அவர்கள் 
ஜனாதபதி அவர்களே நீங்கள் குறிப்பிட்ட இரு சாட்சிகளில் முதல் சாட்சியை நான் ஏற்று கொள்கிறேன்  ஆனால் இரண்டாவது சாட்சியை என்னால் ஏற்று கொள்ள முடியாது  மறுத்து விட்டார்கள் 

"நபிகள் நாயகத்தால் சுவனத்திற்கு சொந்த காரர் என புகழ்ந்துரைக்க பட்ட நபிகளாரின் பேரன் ஹஸன் அவர்களின் சாட்சியை நீங்கள் அங்கீகரிக்க மாட்டீர்களா,? .... என்று
ஜனாதிபதி அலி அவர்கள் வினவ அதற்கு நீதிபதியின் பதில் இதோ...
"ஹஸன் அவர்கள் எங்களில் மிக சிறந்த மனிதர். சுவனத்திற்கு சொந்த காரர் என்பதில் இரண்டு கருத்திற்கு இடம் இல்லை .நான் ஹஸன்அவர்களின் சாட்சியை ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னது  அவரின் மீதுள்ள மரியாதை குறைவினால் அல்ல தந்தைக்கு மகன் சொல்லும் சாட்சியை இந்த இடத்தில் அனுமதிக்க முடியாது என்ற காரணத்தினால் தான்"... என விளக்கம் தந்தார்

இதை செவியுற்ற ஜனாதிபதி அலி அவர்கள் "என்னிடம் வேறு சாட்சிகள் இல்லை .உருக்கு சட்டையை நீங்களே வைத்து கொள்ளுங்கள்"... என அந்த யூதனிடம் கூறிவிட்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்கள் 

இது வரையிலும் இங்கு நடந்த வாத பிரதி வாதங்களை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த உருக்கு சட்டையை தன் கரத்தில் வைத்திருந்த யூதன் இப்போது பேச ஆரம்பித்தார்.....

 "ஆம் இந்த உருக்கு சட்டை எனக்கு உரியதல்ல இது உண்மையில் ஜனாதிபதி அலி அவர்களுக்கு உரியது தான் என கூறி உருக்கு சட்டையை அலி அவர்களிடம் ஒப்படைத்து விட்டு கலிமா மொழிந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்...!

அதற்கு அந்த யூதன் கூறிய முக்கிய காரணம் "நான் இந்த நாட்டின் சிறுபான்மை  மதத்தை சார்ந்த ஒரு எளிய மனிதன் எனக்கு எதிராக நீதி மன்றத்திற்கு வந்தவர் இந்த நாட்டின் அதிபர்"..
"அலிஅவர்கள் ஜனாதிபதியாக இருந்தும் அவருக்கு முக்கியத்துவம் தராமல் நீதிபரிபாலனம் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் தான் அமையும்".. என்று நீதிபதி சுரைஹ் அவர்கள் கூறியது உண்மையாகவே என்னை ஈர்த்தது

இந்த மார்க்கம் சத்திய மார்க்கம் என்பதற்கு இந்த நீதிபரிபாலன முறையே சிறந்த சான்றாக அமைந்துள்ளது என கூறினார்

இது ஒரு வரலாறு இந்த வரலாற்றில் பல பாடங்கள் புதைந்து கிடக்கின்றன

"இஸ்லாமிய குடியரசின் நான்காவது ஜனாதிபதியின் வாழ்கை  பொருளாதார நிலை ஒரு உருக்கு சட்டைக்காக வழக்கு தொடுக்கும்  ஏழ்மை நிலையில் தான் இருந்திருக்கிறது" என்பது முதல் பாடம்

"அரசையும் அதிகாரத்தையும் வைத்து கொண்டு ஊரை அடித்து உலையில் போட அவர்கள் கனவிலும் நினைத்தது இல்லை"... என்பது இரண்டாவது பாடம்

"இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மை  மக்கள் எவ்வித அச்சமுமின்றி  சிறப்பாக வாழ்ந்துள்ளனர்..
ஆட்சியாளரை எதிர்த்து வழக்கு தொடரும் அளவிற்க்கு அவர்கள் முழு சுதந்திரமும் உரிமையும் பெற்று வாழ்ந்துள்ளனர்" ...என்பது மூன்றாவது பாடம்

.இஸ்லாமிய நீதி என்பது மதங்களை கடந்தது பாதிக்க பட்டவன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அவனுக்கு இஸ்லாம் நீதி வழங்கும் என்பது நான்காவது பாடம்...

இப்படியாக பல பாடங்களும் படிப்பினைகளும் நிறைந்ததாக இந்த உண்மை வரலாறு அமைந்துள்ளது....
இந்த வரலாற்றை இன்றைய முஸ்லீம் சமூகமும் முஸ்லீம் சமூகத்தை வெறுக்க வைக்கப்பாடுபட்டு வரும் சில இந்துத்துவ இயக்க சகோதரர்களும்  உணரட்டும்...

செய்யது அஹமது அலி . பாகவி

من ﻋﻼﻣﺎﺕ ﺣﺴﻦ ﺍﻟﺨﺎﺗﻤﺔ

من ﻋﻼﻣﺎﺕ ﺣﺴﻦ ﺍﻟﺨﺎﺗﻤﺔ:
ﺍﻟﻌﻼﻣﺔ ﺍﻷﻭﻟﻰ : ﺃﻥ ﻳﻤﻮﺕ المسلم ﻭﺟﺒﻴﻨﻪ ﻳﻌﺮﻕ، ﻗﺎﻝ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ " : ﻣﻮﺕ ﺍﻟﻤﺆﻣﻦ ﺑﻌﺮﻕ ﺍﻟﺠﺒﻴﻦ .
ﺍﻟﻌﻼﻣﺔ ﺍﻟﺜﺎﻧﻴﺔ : ﺃﻥ ﻳﻤﻮﺕ المسلم ﻓﻲ ﻟﻴﻠﺔ ﺍﻟﺠﻤﻌﺔ ﺃﻭ ﻓﻲ ﻧﻬﺎﺭ ﺍﻟﺠﻤﻌﺔ، ﻗﺎﻝ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ " : ﻣﺎ ﻣﻦ ﻣﺴﻠﻢ ﻳﻤﻮﺕ ﻳﻮﻡ ﺍﻟﺠﻤﻌﺔ ﺃﻭ ﻟﻴﻠﺔ ﺍﻟﺠﻤﻌﺔ ﺇﻻ ﻭﻗﺎﻩ ﺍﻟﻠﻪ ﻓﺘﻨﺔ ﺍﻟﻘﺒﺮ ".
ﺍﻟﻌﻼﻣﺔ ﺍﻟﺜﺎﻟﺜﺔ : ﺃﻥ ﻳﻨﻄﻖ ﺑﺎﻟﺸﻬﺎﺩﺓ ﻗﺒﻞ ﺃﻥ ﻳﻤﻮﺕ، ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ " : ﻣﻦ ﻛﺎﻥ ﺁﺧﺮ ﻛﻼﻣﻪ ﻣﻦ ﺍﻟﺪﻧﻴﺎ، ﻻ ﺇﻟﻪ ﺇﻻ ﺍﻟﻠﻪ، ﺩﺧﻞ ﺍﻟﺠﻨﺔ ".
ﺍﻟﻌﻼﻣﺔ ﺍﻟﺮﺍﺑﻌﺔ : ﺃﻥ ﻳﻜﻮﻥ ﺷﻬﻴﺪﺍ، ﻭﻟﻴﺴﺖ ﺍﻟﺸﻬﺎﺩﺓ ﻓﻘﻂ ﻳﻌﻨﻲ ﺍﻟﻤﻮﺕ ﺑﺎﻟﺠﻬﺎﺩ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ، ﻭﻟﻜﻦ ﺫﻛﺮ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﺃﻥ ﻣﻦ ﻳﻤﻮﺕ ﻣﺤﺘﺮﻗﺎ ﺃﻭ ﻏﺮﻳﻘﺎ، ﺃﻭ ﺑﺎﻟﻄﺎﻋﻮﻥ ﺃﻭ ﺑﻤﺮﺽ ﺍﻟﺒﻄﻦ، ﺃﻭ ﺩﻓﺎﻋﺎ ﻋﻦ ﻧﻔﺴﻪ ﻭﻣﺎﻟﻪ ﻭﻋﺮﺿﻪ ﻓﻬﻮ ﺷﻬﻴﺪ .
ﺍﻟﻌﻼﻣﺔ ﺍﻟﺨﺎﻣﺴﺔ : ﺃﻥ ﻳﻤﻮﺕ ﻋﻠﻰ ﻋﺒﺎﺩﺓ، ﻛﺎﻥ ﻳﺼﻠﻲ ﻣﺜﻼ ﺃﻭ ﺻﺎﺋﻤﺎ ﺃﻭ ﺫﺍﻫﺒﺎ ﺇﻟﻰ ﻣﺤﺎﺿﺮﺓ ﺩﻳﻨﻴﺔ، ﻳﻘﻮﻝ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ " : ﺇﺫﺍ ﺃﺭﺍﺩ ﺍﻟﻠﻪ ﺑﻌﺒﺪ ﺧﻴﺮﺍ ﻃﻬﺮﻩ ﻗﺒﻞ ﻣﻮﺗﻪ، ﻗﺎﻟﻮﺍ ﻭﻣﺎ ﻃﻬﻮﺭ ﺍﻟﻌﺒﺪ، ﻗﺎﻝ : ﻋﻤﻞ ﺻﺎﻟﺢ ﻳﻠﻬﻤﻪ ﺇﻳﺎﻩ ﺣﺘﻰ ﻳﻘﺒﻀﻪ ﻋﻠﻴﻪ ..
اذا اتممت القراءة فضلا علق بذكر الله وقل اللهم ارزقني حسن الخاتمة وشارك المنشور ليستفيد منه غيرك 💙

Wednesday, 6 November 2019

நாலரைக் கோடி முறை உச்சரிக்கப்படுகின்ற ஒரே பெயர் முஹம்மது

*"முஹம்மது"* (ஸல்) என்ற பெயரை ஆய்வு செய்தவர் அதிசயித்து போனார்!

உலகத்திலேயே அதிகமாக உச்சரிக்கக்கூடிய பெயர் எது என்று ஆய்வு செய்தார், அந்த ஆய்வில் அவர் சொன்னார் உலகில் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொகையில் சொல்லப்படும் பாங்கின் வழியாக *"முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"* என்று சொல்லப்படுகிறது, *முஹம்மது* நபி (ஸல்) அவர்களின் பெயர் ஒரு பாங்கிற்கு இரண்டு தடவை என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு அவர்களின் பெயர் பத்து முறை உச்சரிக்கப்படுகிறது.
 
உலகத்திலே சுமார் *நாற்பத்தி ஐந்து லட்சத்திற்கும் மேலாக பள்ளிகள் இருக்கிறது* என்றால் நாற்பத்தி ஐந்தாயிரம் பள்ளிகளிலேயும் பகிரங்கமாக *"அஸ்ஹது  அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"* என்று ஒரு நாளைக்கு ஐந்து முறை சொல்லப்படுகின்ற காரணத்தினால், ஒரு நாளில் *நாலரைக்  கோடி தடவை*  உச்சரிக்கப்படுகிறது. 
ஒவ்வொரு நாளும் *"முஹம்மது"* (ஸல்) என்ற பெயரை ஆய்வு செய்தவர் அதிசயித்து போனார்!

உலகத்திலேயே அதிகமாக உச்சரிக்கக்கூடிய பெயர் எது என்று ஆய்வு செய்தார், அந்த ஆய்வில் அவர் சொன்னார் உலகில் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொகையில் சொல்லப்படும் பாங்கின் வழியாக *"முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"* என்று சொல்லப்படுகிறது, *முஹம்மது* நபி (ஸல்) அவர்களின் பெயர் ஒரு பாங்கிற்கு இரண்டு தடவை என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு அவர்களின் பெயர் பத்து முறை உச்சரிக்கப்படுகிறது.
 
உலகத்திலே சுமார் *நாற்பத்தி ஐந்து லட்சத்திற்கும் மேலாக பள்ளிகள் இருக்கிறது* என்றால் நாற்பத்தி ஐந்தாயிரம் பள்ளிகளிலேயும் பகிரங்கமாக *"அஸ்ஹது  அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"* என்று ஒரு நாளைக்கு ஐந்து முறை சொல்லப்படுகின்ற காரணத்தினால், ஒரு நாளில் *நாலரைக்  கோடி தடவை*  உச்சரிக்கப்படுகிறது. 
ஒவ்வொரு நாளும் நாலரைக் கோடி முறை உச்சரிக்கப்படுகின்ற ஒரே பெயர் *முஹம்மது* நபி (ஸல்) அவர்களின் பெயர் மட்டுமே.

படைப்பினங்களில் இப்படி ஒரு திருநாமத்தை உலகத்தில் சொல்வதற்கு யாருடைய திருநாமத்தையும் இறைவன்  ஆக்கவில்லை.

எல்லா காலக்கட்டத்திலேயும், உலக முடிவு நாள் வரும் வரை உலகத்தின் எல்லா பகுதிகளிலேயும் அவர்களின் பெயரை சொல்லக்கூடிய அளவிற்கு ஆக்கி வைத்திருக்கிறான் என்று சொன்னால் அல்லாஹ்தாலா தன்னுடைய தோழரின் மீது வைத்திருக்க கூடிய பிரியம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்!
 
இனிமேல் யாரும் அவர்களை புகழ்ந்து தான் புகழ் வரவேண்டும் என்று யாரும். சொல்ல முடியாத அளவிற்கு அல்லாஹ்தாலா அவர்களின் புகழை உயர்த்தி விட்டான்! அல்ஹம்துலில்லாஹ்!

94:4 وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ‏
94:4. மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.

ஆய்வின் முடிவில், ஆய்வாளர் இஸ்லாத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ்தாலா அந்த ஒப்பற்ற நபிகள் நாயகத்தை எப்படி பிரியம் வைக்க வேண்டும் என்று அருள்மறையிலே சொன்னானோ அப்படிபட்ட பிரியத்தை நமக்கு அவனே சன்மானமாக தருவானாக! ஆமீன் 

--கீழை ஜிப்ரி* நபி (ஸல்) அவர்களின் பெயர் மட்டுமே.

படைப்பினங்களில் இப்படி ஒரு திருநாமத்தை உலகத்தில் சொல்வதற்கு யாருடைய திருநாமத்தையும் இறைவன்  ஆக்கவில்லை.

எல்லா காலக்கட்டத்திலேயும், உலக முடிவு நாள் வரும் வரை உலகத்தின் எல்லா பகுதிகளிலேயும் அவர்களின் பெயரை சொல்லக்கூடிய அளவிற்கு ஆக்கி வைத்திருக்கிறான் என்று சொன்னால் அல்லாஹ்தாலா தன்னுடைய தோழரின் மீது வைத்திருக்க கூடிய பிரியம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்!
 
இனிமேல் யாரும் அவர்களை புகழ்ந்து தான் புகழ் வரவேண்டும் என்று யாரும். சொல்ல முடியாத அளவிற்கு அல்லாஹ்தாலா அவர்களின் புகழை உயர்த்தி விட்டான்! அல்ஹம்துலில்லாஹ்!

94:4 وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ‏
94:4. மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.

ஆய்வின் முடிவில், ஆய்வாளர் இஸ்லாத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ்தாலா அந்த ஒப்பற்ற நபிகள் நாயகத்தை எப்படி பிரியம் வைக்க வேண்டும் என்று அருள்மறையிலே சொன்னானோ அப்படிபட்ட பிரியத்தை நமக்கு அவனே சன்மானமாக தருவானாக! ஆமீன் 

--கீழை ஜிப்ரி

Tuesday, 5 November 2019

இமாமுல்அஃழமும்_நாத்திகவாதிகளும்


*******************************************
உம் இறைவனை எந்த ஆண்டு கண்டுபிடித்தீர் என
நாத்திகவாதிகள் இமாம் அபூஹனீபா (ரஹ்)அவர்களிடம் கேட்டார்கள் 
"அல்லாஹ் காலம்,நேரங்களைக் கடந்தவன் அவனுக்கு முன் எதுவுமில்லை”என்றார்கள் இமாம்.
அதெப்படி? எனக்கேட்டார்கள் நாத்திகவாதிகள் 

இமாம்         ;நான்கிற்கு  முன் எது?
அவர்கள்:  மூன்று 
இமாம் :   மூன்றுக்கு முன்?
அவர்கள்:  இரண்டு 
இமாம்      இரண்டிற்கு முன் 
அவர்கள்:    ஒன்று 
இமாம் :     ஒன்றாம் எண்ணுக்கு முன்?
அவர்கள்:     எதுவுமில்லை 
இமாம்:     கணிதவியலில் உருவாக்கப்பட்ட ஒன்றுக்கு முன் ஒன்றுமில்லை எனும் போது ஏகனான அல்லாஹ் ஒருவனுக்கு முன்னும் எதுவுமில்லை.

அவர்கள்:    இறைவன் எந்த திசையை முன்னோக்குகிறான்?

இமாம்:        இருளடைந்த அறையில் நீங்கள் ஒரு விளக்கை ஏற்றினால் ஒளி எந்த திசையை நோக்கி இருக்கும் ?

அவர்கள் : எல்லாதிசையிலும் அந்த ஒளி பரவும் 
இமாம்:  செயற்கை ஒளிக்கே திசை இல்லையெனும் போது அல்லாஹ், வானங்களுக்கும்,பூமிக்கும் ஒளியாவான் அவனுக்கேது திசை? 

அவர்கள் : உங்கள இறைவனை வர்ணியுங்கள்
இரும்பு போன்ற திடப்பொருளா?,நீர் போல திரவப்பொருளா?
அல்லது புகை போன்று வாயுவா?

இமாம் :மரணப்படுக்கையில் இருப்பவர் அருகே இருந்ததுண்டா ?

அவர்கள் :ஆம் 

இமாம் :உடலை அசைத்துக்கொண்டும், மூச்சுவிடடவண்ணம் இருந்தாரா?

அவர்கள் :ஆம் இருந்தார்.

இமாம் :திடீரென மூச்சுநின்றுவிட்டதா?

அவர்கள் : ஆம் நின்று விட்டது?
இமாம் :ஏன்?
அவர்கள் : அவர் உடலை விட்டு உயிர் வெளியேறி விட்டது.

இமாம் : வெளியேறிய உயிரை பற்றி எனக்கு விவரியுங்களேன். அதெப்படி இருந்தது??
இரும்பு போன்று திடப்பொருளா?,நீர் போல திரவப்பொருளா?
அல்லது புகை போன்று வாயுவா?
அவர்கள் : அதை பற்றி ஒன்றும் எங்களுக்கு தெரியவில்லை.

இமாம் : படைக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் ஒரு அடிப்படை தன்மையே  நமக்கு புலப்படவில்லை என்றால் படைக்கப்படாத முதலும் முடிவுமாக இருக்கின்ற இறைவனைப் பற்றி என்னால் எப்படி வர்ணிக்கமுடியும்?

நாத்திகர்கள் வாய் அடைத்து நின்றார்கள்.
       அரபியிலிருந்து தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயீ

Friday, 1 November 2019

பெற்றோரின் வயதான காலத்தில்

முக நூல் நண்பர் ஒருவர் அனுப்பிய அரிய படிப்பினைமிக்க பதிவு   வாசித்து மகிழ்க! பிரிவும் செய்க!
 
💐💐💐🥁தட்டாமல் ஒலி எழுப்பும் 
மேளம் …!!🥁

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் என்பது ஒரு ஜப்பான் நாட்டுக் கதையாகும்.

முன்னொரு காலத்தில் ஜப்பான் 🇰🇷நாட்டில்⚖ சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.

அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, ⛰ மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும்.

இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் 🤴 எண்ணம்.

அந்தச் சட்டம்⚖ நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும்👬 ஒருவரிடம் ஒருவர் மிக அன்பு ❤ கொண்டவர்களாக விளங்கினர்.

நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார்.

ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் ⛰ மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான்.

தந்தையைப் பிரிய அவனுக்கு 😟 மனமே வரவில்லை. 
எனினும் அரச தண்டனைக்குப் 💂🏻 பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு ⛰ முதுகில் 🧚🏻‍♀ சுமந்து சென்றான்.

 மலைப்பகுதியை ⛰ அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் 😭 வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி 🏠   வீட்டிற்கு வந்து விட்டான்.

வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு 🍊🍐🍇🍉🍌 உணவளித்து வந்தான்.

சாம்பல் கயிறு.

ஒரு நாள் 🤴 அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி,🧐 போட்டி ஒன்றை அறிவித்தான்.

சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை 📿 கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும்.

போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு 🤔 கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு  📿உருவாக்க முடியவில்லை.

அரசனின் 🤴 போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம் 🗣 தெரிவித்தான்.

போட்டியைக் கேட்ட 👂தந்தை,🎅 மகனிடம்👱🏻 பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் 🌠 சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார்.

மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் 🤴 காண்பித்து🤲 பரிசினைப்💰 பெற்றான்.

அடி எது? நுனி எது?

ஒரு மாதம் கழித்து அரசன் 🤴 இரண்டாவது போட்டியை அறிவித்தான்.

அரசன் ஒரு மரக்கொம்பைக் 🧹 கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.

கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை.

மரக்கொம்பை 🧹 வீட்டுக்கு எடுத்து வந்த மகன் 👨 தந்தையிடம்🎅 காண்பித்து அரசனின் 👑 கேள்வியைக் கேட்டான்.

தந்தை மரக்கொம்பை தண்ணீரில் 💦 போட்டால், அது லேசாக மூழ்கும் பகுதி அடி, மிதக்கும் பகுதி நுனி என்றார்.

மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் 💰 பெற்றான்.

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்.

அரசன் 🤴 மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான்.

அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் 🥁 ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான்.

வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர்.

அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து 😕 தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான்.🗣

தந்தை அவனிடம் “மேளத்திற்குத்🥁 தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் ⛰ சென்று  தேனீக்கூடு ☃ ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை 🥁  தயார் செய்” என்றார்.

மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை 🥁 தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் 🤴 தந்தான்.

அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை 🥁 அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் ☃ அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன.🦇 இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது.

இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த😱 அரசன் 🤴 “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான்.

அனுபவம் தந்த பதில்கள்.

“அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை 🎅 என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான்.

இளைஞனின் 👨 பதில் அரசனை நெகிழச் செய்தது.

சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின்  அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் 🤴 உணர்ந்து கொண்டான்.

உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத 🎅வயதானவர்களை,⛰ மலைப்பகுதிக்கு  கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான்.

அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக்🥰😍💏👪👩‍👩‍👦‍👦 கழித்தனர்.

அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம்.

ஆம்,

வயதான பெரியவர்கள் 
வீட்டில் இருப்பதே நமக்கு கிடைத்த வரம் என்று உணர்வோம்.

நம்மை ஆளாக்கிய பெற்றோரின் 👩‍👩‍👦‍👦 வயதான காலத்தில் அவர்கள் 
நம்மோடு இருப்பதும் அவர்களை பராமரிப்பதும் 
நமக்கான கடமை 👍🏻 மட்டுமல்ல 
நமக்கு கிடைத்த அருள் என்று உணர்வோம்.

தொப்புள் கொடியில் இருந்தே தொடங்கிய தாயும்
மார்பிலும் தோளிலும் தூக்கிச் சுமந்து கால் தேய உழைத்து நம்மை உருவாக்கிய தந்தையும்
நம்மிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை 
என்றாலும்
எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் 
உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு.
 🥰பிள்ளைகளுக்கு சமர்ப்பணம். 💐💐💐

Monday, 28 October 2019

லஞ்சம் வாங்குறது தப்பா?"

நன்றி: அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

“லஞ்சம்” - சுஜாதா கட்டுரை

லஞ்சம் என்பதற்கு தூய தமிழ்ச் சொல்லாக ‘கையூட்டு‘ என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.

எனக்குத் தெரிந்தவரை இந்தச் சொல் 1910-ல் கோபிநாத் ராவின் ‘சோழ வம்ச சரித்திரச் சுருக்கம்‘ என்ற புத்தகத்தில் முதலில் வந்துள்ளது. லஞ்சம், சோழர் காலத்திலிருந்து இருந்திருக்கிறது என்பதற்கு மறைமுகமாக கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதை நீலகண்ட சாஸ்திரியின் ‘The Cholas‘ல் காணமுடிகிறது. சோழர்காலத்தில் அரச குற்றங்கள் செய்தவர்களை ஒரு மரச்சட்டத்தில் கட்டிவைத்து எழுபதிலிருந்து நூறு பிரம்படி கொடுத்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. சில சமயங்களில் தலையையும் கொய்திருக்கிறார்கள்… அல்லது யானையால் மிதித்திருக்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் தண்டனை அவ்வளவு தீவிரமானதாக இல்லை. கோயிலுக்கு ஒரு வருஷத்துக்கு தினம் ஒரு விளக்கு ஏற்றினால் போதும் என்று கொலைக்குற்றங்கள்கூட மன்னிக்கப்பட்டிருக் கின்றன. இதன் பின்னணியில் கையூட்டின் கை இருப்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் ‘இவர்கள்‘ விளக்கேற்றுவதில்லை. சிரித்துக் கொண்டே ஜெயிலுக்குப் போய், அடுத்த திங்கட்கிழமை ஜாமீனில் வெற்றி வேந்தர்கள் போல திரும்பி வந்து, போஸ்டர் ஒட்டி விழாக் கொண்டாடுகிறார்கள். கொஞ்சம் ஆராய்ந்தால் லஞ்சம் சங்க காலத்திலிருந்து இருக்கிறதை யூகிக்கலாம்.

நவீன இந்தியாவில் லஞ்சம் பிரிட்டிஷ்காரர்கள் துவக்கி வைத்தது. திவான் பஹதூர், ராவ் பஹதூர், ராவ் சாஹிப் பட்டங் கள் எல்லாம் கொடுப்பதில் பின்னணி இருந்தது. ஆங்கிலேயர்கள் நம்மைத் திறமையாக ஆள்வதற்கு, அடக்குவதற்கு லஞ்சம் பயன்பட்டது என்றும் சொல்லலாம். சிரஸ்தார், தாசில்தார் போன்றவர்களின் லஞ்சங்களை வெள்ளைக்காரன் பெரிதாக மதிக்கவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் ‘சம்பளம் எவ்வளவு.. கிம்பளம் எவ்வளவு‘ என்பதுதான் அப்பவே பொது வழக்காக இருந்தது.

லஞ்சம் – தெலுங்கு வார்த்தை. லஞ்சலம் என்றால் விலைமகள். அதற்கும் இதற்கும் சம்பந்தமிருக்கிறதா என்று யாராவது ஆராயலாம். தற்போது இருக்கிறது.

லஞ்சம் என்பதைத் தெளிவாக முதலில் அறுதியிடலாம். லஞ்சம் என்பது அதிகாரிகள் கடமையைச் செய்வதற்கோ, மீறுவதற்கோ கொடுக்கப்படும் பரிதானம். பரிதானம் என்றால் பண்டமாற்று. ‘வந்த விவகாரத்தினில் இனிய பரிதானங்கள் வரும்‘ என்று குமரேச சதகத்தில் வருகிறது. மாறும் பண்டங்கள் ரூபாய் நோட்டுக் கட்டுகள், கடற்கரை வீடுகள், அயல்நாட்டு சமாசாரங்கள், பெண்கள்… எல்லாம் நாட்டின், இணைப் பொருளாதாரத்தின் அங்கங்கள்.

மேற்கண்ட வரையறையில் உள்ள இரண்டு வகைப்பட்ட லஞ்சத்துக்கும் இடையே முக்கிய வேறுபாடு – லஞ்சத் தொகை. பொதுவாக கடமையைச் செய்வதற்கு உண்டான லஞ்சத் தொகை, மீறுவதற்குள்ள லஞ்சத் தொகையில் பத்தில் ஒரு பங்காக இருக்கும். மேலும் கடமையைச் செய்பவர்களை அதட்ட முடியாது. மீறும் லஞ்ச அதிகாரிகளை நாம் அதட்டலாம். வீட்டுக்குகூட வரச் சொல்லலாம்; வருவார்கள்.

முதல் உதாரணத்தில் அரசாங்கத்துக்கு வரவேண்டிய பணம் ஏதும் மறுக்கப்படுவதில்லை. ஒரு என்ஓசி கொடுக்கவோ, ஒரு பர்த் சர்ட்டிபிகேட் கொடுக்கவோ, ஒரு பாஸ்போர்ட் எடுக்கவோ காத்திருக்க வேண்டிய அவகாசத்தைக் குறைக்க, நாம் கொடுக்கும் விலை. இல்லையேல் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அல்லது மற்றொரு நாள் வரவேண்டும். அதற்கு ஆகும் செலவு நிச்சயம் லஞ்சத் தொகையைவிட அதிகமாக இருக்கும். இதனால் இது நியாயமானதாகப் படலாம்.

இதில் என்ன மறைமுகமான பாவச்செயல்? என்னவென்றால், உங்கள் அசௌகரியத்தைக் குறைக்க மற்றொருவர் அசௌகரியத்தை அதிகப்படுத்துகிறீர்கள். உமக்கு முன்னே வந்து காலையிலிருந்து அல்லது ஒரு வாரமாக காத்திருக்கும் ஒரு லஞ்சம் தராத கிச்சாமியின் கேஸை முதலில் எடுத்துக் கொள்ளாமல் உங்களை முதலில் கவனிக்கச் சொல்கிறீர்கள். அந்த வகையில் இது ஒரு ‘ஸாஷே‘ (sachet)அளவு பாவம்தான். ரயில்வே புக்கிங் ஆபீஸில் நாற்பது பேர் க்யூவில் நின்றுகொண் டிருப்பார்கள். உள்ளே சிப்பந்தியைத் தெரிந்த ஒருவர் மட்டும் சுதந்திரமாக கௌண்ட்டர் அருகில் வந்து முழங்கையை வைத்து வேடிக்கை பார்த்தபின் கிளார்க்கை விசாரித்து பான்பராக் பரிமாறிக்கொண்டு தக்க சமயத்தில் ஒரு ரிசர்வேஷன் ஃபாரத்தை நீட்டுவார். இதை மற்ற பேர் பார்த்துக்கொண்டிருக்க, ஒரே ஒரு பி.பி-காரர் மட்டும் லேசாக எதிர்ப்பார். க்யூ ஜம்பிங், வரிசை தவறுதல் – இந்திய தேசிய குணம். சில வேளைகளில் மற்றவர் எதிர்ப்பார்கள். பல வேளைகளில், ‘நமக்கேன் வம்பு‘ என்று விட்டுவிடுவார்கள். Apathy சின்னஞ்சிறு லஞ்சங்களின் முக்கிய காரணம்.

இரண்டாவது வகை லஞ்சத்தில் பாவ அளவு அதிகம். சர்க்காருக்கு கிடைக்கவேண்டிய பணம் ஒரு சர்க்கார் அதிகாரிக்குப் போகிறது. அது மக்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பணம். ரோடாகவோ, பஸ் நிலையமாகவோ, குடிநீர் திட்டமாகவோ அது மாறாமல், அதிகாரி ஒரு க்வார்ட்டர் அடிப்பதற்கோ, அவர் மகன் காப்பிட்டேஷனுக்கோ, மனைவி நகைக்கோ உதவுகிறது.

இவ்விரண்டு வகையில்தான் லஞ்சம் என்னும் துணைக்கண்ட இயந்திரம் இயங்குகிறது. கடமையைச் செய்ய வாங்கும் லஞ்சத்துக்குப் பல உதாரணங்கள் – பர்த் சர்ட்டிபிகேட், டெத் சர்ட்டிபிகேட், ரேஷன் கார்டு போன்றவை. அதிகாரிகளின் கையெழுத்து தேவைப்படும் எந்தச் செயலும்.
கடமை மீறல் லஞ்ச உதாரணங்கள் – தரக்குறைவான பாலத்துக்கு இன்ஸ் பெக்ஷன் சர்ட்டிபிகேட் கொடுப்பது அல்லது அண்டர் இன்வாய்ஸிங், டிஸ்கவுண்ட் பித்தலாட்டங்கள், செய்யாத வேலைகளைச் செய்துவிட்டதாக சொல்வது, பிளானை மீறிய கட்டடங்களை அனுமதிப்பது, வருமான வரியைக் குறைத்து மதிப்பிடுவது, சர்க்கார் நிலத்தையும் அஃதே, கஸ்டம் விதிகளைத் தளர்த்துவது, திருட்டு நகைகளை உருக்க அனுமதிப்பது. கடமை மீறலின் அளவுக்கு ஏற்ப லஞ்சத் தொகை குறைந்தபட்சம் ஆயிரத்திலிருந்து கோடிவரைகூட போகலாம்.

முதல் வகையான ‘பெட்டி கரப்ஷன்‘ (petty corruption) என்பதை ஒழிக்க மக்களுக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். வேறு காரணங்களுக்காக ஆட்சேபணை தெரிவிக்க முடியாதபடி அரசுக் கட்டுப் பாடுகளையும் தேவைகளையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும். அதன் பின்னும் ஒரு சான்றிதழ் தர நான்கு வாரம் ஆகுமென்றால் நான்கு வாரம் காத்திருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் எழுதும் எல்லா கடிதங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். கடைசியில் அலுத்துப் போய் இந்த ஆளிடம் பேறாது என்று ஒழுங்காகச் செய்து கொடுத்து விடுவார்கள்.

மேலும், டெக்னாலஜியை வைத்துக் கொண்டு இந்த கரப்ஷனை ஒழிக்கலாம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் – ரயில்வே ரிசர்வேஷன். அது கணினியாக்கம் செய்யப்பட்ட பின் இந்த அடிமட்ட லஞ்சம் கணிசமாகக் குறைந்துவிட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினிமயமாக்கமும் நல்ல உதாரணம். கடமையைச் செய்வதை கணிப்பொறியிடம் கொடுத்துவிட்டால், அந்த முட்டாள் இயந்திரத்துக்கு லஞ்சம் வாங்கத் தெரியாது.

அரசின் எல்லா செயல்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும். எல்லா அதிகாரிகளும், அணுக எளியவர்களாக இருக்க வேண்டும். ‘ட்ரான்ஸ் பெரண்ட் கவர்ன்மெண்ட்‘ (transparent government) என்பார்களே, அது. எல்லா விண்ணப்ப ஃபாரங்களும் ஒரு பக்கத்துக்கு மேல் இருக்கக் கூடாது.

இரண்டாவது லஞ்சம்தான் நீக்குவது மிகமிக கடினம். இதில் டெக்னாலஜி ஏதும் செய்ய முடியாது. ‘தெஹல்கா‘(Tehelka) போல லஞ்சத்தை அடையாளம் காட்டத்தான் டெக்னாலஜி பயன்படும். இதில் அதிகாரிகள் பலர் டெக்னாலஜிக்கு அப்பால் இயங்குபவர்கள். சர்க்காரின் விதிமுறைகளின் முரண்பாடுகள்தான் இவர்கள் ஆயுதம். இவைகளே இவர்களின் சரணாலயமும். இவர்களின் இந்தச் சங்கிலியில் எங்காவது ஒரு நாணயமான அதிகாரி – ஒரு இளம் கலெக்டரோ, ஜாயிண்ட் செக்ரெட்டரியோ இருப்பார். அவரிடம் எப்படியாவது உங்கள் கோரிக்கை சேரும்படியாக பார்த்துக் கொள்ளவேண்டும். நிபந்தனைகளை ஒரு அட்சரம்கூட மீறாமல் கடைப் பிடித்து, தகுதி அடிப்படையில் சர்க்காரை அணுகும்போது, சாதகமானது நடக்கவில்லை என்றால், தவறாமல் கோர்ட்டுக்குப் போக வேண்டும். டாஸ்டாயவ்ஸ்கியின் கதை போல, கடைசியில் நியாயம் கிடைக்கும். சிலவேளை மிகத் தாமதமாக – 91 வயதில்!

அரசியலில், பொது வாழ்வில் உள்ளவர்கள் சுத்தமாக இருந்தால் அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள். முழுவதும் ஒழிக்க முடியும். அதற்கு நாம் தேர்ந்தெடுப்பவர்களைக் கவனிக்க வேண்டும். அவர்கள் படித்திருக்க வேண்டும். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்களாக இருந்தாலும் நல்லது. பணத் தேவை இருக்காது.

இதைவிட்டால் ஆரம்பத்தில் சொன்னவாறு சோழ ராஜா காலத்து தண்டனை முறைதான் பயனளிக்கும். அதற்காக ஒவ்வொரு ஊரிலும் ஒரு யானை வாங்க வேண்டும்!
***********************************************************************
அந்நியன் திரைப்படத்தில் லஞ்சம் பற்றி சுஜாதா:

"அஞ்சு பைசா லஞ்சம் வாங்குறது தப்பா?"
"தப்பு இல்லைங்க "

"அஞ்சு லட்சம் பேரு, அஞ்சு லட்சம் தடவை அஞ்சு பைசா லஞ்சம் வாங்கினா...??"

"தப்பு மாதிரிதான் தெரியுது,"

"அதுதாண்டா நடக்குது இங்க."
======================================

இந்தியன் திரைப்படத்தில் லஞ்சம் பற்றி சுஜாதா:

"ஏங்க, ஒலகத்துல என்னவோ யாருமே லஞ்சம் வாங்காத மாதிரி சொல்றீங்களே, இந்தியாவுல மட்டும்தான் லஞ்சம் வாங்குறாங்களா என்ன?"

"லஞ்சம் ஒலகம் பூரா இருக்குடா, என்ன, மத்த நாடுகள்ல கடமையை் மீறத்தாண்டா லஞ்சம், இங்க, கடமையைச் செய்யவே லஞ்சம் வாங்குறீங்க."

சோழர் காலம் 1000 வருடம்தான் ஆனால் 1400 வருடத்திற்கு முன் இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் லஞ்சம் பற்றி பேசுகிறது .

وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏ 
(அன்றி) உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்து கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.
(அல்குர்ஆன் : 2:188)

ர.ரா

Sunday, 20 October 2019

நல்லதையே கற்றுக்கொள்ளட்டும்

"எதைக் கற்றுக் கொண்டோம்?...
எதைக் கற்றுக் கொடுக்கிறோம்?..."
~~~~~~~.     ~~~~~~~.    ~~~~~~~
மிகச் சிறந்த எழுத்தாளரான ஜெயகாந்தன் அவர்களின் கதைகளில் ஒன்று.....

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். 

கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். 

ஒரு சமயம், 
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். 

ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். 

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். 

ஆனால் .. அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். 

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். 

ரயில் வருகிற நேரம்...

ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான். 

பின்பு பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான்.  அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான். 

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள். 

அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா. 

"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான். 

ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...

செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான். 

ஆக.... நாம் நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கைக்கான அர்த்தமே....

நம்மிடமிருந்து பிறர் நல்லதையே கற்றுக்கொள்ளட்டும்....

Friday, 18 October 2019

நபி ஜக்கரியா

நபி ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம்

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் விண்ணுலகப் பயணம் –மிஃராஜ் சென்றிருந்த போது ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.

உரையாடலின் இடையே அல்லாஹ்வின் தூதர் {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் } அவர்கள்,,,

”நீங்கள் எவ்வாறு எதற்காக கொலை
செய்யப்பட்டீர்கள்?” என்று கேட்டார்கள்...,,,

அதற்கு, நபி ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள்,,,

“எனது மகன் யஹ்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள் ஸாலிஹான, அழகுமிக்க,நல்லொழுக்கமுள்ள, தெளிவான
சிந்தனையும்,

பெண்களின் மீதான மோகமும் இல்லாத சிறந்த இளைஞராக இருந்தார்.

இஸ்ரவேலர்களைச் சார்ந்த ஓர் அரசனின் மனைவி ஒருத்தி என் மகன் யஹ்யாவின் மீது மோகம்
கொண்டு,

அவருடன் தவறான உறவு
கொள்ள விரும்பி, தன்னுடைய பணிப்பெண் ஒருவரை தூதனுப்பினாள்.

பல முறை அவள் தூதனுப்பினாள்.
ஆனால், என் மகன் யஹ்யா மறுத்து விட்டார்....!!

அல்லாஹ் என் மகனை அத்தீய செயலிலிருந்து காப்பாற்றினான்.

இதனால் என் மகன் மீது
சினங்கொண்ட அவள் என் மகன் யஹ்யாவை கொலை செய்ய திட்டமிட்டாள்.

இவ்வாறிருக்க ஆண்டு தோரும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும்
அவர்களின் பண்டிகை நாளும் வந்தது.

ஒவ்வொரு ஆண்டும் அரசன் தன் மனைவிக்கு
அவள் விரும்புகிற பரிசில்களை வழங்குவான்.
இந்நிலையில்,

எல்லா நாட்களையும் விட
அன்று மிகவும் அழகாக தன் மனைவி இருப்பதைக்
கண்டு

“இவ்வாண்டு உனக்கு மிக உயர்ந்த ஓர் பரிசை, அதுவும் நீ எதை விரும்பினாலும் உனக்கு தர வேண்டுமென விரும்புகின்றேன்” என்றான் அரசன்.

அதற்கவள், ”யஹ்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களின் தலை தான் வேண்டும்” என்று கூறினாள்.

இது அல்லாத வேறெதைக் கேட்டாளும் தருகின்றேன்”
என்றான் அரசன்.

ஆனால், அவளோ ”எனக்கு
யஹ்யாவின் தலை தான் வேண்டும்” என்றாள்.
மனைவியின் அழகில் அடிமைப் பட்டுக்கிடந்த
அரசன்

”யஹ்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களின் தலையைக்
கொய்து வருமாறு தன் சேவகர்களுக்கு ஆணை
பிறப்பித்தான்.

அரசனின் சேவகர்கள் பைத்துல் முகத்தஸ் நோக்கி வந்தார்கள்.

நானும், யஹ்யாவும் மிஹ்ராபின் அருகே சற்று இடைவெளி விட்டு நின்று
தொழுது கொண்டிருந்தோம்...!!

அரசனின் சேவகர்கள் யஹ்யாவின் தலையை
வெட்டி அவரது தலையையும், இரத்தத்தையும் ஒரு
தட்டில் ஏந்தியவர்களாக அரசனின் மனைவியிடம்
கொண்டு சென்றார்கள்.

அப்போது, நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் } அவர்கள்...

“நீங்கள் எப்படி இவ்வளவு பொறுமையாக
இருந்தீர்கள்?” என்று கேட்டதற்கு,

ஜகரிய்யா(அலைஹிஸ்ஸலாம் )அவர்கள் ”நான் என் ரப்போடு உரையாடிக்
கொண்டிருந்தேன்....

தொழுது கொண்டிருந்தேன் நடந்த எதுவும் எனக்குத்
தெரியாது. தொழுது முடித்த பின்னர் தான் இந்த விவரமெல்லாம் எனக்குத்
தெரிந்தது” என்று பதில் கூறிவிட்டு…,,,,,

யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொலை செய்யப்பட்ட அன்று மாலை
நேரத்தில் அரசனும்,

அவன் மனைவியும்,
குடும்பத்தார்களும், அவனின் சேவகர்களும்
அரண்மனையோடு அல்லாஹ்வின் கோபத்தால் இருந்த
இடத்திலேயே பூமிக்குள் இழுக்கப்பட்டார்கள்...!!

இதை அறிந்து கொண்ட
இஸ்ரவேலர்கள்,,,, “ஜகரிய்யாவின் இறைவன்
ஜகரிய்யாவிற்காக கோபப்பட்டான்....!!

இஸ்ரவேலர்களே! ஒன்று படுங்கள்! நாம் நம் அரசருக்காக கோபப்படுவோம்.

நாமும் ஜகரிய்யாவை
ஒன்று திரண்டு கொல்வோம்” என சபதமிட்டுப் பழிவாங்க திட்டமிட்டார்கள்.

இச்செய்தி எனக்கு எட்டியதும் நான் அவர்கள் கண்ணில் படாதிருக்க காட்டு வழியே ஓடினேன்.

ஒரு கட்டத்தில் அவர்கள் என்னை நெருங்கி வந்து விட்டதை உணர்ந்தேன். அப்போது,,,,

எனக்கு முன்பாக இருந்த ஓர் மரம்“அல்லாஹ்வின் நபியே! என்னுள் ஒளிந்து
கொள்ளுங்கள்! உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்றது.

நான் அதனுள் சென்று ஒளிந்து கொண்டேன். என்னைப் பின் தொடர்ந்து வந்தவர்களுக்கு இப்லீஸ்
வழிகாட்டிக் கொண்டு வந்தான்....,,,,

ஆனால், மிக விரைவாக என்னைப் பின் தொடர்ந்த அவன் மரத்தின் உள்ளே நான் ஒளியும் போது எனது ஆடையின் சிறிய ஒரு பகுதியைப் பிடித்து இழுத்துக் கொண்டான்.

பிளந்த மரம் மூடிய போது என் ஆடையின் சிறிய பகுதி வெளியே தெரிந்தது.
இஸ்ரவேலர்கள் மரத்தை நெருங்கியதும்,,,

இப்லீஸ் அடையாளம் காட்டிக் கொடுத்தான். கடும் கோபத்தில் இருந்த
இஸ்ரவேலர்கள் என்னை மரத்தோடு வைத்து தீயிட்டுக் கொளுத்திட முனைந்தார்கள்.

ஆனால், இப்லீஸோ ரம்பத்தால் இருகூறாக என் உடல் பிளக்கப்பட வேண்டும் என ஆலோசனை கூறினான்.

அதன் பின்னர் ரம்பத்தால்
மரத்தையும், என்னையும் இரண்டாகப் பிளந்தார்கள்”
என்று கூறினார்கள்.

அப்போது, நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் } அவர்கள்
“அறுக்கப்பட்ட போது உங்களுக்கு அதன் வேதனை தெரியவில்லையா?” என்று வினவியதற்கு,

ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள் “அல்லாஹ் தான்
எனது உயிர் இவ்வாறு பிரிய வேண்டும் என
நாடியுள்ளான்;

அவ்வாறிருக்கையில், எனக்கு எப்படி அது வேதனையாக தெரியும். இல்லை,,,

எனக்கு அப்படியொரு உணர்வு அப்போது
ஏற்படவில்லை” என்று பதில் கூறினார்கள்...!!

ஸுப்ஹானல்லாஹ்

( நூல்: அல்பிதாயா வன்
நிஹாயா லி இமாமி இப்னு கஸீர்(ரஹிமஹுமுல்லாஹு அலைஹி)

Sunday, 13 October 2019

உமறுப் புலவர்

வலிமார்களின் வாழ்வினிலே!!!!

அந்த ஊரிலே அவர்கள் மிகபெரும் வள்ளல்
எழைகளுக்கு பொன்னும்,பொருட்களும் அள்ளிக் கொடுத்து இவர்கள் கைககள் சிவந்தே போகும் அந்த அளவுக்கு வாரிக் கொடுக்கும் வள்ளல் அவர்கள்..

அவர்களுக்கு அண்ணலம் பெருமானார் நபிகளாரின் வாழ்க்கை வரலாறுகளை தமிழில் மொழிப் பெயர்க்க வேண்டும் அவர்களது நீண்ட நாள் ஆசை.

அதற்காக ஒரு தமிழ் முஸ்லிம் புலவரை நீண்ட நாட்கள்  தேடுகிறார்கள். ஒருநாள் அப்புலவர் பெருமானை அந்த வள்ளல் சந்திக்கிறார்கள்.

அப்புலவர் பெருமானிடம் நீங்கள் தான் பெருமானார் நபிகள் நாயகம் அண்ணவர்களின் வாழ்க்கை  வரலாறுகளை தமிழில் மொழிப் பெயர்க்க வேண்டும் என அன்போடு வள்ளல் அவர்கள் கேட்டுக் கொள்ள,,,

அந்த புலவர் அவர்களும் பெருமானார் அண்ணவர்களை பற்றி எழுதுவது என் கடமை என ஒப்புக்கொள்கிறார்கள்.

வள்ளல் அவர்கள் நாம் இக்காரியத்தை செய்யும்  முன் நாம் ஆன்மீக குருவிடம் நாம் அனுமதி வாங்கிக் கொள்வோம் என இருவரும்  குருவைக் காணச் செல்கிறர்கள்
வள்ளல் அவர்கள் குருவிடம் சென்று குரு அவர்களே நான் நபிகளாரின் வாழ்க்கை வரலாறுகளை தமிழில் மொழிப் பெயர்ப்பதற்க்கு முஸ்லிம் புலரை அழைத்து வந்துள்ளேன் நீங்கள் அனுமதி தந்தால் அதற்கான செயல்பாடுகளை செய்துவிடுவோம் என்றார்கள்.

குரு அவர்கள் அந்த புலவரின் முகத்தை பார்த்தவுடன் பெரிதும் கோபமிட்டார்கள்
அவர்கள் முகம் கோபத்தினால் சிவந்தது
காரணம் பெருமானார் நபிகளாரின் சுன்னத்தான தாடி இவர்முகத்தில் இல்லை..

நபிகளாரின் சுன்னத் இல்லாத இவரா
பெருமானார் அண்ணவர்களின் வாழ்க்கை வரலாறுகளை மொழிப்பெயர்க்க போகிறார் என அந்த புலவர்பெருமானை திட்டி அனுப்புகிறார்கள் அந்த ஆன்மீக குரு அவர்கள்.

மிகுந்த மனவேதனையுடன் அந்த புலவர் பெருமான் அந்த இடத்தைவிட்டு எதுவும் பேசாமல் செல்கிறார்கள்

வள்ளல் அவர்களும் எதுவும் பேசமுடியாமல் அழுகிறார்கள்.

மனவேதனையுடன் சென்ற அந்த புலவர் பக்கத்தில் உள்ள பள்ளியில் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் இறையஞ்சுகிறார்கள் .

பின்பு கவலையின் காரணமாக தூக்கம் அவரை ஆட்க்கொள்கிறது.

புலவர் அவர்கள் தூங்கும் போது அவர்களின் கனவில் எம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அண்ணவர்கள் தோன்றி

புலவரே! எம்முடைய வாழ்க்கை வரலாறை நீம் தான் மொழிப்பெயர்க்க வேண்டும் அந்த ஆன்மீக குருவிடம் நான் பேசிக்கொள்கிறேன் நீர் அங்கே செல்லும்  அவரே  என்னுடைய வாழ்க்கை வரலாறை உம்மிடம் தருவார்
நீர் பாடும் ! என்று சொல்லி மறைகிறார்கள்.

தூக்கத்தில் இருந்து விழித்த புலவர் பெருமான் அவர்கள் அந்த ஆன்மீக குருவை பார்க்க செல்கிறார்கள்

அதே போல் அந்த ஆன்மீக குருவின் கனவில் சென்ற எம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)அண்ணவர்கள் ,,,
சீடரே! புலவர் உன்னிடம் வந்த பொழுது அவரின் உள்ளத்தை பார்க்காமல்  தோற்றத்தை வைத்து தவறாக புரிந்து கொண்டீரே.

அவர் நாளை உம்மிடம் வருவார் அவருக்கு என்னுடைய வாழ்க்கை வரலாறு உரையை கொடும் என்று சொல்லி மறைகிறார்கள்.

பெருமானாரின் திருக்காட்சியை கண்டு பதறி  எழுந்த அந்த ஆன்மீக குரு அவர்கள் காலை பஜர் தொழுகையை முடித்துவிட்டு

தம் வீட்டுவாயிலை திறந்து வைத்து அந்த புலவர்பெருமானுக்காக காத்திருக்கிறார் அந்த ஆன்மீக குரு அவர்கள்
அந்ந புலவர் அவர்களும் அங்கு வந்தார் அப்பொழுது அங்கு நிலவிய மகிழ்சிக்கோ அளவில்லை வள்ளல் அவர்களையும் அங்கே வரவழைத்து அன்று இரவு நடந்த சம்பவங்களை அந்த ஆன்மீக குரு அவர்கள் அந்த புலவர் பெருமானிடம் கூறினார்கள்.

அந்த புலவர் பெருமானும் நபிகளார் தோன்றியதை ஆன்மீக குருவிடம் கூறினார்கள்  பின்பு அந்த ஆன்மீக குரு அவர்கள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை அந்த புலவர் பெருமானிடம் கொடுக்கிறார்கள்

அந்நூல் தான் தமிழ் வரலாற்றில் இஸ்லாமிய மக்களிடம் மட்டுமில்லாது எல்லா மதமக்களிடமும் இன்றும் நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய எம்பெருமானாரின் வரலாற்று நூலாகிய
"சீறாப் புராணம்" என்னும் தீந்தமிழ் அழியப் புகழ்பெற்ற தமிழ் காவியம்

இப்பெரும் நூல் தமிழில் மொழப்பெயர்க்க காரணமாக இருந்த அந்த வள்ளல்
இன்றைக்கும் மக்களால் புனைப்பெயரால் அவர்களின் பெயர் அழைக்கப்படும்
"மறைந்து கொடை கொடுத்தார் " இறைநேசர்
வள்ளல் சீதக்காதி ஷெய்கு அப்துல் காதிர் மரக்கையார்(ரஹ்) அண்ணவர்கள்.

பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றை மொழிப்பெயர்க்க  அனுமதி கொடுத்த அந்த ஆன்மீக குரு அவர்கள் "இறைநேசர்"
ஞானமேதை கீழக்கரை
சதக்கத்துல்லாஹ் அப்பா(ரஹிமஹூல்லாஹ்)அண்ணவர்கள்

இப்பெரும் அழியா தமிழ் காவியத்தை கொடுத்தவர்கள் மக்களால் இறைநேசர்
"உமறுப் புலவர் " என்று அழைக்கப்டும்
காசிம் புலவர்(ரஹிமஹூல்லாஹ்)அண்ணவர்கள்...

Sufi Cisthi