ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Sunday, 30 April 2017

இசை ஹலாலா ஹராமா

🌹 ﷽ - الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ 🌹

இஸ்லாத்தில்  இசை  ஹலாலா? ஹராமா?

இஸ்லாத்தின் பார்வையில் இசை ஹலாலா ஹராமா (கூடுமா கூடாதா?)

♦ இக்கட்டுரையின் மூலம் எம் நோக்கம் மக்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் இசை பற்றிய தவறான கருத்தினை நீக்குவதே ஆகும். ஆரம்பமாக இசை இஸ்லாத்தில் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத தவறான கருத்தாகும்.

​​இஸ்லாத்தில் எல்லா இசையும் கூடாது என்ற ஒரு கருத்தும் பரவலாக எல்லோரிடமும் காணப்படுகிறது. ஆனால், அது ஒரு தவறான கருத்தாகும். இஸ்லாம் எப்போதும் நடுநிலைமையை பின்பற்றும் மார்க்கம் ஆகும். அது எல்லா இசையையும் நிராகரிக்கவும் இல்லை. எல்லா இசையையும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

​​​
♦ சத்தங்கள் எல்லாமே இசைதான். எல்லா இசையும் ஹராம் என்றால் எல்லா சத்தங்களும் ஹராம் என்று ஆகிவிடும். அப்படி யாரவது கூற முடியுமா? எனவேதான் “எல்லா இசையும் கூடாது என்று யாரெல்லாம் கூறுகிறார்களோ, அவர்களிடம் பறவைகளின் பாடல்களும் கூடாது என்று கூற சொல்லுங்கள்” என்று அறிஞர் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறி உள்ளார்கள். எனவே எந்த இசை தடுக்கப்பட்டது, எந்த இசை அனுமதிக்கப்பட்டது என்பதை தெளிவாக அறிய வேண்டியுள்ளது.

♦ இசை ஹராம் என்று இந்த கருத்தை முன்வைப்போர் எடுத்துக் கொள்ளும் ஆதாரங்களில் மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுவது ‘இசை உள்ளத்தில் நிபாக் தனத்தை தோற்றுவிக்கும்’ என்ற ஹதீஸினை ஆகும். இந்த ஹதீஸின் உண்மை தன்மையை அறியாமலே அவர்கள் இந்த கருத்தினை முன் வைக்கின்றனர் என்பது இன்ஷா அல்லாஹ் பின்வரும் விடயங்களின் மூலமாக நன்கு விளங்கும். இந்த ஹதீஸுக்கு இமாம்கள் விளக்கம் தரும்போது 'தீய எண்ணங்களை தூண்டும் விதத்தில் அமைவனவும், இவ்வுலக இன்பத்தில் மூழ்கும் விதமாகவும் மொத்தத்தில் இறைவனின் சிந்தனையை இல்லாதொழித்து ஷைத்தானிய்யத்தான எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும் இசையே' நிபாக் தனத்தை உண்டு பண்ணக்கூடியதும் மார்க்கம் தடுத்ததுமாகும்.

​​அதனைத் தவிர்ந்த இஸ்லாமிய கீதங்கள், இஸ்லாமிய பாடல்கள் என்பவை நிச்சயமாக இறைவனின் சிந்தனையை உண்டு பண்ணுமே தவிர ஷைத்தானிய்யத்தான தன்மையை எவ்விதத்திலும் உண்டு பண்ணாது.அது மாத்திரமா நாம் ஓதும் குர்ஆனும் ஒருவகையான இசை கலந்த தொனியில்தான் வெளிப்படுகிறது. இதனாலயே ஸூபியாக்களில் பெரும்பாலானவர்கள் இசை நிபாக் தனத்தை உருவாக்கும் என்ற கருத்திற்கு மாற்றமான கருத்தினை கொண்டு இஸ்லாமிய இசை உள்ளத்தை மென்மைப்படுத்துகிறது, செய்த பாவங்களின்பால் கைசேதத்தை தூண்டிவிடுகிறது, அல்லாஹ்வை நோக்கிய பயணத்தில் ஒத்தாசையாக இருக்கிறது போன்ற கருத்துக்களை அதிகமாக வலியுறுத்தியும்.நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். தமது செயற்பாடுகளில் இசையை மிக முக்கிய வழிமுறையாக அவர்கள் கைக்கொள்கின்றனர்.

♦ என்றாலும் மேல் கூறியது போன்று அல்லாமல் இறை சிந்தனையை சிதைக்கக்கூடிய சினிமா, நாடகப் பாடல்கள் மற்றும் ஏனைய இவ்வாறான பாடல்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹு அலைஹி) ‘இசை உள்ளத்தில் நிபாக் தனத்தை தோற்றுவிக்கும்’ என்ற கருத்தை ஹதீஸாக ஏற்றுக்கொண்டால் அதனை வித்தியாசமானதொரு கோணத்திலேயே அணுக வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கின்றார்கள். அதற்காக இசையை ஹராமான ஒன்றாகக் கருதிவிட முடியாது.

​​அழகான ஆடைகளை அணிவது, வசதியான வாகனங்களில் பயணிப்பது, வசதியான வீடு வாசல்கள் கட்டுவது போன்றன இஸ்லாத்தில் ஆகுமான செயல்களாக இருப்பினும் மனித உள்ளத்தில் பலவகையான நோய்களை ஏற்படுத்தக் கூடிய செயல்களாக அமைந்திருக்கின்றன. எனினும் அழகான ஆடை அணிவதை யாரும் ஹராம் எனக் கூறியதில்லை.


♣  இஸ்லாத்தில் எந்த மாதிரியான இசை கூடும்? எந்த மாதிரியான இசை கூடாது?

இசை பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் காலத்தில் அன்னவர்களின் முன்னாள் பாடப்பட்டுள்ளது. அப்போது அன்னவர்கள் அதனை தடுக்கவில்லை. அனுமதித்து உள்ளார்கள். அதேநேரம் பல நேரங்களில் இசை கூடாது என்ற கருத்துப்படவும் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறி உள்ளார்கள்.

எனவே எது கூடும், எது கூடாது என்று கேள்வி எழும்போது, எந்த இசை ஒருவனுக்கு இறைவனை பற்றிய சிந்தனையை தூண்டுகிறதோ, ஒருவன் இறைவனை அடைய வழிவகுக்கிறதோ, இறைதூதர்களையும் இறைநேசர்களையும் புகழவும் அவர்கள் பற்றிய செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தி மக்களை நேர்வழிப்படுத்தவும் பயன்படுகிறதோ, மேலும் ஆகுமான காரியங்களில் ஆகுமான முறையில் பாடப்படுகிறதோ அவை இஸ்லாத்தில் கூடுமான இசை முறையாகும்.

அதேபோல, எந்த இசை கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டும், மோசமான உலக இச்சைகளை உள்ளத்தில் ஏற்படுத்தவும், பெண்களை பற்றிய மோகத்தை அதிகரிக்கவும், காமம், போதை போன்ற தடுக்கப்பட்ட நோக்கங்களுக்காகவும் பாடப்படுகிறதோ, மேலும் இறைவனின் சிந்தனையை இல்லாதொழித்துவிடுகின்றதோ இப்படியான இசைதான் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இசைகள் ஆகும்.

​​
♣ நல்லவர்களை புகழ்து பாடப்படும் இசை

ஹஸ்ரத் ருபய்யிஃ பின்த் முஅவ்வித் (ரலியல்லாஹு அன்ஹா) கூறினார்கள்:

எனக்கு திருமணம் நடந்த பின்னர், நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கருகில் இப்போது நீங்கள் (ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளர்) அமர்ந்து இருப்பது போல் (அத்தகைய தூரத்தில்) என் விரிப்பின் மீது அமர்ந்தார்கள். அப்போது சில சிறுமிகள் பத்ர் போரில் ஸஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே இறை தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் இதை விட்டு விட்டு நீ முன்பு சொல்லி கொண்டிருந்ததை சொல்” என்றார்கள்.

நூல்: ஸஹிஹுல் புகாரி 5147, அபூதாவூத், திர்மிதி

இங்கு கவனிக்க வேண்டியது, எல்லா இசையும் கூடாது என்று இருந்தால், நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் அச்சிறுமிகளை இசையோடு பாட வேண்டாம் என்று தடுத்து இருப்பார்கள். ஆனால், அன்னவர்கள் தமது பணிவின் காரணமாக அந்த வார்த்தைகளை கூற வேண்டாம் என்றும் மாறாக முதலில் இசையோடு பாடிக்கொண்டு இருந்ததை போல பத்ர் யுத்தத்தில் மரணித்த தியாகிகளை புகழ்ந்து பாடும்படியும் கூறி அனுமதித்து உள்ளார்கள்.


♣ பண்டிகைகளின் போது, சந்தோஷ மேலீட்டால் பாடப்படும் இசை

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்:

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்' என்று கூறினார்கள்.

நூல்: ஸஹிஹ் முஸ்லிம் 1619

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.

இந்த ஹதீஸிற்கு சிலர் இப்படி விளக்கம் கொடுக்கின்றனர். ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று கூறும்போது நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள், ஷைத்தானின் இசைக் கருவிகள் என்பதை மறுக்கவில்லை, மாறாக, பெருநாள் என்பதால் அனுமதித்தார்கள் என்று கூறுகின்றனர். இல்லை, அது தவறாகும். அவை ஷைத்தானின் கருவிகளாக இருந்தால், ஷைத்தான் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை சின்னஞ்சிறு சிறுமிகள் அறியாமல் செய்யும்போது, அன்னவர்கள் அக்குழந்தைகளை தடுத்து, அக்குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லிக்கொடுத்து அக்குழந்தைகள் இசைப்பதை தடுத்து இருப்பார்கள். மாறாக, தவறு நடைப்பெறும்போது ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அவ்வாறு அனுமதிப்பது, நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களிடம் ஒருபோதும் இல்லாத ஒரு பண்பாகும். மேலும் வேறு சந்தர்ப்பங்களிலும் தஃப் (கஞ்சிரா) அடித்து சிறுமிகள் பாடும்போதும் அவற்றை அனுமதித்து உள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.


♣ திருமண வைபவங்களில் இசைக்கப்படும் இசை

அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் தனக்கு நெருங்கிய ஒருப் பெண்ணை அன்சாரித் தோழர்களில் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். (அப்பொது) நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் ஆயிஷாவிடம், 'திருமணம் நடத்துகிறாய். கேளிக்கை ஏதும் இல்லையா? அன்சாரிகளுக்கு கேளிக்கைப் பார்ப்பது மிகவும் விருப்பமானதாச்சே!' என வினவினார்கள்.

அறிவிப்பாளர்: ஹழ்ரத் உர்வா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: ஸஹிஹுல் புகாரி.

ஒருமுறை நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களிடம் ஒருவர் வந்து (திருமணத்தில்) இசைப்பதையும், கேளிக்கை நடத்துவதையும் அனுமதித்துள்ளீர்களா? என வினவினார். அதற்கு, 'ஆம்! அது திருமணம்தானே! விபச்சாரமல்லவே!' என நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹழ்ரத் ஸாயிப் பின் யஸீத் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: தப்ரானி, பத்ஹுல் பாரி, பாகம் 11, பக்கம் 133

மேலே சொன்னப்பட்ட இந்த இரண்டு ஹதீஸ்கள் மூலம், திருமண வைபவங்களில் சில வகையான இசைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என அறியமுடிகிறது. அதனால்தான், இன்றும் அரபு நாடுகளில் முஸ்லிம் திருமண வைபவங்களில் தஃப் (கஞ்சிரா) அடித்து இசைக்கப்படுகிறது.

ஆனால், ஒன்றை மட்டும் நன்றாக விளங்க வேண்டும். இவையெல்லாம், கண்டிப்பாக இஸ்லாம் ஆகுமாக்கிய வழிகளில் மட்டுமே செய்யவேண்டும். ஆண், பெண் கலத்தல், ஆபாசமான உடைகள், ஆபாசமான நடனங்கள், அசிங்கமான வார்த்தைகள் எதுவும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் முழுக்க முழுக்க ஹராமாகும். ஆகையால் உண்மயை உணர்ந்து சத்தியக்கொள்கை அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஆவில் இறுதி நாள் வரையில் வாழ்வதற்கு இறைவன் எம் அத்துனை பேருக்கும் தௌபீக் செய்வானாக.

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

5 அழகான குட்டி உண்மை சம்பவங்கள

படித்த போதே கண்கலங்க வைத்த
5 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

சம்பவம்-1 👇👇👇👇👇👇

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...

இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"

அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்...

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே.,  உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.

சம்பவம்-2    👇👇👇👇👇👇👇👇

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..

அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...

பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...

உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....

நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..

அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.

சம்பவம்-3  👇👇👇👇👇👇👇

தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர்...

முகத்தில் ஏனோ ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை...

'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு,...

'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று
முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்
கண்டக்டர்..

ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார்....

தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு...

தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக் கொண்டிருந்தார்...

அவருடன் வந்திருந்த
மற்றொரு நபர் அவரை இறுக்க பற்றிக் கொண்டிருந்தார்.

ஏதோவொரு துயரச் சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.

நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும்.

ஏன் இப்படி சோகமாக இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன்.

நான் இறங்கிய அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும் இறங்கினார்கள்.

மனம் சற்று நிம்மதி அடைந்தது.

அவர்கள் பற்றி எதையேனும்
தெரிந்து கொள்ளலாம் என்று மனது
விரும்பியது..

அவர்களை பின்தொடர்ந்தேன்..

தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு
நடக்கத் தொடங்கினர் இருவரும்.

சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது..

தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்...

அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழே கிடத்தி , தலையிலையும் நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி அழுதார்...

எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன காரணம் என்று எனக்கு எதுவும்
தெரியவில்லை, ...

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கை கூட
திருவிழா போல் கொண்டாடும் இந்தக்
காலத்தில்...

இறந்து போன தன் மகனை பாடை
கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று.

உயிருக்குயிரான தன் மகனை தோளில்
சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்தஅந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில்
நீங்காமல் இருக்கிறது....

உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்...

சம்பவம்-4  👇👇👇👇👇👇

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."

ஒரு கட்டு கீரை என்ன விலை....?""

"ஐந்து ரூபாய்"

ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான்  தருவேன்.

மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

"இல்லம்மா வராதும்மா"

அதெல்லாம் முடியாது.

மூன்று ரூபாய் தான்

பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு

"மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"

முடியவே முடியாது. கட்டுக்கு  மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு

"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு  பன்னிரண்டு ரூபாயை  வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"

இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்"

"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..

திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"

என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..

"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?

என்று கேட்கஅதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.

இது தான் உண்மையில் மனித நேயம் ......

சம்பவம் 5 👇👇👇👇👇👇👇

மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...

திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.

கணவர் வேகமாக ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.

அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...

இருட்டில் எதுவும் தெரியவில்லை.

மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.

கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது.

இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...

கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...

ஆனால்

உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?

நான் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகுவேன்.

அதான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடிகிறது.

வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

"  Be Positive Always"

பராஅத் இரவின் சிறப்புகள்

பராஅத் இரவின் சிறப்புகள்

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

இஸ்லாத்தின் பார்வையில் ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் (பராஅத்) நோன்பு வைப்பதன் சிறப்பும், அவ்விரவில் மஃரிப் பின் சூரா யாஸீன் ஓதுவதன் அவசியமும்.​

​​
♣  பராஅத் இரவு என்றால் என்ன?

ஷஃபான் மாதம் பிறை 15ம் இரவுக்கு லைலத்துல் முபாரக்கா (பரக்கத் செய்யப்பட்ட இரவு), லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு), லைலத்துல் பராஅத் (நரக விடுதலை பெறும் இரவு) என்றெல்லாம் கூறப்படும்.

​​இப்பெயர்கள் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.

​​குறிப்பாக இமாம் இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளார்கள். பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது.

​​நூல் ரூஹுல் பயான் பாகம் 13,பக்கம் 110,111

​​​
♣  ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் (பராஅத்) நோன்பு வைப்பது சுன்னத்தா?

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்: என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். சுபஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக் கொண்டேயிருப்பான்.

​​அறிவிப்பவர்: ஸையிதினா அலி (ரலியல்லாஹு அன்ஹு)
​​நூல்கள் இப்னு மாஜா 1388, இமாம் பைஹகி - ஷுஃபுல் ஈமான் 3822

♦ ஒரு நாள் இரவு நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ என்ற மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள்.

​​நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள்.

​​அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
​நூல்கள் திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299)

​​ஆகவே இதிலிருந்து பராஅத் இரவைப்போன்று இறையருள் இறங்கும் இரவுகளில் கப்று ஜியாரத் விரும்பத்தக்கது என்பதும் தெளிவாகின்றது.

♦ பராஅத் இரவின் மகிமையைப் பற்றி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது.

​​அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
​நூல் மிஷ்காத் 1 305

♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஜிப்ரயீல் அலைஹி வஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான்.

​இமாம் பைஹகி ஷுஃபுல் ஈமான் 3837

♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.

​​அறிவிப்பவர்: ஹழ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலியல்லாஹு அன்ஹு)
​நூல்கள்: இப்னு ஹிப்பான் 5665, தப்ரானி (முஃஜமுல் அவ்ஸத்) 6776 அபூ மூஸல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு) இப்னு மாஜா 1390

♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹு தஆலா தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1.பகைமை பாராட்டுபவன் 2. கொலை செய்தவன்.

​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் அஹ்மத் 6642

​​
♣  ஷஃபான் மாதம் பிறை 15 ம் (பராஅத்) நாளென்று சூரா யாஸீன் ஓதுவதன் அவசியம்

ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் மஃரிப் தொழுகையின் பிறகு மூன்று தடவைகள் சூரா யாஸீனை : முதலாவது தடவை ஓதும் போது 'பாவமன்னிப்புத் (பிழை பொறுக்கத்) தேடியும், இரண்டாவது தடவை ஓதும் போது ரிஸ்க் எனும் உணவு விச்தீரனம பெறவும், மூன்றாவது தடவை ஓதும் போது சரீர சுகத்தையும் ஆரோக்கியத்தையும் வேண்டி ஸாலிஹான அமல்கள் செய்வதற்கு நீண்ட ஆயுளை கேட்டு பிராத்தனை செய்து ஓத வேண்டும்'.

♦ அல்லாஹ் ஷஃபான் 15வது இரவில் சூரிய அஸத்தமனத்தின் போது முதல் வானத்திற்கு இறங்கி என்னிடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர் யார்? அருள் வேண்டுபவர் யார்? துயர் நீங்கக் கேட்பவர் யார்? மன்னிப்பதற்கும் அருள் வழங்கவும் ஆரோக்கியம் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். விடியும் வரையில் கூறிக் கொண்டே இருப்பான். எனவே அவ்விரவில் எழுந்து வணங்குங்கல் பகலில் நோன்பு வையுங்கள்.’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

​​அறிவிப்பவர்; ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு
​நூல் : இப்னுமாஜஹ்:1388

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது. குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியதற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான்.

​​நூல் திர்மிதீ 2812, தாரமி 3282

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: யார் இறைவனின் திருப்பொருத்தம் நாடி யாசீன் (சூராவை) ஒதுகிறாறோ அவர் மன்னிக்கப்பட்டவர் ஆவார்.

​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஜுன்துப் ரலியல்லாஹு அன்ஹு.
​நூல் தாரமி 3322, இப்னு ஹிப்பான் 2639

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் இறந்தவர்களின் சமூகத்தில் ஓதுங்கள்.

​​அறிவிப்பவர்: ஹழ்ரத் மஃகில் ரலியல்லாஹு அன்ஹு,
​நூல்கள் முஸ்னத் அஹ்மத், பைஹகி 2458, மிஷ்காத் 2178

♦ “எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நூல் தாரமி: 3418. மிஷ்காத்: 2171), “யாஸீனை காலையில் ஓதினால் மாலை வரை, மாலையில் ஓதினால் காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்” என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள் (நூல் தாரமி)

ஆகவே தான் யாஸீன் ஓதி பராஅத் அன்று (மக்ரிப்) நேரத்தில் துஆவை நாம் கேட்டு வருகிறோம். (நூல் மிஷ்காத் ஹதீஸ் எண் 1308 விரிவுரையில், அல்லாமா முல்லா அலி காரி ரஹ்மதுல்லஹி அலைஹி அவர்கள் தனது மிர்காதில் எழுதுவதாவது., ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப், ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் மற்றும் முன்னோர்களான நாதாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின்வரும் துஆவை ஓதி வந்தார்கள்) 'யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய், நாடுவதை உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது'. இந்த துஆவை ஷாஅபான் 15ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (நூல் மிர்காத்)

♦ பராஅத் இரவில் நாமும் சஹாபாக்களைப் பின்பற்றி இந்த ஹதீஸில் வந்த துஆவைத் தான் ஓதி வருகிறோம் ஒவ்வொன்றுக்கும் தவணை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. எனினும் அல்லாஹ் அவன் நாடியதை அதில் அழித்து விடுவான். அவன் நாடியதை உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது”

(அல் குர்ஆன்.13:38, 39)

♦ எவர் தனது ரிஸ்க் (வாழ்வாதாரம்) விரிவடைய வேண்டும் தனது ஆயுள் நீளமாக வேண்டும் என்று விரும்புவாரோ அவர் தனது உறவுகளை சேர்த்துக்கொள்ளட்டும்.

நூல் புகாரி: 5986, முஸ்லிம்: 1982

மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனம், ஹதீஸில் ஒரு மனிதனின் ஆயுள் காலம், அவனது ரிஸ்க் கூடவும் குறையவும் செய்யும் என்று தெரிகிறது.“அல்லாஹ்வுடைய விதியான ஆயுள் காலம் எப்படி அதிகரிக்கப்படும்” என்று, இந்த நபிமொழித் தொடரில்., இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்., அல்லாஹ் குர்ஆனில், “அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து உங்களுக்குரிய தவணையை வாழ்நாளைக் குறிப்பிட்டு நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு” என்று (அல்குர்ஆன் 6: 2-ல்) கூறுகின்றான். இந்த வசனத்தில் இரண்டு அஜலை தவணையை குறிப்பிடுகிறான் முதல் தவணை என்பது பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள இவ்வுலக ஆயுள் காலம் ஆகும். இரண்டாவது தவணை என்பது இறந்த பிறகு இறைவனை மறுமையில் சந்திக்கும் வரையில் உள்ள கபுறுடைய ஆயுள் காலம் ஆகும்.

ஒருவன் அல்லாஹ்வுக்குப் பயந்து தனது பெற்றோர்களை ஆதரித்து, உறவினர்களை சேர்த்துக்கொண்டால் அவனுடைய கபுருடைய ஆயுள் காலத்திலிருந்து அவன் நாடுமளவு எடுத்து இவ்வுலக ஆயுள் காலத்தை நீட்டுவான். இதன்படி கபுறுடைய ஆயுள் காலம் அவன் எடுத்த அளவு குறையும். அல்லாஹ்வுக்கு மாறு செய்து உறவுகளைத் துண்டித்து வாழ்ந்தால் இவ்வுலக ஆயுளைக் குறைத்து கபுறுடைய ஆயுளைக் கூட்டிவிடுவான். ஆக, மொத்தத்தில் மாற்றம் நிகழாமல், இவ்வுலக ஆயுள் காலம் கூடவும் குறையவும் செய்யும், என்று அற்புதமான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) வழங்கினார்கள்.

​​நூல் தப்ஸீர் குர்துபி: 1339 விரிவுரை

​​
♣  பாக்கியமிகு பராஅத் இரவின் சிறப்புகள்

ஹா மீம், தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுல்லா ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம் உறுதியான எல்லா காரியங்களும் அதில் தான் நம்முடைய கட்டளையின் படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக்கொடுக்கப்படுகின்றன.

அல் குர்ஆன் 44:1, 2, 3, 4

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள புனித இரவைக் கொண்டு உத்தேசம் என்ன? லைலதுல் கத்ருடைய இரவா? பராஅத் இரவா? இதில் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும், சரியான கருத்து லைலத்துல் கத்ருடைய இரவு என்றிருந்தாலும் பராஅத் இரவில் இறைத்தீர்புகள் எழுதப்படுகிறது என்பதில் எந்தக்கருத்து வேறுபாடும் இல்லை. ஏனெனில் இது பற்றி நபி மொழிகள் தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு இரவிலும் காரியங்கள் தீர்மானிக்கப்படுகிறது, என்று, இறை வசனத்திலிருந்து நபி மொழியிலிருந்தும் பெறப்படுகிறது. இது இந்த இரண்டு இரவின் சிறப்பை பறை சாட்டுவதாக இருக்கிறது என்று (மிஷ்காத் நபி மொழி தொகுப்பின் விரிவுரையாளர்) அல்லாம முல்லா அலி காரி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்.

​​மிஷ்காத் 1305 விரிவுரை மிர்காத், தப்ஸீர் அஸ்ஸாவி பாகம் 4,பக்கம் 57,58

♦ அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் இந்த ஷஃபான் பதினைத்தாவது (இரவான பராஅத்) இரவின் சிறப்பு என்னவென்று தெரியுமா? என அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களிடம் கேட்டு விட்டு கூறினார்கள்; இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும். இதில் தான் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்பும். இதில் தான் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும்.

​​நூல் பைஹகி, மிஷ்காத்: 1302

♦ ஹளரத் அதா இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், ஷஃபான் பதினைந்தாவது இரவன்று மலக்குல் மௌத் இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாமை அழைத்து ஷஃபானிலிருந்து எதிர்வரும் ஷஃபான் வரையிலான காலப்பகுதிக்குள்ள மரணிக்க இருப்பவர்களின் பெயர் பட்டியல் வழங்கப்படும்.ஒருவர் மரம் நாட்டுவார், திருமணம் முடிப்பார், உயர் கட்டிடம் கட்டுவார். ஆனால், அவர் பெயர் மரணிப்பவரின் பட்டியலிலிருக்கும். மலக்குல் மௌத் ஆகிய இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாம் அவரின் உயிரை எடுப்பதற்கு, அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.

​​நூல் முகாஷபத்துல் குலூப்

ஆகவே இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு, லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது, என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். இந்த வகையில் பராஅத் இரவு என்பது, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட், லைலத்துல் கத்ருடைய இரவில் தாக்கல் செய்வதற்குரிய பூர்வாங்கப் பணிகளை துவங்கும் நாளாகும்.