*
*பரக்கத் நிறைந்த பைத்துல் முகத்தஸ்!*
================ ========
நீண்ட பெரும் வரலாற்றுப்
பாரம்பரியத்தைக் கொண்ட
பலஸ்தீனிலுள்ள ஜெரூஸலம் நகரில்
அமைந்துள்ள இறையருள் பெற்ற இறை இல்லமே பைத்துல் முகத்திஸ்
மஸ்ஜிதாகும். இதனை பைதுல் மக்திஸ் எனவும் குறிப்பிடுவது
வழக்கம். இதன் கருத்து தூய இல்லம்,
புனித இல்லம் என்பதாகும். இங்கு நபி
ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்),
தான் வாழ்ந்த காலத்தில் ஓர்
இறையில்லத்தை நிறுவினார்கள். அந்த
இறையில்லத்தை அன்றைய ஹீப்ரு
மொழியில் 'பெத்ஹம்மிக்தாஷ்' எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்பெயரே அரபு மொழியில் பைத்துல் முகத்தஸ் என ஆயிற்று. காலப்போக்கில் இந்தப்
புனித இல்லம் அமைந்திருந்த முழுப்
பிரதேசமும் இப்பெயராலேயே
அழைக்கப்படலாயிற்று. பொதுவாக
இந்த மஸ்ஜிதை அல் அக்ஸா அல்லது
மஸ்ஜிதுல் அக்ஸா எனவும் அழைப்பர்.
நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்
எகிப்திய மன்னரான பிர்அவ்னின்
துன்பத்திலிருந்து யூதர்களை மீட்டு
நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்)
அவர்கள் அங்கு குடியேறினார்கள்.
அங்கே மூஸா (அலைஹிஸ்ஸலாம்)
அவர்கள் இறைவனின் கட்டளைப்படி
பழைய அஸ்திவாரத்தின்
(பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னாலுள்ள ஒரு
நபியினால் கட்டப்பட்ட பள்ளியின்) மீது
ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள்.
அதிலே குர்ஆனில் கூறப்பட்ட 'தாபூத்'
என்ற பெட்டியையும், அவர்களுக்கு
அருளப்பட்ட கட்டளைகளையும்
வைத்துப் பாதுகாத்தார்கள். மிகவும்
புனிதமாகக் கருதப்பட்ட (குர்பான் கல்) பலிபீடமும் அங்கு இருந்தது. அதன்
திசையிலேயே யூதர்களின் வணக்கம்
ஏற்படுத்தப்பட்டிருந்தது. மூஸா (அலைஹிஸ்ஸலாம்)
அவர்களுக்குப் பின் ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்
இப்பள்ளிவாசலைப் பொறுப்பேற்றுப்
பாதுகாத்து வந்தார்கள். மூஸா
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் அற்புத
(அஸாவும்) கைத்தடியும்
அப்பெட்டியில் வைக்கப்பட்டது.
இப்போது அதன் புனிதம் அதிகப்
படுத்தப்பட்டு விட்டது. ஹாரூன்
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குப்
பின் யூதர்கள் பள்ளிவாசலைப்
பாழடைய விட்டனர்.
ஆரம்ப காலம் முதல் பைது முகத்தஸ்
மஸ்ஜித் அமைந்துள்ள ஜெரூஸலம் நகர்
'ஸலேம்' என்றே அழைக்க்ப்பட்டு வந்தது.
இங்கு வாழ்ந்து வந்த 'கனாஅனைட்'
எனும் பிரிவினர் பலஸ்தீனர்களின்
மூதாதையராவர். இவர்களில்
தோன்றிய நேர்மை மிக்க அரசனொருவன், அதுவரை ஸலேம் என்ற பெயரில் இருந்த கிராமத்தை ஒரு
நகராக்கி அங்கு ஒரு
தேவாலயத்தையும் நிறுவி அந்நகருக்கு ஜெரூஸலம் எனவும்
பெயரிட்டான். கி.மு. 1800களில் வாழ்ந்த இந்த அரசன் 'மெல்ஸிஸேடக்'
எனும் பெயர் கொண்ட நபி இப்ராஹீம்
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின்
சமகாலத்தவராவான் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த நகர் கி.மு. 1600 முதல் 1300 வரை
எகிப்து நாட்டின் ஆதிக்கத்தின் கீழ்
இருந்தது. இக்காலப் பிரிவில் இந்நகர்
'ஹீப்ரு' எனும் பிரிவினரின்
தாக்குதலுக்கு உள்ளானது.
இப்பிரிவினர்தான் யூதர்களின்
மூதாதையர்களாகவும்
கருதப்படுகின்றவர்களாவர்.
காலவோட்டத்தில்
கனானைட்டுக்களதும்
எகிப்தியர்களதும் பண்பாட்டுச்
சீர்கேடுகளால் அவர்கள் வீழ்ச்சி கண்ட
போது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய
ஹீப்ரூக்கள் பலஸ்தீனில் (கன்ஆன்) தமது
நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டனர்.
இக்காலகட்டத்தில் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருந்த
ஹீப்ரூக்கள் மத்தியில் மூஸா எனும்
எனும் பெயர் கொண்ட ஒரு பெரும்
தலைவர் தோற்றம் பெற்றார். இறைத்
தூதராக வருகை தந்த நபி மூஸா
(அலைஹிஸ்ஸலாம்) ஹீப்ரூக்களை
எகிப்திலிருந்து வெளியேற்றி
அவர்களை நெறிப்படுத்தி வந்தார்கள்.
இவர்களைத் தொடர்ந்து அவர்களது
சகோதரர் ஹரூன் (அலைஹிஸ்ஸலாம்)
ஹீப்ரூக்களை கன் ஆனுக்கு அழைத்துச்
சென்றார். அங்கு முன்பே வாழ்ந்து
வந்த ஹீப்ரூ இனத்தாருடன் இவர்களும்
இணைந்து அப்பிரதேசத்தில் செல்வச்
செழிப்போடு வாழ்ந்து
வரலாயியினர்.
இதற்குப் பின்னரும் யூதர்கள்
இப்பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்ந்து
வந்தனராயினும் அவர்கள் தமக்குள்ளே
பல பிரிவுகளாகப் பிரிந்து ஒழுக்கச்
சீர்கேட்டோடு வாழ்ந்த போதெல்லாம்
அவர்களைச் சீர்திருத்தவென
அவ்வப்போது பல சீர்திருத்தவாதிகள்
அவர்களிடையே தோன்றினர். இவ்வாறு
தோன்றிய சீர்திருத்தவாதிகளுள் மிகப் பெரும் அரசர்களாகத் தோற்றம் பெற்ற நபி
தாவூத் (அலைஹிஸ்ஸலாம்)
ஆவர்களும் அவர்களது புத்திரர் நபி
ஸுலைமான் عليه السلام அவர்களும்
குறிப்பிடத்டக்கவர்களாவர். நபி
தாவூதின் ஆட்சியில்தான்
ஹீப்ரூக்களுக்கு கன் ஆனில் முதன்முதலாக உறுதி மிக்கதோர்
ஆட்சியை நிறுவ முடிந்தது.
மட்டுமன்றி இக்காலப் பிரிவில்தான்
(கி.மு. 1000) ஜெரூஸலம் நகரும் முதல் தடவையாக ஹீப்ரூக்கள் வசமாகியதால் நபி தாவூத் عليه السلام இந்த நகரை யூத சாம்ராஜ்ஜியத்தின் தலை நகராகப் பிரகடனம் செய்தார்.
நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்)
யைத் தொடர்ந்து அவரது மகன்
ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்)
இப்பிரதேசத்தின் ஆட்சியாளரானார்.
ஏற்கெனவே மெல்ஸி ஸேடக் அரசனால்
நிறுவப்பட்ட தேவாலயம் இருந்த
இடத்தில் நபி ஸுலைமான்
(அலைஹிஸ்ஸலாம்) யூதர்களுக்கெனத்
தனியான ஓர் ஆலயத்தை நிறுவினார்.
அதில் ஸ்தூபிகள், வளைவுகள்,
சங்கிலிகள் யாவும் தங்கத்தினாலேயே
செய்யப்பட்டன. ஏராளமான வைர
வைடூரியங்களும் பதிக்கப்பட்டு
ஜெகஜோதியாக விளங்கிற்று.
சரித்திராசிரியர்களின் கூற்றுப்படி
ஆச்சரியப்படத்தக்க அநேக விநோதங்கள்
அப்பள்ளிவாசலில் இருந்தன. அதிகம்
நபிமார்களும் அங்கே அடக்கம்
செய்யப்பட்டார்கள்.
நபி ஸுலைமான் மரணித்த பின்னரும்
யூதர்களின் ஆட்சியானது பல்வேறு
சிக்கல்களுக்கும் தடங்கல்களுக்கும்
மத்தியில் சுமார் நான்கு
நூற்றாண்டுகள் நிலைத்திருந்தது.
இக்காலகட்டத்தில் அஸீரியர், அரேபியர்,
எகிப்தியர் முதலானோர்
இப்பிரதேசத்தின் மீது
படையெடுத்தும் முற்றுகையிட்டும்
வந்தனர். கி.மு. 587ல் யூத சாம்ராஜியம்
பபிலோனியரின்
ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இதன்போது
யூதர்களுக்கும்
பபிலோனியருக்குமிடையில் ஏற்பட்ட
கலகத்தில் ஜெரூஸலம் நகர்
அழிந்தொழிந்தது. இதன்போது இங்கு
நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்)
நிறுவிய ஆலயமும் எரிந்து
சாம்பலாகியது.
அங்கே குடியேறிய யூதர்கள்
அல்லாஹ்வுக்கு மாறு செய்து பாவமான
காரியங்களில் அதிகமாக
ஈடுபட்டனர். அப்போது இறைவனால்
அனுப்பப்பட்ட அர்மியாஹ்
(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் எச்சரிக்கை
செய்தும் யாரும்
திருந்தவில்லை. மாறாக அர்மியா
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப்
பிடித்துச் சிறையில் இட்டார்கள்.
இறைவன் அவர்கள் மீது 'பக்து நஸர்' என்ற
அரசன் மூலமாக அழிவை
ஏற்படுத்தினான். பக்துநஸர் பைத்துல்
முகத்திஸைக் கைப்பற்றி
பள்ளிவாசலில் இருந்த அபூர்வப்
பொருட்களையெல்லாம்
தீக்கிரையாக்கினான். தௌராத் வேதமும்
பத்துக்கட்டளைகளும்,
தாபூத் என்ற பெட்டியும் மூஸா عليه السلام
அவர்களின் அற்புதக்
கைத்தடியும் நெருப்புக்கு
இரையாகின. பள்ளிவாசலை இடித்துத்
தரைமட்டமாக்கினர். அதிலிருந்த தங்கம்
மாத்திரம் ஆயிரம் ஒட்டகைகள் சுமந்து
செல்லக்கூடியதாக இருந்தன.
பள்ளிவாசல் இருந்த தடமே தெரியாமல்
தரைமட்டமாக்கினான். பலிபீடம்
மாத்திரம் நெருப்புக்கு
இரையாகாமலும், ஆயுதங்களின்
தாக்குதல்களுக்கு வளையாமலும்
தலை நிமிர்ந்திருந்தது. அதன்மீது
மணலை வாரிக் கொட்டி மறைத்து
விட்டான். அங்கே இருந்த யூதர்களில்
வாலிபர்களையும், பலசாலிகளையும்
கொன்று குவித்தான்.
கிழவர்களையும், அங்கவீனர்களையும்
விட்டுவிட்டான். இளம்பெண்களை
விலை கூறிப் பணமாக்கினான்.
சிறுவர்களைத் தனது படை வீரர்களுக்கு
ஆளுக்கு நாலு
சிறுவர்களாகப் பங்கு வைத்தான்.
இவ்வாறு பங்கு வைக்கப்பட்ட
சிறுவர்களில் நபி தானியல்
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களும்
இருந்தார்கள். சிறையிலிருந்த
அர்மியாஹ் அலைஹிஸ்ஸலாம்
அவர்களை விடுதலை செய்து
கண்ணியப்படுத்தினான்.
பக்துநஸர் கையில் அகப்படாமல் சில
யூதர்கள் தப்பியோடினார்கள். இப்படி
ஓடியவர்களில் சிலர் யத்ரிப் (இப்போது
மதீனா) பிலும், சிரியாவிலும்
குடியேறினார்கள்.
இவ்வாறாக நாற்பது ஆண்டுகள் வெறும்
காடாகவே பைத்துல்
முகத்திஸ் இருந்து வந்தது. யூதர்கள்
இப்படி அழிவுற்றதால் தௌராத் வேதம்
ஓரிரு வருடங்களில் ஒரு எழுத்தேனும்
இல்லாமல் அழிந்து போயிற்று. வேதம்
மறைக்கப்பட்டதை அறிந்த அல்லாஹ்
உஸைர் (அலைஹிஸ்ஸலாம்)
அவர்களுக்கு தௌராத் வேதத்தைக்
கற்றுக்கொடுத்து அவர்களை பைத்துல்
முகத்தஸ் சென்று அங்கே மக்களுக்குக்
கற்றுக் கொடுக்கும்படி நபியாக அனுப்பி
வைத்தான்.
உஸைர் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்
பைத்துல் முகத்தஸ் வந்தபோது அங்கு
யாரும் காணப்படவில்லை. குட்டிச் சுவர்களும், மணல் மேடுகளையுமே
அங்கு காணக் கூடியதாக இருந்தது.
இவ்வாறு அழிந்துபோன நகரம்
எவ்வாறு உயிர் பெறும்? யார் இதைப்
பழைய நிலைக்குக் கொண்டு
வருவார்கள்? என எண்ணினார்கள்.
இறைவன் அவர்களுக்குத் தூக்கத்தைக்
கொடுத்தான். (ஒரு மரத்தடியில்
நூறு வருடம் அவர்கள் தூங்கினார்கள் –
அல்குர்ஆன் (02:259)
இந்த நிகழ்வு இடம்பெற்று சுமார்
ஐம்பது ஆண்டுகளின் பின்னர் கி.மு.
538ல் பாரசீக மன்னர் ஸைரஸ் ( Cirus )
பபிலோனியரைத் தோல்வியுறச்
செய்து பலஸ்தீனைத் தனது
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தான்.
யூதர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய ஸைரஸ், பபிலோனியரால்
துரத்தப்பட்டிருந்த யூதர்களை
பலஸ்தீனில் மீள்குடியேற வழி
செய்ததோடு எரிந்து சாம்பலாகிய
ஆலயத்தைப் புனருத்தாரணம்
செய்யவும் வழிவகை செய்தான்.
கி.மு. 515ல் நபி ஸுலைமானின்
ஆலயம் ஸைரஸினால் கட்டி
முடிக்கப்பட்டது. இதன்பின்னர் இவர்கள்
மீண்டும் திருந்தி வளம் மிக்க மக்களாக
வாழ்ந்து வரலாயினர்.
(நன்றி: உண்மை உதயம் – 1987 இதழ்: 13 பக்கம் 16)
======================
கி.மு. 332ல் ஜெரூஸலம்
பாரசீகரிடமிருந்து கிரேக்கர் வசமாகியது. கிரேக்கர் இங்கிருந்த
ஆலயத்தில் சிலைகளை வைத்து
வணங்க வழி செய்தனர். கி.மு.164ல்
கிரேக்கரிடமிருந்து யூதர்கள் தமது
இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்.
அது முதல் அங்கு 150 ஆண்டுகள்
யூதர்களின் ஆட்சி நிலவியது.
தொடர்ந்து ரோமர்கள் இந்நகரைக்
கைப்பற்றினர். கிறிஸ்தவர்களான இவர்கள்
குலபாயிர் ராஷிதீன் இரண்டாவது
கலீபாவான கலீபா உமர் (ரழியல்லாஹு
அன்ஹு) அவர்களின் ஆட்சிக் காலம் வரை
நிலைத்திருந்தது.
ரோமரின் ஆதிக்கத்தை விரும்பாத
யூதர்கள்ரோமரை எதிர்த்துக்
கலகங்களை விளைவித்தனர். ரோமரின்
ஆதிக்கத்தை வீழ்த்தி அவர்களின்
ஆட்சியையும் கைப்பற்றத் துணிந்தனர்.
இவர்கள் தம்மிடையே தோன்றிய இறைத்
தூதர் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்)
யையும் ஏற்க மறுத்தனர்.
(நன்றி: உண்மை உதயம் – 1987 இதழ்: 13 பக்கம் 16)
பலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது.
அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்பது
முஸ்லிம்களின் முதல்
கிப்லாவாகும். இது குறித்த சில
குறிப்புக்களை இந்த ஆக்கத்தில்
முன்வைக்க விரும்புகின்றோம்.
01. *அருள் வளம் பொருந்திய பூமி:*
பலஸ்தீன் பூமி இஸ்ரவேல் சமூம்
உருவாக முன்னரே பரகத் பொருந்திய பூமி என அழைக்கப்பட்டது.
“அகிலத்தாருக்கு எப்பூமியில் நாம் பாக்கியம் அளித்தோமோ,
அதன்பால் அவரையும் லூத்தையும் (அனுப்பிக்)
காப்பாற்றினோம்.” (21:71) இந்த வசனத்தில் அகிலத்தாருக்காக
அருள் பொழியப்பட்ட பூமி என பலஸ்தீனபூமி
அழைக்கப்படுகின்றது.
“எனது சமூகத்தினரே!
அல்லாஹ் உங்களுக்கு
விதித்த பரிசுத்தமான
இப்பூமியில்
நுழையுங்கள். நீங்கள்
புறமுதுகிட்டு
ஓடாதீர்கள். அவ்வாறெனில்,
நீங்கள் நஷ்ட
மடைந்தவர்களாகவே
திரும்புவீர்கள் (என்றும்
மூஸா கூறினார்.)” (5:21) இந்த வசனமும் பலஸ்தீன பூமி
புனித பூமியென்று
கூறுகின்றது.
02.
*மிஃராஜின் பூமி*
நபி صلى الله عليه وسلم அவர்களது இஸ்ராஃ,
மிஃராஜுக்குரிய புனித
பூமியாக பலஸ்தீனும் மஸ்ஜிதுல்
அக்ஸாவும் அமைந்துள்ளது.
“(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல்
ஹராமிலிருந்து, நாம்
சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம்
பொருந்தியதாக ஆக்கிய அந்த
மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில்
அழைத்துச் சென்றவன்
தூய்மையானவன். நமது
அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு
நாம் காண்பிக்கவே (இவ்வாறே
செய்தோம்) நிச்சயமாக அவன்
செவியுறுபவன்ளூ
பார்ப்பவன்.” (17:1)
இந்த வசனத்திலும் மஸ்ஜிதுல்
அக்ஸாவைச் சூழவுள்ள பகுதி
அருள்வளம் பொழியப்பட்ட
பூமியென்று கூறப்பட்டுள்ளது.
சூழவுள்ள பகுதி பரகத்
செய்யப்பட்டது என்றால் மஸ்ஜிதுல்
அக்ஸா அதைவிட அதிகம் அருள் வளம் பொழியப்பட்டது என்பதை எவரும் எளிதில் உணரலாம்.
03. *இரண்டாவது மஸ்ஜித்:*
அபூதர் رضي الله عنه அவர்கள்
கூறுகின்றார்கள். “அல்லாஹ்வின்
தூதரே! முதலாவது அமைக்கப்பட்ட மஸ்ஜித் எது? என்று கேட்டேன்.(மக்காவில் அமைந்துள்ள)
மஸ்ஜிதுல் ஹராம் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அடுத்து
எது? எனக் கேட்ட போது(ஜெரூஸலத்தில் உள்ள) மஸ்ஜிதுல்
அக்ஸா என
பதிலளித்தார்கள்.” (புஹாரி: 3425)
இந்த ஹதீஸின் அடிப்படையில்
உலகில் அமைக்கப்பட்ட இரண்டாவது
புனித மஸ்ஜிதாக பைதுல் முகத்தஸ் மஸ்ஜித் குறிப்பிடப்
படுகின்றது.
04. *மூன்றாவது புனித பூமி:*
சிறப்பு என்ற அடிப்படையில்
நோக்கினால் மஸ்ஜிதுல் அக்ஸா
மூன்றாவது தரத்தில்
அமைந்திருப்பதை ஹதீஸ்கள் உறுதி
செய்கின்றன.
1. முதல் அந்தஸ்த்தில் இருப்பது
மஸ்ஜிதுல் ஹராம்.
2. இரண்டாவது அந்தஸ்த்தில்
இருப்பது மஸ்ஜிதுந் நபவி.
3. மூன்றாவது அந்தஸ்த்தில்
இருப்பது மஸ்ஜிதுல்
அக்ஸாவாகும்.
05. *முதலாவது கிப்லா:*
முஸ்லிம்கள் மதீனாவுக்குச்
சென்றதிலிருந்து சுமார் 16 அல்லது 17 மாதங்களாக மஸ்ஜிதுல்
அக்ஸாவை நோக்கியே தொழுது
வந்தனர். அதன் பின்னர்தான் இன்று
நாம் முன்னோக்கித் தொழும் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியை
நோக்கித் தொழுமாறு ஏவப்பட்டனர்.
பராஃ இப்னு ஆஸிப் رضي الله عنه அவர்கள்
அறிவிக்கின்றார்கள். “நபி صلى الله عليه وسلم அவர்கள் 16 அல்லது 17 மாதங்கள் பைத்துல்
முகத்தஸ் நோக்கித்
தொழுதார்கள்…..” (புஹாரி: 399)
இந்த வகையில் மஸ்ஜிதுல் அக்ஸா
முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகத்
திகழ்கின்றது.
06.
*இறை தூதர்களால் கட்டப்பட்ட*
*மஸ்ஜித்கள்*
இன்று பூமியில் இருக்கும்
மஸ்ஜித்களில் இறைத்தூதர்களால்
கட்டப்பட்ட நான்கே நான்கு மஸ்ஜித்கள்
மட்டுமே உள்ளன.
1. மஸ்ஜிதுல் ஹராம்.
2. மஸ்ஜிதுன் நபவி.
3. பைதுல் முகத்தஸ்.
4. மஸ்ஜிதுல் குபா
இவற்றில் மஸ்ஜிதுன் நபவி, குபா
மஸ்ஜித் என்பன நபி صلى الله عليه وسلم அவர்களால்
கட்டப்பட்டன. அந்த வகையில் இந்த
மஸ்ஜித் சிறப்புப் பெறுகின்றது.
07.
*நன்மை நாடி பயணம் செய்ய*
*அனுமதிக்கப்பட்ட மஸ்ஜித்:*
“மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன்
நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய
மூன்று மஸ்ஜித்களைத் தவிர (அதிக
நன்மை நாடி) பயணம் மேற்கொள்ளக்
கூடாது என நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அபூஹுரரா رضي الله عنه
ஆதாரம்: புஹாரி: 1189
நன்மையை நாடிப் பயணம்
மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட
மஸ்ஜித்களில் ஒன்றாக மஸ்ஜிதுல்
அக்ஸா திகழ்வதை இந்த ஹதீஸ்
உறுதி செய்கின்றது. ஏனைய
பொதுவான மஸ்ஜித்களில்
தொழுவதை விட மஸ்ஜிதுல்
அக்ஸாவில் தொழுவது அதிக
நன்மை பயக்கக் கூடியது
என்பதையும் அறியலாம்.
08. *முன்னறிவிப்பு செய்யப்பட்ட*
*மஸ்ஜித்*
நபி صلى الله عليه وسلم அவர்களது காலத்தில் இந்த மஸ்ஜித்
அமைந்திருந்த பிரதேசம்
முஸ்லிம்கள் வசமிருக்கவில்லை.
இந்தப் பகுதி முஸ்லிம் களால் வெற்றி
கொள்ளப்படும் என நபி صلى الله عليه وسلم
அவர்கள் முன்னறிவிப்புச்
செய்தார்கள்.
“தபூக் போரின் போது நபி صلى الله عليه وسلم
அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள்
ஒரு தோல் கூடாரத்தில்
இருந்தார்கள். அப்போது மறுமை
ஏற்படுவதற்கு முன்னர் ஆறு(முக்கிய )
நிகழ்வுகள் ஏற்படும்.
அவற்றை எண்ணிக்கொள் என்று
கூறிவிட்டு,
1. எனது மரணம்
2. பைதுல் முகத்தஸ் வெற்றி எனக்
கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அவ்ப் இப்னு மாலிக் رضي الله عنه
ஆதாரம்: புஹாரி- 3176
நபி صلى الله عليه وسلم அவர்களது இந்த
முன்னறிவிப்பு உமர் رضي الله عنه அவர்களது
ஆட்சிக் காலத்தில் நடந்தேறியது.
இந்த முன்னறிவிப்பு நபி صلى الله عليه وسلم
அவர்களது தூதுத்துவத்தின்
உண்மைத் தன்மையையும், பைதுல் முகத்தஸ்
முஸ்லிம்களது கையில் இருக்க
வேண்டிய ஒன்று
என்பதையும் உறுதி செய்கின்றது.
09.
*தஜ்ஜாலிடமிருந்து*
*பாதுகாக்கப் பட்ட பகுதி*
தஜ்ஜாலின் பித்னா குறித்து
நபியவர்கள் அதிகமதிகம் எச்சரிக்கை
செய்துள்ளார்கள். அவ்வாறு
எச்சரிக்கப்படும் போது பல செய்திகளையும்
கூறிவிட்டு, “நான்கு மஸ்ஜித்கள் (இருக்கும்
பகுதி) தவிர மற்றைய
பகுதியெல்லாம் அவனது அதிகாரம்
வியாபித்திருக்கும். அந்த நான்கு
மஸ்ஜித்களாவன, மஸ்ஜிதுல் ஹராம்,
மஸ்ஜிதுர் ரஸுல், மஸ்ஜிதுல்
அக்ஸா, தூர் என நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறினார்கள்.”
அறிவிப்பவர்: ஜுனாதா இப்னு அபூ உமையா رحمة الله عليه
ஆதாரம்: அஹ்மத்: 24083-23683
(ஷுஅய்ப் அல் அர்னாஊத் இந்த
அறிவிப்பை ஸஹீஹானது எனக்
கூறியுள்ளார்கள்.)
எனவே, தஜ்ஜாலின்
பித்னாவிலிருந்து பாதுகாப்புப்
பெற விரும்புபவர்கள்
தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு
இடமாகவும் இது திகழ்கின்றது.
10.
*மீண்டும்* *முஸ்லிம்கள் கையில்* *வரும் மஸ்ஜித்*
உலக முடிவின் போது நிச்சயமாக
மஸ்ஜிதுல் அக்ஸாவும், பலஸ்தீன்
புனித பூமியும் முஸ்லிம்களின்
கைகளுக்கு வந்தே தீரும். இது
குறித்தும் நபி صلى الله عليه وسلم அவர்கள்
முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
அந்த இறுதி முன்னறிவிப்பு
நடக்கும் முன்னர் மஸ்ஜிதுல் அக்ஸா
கைமாறலாம். அந்த இறுதி
முன்னறிவிப்பு பற்றியே இங்கே
நாம் கூறுகின்றோம்.
பலஸ்தீன பூமியில் வைத்துத்தான்
ஈஸா நபியால் தஜ்ஜால்
அழிக்கப்படுவான். தஜ்ஜாலுடன்
சேர்ந்து சத்தியத்திற்கு எதிராகப்
போராடிய யூதர்கள் முஸ்லிம்
போராளிகளால்
தோற்கடிக்கப்படுவார்கள். இது
குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறும்
போது,
“முஸ்லிம்கள் யூதர்களுடன் போர்
செய்து யூதர்கள் கற்களுக்கும்
மரங்களுக்கும் பின்னால்
மறைந்திருந்து அந்தக் கல்லும் மரமும்
முஸ்லிமே! அல்லாஹ்வின்
அடியானே! இதோ எனக்குப் பின்னால்
ஒரு யூதன்
இருக்கின்றான். வந்து அவனைக்
கொன்றுவிடு எனக் கூறும் நாள் வரும்
வரை உலகம் அழியாது என
நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூ
ஹுரைரா(வ), ஆதாரம்: முஸ்லலிம்:
2922-82)
அந்த மகத்தான நாள் வரும் வரை
யூதர்களுக்கும்
முஸ்லிம்களுக்குமிடையில்
மோதலும் முறுகலும் தொடர்ந்து
கொண்டே இருக்கும். இதில்
முஸ்லிம்கள் சந்திக்கும் இழப்புக்கள்
ஷஹாதத் எனும் வீர மரணமாகவே
அமையும். அந்த நல்ல நாள் வரும்
வரை இந்தப் போராட்டம் தொடர்ந்து
கொண்டேயிருக்கும். இதில் சில
போது முஸ்லிம்களும் சில போது
அவர்களும் வெற்றியையும்
தோல்வியையும் சந்திக்கலாம்.
ஆனால் இறுதி வெற்றி
முஸ்லிம்களுக்குத்தான் என்பதில்
எள்ளளவும் சந்தேகமில்லை.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்....
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி
கடலங்குடி.
No comments:
Post a Comment