ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Sunday, 31 May 2020

சஹாபாக்கள் முத்திரை நபியின் சித்திரைப்பூக்கள்

#முத்திரை_நபியின்
#சித்திரைப்_பூக்கள்#
**************************
பொன் முலாம் பூசி
பூமாலை சூடி
பூஜிக்கப்பட்டு வந்த
பொய் தெய்வங்களுக்கு
மூடு விழா நடத்த வந்த
முத்திரை நபியின்
சித்திரைப் பூக்கள்!

அஞ்ஞான இருளகற்றி
மெய்-ஞான ஒளியேற்ற வந்த - அந்த
ஆன்மீகச் சூரியனின்
அஸ்தமனத்திற்குப் பின்
வெளிச்சத்தை விநியோகம் செய்த
விடி வெள்ளிகள்!

வரண்ட பாலையில்
வற்றாத நீரூற்றாய்
வசந்தத்தின் பூந்தென்றலாய்
வாராது வந்த வான் மழையாய்
முகில் கிழித்து முகம் காட்டும்
முற்றாத முழு நிலவாய் வந்துதித்த
முத்து நபியின் முத்துச் சிதறல்கள்! 

பொய் மையில் பூத்த - இந்தப்
பொன் மலர்கள்
பூமான் நபியோடு
புலம் பெயர்ந்த பின் - தங்கள்
காம்புகளைக்கூட காயப்படுத்தின! 

பிரவாகமெடுத்தோடிய 
மௌட்டீகத்திற்கு
தலை வணங்கிய 
நதிக்கரை நாணல்கள்- அவை
சத்திய வாளால் அறு பட்டு
ஏகத்துவ நெருப்பில் சுடு பட்டு
எதிர்ப்புக் கணைகளால் துளை பட்டு
பூபாளமிசைத்த புல்லாங்குழல்கள்! 

உயிர், உடைமைகளை
விலையாய் கொடுத்து
சொர்க்கத்தை சொந்தமாக்கிய
சொக்க தங்கங்கள்! 

இஸ்லாம் எனும்
அருட் பெரும் ஜோதியை
மோதி அணைத்திட 
சீறி வந்த மக்கத்து புயலை - தங்கள்
மூச்சுக் காற்றால் முறியடித்த
சொர்க்கத்து நாயகர்கள்! 

போர்க் களங்களை
பொழுது போக்கும் பூங்காக்களாய்
விழுப்புண்களை 
வீரத்தின் விருதுகளாய்
உயிரிழப்பை
உன்னத மோட்சமாய் - எண்ணி
வாளின் நிழலில் வாழ்திட்ட
வள்ளல் நபியின் வாகைப் படை - அது
அருளாளன் அல்லாஹ்வின் அதிசயப்படை! 

மறுமை வாழ்வே
நிலையென உணர்ந்து
வறுமை வாழ்வை
வலிந்து ஏற்று - அதில்
பொறுமையோடு வாழ்ந்திருந்த
பெருமை மிகு அடையாளங்கள்! 

கருணை நபியின்
அருமை உணர்ந்து
அல்லும் பகலும் - அவர் தம்
நிழலாயிருந்து
கண்ணின் இமை போல்
காவல் புரிந்த
காத்தமுன் நபியின்
கருப்பு பூனைகள்! 

நெஞ்சம் நிறைந்த 
நேச நபியின் ஆசை முகத்தை  
அருகிருந்து பார்த்திருந்து
ஆவல் ததும்ப காத்திருந்து
செம்மல் நபியின்
செவ்விதழ் சிந்திய முத்துக்களை
ஆரமாக்கி அணிந்து கொண்டார்கள்
அதனால்தான்... 
அல்லாஹ் அவர்களை
பொருந்திக் கொண்டான்
(ரலியல்லாஹு அன்ஹு ம்) எனும்
அடைமொழிக்கு ஆளானார்கள்! 

-மௌலவி K.S.அப்துர் ரஹ்மான் நூரி-
                     வடகரை-627812

Saturday, 30 May 2020

இல்யாஸ் ஹிள்ரு ஆமீன் தத்துவம்

ஆமீனின் தத்துவம் அறிந்து சொல்லுவோம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒருநாள் பொழுதில் பூமான் நபி ﷺ அன்னவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் அமர்ந்திருந்தார்கள். இரண்டு இளைஞர்கள் அன்னவர்களைக் காண வந்தார்கள். பரிசுத்தமாக, அழகாக இருந்தார்கள். சலாம் கூறினார்கள். நபிகளார் ﷺ அன்னவர்கள் கேட்டார்கள், "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" அவர்கள் பதில் கூறினார்கள். "நீண்ட நெடுங்காலமாக வருகிறோம். நாங்கள் நெடுங்காலமாய் அல்லாஹ்வை வணங்கி வந்தோம். இதுவரை வந்த வேத வசனங்களிலும் சிறந்த, அழகான வேத வசனம் வந்திருப்பதை கேள்வியுற்றோம். 124,000 நூல்களிலும் இவையே அழகானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி காலத்தில் வெளியாகும், இறுதி நூலாக வெளியாகும் என்று அறிந்தோம். அல்லாஹ் உங்களுக்கு என்ன பரிசு தரவேண்டும் என்று கேட்கும்வரை ஓராயிரம் வருடங்கள் வணங்கினோம். நாங்கள் சூரா அல்- பாத்திஹாவின் அந்த அழகிய திருவசனங்களையே கேட்க வேண்டும் என்று வேண்டி நின்றோம். அல்லாஹ் எந்த பதிலையுமே கூறவில்லை. நாங்கள் மேலும் ஓராயிரம் வருடங்கள் வணங்கினோம். அல்லாஹ் கூறினான், 'இந்த சூரா எனது நேசர் முஹம்மத் ﷺ அன்னவர்களுக்கும் அன்னவர்களின் உம்மத்தவர்களுக்கும் மாத்திரமே."  

"நாங்கள் மேலும் ஓராயிரம் வருடங்கள் வணங்கினோம். அல்லாஹ் மீண்டும், 'உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.'  'சூரா பாத்திஹா எங்களுக்கு தர முடியாது என்று இருப்பதால், நாங்கள் அன்னவர்களின் ﷺ உம்மத்தவர்களாக ஆகும்வரை நீண்ட காலம் வாழ வேண்டும். அன்னவர்களுக்கு சலாம் கூற வேண்டும்; ஒரே ஒருமுறையாவது அல்-பாத்திஹா சூராவைக் கேட்க வேண்டும். அதன் பிறகே நாங்கள் மரணிப்பதில் திருப்தி அடைவோம்."

 ஹிழுரு அலைஹிஸ்ஸலாம், இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரே இவர்கள் இருவரும்.

அவர்கள் மாநபிகளார் ﷺ அன்னவர்களிடம் ஷஹாதா சொல்லிக் கொண்டார்கள். அத்துடன் திருப்தி அடைந்துக் கொண்டார்கள். இதன் பிறகு அவர்கள் நபிமார்கள் அந்தஸ்தை விட்டுவிட்டு முஹம்மத் ﷺ அன்னவர்களின் உம்மத் என்ற அந்தஸ்தை அடைந்தார்கள். 

"எங்களுக்காக சூரா பாத்திஹாவை ஒருமுறை ஓதுங்கள் நாயகமே." என்று கேட்டார்கள். அன்னவர்கள் ஓத அதைத் தொடர்ந்து அவர்களும் ஓதினார்கள். இறுதியில், "ஆமீன்" என்று மொழிந்தார்கள்.

அவர்கள் கேட்டார்கள், "யா ரஸூலல்லாஹ், சூரா அல்-பாத்திஹா ஓதுவதால் கிடைக்கக்கூடிய நற்கூலிகள் என்ன?"

நபிகளார்ﷺ அன்னவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் எனக்கு இறுதிநாள் வரை ஆயுளைத் தந்து நான் அதன் நற்கூலிகளை உங்களுக்கு விபரித்தாலும்கூட என் ஆயுள் போதாது. ஆகவே 'ஆமீனின்' நற்கூலிகளை மாத்திரம் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன்." 

"அலிப்' அவனது அர்ஷிலும் 'லாம்' அவனது குர்ஷியிலும்  'யா' லவ்ஹிலும் 'நூன்' கலத்திலும் எழுதப்பட்டுள்ளன. 'ஆமீனில்' இவை நான்கும் ஒன்றாக வருகின்றன."

"யா ரஸூலல்லாஹ், எங்களுக்கு இன்னும் கூறுங்கள்."

"அலிப்' இஸ்ராfபீல் அவர்களின் நெற்றியிலும்  'மீம்' இஸ்ராயீலின் நெற்றியிலும் 'யா' ஜிப்ரீலின் நெற்றியிலும் 'நூன்' அஸ்ராயீலின் நெற்றியிலும் எழுதப்பட்டுள்ளது. 'ஆமீன்' என்று யாராவது ஒருவர் கூறும்போது இந்த நான்கு வானவர்களிலிருந்தும் நற்கூலிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்."

"இன்னும் சொல்லுங்கள் நாயகமே."

"அலிப்' தவ்ராத் வேதத்திலும் 'மீம்' ஸபூரிலும் 'யா' இன்ஜீலிலும் 'நூன்' குர்ஆனிலும் எழுதப்பட்டுள்ளது. யாரொருவர் பயபக்தியோடு பாத்திஹா சூராவை ஓதி 'ஆமீன்' என்று சொல்கிறாரோ அவர் இந்த நான்கு வேதங்களையும் ஓதிய நற்கூலிகளைப் பெற்றுக்கொள்கிறார்."

"இன்னும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா?"

"ஆம் நாயகமே, சொல்லுங்கள்."

"அலிப்' ஸையுதுனா அபூபக்ரின் நெற்றியிலும் 'மீம்' ஸையுதுனா உமரின் நெற்றியிலும் 'யா' ஸையுதுனா உதுமானின் நெற்றியிலும் 'நூன்' ஸையுதுனா அலியின் நெற்றியிலும் எழுதப்பட்டுள்ளது. யாரொருவர் 'ஆமீன்' என்றுக் கூறுவாரோ அவர் இந்த நான்கு ஸஹாபாக்களிடமிருந்தும் நற்கூலிகளைப் பெற்றுக்கொள்வார்கள்."

இந்த இருவரின் ஆசை பூர்த்தியாகிவிட்டமையால், இருவரும் அல்லாஹ்விடம் தம் உயிரை எடுத்துவிடுமாறு பிரார்த்தனைபுரிய எத்தனித்தப்போது மாநபிகளார் ﷺ அன்னவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கூறினார்கள், "அல்லாஹ்வே உங்களிருவருக்கும் நீண்ட ஆயுளையும் வல்லமையும் தந்துள்ளான். என்னுடைய உம்மத்தவர்கள் பலவீனமானவர்கள், அவர்களுக்கு உங்களின் உதவி தேவை."

ரஸூலுல்லாஹி ﷺ அன்னவர்களின் உம்மத்தவர்களுக்கு உதவி ஒத்தாசை புரியத்தான் அவர்களிருவருக்கும் நீண்ட ஆயுளை அல்லாஹ் கொடுத்துள்ளான். இல்லியாஸ் அலைஹிஸ்ஸலாம் கடலில், ஹிழுரு அலைஹிஸ்ஸலாம் நிலத்தில் உதவி புரிவார்கள்.

-ஹஜ்ஜா ஆமினா ஆதில் கத்தசல்லாஹு சிர்ராஹ்
நன்றி: Ahmed Dede Pattissahusiwa
தமிழில்: அப்துர் ரஹீம் முஹம்மத் ஜஃfபர்

Thursday, 7 May 2020

ஹபீபுன் நஜ்ஜார்- அந்தாக்கியா

#திருக்_குர்ஆனின்_இதயமான_சூறா_யாஸீனில்_கூறப்பட்ட_இறைநேசர்_ஹபீபுன்_நஜ்ஜார்_ரலியல்லாஹு_அன்ஹு

தோற்றம்:- ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கி.மு 4 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள். இவர்கள் அடிப்படையில் இஸ்லாமிய மார்க்க பாரம்பரியமுடையவர்களாகவும், உடல் நிலை குன்றியவர்களாகவும் இருந்தார்கள்.சில இமாம்களின் கருத்துப்படி ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் வாழ்ந்து ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இயற்பெயர்:- ஹபீப் பின் முர்ரா இவர்கள் தச்சுத் தொழில் செய்து வந்ததன் காரணமாக நஜ்ஜார் என்று சொல்லப்படுகிறது. சில இமாம்களின் கருத்துப்படி சிலை செய்து விற்பவராக இருந்தார்கள் ஆனால் சிலை வணங்குபவராக இல்லை என்றும் உள்ளது.

சிறப்புகள்:- 

அல்லாஹ்விற்கு மாறு செய்யாத மூவர்களில்  ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர் ஆவார்கள்.

கல்புல் குர்ஆனாக(குர்ஆனின் இதயமாக) சூறா யாசீனுக்குறியவர் என்ற சிறப்பை ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெற்று இருக்கிறார்கள்.

முஹம்மது நபிﷺ அவர்களை நபியாவதற்கு முன்பே ஈமான் கொண்ட மூவர்களில் ஒருவராக ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திகழ்கிறார்கள்.

அந்தாக்கியா:- 

அந்தாக்கியா நகரம் அல்லாஹ்வால் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்ட நகரம் ஆகும்.

கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் மகா அலெக்சாண்டரின் தளபதிகளுள் ஒருவராகிய முதலாம் செலூக்கஸ் நிக்கட்டோர் என்பவர் அந்தாக்கியாவை நிறுவினார். இந்நகரம் மிகுந்த வளர்ச்சியடைந்து, மேற்கு ஆசியாவில் அலெக்சாந்திரியா நகரையே விஞ்சும் அளவுக்கு விரிவுற்றது. அந்தாக்கியா பண்டைய சிரிய நாட்டை ஒருங்கிணைத்த நான்கு பெருநகர்களுள் ஒன்றாகும் (பிற நகர்கள்: செலூக்கியா, அப்பமேயா, இலவோதிக்கேயா). அந்நகர மக்கள் "அந்தாக்கியர்" என்று அழைக்கப்பட்டனர்

ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வால் அழிக்கப்படும் முன் இருந்த அந்தாக்கியா என்னும் இந்நகரில் கடைக்கோடியில் வாழ்ந்துவந்தார்கள். இந்நகரத்தில் இவர்கள் வாழும் காலத்தில் அந்தீகஸ் இப்னு அந்தீகஸ் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்! இந்த மன்னனின் தந்தை பெயரும் மன்னனின் பெயரும் ஒரே பெயர் தான். இவர் கொடுங்கோல் மன்னனாகவும் சிலை வணங்குபவராகவும் இருந்தார். 

அல்லாஹ் அனுப்பிய நபிமார்கள்:-

அந்தீஸ் இப்னு அந்தீகஸ் மன்னன் ஆட்சியில் அல்லாஹ் மூன்று நபிமார்களை அந்த மக்களுக்கு அனுப்பினான். அவர்கள் பெயர் பின்வருமாறு,

1. சாதிக் அலைஹிஸ்ஸலாம்
2. ஷதூக் அலைஹிஸ்ஸலாம்
3. ஸலூம் அலைஹிஸ்ஸலாம்

ஆனால் அந்த மக்கள் அல்லாஹ் அனுப்பிய நபிமார்களை பொய்யாக்கினார்கள்!

இதை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்!

وَٱضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَٰبَ ٱلْقَرْيَةِ إِذْ جَآءَهَا ٱلْمُرْسَلُونَ 

(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.(Ya Sin 36:13)

إِذْ أَرْسَلْنَآ إِلَيْهِمُ ٱثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوٓا۟ إِنَّآ إِلَيْكُم مُّرْسَلُونَ 
நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்" என்று அவர்கள் கூறினார்கள்.(36:14)

قَالُوا۟ مَآ أَنتُمْ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَمَآ أَنزَلَ ٱلرَّحْمَٰنُ مِن شَىْءٍ إِنْ أَنتُمْ إِلَّا تَكْذِبُونَ 
(அதற்கு அம்மக்கள்;) "நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.(Ya Sin 36:15)
قَالُوا۟ رَبُّنَا يَعْلَمُ إِنَّآ إِلَيْكُمْ لَمُرْسَلُونَ 
(இதற்கு அவர்கள்;) "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்" என்று கூறினர்.(Ya Sin 36:16)
وَمَا عَلَيْنَآ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ 
"இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை" (என்றும் கூறினார்).(Ya Sin 36:17)
قَالُوٓا۟ إِنَّا تَطَيَّرْنَا بِكُمْۖ لَئِن لَّمْ تَنتَهُوا۟ لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ 
(அதற்கு அம்மக்கள்;) கூறினார்கள்; "நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்."(Ya Sin 36:18)

قَالُوا۟ طَٰٓئِرُكُم مَّعَكُمْۚ أَئِن ذُكِّرْتُمۚ بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ 

அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்; "உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.(Ya Sin 36:19)

*_இறைநேசர் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறை நம்பிக்கை:-_*

இவ்வாறு மக்கள் அந்த மூன்று நபிமார்களை பொய் பித்து கொண்டு இருக்கையில் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த மக்களிடம் வந்தார்கள். ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உடல் நலம் குன்றியவராக இருந்தார்கள். ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த மக்களிடம் அல்லாஹ் அனுப்பிய மூன்று நபிமார்களை ஏற்றுக் கொள்ளும்படி கூறினார்கள்!

ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிமார்களை ஏற்றுக் கொள்ளும்படி கூறியதை அல்லாஹ் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்

وَجَآءَ مِنْ أَقْصَا ٱلْمَدِينَةِ رَجُلٌ يَسْعَىٰ قَالَ يَٰقَوْمِ ٱتَّبِعُوا۟ ٱلْمُرْسَلِينَ 

(அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); "என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்" என்று கூறினார்.(Ya Sin 36:20)
ٱتَّبِعُوا۟ مَن لَّا يَسْـَٔلُكُمْ أَجْرًا وَهُم مُّهْتَدُونَ 

"உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்" (என்றும் அவர் கூறினார்).(Ya Sin 36:21)

وَمَا لِىَ لَآ أَعْبُدُ ٱلَّذِى فَطَرَنِى وَإِلَيْهِ تُرْجَعُونَ 

"அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.(Ya Sin 36:22)

ءَأَتَّخِذُ مِن دُونِهِۦٓ ءَالِهَةً إِن يُرِدْنِ ٱلرَّحْمَٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّى شَفَٰعَتُهُمْ شَيْـًٔا وَلَا يُنقِذُونِ 

"அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியா.(Ya Sin 36:23)
إِنِّىٓ إِذًا لَّفِى ضَلَٰلٍ مُّبِينٍ 

"(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.(Ya Sin 36:24)

إِنِّىٓ ءَامَنتُ بِرَبِّكُمْ فَٱسْمَعُونِ 

"உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்; ஆகவே, நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்."Ya Sin 36:25

என்று ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ஆனால் அந்த மக்கள் இவற்றை செவியேற்காமல் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கொன்று விட்டார்கள். 

*_ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கொல்லப்பட்டதை இமாம்கள் சொல்லி காட்டுகிறார்கள்:-_*

ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அந்த மக்கள் கீழே போட்டு அவர்களுடைய வயிற்றிலே மிதித்து கொன்றார்கள். ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வயிற்றில் மிதித்தது எத்தகையது என்றால் அவர்கள் குடல் வெளியேறும் அளவுக்கு கொடுமைபடுத்தி கொன்றார்கள். மேலும் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உடல் நலம் குன்றியவராக இருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இதை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்

قِيلَ ٱدْخُلِ ٱلْجَنَّةَۖ قَالَ يَٰلَيْتَ قَوْمِى يَعْلَمُونَ 

(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) "நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக' என்று (அவரிடம்) கூறப்பட்டது. "என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்."(Ya Sin 36:26)

ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஷஹீதான பின்னர் அல்லாஹ் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சுவனத்தில் நுழையுங்கள் என்று கூறிய போதும் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னை அடித்து கொன்ற தன் சமுதாயத்தினர் மீது குரோதம் கொல்லாமல் தான் சொர்க்கத்தில் பிரவேசித்ததை  தன்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று அல்லாஹ்விடம் கூறினார்கள்.

இதனாலேயே ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் *_இறந்த பிறகும் பேசியவர்_* என்று கருதப்படுகிறார்கள்.

*_அந்தாக்கியாவின் அழிவு:-_*

ஆனால் அல்லாஹ் தன்னுடைய நபிமார்களை பொய்பித்தவர்களையும் தன்னுடைய இறைநேசரை கொன்ற அந்த அந்தாக்கியா மக்களை அழிக்க நாடினான். அல்லாஹ் ஹசரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அந்தாக்கியா என்னும் ஊருக்கு அனுப்பினான்.

ஹசரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த நகரத்தின் கோட்டை நுழைவு வாயிலின் தூண்களை பிடுங்கி எறிந்தார்கள். பிறகு  மிகப்பெரிய சப்தம் (போரொலியை) எழுப்பினார்கள்! அந்நகரமும் நகரமக்களும் சாம்பலாயினர்.

இதைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்,

وَمَآ أَنزَلْنَا عَلَىٰ قَوْمِهِۦ مِنۢ بَعْدِهِۦ مِن جُندٍ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ 

தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.(Ya Sin 36:28)
إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَٰحِدَةً فَإِذَا هُمْ خَٰمِدُونَ 

ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.(Ya Sin 36:29)

ஆகவே அல்லாஹ்வின் நபிமார்களை பொய்பித்ததாலும், அல்லாஹ்வின் நேசர்களை பகைத்தற்காகவும் அல்லாஹ் அழிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக மாறியது அந்தாக்கியா நகரம். அல்லாஹ் கூறுகிறான் எவர் என் நேசரை பகைக்கிறார்களோ அவர்களுடன் அல்லாஹ் யுத்தம் பிரகடனம் செய்வதாக கூறி இருக்கிறான். ஆகவே வலீமார்கள் விசயத்தில் எச்சரிக்கையாக இருக்கும் படி அல்லாஹ் குர்ஆனில் இந்த வரலாற்றை நினைவூட்டி எச்சரிக்கை செய்கிறான்.

*_வலீமார்களை நினைவு கூர்வதை அல்லாஹ் வலியுறுத்தி இருக்கிறான்:-_*

 இன்று நாம் வலீமார்களின் தர்ஹா ஸியாரங்களுக்கு சென்றால் குர்ஆனின் கல்பாக விளங்கும் யாஸீன் சூராவை ஓதுவதும் அந்த கல்புல் குர்ஆனான யாசீன் சூராவில்  வலியுல்லாஹ் ஹசரத் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நினைவு கூறும்படி அல்லாஹ் வைத்து இருக்கிறான். இது ஹசரத் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது என்பதை நாம் விளங்கலாம்.

ஆக அல்லாஹ்வால் அழிக்கப்பட்ட அந்தாக்கியா நகரம் பிற்காலத்தில் அதாவது ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சீடர்களான ஹவாரீயூன்களில் மூவரை தூதர்களாக மீண்டும் அனுப்பி அந்த மக்கள் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும், ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபியாக ஏற்றுக் கொண்ட நகரங்களில் அந்தாக்கியா முதன்மையான நகரமாக மாறியது என்பைதையும் வரலாற்று ரீதியாக நாம் அறிய முடிகிறது.

மேலும் ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் உள்ளவர்கள் என்ற சிலரது கருத்தை விட ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்புக்கு 4 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்தார்கள் என்ற கருத்தே வலிமையாக உள்ளது.

காரணம்:- 

ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அனுப்பிய மூன்று தூதர்களையும் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அந்தாக்கியா மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்கள் அனுப்பிய தூதர்களையும் அவர்கள் பொய்பிக்க இல்லை. ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏற்றுக் கொண்ட நகரங்களில் முதன்மையான நகரமாக விளங்கும் நான்கு நகரங்களில் அந்தாக்கியாவும் ஒன்றாக விளங்கியது. ஆகவே அல்லாஹ் அவர்களை அழிக்கவில்லை.  ஆகவே அழித்ததாக கூறும் அந்த அந்தாக்கியா ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்புகுக் 4 நூற்றாண்டிற்கு முன் இருந்த அந்தாக்கியா என்பது அதுவே அழிக்கப்பட்டது என்பது வலிமையான கருத்தாக உள்ளது!

எல்லாம் வல்ல அல்லாஹ் இறைநேசர்களின் மீதான அன்பும் கருணையும் அதிகரித்து இறைநேசரான ஹபீபுன் நஜ்ஜார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பொருட்டால் நம்மை அல்லாஹ்வின் லஃனத்தில் இருந்து பாதுகாப்பானாக. 

ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!

நன்றி-இறைநேசர்கள்

Wednesday, 6 May 2020

அஹ்லுல் பைத் என்றால்


* அஹ்லுல் பைத் என்றால் யார்?

இது நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தாரை குறிக்கும் ஒரு சொற்றொடராகும். இதில் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் மனைவி மக்கள் அனைவரும் அடங்குவர்.


என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டும் என்பதை தவிர வேறெந்த கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை என்ற வசனம் இறங்கிய போது, யா ரசூலல்லாஹ்!! நாங்கள் அன்பு வைக்க கடமையாக்கப்பட்ட உங்களின் குடும்பத்தார்கள் யார்? என்று ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள், அலி, பாத்திமா, ஹஸன், ஹுஸைன் رضي الله عنه என்று பதிலளித்தார்கள்.

ஒரு முறை நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் வந்தார்கள். அவர்களுடன் அலி رضي الله عنه, பாத்திமா رضي الله عنه, ஹஸன், ஹுஸைன் رضي الله عنه ஆகியோர் இருந்தனர். அப்போது அவ்விருவரையும் தமது மடியில் வைத்துக்கொண்டு ஒரு போர்வையால் எல்லோரையும் போர்த்தி, “நபியுடைய குடும்பத்தார்களே! உங்களை விட்டும் எல்லா அசுத்தங்களையும் நீக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்.” 33: 33

இந்த ஆயத்தை ஓதிய பிறகு இறைவா! இதோ இவர்கள் என்னுடைய அஹ்லுல் பைத்துகளாகும். ஆகவே இவர்களை பரிசுத்தபடுத்துவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

இதிலிருந்து நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தவர்களை அல்லாஹுதஆலா பரிசுத்தப்படுத்தியும், பாவம் என்பதே இன்னதென அறியாதபடியும் ஒரு குறைவும் இல்லாத படியும் செய்திருப்பது இந்த வசனங்களின் மூலம் நமக்கு தெளிவாகிறது.

உங்களுக்கு நான் இரண்டு கலிபாக்களை விட்டு செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் திருவேதம். அது வானத்திற்கும் பூமிக்கும் மிடையே நன்கு தொடர்புடையாதயிருக்கும். அடுத்து என்னுடைய வழித தோன்றல்களான அஹ்லு பைத்துகள். அந்த இரண்டும் ஹவ்லுல் கவ்ஸரை வந்தடையும் வரை பிரிந்து விடாது.
(அஹ்மத்: 5 – 182)


என் மறைவுக்கு பிறகு என் குடும்பத்தார்களுக்கு நல்லவரே உங்களில் நல்லவர்.

என்று நபிகள் நாயகம்  
صلى الله عليه وسلم 
அவர்கள் கூறியிருப்பது அஹ்லு பைத்துகள்

கியாமத்து நாள் வரை சங்கிலித் தொடராக வந்து கொண்டிருப்பார்கள் நாம் அவர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.


* அஹ்லுல் பைத்துகளை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி

• முஃமீன்களே! உங்களுக்கு மத்தியில் நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எத்திவைக்க வேண்டியதை எத்தி வைத்ததற்காக எவ்வித பிரதி பலனையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என்றாலும் எனது குடும்பத்தார்களாகிய அஹ்லுல் பைதுகளிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும். என்பதனை தான் உங்களிடம் கேட்கிறேன். என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். ( சூரா: 23)

• எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், எவர் அஹ்லுல் பைத்துகளாகிய உங்களை அல்லாஹ்வுக்காகவும், அவன் ரசூளுக்காகவும் பிரியம் வைக்க வில்லையோ அவருடைய இதயத்தில் ஈமான் நுழையாது.
(திர்மிதி, மிஷ்காத் 570)

அஹ்லுல் பைத்துகளின் மகத்துவம்

• ஃபாத்திமா رضي الله عنه அவர்கள் சுவனப் பெண்களின் தலைவியாகும்.
  (புஹாரி, முஸ்லிம், திர்மிதி)

• ஹஸன், ஹுஸைன் رضي الله عنه அவர்கள் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்.
 (திர்மிதி, மிஷ்காத்)

* கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்களின் உடல் அமைப்பை கொண்ட அருமை பேரர்கள்.

ஸெய்யதுனா ஹஸன் رضي الله عنه அவர்கள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்களின் நெஞ்சிலிருந்து தலை வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள். ஸெய்யதுனா ஹுஸைன் رضي الله عنه அவர்கள் நெஞ்சிலிருந்து கால் வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள். என்று இமாம் அலி رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி, மிஷ்காத்)

* அஹ்லுல் பைத்துகளை பின்பற்ற வேண்டும்

“மனிதர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் எம்மிடம் மரணத்தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்க போகிறேன். நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல் குர்ஆன் அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்லுல் பைத்துகள் என்ற என் குடும்பத்தார்களாகும். அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்துகொள்கிறேன்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
(முஸ்லிம், மிஷ்காத் 567)

கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்கள் (செய்த) தாங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தாங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் (ஒரு) பிரசங்கம் செய்தார்கள். (அந்தப் பிரசங்கத்தில்) மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல்பைத் என்ற என்னுடைய பிச்சளங்களையும் விட்டுச் செல்கிறேன் என்று கூறியதை நான் செவியுற்றேன் என்று ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(திர்மிதி, முஸ்னத் அஹ்மத்,மிஷ்காத்)

ஸெய்யதுனா அபூதர் رضي الله عنه அவர்கள் கஃபாவின் வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள். “யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன்.
(மிஷ்காத் 573, ஹாகிம்: 2 – 343)

நட்சத்திரங்கள் விண்ணில் உள்ளோருக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. எனது அஹ்லுல் பைத்துகள் பூமியிலுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள். ஆகவே எனது அஹ்லுல் பைத்துகள் போய்விடுவார்களானால் பூமியிலுள்ளவர்களும் (அழிந்து) போய்விடுவர் என நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

ஒருவர் நிரப்பமான கூலியை பெறவேண்டும் என்று விரும்பினால் அவர், “இறைவா! நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மீதும், முஃமீன்களின் தாய்மார்களான அவர்களின் மனைவிமார்கள் மீதும், அவர்களின் பிச்சிளங்களின் மீதும், அவர்களின் அஹ்லுல் பைத்துகளின் மீதும் ஸலவாத்து சொல்வாயாக. என்று கேட்க வேண்டும். (மிஷ்காத் 87) எனவே தொழுகையில் பெருமானார் மீது ஸலவாத்து சொல்லும்போது அவர்களின் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்ல வேண்டும். என்று ஏவப்பட்டுள்ளோம். இந்த கருத்தை சுட்டிக்காட்டும் விதமாக, “ரசூலுல்லாஹ்வின் அஹ்லுல் பைத்துகளே! உங்களை நேசிப்பதே ஒவ்வொரு முஃமினுக்கும் இறைவன் கடமையாக்கி இருக்கிறான். என்று இறை வசனம் இறங்கி இருப்பதும் உங்கள் மீது ஸலவாத்து சொல்லாவிட்டால் தொழுகையே இல்லை என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதும் தாங்களின் உயர்வுக்கு போதுமான ஆதாரமாகும்” என்று இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார்கள்.

* அஹ்லு பைத்துகள் சிறந்த வஸீலாவாகும்.

“பெருமானாரின் பரிசுத்த குடும்பத்தினர் தான் நான் இறைவனை சென்றடைவதற்குரிய வஸீலாவாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் பொருட்டால் மறுமை நாளையில் எனது பட்டோலை வலது கரத்தில் கிடைக்க வேண்டுமென்று ஆதரவு வைக்கின்றேன்” என்று இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

குர்ஆனையும் ஹதீஸ்களையும் நன்றாக ஆய்ந்து தெளிந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமக்கு மறுமையில் வெற்றி கிடைப்பதற்கு தமது வணக்கத்தையோ தாம் இஸ்லாத்திற்கு செய்த பெரும் சேவைகளையோ வஸீலா என்று கூறவில்லை. மாறாக அஹ்லு பைத்துகள் தான் எனக்கு வஸீலா என்று கூறி இருக்கின்றார்கள். இதன் மூலம் வணக்கங்களை வஸீலாவாக்குவதை விட அஹ்லு பைத்துகளை வஸீலாவாக்குவது மிக்க மேலானது.


பெருமானாரின் குடும்பம் மீது அன்பு.

என் ஆத்மா எவன் வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். பெருமானாரின் சுற்றத்தார்களை நான் சேர்ந்திருப்பது எனது சுற்றத்தார்களை விட எனக்கு மிகவும் உகப்புக்குரியதாகும் என்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி)


*ஸாதாத்துமார்கள் என்றால் யாரை குறிக்கும்?

ஸெய்யித் என்பது முஸ்லிம்களிடம் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு கூறப்படும். அஸ்ஸய்யிதானி என்பது அலி رضي الله عنه அவர்களின் அருமைச் செல்வங்களான ஹஸன், ஹுஸைன் رضي الله عنه ஆகியோரை குறிக்கும்.
பாத்திமா நாயகி رضي الله عنه அவர்களின் வயிற்றிலிருந்து கியாம நாள் வரை வந்து கொண்டிருப்பவர்களே ஸாதாத்துகள் ஆவார்கள்.

* ஸாதாத்துமார்களின் சிறப்பு

ஸாதாத்துமார்கள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பரிசுத்த இரத்தத்தில் இருந்து உதித்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கென்று தனிப்பட்ட தகைமையும் கௌரவமும் இருக்கின்றது. என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது அல்ல. என்றாலும் குழப்பமும் குதர்க்கமும் நிறைந்த இக்கால கட்டத்தில் அவர்களின் மரியாதையை குலைப்பதற்காகவே ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. எனவே ஸாதாத்துமார்களை பற்றி மாண்புகளை நாம் தெரிந்து நம் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுப்பது மிக பெரிய கடமையாகும்.

: அல்லாஹ்வின் அன்பைப்பெற விரும்பினால் என்னை அன்பு வையுங்கள். எனது அன்பை பெற வேண்டுமானால் என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள்.
(திர்மிதி, மிஷ்காத் 573)

• எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், அஹ்லுல் பைத்துகளே! நம்மை எவராவது கோபப்படுத்திவிட்டால் அல்லாஹ் அவரை கண்டிப்பாக நரகில் நுழைத்து விடுவான்.
(முஸ்தத்ரக்: 3 – 150)

• உங்களின் குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களின் மீது ஒழுக்கம் கற்பியுங்கள். உங்கள் நபியின் மீது அன்பு வைத்தல், நபியுடைய குடும்பத்தார்கள் மீது அன்பு வைத்தல், குர்ஆன் ஷரீஃப் ஓதி வருதல் என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

(தைலமி)

இப்போது கூறப்பட்ட நபிமொழிகளின் படி நாங்கள் அஹ்லுல் பைத்துகளிடம் அன்பாக நடந்துக்கொண்டால்தான் அல்லாஹ்வின் அன்பை அடைய முடியும் என்றும் அவர்களை பற்றிப்பிடித்து நடக்க வேண்டும் என்றும் அதாவது அவர்களின் சொல், செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடக்க வேண்டும். என்றும் உணர்த்துகிறது.

* தொழுகையில் அஹ்லுல் பைத்துகள் மீது ஸலவாத் சொல்லாவிட்டால்

“நாயகமே! நாங்கள் எங்களின் தொழுகையில் உங்கள் மீது ஸலவாத்து சொல்லும் போது எவ்வாறு சொல்ல வேண்டும்?” என்று ஸஹாபா பெருமக்கள் கேட்க, அதற்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் ஸலவாதே இப்ராஹிமாவை ஒதிகாட்டி தனது குடும்பத்தாரின் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 405 வது ஹதீஸ் விளக்கம்)

கியாமத்து நாள் வரை தொடர்ந்து வரும் சந்ததிகள்.

கியாமத் அண்மிக்கின்ற நேரத்தில் என் குடும்பத்தை சார்ந்த ஒருவர் நீதத்தை நிலை நாட்டி நேர்மையான ஆட்சி நடத்துவார்.

(மிஷ்காத்)



மஹ்தி அலைஹி ஸலாம் என் பிச்சிளத்தை சார்ந்தவர். ஃபாத்திமாவின் பிள்ளைகளிலிருந்து உதிப்பவர்.

(மிஷ்காத் – 470)





* பரிசுத்தமான பாரம்பரியம்



இவ்வுலகில் வாழ்கின்ற சாதாரண மனிதர்கள் எவரும் தமது பரம்பரைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து தமது பாரம்பரிய பட்டியலை பாதுக்காத்து வைத்திருப்பதில்லை. ஆகவே சிலருக்கு தன் தந்தையுடைய தந்தையின் பெயரே தெரியாது. ஆனால் இவ்வுலகின் பல திக்கிலும் பரவி இருக்கின்ற ஸாதாத்மார்கள் ஒவ்வொருவரும் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் முதல் தாம் வரையுள்ள பாரம்பரியப்பட்டியலை ஆதாரத்துடன் அழகுற கூறுவதை காண முடியும். இதுவும் ஸாதாத்மார்களை இவ்வுலகில் வாழையடி வாழையாக வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கும் இடையில் எவ்வித கலப்படமும் இன்றி நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பரிசுத்தமான உதிரத்தில் உதித்திக் கொண்டு இருப்பவர்கள் என்பதற்கும் நல்ல சான்றாகும்.

அஹ்ரார்கள்.

அஹ்ரார்கள் என்பதற்கு சுதந்திரமானவர்கள் என்பது அகராதி பொருள். அதாவது நரகத்தில் நுழைவதை விட்டும் சுதந்திரமானவர்கள் என்பதாகும். அவர்கள் நரகில் நுழைவதை விட்டும் சுதந்திரமானவர்களாக இருப்பதற்கு இரு காரணங்களை குறிப்பிடலாம். ஒன்று இவ்வுலகிலேயே இறைவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக இருப்பது. இரண்டாவது பெருமானாரின் புனிதமிகுந்த சதைத் துண்டிலிருந்து உற்பத்தியானவர்களாக இருப்பது.



நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தார்களை சகல அசுத்தங்களிலிருந்தும் முற்றிலும் பரிசுத்தப்படுத்தி விட்டதாக வல்ல ரஹ்மான் திரு மறையில் குறிப்பிட்டு காட்டுகின்றான். அஹ்ஸாப் – 33



இறைவனால் இவ்வுலகிலேயே பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் எப்படி நரகம் செல்ல முடியும்? மேலும் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் உடம்பிலிருந்து வெளிப்பட்ட உதிரத்தை அருந்தியவரை பார்த்து நரகம் தீண்டாது என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருக்கையில், நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சதைத்துண்டாக இருக்கின்ற பாத்திமா நாயகி رضي الله عنه அவர்களையும் அவர்களின் சதைத்துண்டுகளான ஸாதாத்துமார்களையும் நரகம் எப்படி தீண்டும்?





* வள்ளல் நபி صلى الله عليه وسلم அவர்கள் வம்சத்தின் வளாமார் விஷேசம்



இவ்வுலகில் உதித்த வலிமார்களில் பெரும்பான்மையானவர்கள் அஹ்லு பைத்தை சார்ந்தவர்களாக இருப்பது இந்த வம்சத்தின் பெருமைக்கு ஒரு சிறப்பான எடுத்துக் காட்டாகும். இலட்சக்கணக்கான இதயங்களில் ஈமானிய தீபத்தை ஏற்றி நானிலம் போற்றும் நாதாக்களாக இருக்கின்ற கௌது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, ரிபாய் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, அஜ்மீர் காஜா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, ஷாதுலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, நாகூர் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு போன்ற ஏராளமான குதுபுமார்கள்
இப்புனிதம் நிறைந்த பாரம்பரியத்தில் பூத்த பெருமைக்குரிய மலர்களாகும்.





* ஸாதாத்துமார்களின் சேவை



ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸைய்யதுனா ஹுஸைன் رضي الله عنه அவர்களின் பேரப்பிள்ளைகளான அஹ்லு பைத்துகள் பஸராவிலிருந்து இடம் பெயர்ந்து உலகின் நாளா பகுதிக்கும் சென்று தீன் பனி புரிந்தார்கள். அவர்களில் ஒரு சிலர் வியாபார நோக்கோடும் பல பாகங்களுக்கும் சென்று அதனூடே தீன் பணியை நிலைநாட்டினார்கள். கவாரிஜிகள் போன்ற கொள்கை கெட்ட கூட்டத்தாருடன் போராடி இஸ்லாமிய நேரிய கொள்கையான ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நிலைநாட்ட கடும் பாடுபட்டார்கள். மேலும் நீதியை, நேர்மையை நிலைநாட்டுவதற்காகவும் தங்களின் உயிர்களை அர்ப்பணித்துள்ளார்கள். இதற்கு கர்பலா நிகழ்ச்சியோன்றே போதுமான ஆதாரமாகும். தங்களின் பாட்டனாரால் நட்டப்பட்ட இஸ்லாம் என்ற விருட்சத்தை பேணி பாதுகாத்து வளர்த்து வரும் விஷயத்தில் பேரர்களான அஹ்லுல் பைத்துகள் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளார்கள். தற்போதும் இருந்து வருகிறார்கள்.

அல்லாஹ்வின் அன்பை பெற விரும்பினால், என்னை அன்பு வையுங்கள், எனது அன்பை பெற வேண்டுமானால், என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள்" என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (திர்மிதி 3814, மிஷ்காத் 573



 அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களே அறிந்து கொள்ளுங்கள்! எம்மிடம் மரண தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்கப் போகிறேன். மேலும் நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விசயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல்லஹ்வின் வேதம். அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்லுல் பைத்துக்கள் என்ற என் குடும்பத்தார்களாகும். ஆகவே அவர்கள் விசயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொள்கிறேன்.

முஸ்லிம் – 5920, மிஷ்காத் 567

ஸாதாத்துமார்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்?



ஸாதாத்துமார்களிடம் இருந்து தென்படுகின்ற பாவங்கள் வெளிப்படையில் பாவங்களைப் போன்று தெரிந்தாலும் அந்தரங்கத்தில் பாவங்கள் அல்ல. மாறாக இறை நியதிபடி நடக்கின்ற காரியங்கள் என்று நினைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களை பாவங்களை விட்டும் நீக்கி மிகவும் பரிசுத்தபடுத்தி விட்டதாக அல்லாஹ் கூறியிருக்கிறான். (அஹ்ஸாப் 33) எனவே அவர்கள் நமது பொருட்களை எடுத்துக்கொண்டு தரமருத்தால் கூட அவர்களை பிடித்து சிறையில் தடுத்து வைப்பதோ, அல்லது நீதிபதியிடம் அழைத்துச் செல்வதோ கூடாது. என்னதான் இருந்தாலும் அவர்கள் நபியவர்களின் சதைத்துண்டு. என்பதை மறந்து விடக்கூடாது என்று முஹியத்தீன் இப்னு அரபி (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.

(நூருல் அப்சார் 128)

Tuesday, 5 May 2020

நபி நூஹ் அவர்களின் முக்கிய குறிப்புகள்

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முக்கிய குறிப்புகள் (YSYR)

பெயர் :- ஸாகுப் என்றோ ஸகுன் என்றோ கூறப்படுகிறது. அரபியில் நூஹா" நூஹ்" என்று அழைக்கப்படுகிறது" (நோவா)

சிறப்பு பெயர் :- ஷைஹுல் முர்ஸலீன்" கபீருல் அன்பியா" நஜீயுல்லாஹ்" அபூ அன்பியா" 

பிறப்பு :- ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பின் 1642 ஆண்டு கழித்து பிறந்தார்கள்"

தந்தை பெயர் :- லாமக்"

தாய் பெயர் :- பன்யூஸ்"

மனைவிமார்கள் :- உம்ரா" அஜ்வத்" வஹாலிஆ"

பிள்ளைகள் :- ஹாம்" ஸாம்" யாம்"

நபித்துவம் :- 40

ஏகத்துவ பிரச்சாரம் :- 950 ஆண்டுகள்"

நூஹ் நபியின் கப்பல் :- 3 தட்டுகள்" கப்பலின் நீளம் 1980 அடிகள். அகலம் 990 அடிகள்

கப்பல் :- கூபாவில் இருந்து வெளிப்பட்டது" பின்னர் ஜூதி மலையில் நிர்த்தாட்டப்பட்டது"

மரணம் :- மரணிக்கும் போது அவர்களின் வயது 1450 ஆகும்"

அடக்கம் செய்யப்பட்ட இடம் :- நாடு ஷிரியா

குர்ஆனில் நூஹ் நபியின் பெயர் இடம் பெற்றுள்ளது :- 3:33" 4:163" 6:84" 7:59" 7:61" 7:69" 9:70" 10:71" 11:25" 11:32 இன்னும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டள்ளது" 

அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்..............

அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆன்மீக அறிவு

مما رُوِيَ أنّ رجلاً اُتي به إلى عمربن الخطّاب ، و كان صدر منه أنّه قال لجماعةٍ من الناس و قد سألوه كيف أصبحت ؟
قال : أصبحت اُحبّ الفتنة ، و أكره الحقّ ، و اُصدّق اليهود و النصارى‏ ، و اُؤمن بما لم أره ، و اُقرّ بما لم يُخلق .
فرُفع إلى عمر ، فارسل إلى عليّ ( كرّم اللَّه وجهه ) ، فلمّا جاءه أخبره بمقالة الرجل .
قال : " صدق ، يحبّ الفتنة ، قال اللَّه تعالى : { إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ ... } ، ( سورة التغابن : 15 ) .
و يكره الحقّ ـ يعني الموت ـ ، قال اللَّه تعالى : { وَجَاءتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ... } ، ( سورة ق : 19 ) .
و يُصدّق اليهود و النصارى‏ ، قال اللَّه تعالى : { وَقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصَارَى عَلَىَ شَيْءٍ وَقَالَتِ النَّصَارَى لَيْسَتِ الْيَهُودُ عَلَى شَيْءٍ ... } ، ( سورة البقرة : 113 ) .
و يؤمن بما لم يره ، يؤمن باللَّه عزّ و جلّ .
و يُقرّ بما لم يُخلَق ، يعنى الساعة .
فقال عمر : أعوذ من معضلةٍ ، لا عليّ لها ، ( انظر فتح الباري في شرح البخاري : 17 / 105 



كان هناك ثلاثة رجال يمتلكون 17 جملا عن طريق الإرث بنسبٍ متفاوتة فكان الأول يملك نصفها، والثاني ثلثها، والثالث تسعها : وحسب النسب يكون التوزيع كالآتي  .. الأول يملك النصف (17÷2) = 8.5 الثاني يملك الثلث (17÷3)= 5,66 الثالث يملك التسع (17÷9 ) = 1.88 ولم يجدوا طريقة لتقسيم تلك الجمال فيما بينهم، دون ذبح أي منها أو بيع جزء منها قبل القسمة فما كان منهم إلا أن ذهبوا للإمام علي رضي الله عنه  لمشورته وحل معضلتهم. قال لهم الإمام علي رضي الله عنه: هل لي بإضافة جمل من جمالي إلى القطيع ؟؟ فوافقوا بعد استغراب شديد !! فصار مجموع الجمال 18 جملا، وقام الإمام علي (رضي الله عنه ) بالتوزيع كالتالي : الأول يملك النصف (18÷2) = 9 الثاني يملك الثلث (18÷3)  = 6 الثالث يملك التسع (18÷9)  = 2 ولكن الغريب في الموضوع أن المجموع النهائي بعد التقسيم يكون: 17 جملا. فأخذ كل واحدٍ منهم حقه واسترد الإمام جمله ( الثامن عشر) وتعد هذه من روائع الإمام علي رضي الله عنه