MENU
Home
About Islam
Articals
Gallery
Video Bayans
Audio Bayans
Contact us
நவீன மஸாயில்கள்
அல்ஹம்து லில்லாஹ்…..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
மனித வாழ்க்கையைவடிவமைத்த அல்லாஹ்அவன் எப்படிவாழவேண்டும், எதைஉண்ணவேண்டும் எனஎல்லாவற்றையும்வடிவமைத்துகொடுத்துள்ளான்.
குறிப்பாக உணவு,
ஒரு மனிதனின் ஹலாலான உணவு மட்டுமேஅவனை இறைவனிடம்சேர்க்கப் போதுமானது.ஆனால் நவீன யுகம் இன்றுஎல்லாவற்றையும்இலகுவாக்குகிறது என்றவகையில் எது ஹலால் ,எவை ஹராமை என்பதைபொருட்களின் வெளிஅட்டையிலும், விளம்பரபலகைகளிலும்பதித்துவிட்டது.முஸ்லிம்களாகிய நாமும்அதை அப்படியேநம்பிவிடுகிறோம். நம்துஆக்கள்அங்கிகரிக்கப்படாமைக்குஇது கூட காரணமாகலாம்என்பதை கவனத்தில்கொண்டு இன்று வெகுவேகமாக பரவிவரும் அந்நியநாட்டின் இறக்குமதிஇறைச்சி பற்றியவிழிப்புணர்வு ஆய்வுஉங்களால் இப்போதுபடிக்கப்படுகிறது.
இது முழுமையும் நம்சமூகத்திற்குப் பயனளிக்கஇறைவனைபிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு
இறை பொருத்ததைநாடும்
V. முஹம்மது மன்சூர் கைரிஇஸ்லாஹி B.com
லால்பேட்டை
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
தானாக இறந்தவைகளும்,இரத்தமும், பன்றிஇறைச்சியும்,அல்லாஹ்வின் பெயர் கூறிஅறுக்கப்படாத இறைச்சியும்உங்களூக்குஹராம்(தடுக்கப்பட்டது)ஆகும். (16:115)
நபி ஸல் கூறினார்கள்:
இறைச்சி இவ்வுலகமக்களுக்கும் , நாளை சுவனவாசிகளுக்கும் சிறந்தஉணவாகும்.
அபூதர்தாரலி இப்னுமஜா 3805
இறைச்சி உண்பது கண்பார்வையை வலுவடையச்செய்யும்.
(திப்புந் நபவி)
மனிதனை இறைவன்அனைத்துண்ணியாகபடைத்துள்ளான். அதற்குமிகச்சிறந்த ஆதாரம் நமதுபற்களின் அமைப்பு ,கொஞ்சம் மாமிச உண்ணிவிலங்குகளை கவனித்தால்முழுவதும்கோரைப்பற்களாக இருக்கும். தாவர உண்ணிவிலங்குகளை கவனியுங்கள்அனத்தும் தட்டை பற்களாகஇருக்கும்,
நமது பற்களை கவனித்தால்இரு வகை பற்களும்வழங்கப்பட்டுள்ளோம். இதுஇறைவன் நம்மை அனைத்துண்ணியாகபடைத்துள்ளான் என்பதற்குநம்மிடம் உள்ள மிகச் சிறந்த ஆதாரம்.
இந்த உலகம்மனிதனுக்கானது. இதில்உள்ளவைகளைஅனுபவிக்கும் முழுஉரிமையும் மனிதனுக்குஉண்டு, அதனால் தான்அதிலும் மனிதனுக்குதேவையான ஆற்றலைஇறைவன் வைத்துள்ளான்.
உதாரணத்திற்கு;
1, ஆட்டிறைச்சியயை வாரம்ஒரு முறை சாப்பிட்டுவந்தால் பார்வைகோளாறுகள் நீங்கி பார்வைவலுபெறுகிறது.
2, ஆட்டின் மூளை, தாதுவிருத்தியைஅதிகப்படுத்துகிறது,நினைவாற்றலைபலப்படுத்தி மூளையைவலுப்படுத்துகிறது.
3, ஆட்டிறைச்சி உடல் சூட்டைதணித்து, தோலுக்கு வலிமைஅடையச் செய்து, சருமம்பளபளக்க உதவுகிறது.
இன்னும் இது போல்அனைத்து நோய்நிவாரணங்களுக்கும்ஆட்டிறைச்சி சிறந்ததீர்வாகும். (நன்றி –Googleஅண்ணன்)
எனவே இறைவன் மனிதன்உண்பதற்காகவே சிலஜீவராசிகளை படைத்துஅதனை நமக்கு குர்ஆன்,ஹதீஸ்கள் மூலம்அறிமுகமும் செய்துள்ளான்.
எதை சாப்பிடலாம்? ? ? ?...
இறைச்சியை சாப்பிடஅனுமதி அளித்துள்ளமார்க்கம் அதை எப்படிஅறுத்து பயன் படுத்தவேண்டும் என்பதையும்வரையரறுத்துள்ளது.அதைப் பற்றிய மார்க்கமேதைகளின் கருத்துகளைதொடர்ந்து பேசலாம்…
இந்த விஷயத்தில் நான்குஇமாம்கள் இரு குழுவாகபிரிகிறார்கள்.
F ஹனபி மற்றும் மாலிகி :
ஓர்பிராணியைஉண்பதற்காக அறுக்கும்போது அப்பிராணியின்கழுத்து நரம்புகளில்மூன்று நரம்புகள்அறுக்கப்பட வேண்டும்.
· கழுத்து நரம்பு
· உயிர் நாடியின்இரு நரம்புகள்.
கழுத்தில் இருதாடைக்கும் ,கழுத்தின் சங்குபகுதிக்கும் நடுபகுதியில் அறுக்கவேண்டும்.
لقول النبي صلّى الله عليه وسلم : «الذكاة: ما بين الَّلبة والِّلحية»
கழுத்தின் கீழ்பகுதி أسفل الع- اللبة
நாடிக்குழியின் முடிشعر الذقن–اللحية
ومحله: آخر الحلق –النحر
F ஷாபி , ஹம்பலி :
உண்பதற்குஅனுமதிக்கப்பட்ட பிராணியின் கழுத்துநரம்பை அறுத்தல்வேண்டும் அதுகழுத்துக்கு கீழ் அல்லதுமேல் பகுதியாகவோஇருக்கலாம்.
· அதாவது ஹனபிமற்றும் மாலிகி அறுக்க வேண்டியஇடத்தைகுறிப்பிடுகிறார்கள்.
· ஷாபி மற்றும்ஹம்பலி கழுத்தில்அந்த பிராணியின்உயிர் போகும்படிஅறுத்தல் வேண்டும்என அறுக்கும் இடம்குறிப்பிடவில்லை.
இந்த முறையில் உண்பதற்க்குஅனுமதிக்கப்பட்டபிராணியைஅறுத்திருந்தால் அதைமட்டுமே சாப்பிடலாம்.
(كتاب الفقه علي المذاهب الاربعة)
ولقوله صلّى الله عليه وسلم : «ما أنهر الدم، وذكر اسم الله عليه، فكلوا ما لم يكن سناً أو ظفراً، وسأحدثكم عن ذلك: أما السن فعظم، وأما الظُّفر فمدى الحبشة» رواه الجماعة عن رافع بن خديج (نيل الأوطار: 141/8)
பற்களால் , நகங்களால்கொல்லப்பட்ட பிராணிகளைஉண்பதற்கு நபி ஸல் தடைவிதித்துள்ளார்கள்.
மேலும் ,
நான்கு இமாம்களின்ஏகோபித்த கருத்தின் படி
Ø இறை நிராகரிப்பாளன்.
Ø இணை வைப்பவன்.
Ø நாத்திகன்.
Ø மார்க்கத்தை விட்டு மதம்மாறியவன்
ஆகியோர் அறுத்தபிராணியின் மாமிசம்உண்பது தடையாகும்.
(كتاب الفقه علي المذاهب الاربعة)
F முஸ்லிம்,
F வேதம்கொடுக்கப்பட்டவர்கள்.
வேதம் கொடுக்கப்பட்டவர்கள், (யூதர்கள்,கிருஸ்தவகள்) அறுப்பதைஉண்பது பற்றிய கருத்துவேறுபாடுகள் உள்ளன,
v ஹனபி- ஹம்பலி :பழைய மார்க்கசட்டங்களைபின்பற்றுபவர்கள்எனில்அவர்களுடையகடைகளில் இறைச்சிவாங்குவது கூடும்.
v ஷாபி , மாலிகி: அல்லாஹ்வின்பெயர் இல்லாமல்,மற்றவர்களின்பெயரில்அறுத்திருந்தால்கூடாது(ஈஸா,உஜைர்)
வேதம்கொடுக்கப்பட்டவர்களின் பழையமார்க்கத்தில் நமக்குஎதையெல்லாம்ஹராமாக்கப்பட்டதோ அவைஅனைத்தும்அவர்களுக்கும்ஹராம். அதைஅப்படியேபின்பற்றும்வேதத்துடையவர்களுடையவர்களால்அறுக்கப்பட்டதைசாப்பிடலாம்.
(كتاب الفقه علي المذاهب الاربعة)
இறக்குமதிசெய்யப்படும்இறைச்சிப் பற்றி….
இன்றைய உலகம்எல்லாவற்றையும்வியாபாரமாக்கி விட்டதால்இறைச்சியும் ஏற்றுமதிமற்றும் இறக்குமதிபொருளாகி விட்டது.
எனவே இதைப்பற்றி சவூதிஅரசு ஓர் குழுவை ஏற்படுத்திஉலகின் பல பாகங்களில்உள்ள இறைச்சிநிறுவனகளின் நிலை பற்றிஆய்வு செய்து அதன்முடிவுகளை வெளியிட்டது.
அவை சுருக்கமாகஉங்கள் பார்வைக்கு
ü இஸ்லாமியநாடுகளுக்குஇறைச்சி ஏற்றுமதிசெய்யும்நிறுவனங்களில்(ஹலாலு சாதிக்)பெரும்பாலும்காதியானிகள்நிறுவகிக்கின்றனர்.அவர்கள்இஸ்லாமியசட்டங்களை பின்பற்றுவதில்லை.எனவே இவைஹராம் .(இல்முல்இஸ்லாமி எனும்பத்திரிக்கை துறைதலைவர்)
ü இறைச்சியின் அட்டைமேல் ஹலால்என்னும் ஸ்டிக்கர்ஒட்டும் நபர்களுக்குஉன்மையில் அதுஹலால என்றதெளிவு இல்லை,மேலும் இறைச்சியைஅறுப்பவன் எந்தமதம் அல்லதுகொள்கையைசார்ந்தவன் என்பதுதெளிவாகவில்லை. (அஹ்மது பின்சாலிஹ் மஹாயிரி)
ü சரியாக இஸ்லாமியசட்டங்கள் பின்பற்றப்படுகிறதா? எனகவன்னிக்காதமேலாளர்கள்நிறந்துள்ளனர்.
ü பிராணிகள்மின்சாரம் மூலம்கால்பகுதியிலிருந்துகொல்லப்படுகின்றன. பின்பே கழுத்தின்நரம்புகள்துண்டிக்கப்படுகிறன்.
ü கருவிக்குள்உயிருடன் செல்லும்பிராணிகள்தண்ணீரில் மூழ்கவைக்கப்பட்டுமின்சாரம் பாய்ச்சப்பட்டு இறந்தநிலையில்வெளியேற்றப்படுகின்றன.
(லஜ்னத்துத் தாயிமத்துலில்புஹூஸி அல் அலமிய்யத்து வல்இஃப்தா)
மேற்கூறியமுறைகள் அல்லாமல்இன்னும் பலவழிகளில்பிராணிகள் மார்க்கச்சட்டத்தினைபின்பற்றாமல்கொல்லப்படுகின்றன்.
நான்குஇமாம்களின்கருத்தின்படிஇவைகள்அனைத்தும் ஹராம்ஆகும்.
(قضايا فقهية معاصرة)
F தம் நாட்டிலேயேஇறைச்சிநிறுவனங்கள்தோற்றுவிக்கப்படவேண்டும்
F முஸ்லிம்களைஇதற்காகஊக்குவிக்கவேண்டும்
F முஸ்லிம்நிறுவனங்களில்மட்டுமேஇறைச்சியை வாங்கவேண்டும்.
F முடிந்தவரை அந்நியநிறுவனங்களைபுறக்கணிக்கவேண்டும்.
(قضايا فقهية معاصرة)
நவீன மின்சாரகருவிகள்மூலம்பிராணிகளைஅறுக்கலாமா???
பிஸ்மிசொல்பவரும்அறுப்பவரும்ஒன்றாக இருக்கவேண்டும்.
) ஃபதாவாஹிந்தியா(
இதை அறுக்கும்கருவியோடுஒப்பிட்டால் பிஸ்மிசொல்பவர் வேறுஅறுக்கும் கருவிவேறு என்று பிரிந்துவிடுவதால் கூடாது.
அறுப்பவர்பிஸ்மில்லாஹ்சொல்வது அல்லதுநிய்யத் வைப்பதுஅவசியமாகும். இதுதவறுவதால் இந்தவகையில் அறுப்பதுகூடாது.
பட்டனை தட்டுபவரேஅறுப்பவர் என்றுசொல்லலாமே…?
அவர் ஒருமுறை மட்டுமேபிஸ்மில்லாஹ்சொல்லி பட்டனைதட்டுவார் ஆனால்அதன் மூலம் பலபிராணிகள்அறுக்கப்படும்.ஒவ்வொருபிராணிக்கும்தனித்தனியாகபிஸ்மில்லாஹ்சொல்லவேண்டும்என்ற சட்டம்மீறப்படுகிறது.
மேலும் அறுக்கும்கருவி நமது கையில்இருத்தல் வேண்டும்,ஆனால் கருவிவிஷயத்தில் நாம்அருகில் இருத்தலேபோதுமாகிறது. இதுகூடாது.
இமாம் கஸானிகூறுகிறார்கள்:
வேட்டைபிராணி அனுப்புவதுபோல்தானே கருவி ?
வேட்டை பிராணிஅனுப்புவது நிர்பந்தநிலை, ஆனால்கருவிபயன்படுத்துவது நம்சுய விருப்பநிலையாகும்.
கருவிகள் வேறுவேட்டை பிராணிவேறு.
மேலும் அறுப்பதால்இரத்தம் வழிந்து ஓடவேண்டும் என்பதும்ஷர்த்தாகும் ஆனால்சில கருவிகள்இரத்தத்தைவெளியாக்குவதில்லை.
கீழ் உள்ளநிபந்தனைகல்நிகழ்ந்திருந்தால் கருவியில் அறுத்தல்கூடும்:
1, அந்த கருவியில்பிராணியைவைக்கும் போது அதுஉயிருடன் இருக்கவேண்டும்.
2, பிஸ்மில்லாஹ்சொல்லும் போதுஎந்த பிராணியைஅந்த கருவிவெட்டுகிறதோ அந்தபிராணி மட்டுமேஹலால் ஆகும்.
3, அந்த பிராணியைபிடித்து இருப்பவர்முஸ்லிமாகஇருத்தல் வேண்டும்.சாதாரணமாக நாம்அறுக்கும் போதுஇந்த நிபந்தனைஇல்லை.
எனவே கருவிகள்மூலம் பிராணியைஅறுப்பது கூடாது
{اردو) ( جديد فقهي مسائل}
மின்சாரம் மூலம்பிராணியைபலியிடலாமா????
மின்சாரம் மூலம்பிராணியை பலியிடும்போது இரத்தம் உரைந்துவிடுவதற்கோ அல்லது அந்தபிராணி இறந்துவிடுவதற்கோவாய்ப்புள்ளது. அதனால்இந்த முறை மக்ரூஹ் ஆகும்.
என்றாலும் ,
மின்சாரம்பாய்ச்சியதற்க்குப் பின்பும்அந்த பிராணி உயிருடன்இருந்தால் அப்போதுஅதனை முறைப்படிஅறுத்தால் அது ஹலால்ஆகும். ஆனால் அந்தபிராணி நன்கு திடமாகஇருக்க வேண்டும். அதுமின்சாரம் பாய்ச்சியதால்மரணிக்கும் இறுதிநிலையை அடைந்துவிட்டால் கூடாது.
நாம் அறுக்க வேண்டியமூன்று நரம்புகளில் இரத்தஓட்டம் சீராக இருந்தால்அப்போது அதை அறுப்பதுகூடும்.
நெருப்பில் விழுந்தபிராணியை மீட்டபின்புஅதில் உயிர் இருந்து அதன்நரம்புகள் முறைப்படிஅறுக்கப்பட்டு இரத்தம்ஓடினால் அதைபயன்படுத்துவது கூடும்.
{اردو ( جديد فقهي مسائل}
Comments
Popular posts from this blog
முயற்சி
READ MORE
Theme images by Michael Elkan
SYED BUHARI QUDSI ISLAHIVISIT PROFILE
Archive
Report Abuse