ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Monday, 30 March 2020

தீவிர நோய்ப் பரவலின்போது

தீவிர நோய்ப் பரவலின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய தனிமையிருப்பு.

- மௌலவி.  சாதிகுல்அமீன் சிராஜி  மலேஷியா
==================================

வழிகாட்டும் அமவாஸ் கொள்ளைநோய்

=================================

அமவாஸ் என்பது இன்றைய ஃபாலஸ்தீனில் ஜெரூசலேமுக்கும் ரமல்லாவுக்கும் இடையே ஜெரூசலேமிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலிருந்த ஒரு சிற்றூர். 1967ஆம் ஆண்டில் நடந்த யூத ஆக்கிரமிப்பு அக்கிரமத்தால் அவ்வூர் மக்கள் துரத்தப்பட்டு வீடுகள் தகர்க்கப்பட்டன. 
இன்று இந்தப் பெயரில் அப்படியொரு சிற்றூர் இல்லை.

பின்வரும் தகவல்கள், பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களின் அல்பிதாயா வந்நிஹாயா எனும் வரலாற்று நூலில் இடம்பெற்றவையாகும்:

இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹிஜ்ரீ 18ஆம் ஆண்டில் (நிர்வாகச் சீரமைப்புக்காக இரண்டாவது முறை) கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) புறப்பட்டார்கள். அவர்களுடன் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளில் முக்கியமான நபித்தோழர்கள் இருந்தனர். அந்தக் குழு ‘சர்ஃக்’ எனுமிடத்தை அடைந்தது. (இது இன்றைய தபூக் நகருக்கு அப்பால் ஜோர்டான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.)

அந்த இடத்தில் உமர் (ரலி) அவர்களின் குழு தங்கியிருந்தபோது சிரியாவின் இராணுவத் தளபதிகள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), யஸீத் பின் அபீசுஃப்யான் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகியோர் அங்கு வந்து கலீஃபா உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து, சிரியாவில் கொள்ளைநோய் (தாஊன்) பரவியிருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
உடனே கலீஃபா உமர் (ரலி) அவர்கள் (சிரியாவுக்குப் போகலாமா, வேண்டாம என்று) தம்முடன் வந்திருந்த நபித்தோழர்களிடம் ஆலோசனை கலந்தார்கள். 

ஆனால், அவர்களோ இருவேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.
அவர்களில் சிலர், ‘’கலீஃபா அவர்களே! நீங்கள் முக்கியமான பணி நிமித்தம் புறப்பட்டு வந்துள்ளீர்கள்; அதை முடிக்காமல் நீங்கள் (மதீனா) திரும்ப வேண்டாம்’’ என்று அலோசனை வழங்கினர்.

வேறுசிலர், ‘’கலீஃபா அவர்களே! இந்தக் கொள்ளைநோய் இருக்கும் பகுதிக்கு பல்வேறு நபித்தோழர்களை நீங்கள் அழைத்துச் செல்வது உசிதமல்ல என்று நாங்கள் கருதுகிறோம்’’ என்றனர்.

இரண்டு கருத்துகளையும் பரிசீலித்த கலீஃபா உமர் (ரலி) அவர்கள், இறுதியில் (சிரியாவுக்குச் செல்லாமல்) மதீனா திரும்புவதெனத் தீர்மானித்து, மறுநாள் காலையில் மதீனாவுக்குப் புறப்படும்படி மக்களுக்கு உத்தரவிட்டார்கள்.

அப்போது அபூஉபைதா (ரலி) அவர்கள், ‘’அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?’’ என்று கேட்க, உமர் (ரலி) அவர்கள், ‘’ஆம்; நாங்கள் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம்’’ என்று பதிலளித்தார்கள்.

அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அங்கு) வந்து (நடந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டு), ‘’இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்த ஊருக்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து தப்புவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன்’’ என்றார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் (தமது முடிவை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப அமையச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு (மதீனா) திரும்பினார்கள். 

(ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 4461)

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அமவாஸ் கொள்ளைநோய் பீடித்த ஆண்டு நான் தளபதி அபூஉபைதா (ரலி) அவர்களுடன் சிரியாவில் இருந்தேன். அந்த நோயின் தாக்கம் வீரியமானபோது இந்தத் தகவல் கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது உமர் (ரலி) அவர்கள் தளபதி அபூஉபைதா (ரலி) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.

அந்தக் கடிதத்தில், ‘’உங்கள்மீது சலாம் உண்டாகட்டுமாக! எனக்குத் தற்போது ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. அது குறித்து உங்களிடம் நான் நேருக்குநேர் பேச வேண்டியுள்ளது. இந்தக் கடிதத்தைப் படித்து முடித்தவுடன் நீங்கள் என்னிடம் புறப்பட்டு வரவேண்டும் என அறுதியிட்டுக் கூறுகிறேன்’’ என எழுதியிருந்தார்கள்.

அந்தக் கடிதம் கிடைத்ததும் அதைப் படித்த அபூஉபைதா (ரலி) அவர்கள், இந்த நோய்க்குப் பலியாகாமல் தம்மை சிரியாவிலிருந்து வெளியேற்ற கலீஃபா உமர் (ரலி) அவர்கள் நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, ‘’கலீஃபா உமர் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக’’ என்று கூறியவர்களாக, அன்னாருக்குப் பதில் கடிதம் ஒன்றைப் பின்வருமாறு எழுதினார்கள்:

கலீஃபா அவர்களே! உங்களுக்கு என்னிடம் என்ன தேவை ஏற்பட்டிருக்கும் என்று நான் புரிந்துகொண்டேன். தற்போது நான் முஸ்லிம்களின் படையில் பணிபுரிந்துவருகிறேன். மனதளவில் அவர்களை என்னால் வெறுத்தொதுக்க இயலாது. என் விஷயத்திலும் அந்த முஸ்லிம்கள் விஷயத்திலும் அல்லாஹ் தன் முடிவை எடுக்காத வரையில் அவர்களைவிட்டுப் பிரிய நான் விரும்பவில்லை. எனவே, உங்களின் அறுதியான முடிவிலிருந்து எனக்கு விலக்களித்துவிடுங்கள். என்னை என் படையினரோடு விட்டுவிடுங்கள்.

இந்தக் கடிதத்தைப் படித்த உமர் (ரலி) அவர்கள் கண்ணீர் வடித்தார்கள். அதைப் பார்த்த மக்கள், ‘’என்ன, அபூஉபைதா (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்களா?’’ எனக் கேட்டனர். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘’ஆம்; அவர் இறந்துவிடுவார்போல்தான் தெரிகிறது’’ என்றார்கள்.

பின்னர் அபூஉபைதா (ரலி) அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் ஒரு கடிதம் எழுதினார்கள். அதில், ‘’அபூஉபைதா (ரலி) அவர்களே! நீங்கள் சுற்றுச்சூழல் மாசுபட்ட பகுதியில் மக்களைத் தங்கவைத்துள்ளீர்கள்; உடனே, அவர்களை அங்கிருந்து அகற்றி, சூழல் மாசுபடாத (மக்கள் நடமாட்டம் குறைந்த) உயரமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லுங்கள்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அந்தக் கொள்ளைநோயின் தாக்கம் தீவிரமானபோது (ஷாம் நாட்டின்) ஆளுநராக இருந்த தளபதி) அபூஉபைதா (ரலி) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றினார்கள். 

அப்போது, 

‘’மக்களே! இந்தக் கொள்ளைநோய், உங்கள் இறைவனின் அருளு(க்குக் காரணமானது)ம் உங்கள் நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையும் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த நன்மக்களின் இறப்பு(க்கான காரணமு)ம் ஆகும்’’ என்று கூறிவிட்டு, 

‘’அபூஉபைதாவாகிய நான் (வீரமரணத்தின் நன்மையைத் தரும்) இந்த நோயில் எனது பங்கை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன் (இவ்வூரிலிருந்து நான் வெளியேறமாட்டேன்)’’ எனத் தெரிவித்தார்கள்.

பின்னர் அந்த நோயால் பீடிக்கப்பட்ட அபூஉபைதா (ரலி) அவர்கள் இறந்தார்கள். அவர்மீது அல்லாஹ் தனதருளைப் பொழிவானாக.
பிறகு மக்களுக்கு முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள். 

அவர்களும் பின்னர் மக்களிடையே நின்று உரையாற்றினார்கள். அப்போது, ‘’மக்களே! இந்தக் கொள்ளைநோய், உங்கள் இறைவனின் அருளு(க்குக் காரணமானது)ம் உங்கள் நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையும் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த நன்மக்களின் இறப்பு(க்கான காரணமு)ம் ஆகும்’’ என்று கூறிவிட்டு, ‘’முஆதாகிய நான் (வீரமரணத்தின் நன்மையைத் தரும்) இந்த நோயில் முஆதின் குடும்பத்தாருக்குரிய பங்கை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன் (இவ்வூரிலிருந்து நான் வெளியேறமாட்டேன்)’’ எனத் தெரிவித்தார்கள்.

இதையடுத்து முஆத் (ரலி) அவர்களின் புதல்வர் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் அந்தக் கொள்ளைநோயில் பீடிக்கப்பட்டு இறந்தார்கள். பின்னர் முஆத் (ரலி) அவர்களும் அந்த நோய்க்குப் பலியானார்கள்.

அவர்களுக்குப்பின் மக்களுக்கு அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள். அன்னார் மக்களிடையே நின்று உரையாற்றினார்கள். அப்போது, ‘’மக்களே! இந்த நோய் பரவும்போது நெருப்பைப் போன்று தீவிரமாகப் பரவும். எனவே, இங்கிருந்து விலகி  மலை(ப்பகுதி)களுக்கு (தனித்தனியாக)ச் சென்றுவிடுங்கள்’’ என்று கூறினார்கள்.

அப்போது ‘அபூவாஸிலா’ அல்லது ‘அபூவாயிலா’ (ரலி) அவர்கள், ‘’நீர் உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறீர். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழமையில் இருந்துள்ளேன் (இப்படி அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை). நீர் எனது இந்தக் கழுதையைவிட மோசமானவர்’’ என்று விமர்சித்தார்கள்.

அதற்கு அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், ‘’அல்லாஹ்வின் மீதாணையாக! உமது விமர்சனத்திற்கு நான் பதிலளிக்கப்போவதில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இங்கு தங்கியிருக்கவும் மாட்டேன்’’ என்று கூறிவிட்டுப் பின்னர் (அந்தப் பகுதியிலிருந்து) வெளியேறினார்கள். 

அவ்வாறே மக்களும் வெளியேறி, தனித்தனியாகச் சென்றுவிட்டனர். அதன் பின்னர் அவர்களைவிட்டு அல்லாஹ் அந்தக் கொள்ளைநோயை அகற்றினான்.
(சமூக ஒன்றுகூடல் நிகழாமல் மக்களைத் தனிமைப்படுத்தினால் இந்தக் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்ற) அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களின் யோசனை கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு எட்டியது. 

அப்போது கலீஃபா உமர் (ரலி) அவர்கள் அதை வெறுக்கவில்லை. (அது அவர்களுக்குப் பிடித்திருந்தது.)

 (முஸ்னது அஹ்மத் தமிழாக்கம், ஹதீஸ் - 1605)

இந்தக் கொள்ளைநோயில் இறந்தவர்கள் 25,000 பேர் என்று இமாம் நவவீ (ரஹ்) அவர்களின் அல்மின்ஹாஜ் (ஷர்ஹு ஸஹீஹி முஸ்லிம்) நூலில் காணப்படுகிறது.

 மற்றொரு கூற்றில், அன்றைக்கு சிரியாவிலிருந்த படைவீரர்களின் எண்ணிக்கை 36,000. அவர்களில் கொள்ளைநோய்க்குப் பலியானோர் 30,000 பேர். அதன் பின்னர் சிரியாவில் 6000 படைவீரர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர் என்று சொல்லப்படுகிறது.

முக்கியக் குறிப்பு

பள்ளிவாசல்களில் ஜமாஅத் தொழுகைகள், ஜுமுஆ தொழுகை போன்றவை நடைபெறாமல் இருப்பது இப்போது கவலைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இது, உணர்வு பூர்வமாகப் பார்த்தால் சரிதான். ஆயினும் அறிவு ரீதியாகப் பார்த்தால் இது குறித்துக் கவலை கொள்வதற்குச் சட்ட ரீதியாக எதுவுமில்லை. இதைப் பின்வரும் தகவல்களிலிருந்து அவதானிக்கலாம்: 

- மேற்கண்ட அமவாஸ் கொள்ளைநோய் குறித்த வரலாற்றுக் குறிப்பில், சிரியாவின் மூன்றாம் ஆளுநராகப் பொறுப்பேற்ற அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களின் கட்டளைப்படி மலைப்பாங்கான பகுதிகளுக்குச் சென்று, தம்மை சமூகத் தனிமைக்கு உட்படுத்திக்கொண்ட நபித்தோழர்களும் மற்ற முஸ்லிம்களும் குறிப்பிட்ட சில மாதங்கள்வரை கடமையான தம்முடைய தொழுகைகளைத் தனித்தனியாகவே நிறைவேற்றியிருக்க வேண்டும் என்று தெரியவருகிறது.

- இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

فَإِنْ كَانَ خَائِفًا إذَا خَرَجَ إلَى الْجُمُعَةِ أَنْ يَحْبِسَهُ السُّلْطَانُ بِغَيْرِ حَقٍّ كَانَ لَهُ التَّخَلُّفُ عَنْ الْجُمُعَةِ...، وَإِنْ كَانَ تَغَيُّبُهُ عَنْ غَرِيمٍ لِعُسْرَةٍ وَسِعَهُ التَّخَلُّفُ عَنْ الْجُمُعَةِ. (الإمام الشافعي – الأم)

ஜுமுஆ தொழுகைக்குச் செல்ல வேண்டிய ஒருவர், தாம் வெளியே சென்றால் தம்மை அநியாயமாக அரசர் கைது செய்து சிறையில் அடைப்பார் என்று அஞ்சினால், அவர் ஜுமுஆ தொழுகைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.
அவ்வாறே ஒருவர் பொருளாதார நெருக்கடி காரணமாகக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடன் கொடுத்தவருக்குப் பயந்து தலைமறைவாக இருந்தால், அவரும் ஜுமுஆ தொழுகைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். (நூல்: அல்உம்மு)

- இமாம் அல்முர்தாவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

وَيُعْذَرُ فِي تَرْكِ الْجُمُعَةِ وَالْجَمَاعَةِ الْمَرِيضُ بِلَا نِزَاعٍ، وَيُعْذَرُ أَيْضًا فِي تَرْكِهِمَا لِخَوْفِ حُدُوثِ الْمَرَضِ. (المرداوي - الإنصاف في معرفة الراجح من الخلاف)

நோய்வாய்ப்பட்டுள்ள ஒருவர் ஜமாஅத் தொழுகைகளையும் ஜுமுஆ தொழுகையையும் கைவிடுவதற்கு நியாயம் உண்டு. இதில் கருத்து வேறுபாடு எதுவுமில்லை. அவ்வாறே,  நோய் உருவாகலாம் எனும் அச்சம் நிலவும் போதும் அவற்றைக் கைவிடுவதற்கு நியாயம் உண்டு. (நூல்: அல்இன்ஸாஃப் ஃபீ மஅரிஃபத்திர் ராஜிஹி மினல் கிலாஃப்)

- இமாம் ஸகரிய்யா அல்அன்ஸாரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

وَقَدْ نَقَلَ الْقَاضِي عِيَاضٌ عَن الْعُلَمَاءِ أَنَّ الْمَجْذُومَ وَالْأَبْرَصَ يُمْنَعَانِ مِنْ الْمَسْجِدِ وَمِنْ صَلَاةِ الْجُمُعَةِ، وَمِنْ اخْتِلَاطِهِمَا بِالنَّاسِ. (زكريا الأنصاري - أسنى المطالب)

கருங்குஷ்டம் பீடித்தவரும் வெண்குஷ்டம் பீடித்தவரும் பள்ளிவாசலுக்கு (ஜமாஅத் தொழுகைகளுக்கு) வரக் கூடாது என்றும் ஜுமுஆ தொழுகைக்கு வரக் கூடாது என்றும் மக்களோடு சேர்ந்திருக்கக் கூடாது என்றும் தடுக்கப்படுவார்கள் என அறிஞர்கள் கூறுவதாக காழீ இயாள் (ரஹ்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். (நூல்: அஸ்னல் மத்தாலிப்)

இதற்கான காரணத்தைக் குறிப்பிடவந்த அறிஞர் இப்னு ஹஜர் அல்ஹைத்தமீ (ரஹ்) அவர்கள்,

سَبَبَ الْمَنْعِ فِي نَحْوِ الْمَجْذُومِ خَشْيَةَ ضَرَرِهِ، وَحِينَئِذٍ فَيَكُونُ الْمَنْعُ وَاجِبًا فِيهِ. (ابن حجر الهيتمي - فتاوى الفقهية الكبرى)

‘’அந்த நோய் அடுத்தவரைப் பாதிக்கலாம் எனும் அச்சமே இதற்குக் காரணமாகும். எனவே, இதுபோன்ற தருணத்தில் அந்த நோயாளியைப் பள்ளிவாசலுக்கு (ஜமாஅத் தொழுகைகள், ஜுமுஆ தொழுகை போன்றவற்றுக்காக) வர வேண்டாம் எனத் தடுப்பது அவசியம் (வாஜிப்) ஆகும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: ஃபதாவல் ஃபிக்ஹிய்யா அல்குப்ரா)

நன்றி: அஷ்ரஃப் இஸ்லாம்.

Sunday, 29 March 2020

பசித்திரு....!தனித்திரு..!விழித்திரு

*இஷ்கேஅவ்லியா=63*
)%(=)%(=)%(=)%(=)%(
*தனிமை*
*அல்லாஹ்* *நமக்குதந்த* 
*பேரருள்..!*
! *! *! *! *! *! *! *! *! *! *!

சூஃபியாக்கள்
சொல்வார்கள்
பசித்திரு....!
தனித்திரு..!
விழித்திரு..!
என்பார்கள்.

"நபி ஆதம் ஹவ்வா
அலைஹிஸ்ஸலாம்
இருவரையும்
அல்லாஹ் பூமியில்
தனித்து விட்டான்... 

அதன் பலன்
இப் பூவுலகில்
மனித சமுதாயம்
தோன்றியது..!"

"அண்ணல் நபி
ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்
அவர்கள்
ஹிரா குகையில்
40 நாட்கள் தனித்து
இருந்தார்கள்.. 

அதன் பலன்
அகிலம் போற்றும்
அல் குர்ஆன்
கிடைத்தது..!"

"நபி ஜக்கரிய்யா
அலைஹிஸ்ஸலாம்
அவர்களை
மக்களை விட்டும்
மூன்று நாட்கள்
தனித்து இருந்து
சைகையால்
பேசும்படி சொன்னான்.. 

அதன் பலன்
அல்லாஹ்வே
பெயர் வைத்து
நபி யஹ்யா
அலைஹிஸ்ஸலாம்
குழந்தையை
கொடுத்தான்.!"

"அன்னை மர்யம்
அலைஹிஸ்ஸலாம்
அவர்களை
ஊர் மக்களை
விட்டு ஒதுங்கி காட்டில் இருக்க
சொன்னான்..

அதன் பலன்
நபி ஈஸா
அலைஹிஸ்ஸலாம்
அவர்களைக்
கொடுத்தான்.!"

"அன்னை  ஹாஜரா
இஸ்மாயில் 
அலைஹிஸ்ஸலாம்
இவர்களை
பாலைவனத்தில்
தனித்து விட்டு
வரும்படி
நபி இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம்
அவர்களுக்கு
கட்டளையிட்டான்..

அதன் பலன்
பரக்கத் நிறைந்த
ஜம்ஜம் தண்ணீர்
கிடைத்து கொண்டு
இருக்கிறது..!"

"நபி யூனுஸ்
அலைஹிஸ்ஸலாம்
அவர்களை
மீன் வயிற்றில்
தனித்து விட்டான்...

அதன் பலன்
லாஇலாஹ இல்லா
அன்த சுப்ஹானக்க
இன்னீ குன்த்து
மினல் ளாலிமீன்
என்ற அழகான திக்ரு
கிடைத்தது..!"

இதை ஓதி
துஆ செய்தால் துஆ கபூல் ஆகும்
என நபியவர்கள்
சொன்னார்கள்.
(திர்மிதி=3427) 

கொரனாவால்
அல்லாஹ் கொடுத்த
இந்தத் தனிமையை
வீணாக கழிக்காமல்
இறை நினைவிலும்
இபாதத்திலும் 
கழித்தால்..

இன்ஷா அல்லாஹ் 
நம் வாழ்விலும்
ஓர் அதிசயம்
நிகழும்..!
by
மவ்லவி
U.அபூதாஹிர்
ஃபைஜி பாகவி
அல் மதீனா பள்ளிவாசல்
கும்பகோணம்
9443061063

Saturday, 28 March 2020

கியாமத் நாளின் அடையாளம் :72


கியாமத் நாள் சமீபத்தில் நடக்கும் (சிறிய) அடையாளங்கள் 72

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் யுக முடிவு (கியாமத்) நாளின் சமீபத்தில் 72 அடையாளங்கள் வரும்... அவை ....

1.   தொழுகையை மரணிக்கச் செய்வார்கள். அதாவது      தொழுகைக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். அதை முறைப்படி நிறைவேற்ற மாட்டார்கள்.

2. அமானித பொருளை வீணாக்கி விடுவார்கள். அதாவது அமானிதப் பொருள்களை கொடுத்து வைத்திருந்தால் அதில் மோசடி செய்வார்கள்.

3. வட்டியை சாப்பிடுவார்கள்.

4. பொய்யை (ஹலாலாக) ஆகுமாக்கி விடுவார்கள். அதாவது ஒரு கலையாக சாமர்த்தியமாக நினைப்பார்கள்.

5. கட்டிடங்களை உயர உயர கட்டுவார்கள்.

6. உலக ஆதாயங்களுக்காக மார்க்கத்தை விற்பார்கள்.

7. இலேசான விஷயத்திற்கெல்லாம் கொலை செய்வார்கள்.

8. உறவினர்களை துண்டித்து வாழ்வார்கள்.

9. தீர்ப்புகள் நியாயமானதாக இருக்காது.

10. பொய் உண்மையாகும்.

11. ஆண்கள் பட்டாடை அணிவார்கள்.

12. அநீதி பெருகிவிடும்.

13. விவாகரத்து (தலாக்) அதிகமாகிவிடும்.

14. திடீர் மரணம் அதிகமாகிவிடும்.

15. மோசடிக் காரர்களை மக்கள் நம்பிக்கையாளர்கள் என நினைப்பார்கள்.

16. நம்பிக்கையாளர்களை மக்கள் மோசடிக்காரர்கள் என நினைப்பார்கள்.

17. பொய்யனை மக்கள் மெய்யனாக ஆக்குவார்கள்.

18. மெய்யனை மக்கள் பொய்யனாக ஆக்குவார்கள்.

19. அவதூர்கள் (வீண்பழிகள் சுமத்துவது) பரவலாகிவிடும்.

20. மழை பொழியாது.

21. குழந்தைகள் அதிகம் பெற்றெடுப்பதை வெறுப்பார்கள்.

22. தகுதி குறைந்தவர்கள் உயர்ரக வாழ்க்கை வாழ்வார்கள்.

23. கண்ணியத்திற்குரியவர்கள் வசதி வாய்ப்பின்றி வாழ்வார்கள்.

24. தலைவர்களும், மந்திரிகளும், பொய்யர்களாக 
இருப்பார்கள்.

25. நம்பிக்கைக்கு உரியவர்கள் கூட மோசடி செய்வார்கள்.

26. பொறுமையாளர்கள் அநீதம் புரிவார்கள்.

27. குர்ஆனை ஓதிக்கொண்டே பாவங்கள் செய்வார்கள்.

28. மக்கள் மிருகங்களின் தோலினாலான ஆடையை அணிவார்கள்.

29. இவ்விதம் உயர்ரக ஆடைகளை அணிந்தாலும் அவர்களின் உள்ளங்கள் செத்த பிணங்களைவிட  மோசமானதாக இருக்கும்.

30. வாழ்க்கை விஷத்தை விட கசப்பான தாகவே இருக்கும்.

31. தங்க பயன்பாட்டில் இருக்கும்.

32. வெள்ளி (பயன்படுத்துதல்) குறைந்து விடும்.

33. பாவமான செயல்கள் அதிகமாகிவிடும்.

34. பாதுகாப்பு குறைந்துவிடும்.

35. குர்ஆன் பிரதிகள் அலங்கரிக்கப்படும்.

36. பள்ளிவாசல்கள் அலங்கரிக்கப்படும்.

37. மினராக்கள் உயர உயரமாக கட்டுவார்கள்.

38. மனித உள்ளங்கள் மாசு படிந்திருக்கும்.

39. மதுபானங்கள் அருந்தப்படும்.

40. குற்றங்களுக்குரிய ஷரீஅத் தண்டனைகள் நிறைவேற்றப்படாது.

41. அடிமைப்பெண் (தனக்கு கட்டளையிடும்) எஜமானியைப் பெற்றெடுப்பாள். (அதாவது பெண்மக்கள் தனது தாயை வேலைக்காரியைப் போன்று வழிநடத்துவார்கள்.)

42. செருப்பில்லாமல் நடப்பவர்கள், ஆடையின்றி 
இருப்பவர்கள் கூட தலைவர்களாக ஆகிவிடுவார்கள்.

43. கணவருடன் மனைவி வியாபாரத்தில் ஈடுபடுவாள்.

44. ஆண்கள் பெண்களைப் போன்று நடிப்பார்கள்.

45. பெண்கள் ஆண்களைப் போன்று நடிப்பார்கள்.

46. அல்லாஹ் அல்லாத உலக வஸ்துக்களின் மீது சத்தியம் செய்வார்கள்.

47. முஸ்லிம் பொய் சாட்சி கூறத் தயாராகி விடுவான்.

48. அறிமுகம் உள்ளவர்களுக்கு மட்டும் ஸலாம் கூறுவார்கள்.

49. தீனுக்காக அல்லாமல் உலக ஆதாயத்திற்காக கல்வி கற்பார்கள்.

50. மறுமையுடைய செயலைச் செய்து உலகத்தை சம்பாதிப்பார்கள்..

51. கனிமத் பொருட்களை தங்கள் சொந்த பொருள்களைப் போன்று பயன்படுத்துவார்கள்.

52. அமானிதப் பொருள்களை போரில் கிடைத்த (கனிமத்) பொருளைப் போன்று எடுத்துக் கொள்வார்கள்.

53. ஜகாத் கொடுப்பதை அபராதமாக நினைப்பார்கள்.

54. கூட்டத்தில் இழிவுக்குரியவன் அவர்களுக்குத் தலைவராகி விடுவான்.

55. மகன் தந்தையை நோவினை செய்வான்.

56. தனது தாயை வெறுத்து விடுவான்.

57. தனது நண்பனுக்கு கேடு செய்வான்.

58. கணவன் மனைவிக்கு கட்டுப்பட்டு நடப்பான்.

59. தீயவர்களின் சப்தம் பள்ளிவாசல்களில் அதிகமாகிவிடும்.

60. பாட்டுபாடும் பெண்கள் கண்ணியம் செய்யப்படுவார்கள்.

61. இசைக் கருவிகள் அதிகமாகிவிடும்.

62. நடக்கும் பாதைகளில் மதுபானங்கள் அருந்துவார்கள்.

63. பாவம் செய்வதை பெருமையாக கருதுவார்கள்.

64. மக்கள் நீதத்தை லஞ்சம் கொடுத்து மாற்றுவார்கள்.

65. காவலர்கள் அதிகமாக இருப்பார்கள்.

66. இசையைப் போன்று குர்ஆனை ஓதுவார்கள்.

67. விலங்கினங்களின் தோலைப் பயன்படுத்துவார்கள்.

68. பிற்காலத்தவர் முற்காலத்தவர்களை திட்டுவார்கள், சாபமிடுவார்கள், பின்பு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இத்தகைய பாவங்கள் ஏற்படும்போது எதிர் பாருங்கள்.

69. சிகப்பு சூறாவளி காற்று அல்லாஹ்வின் புறத்திலிருந்து வீசும்.

70. பூகம்பம் ஏற்படும்.

71. வானத்திலிருந்து கல்மாரி பொழியும்.

72. மனிதர்களின் உருவங்களை உருமாற்றம் செய்யப்படும் மற்றும் பல அடையாளங்கள் நிகழும்.

Thursday, 26 March 2020

கொரோனா தரும் படிப்பினை

அறிவுள்ளவர்களுக்கு இதில் பாடம் இருக்கிறது!

அன்பு நண்பர்களே!

கொரோனா நச்சுயிரியின் தாக்குதல் குறித்து எகிப்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து..

செய்தியில் யதார்த்தம் தொனித்ததால் பகிர்கிறேன்

Message from an ex-MP from Egypt
DONT CURSE THE CORONAVIRUS 

"கொரோனா கிருமியை சபிக்காதீர்கள்!". எகிப்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் செய்தி.:-

It's brought back humanity
Brought back people to their Creator and to their morals 

இது மக்களை படைத்தவனின் பக்கமும் ஒழுக்க மாண்புகளின் பக்கமும் இழுத்து வந்துள்ளது.

It closed down bars, night clubs, brothels, casinos 

அது மதுபான விடுதி, இரவு விடுதி, விபச்சார விடுதி, சூதாட்ட விடுதிகளை இழுத்து மூட வைத்துள்ளது.

It brought down interest rates.

அது வட்டி விகிதத்தைக் குறைக்க வழி வகை செய்துள்ளது.

Brought families together. 

அது குடும்பங்களை ஒன்று சேர்த்துள்ளது.

Stopped lewd behaviour 

அது மோசமான நடத்தைகளைத் தடுத்துள்ளது.

It has stopped people eating dead and forbidden animals 

அது உண்ணத் தடைசெய்யப்ப்பட்ட மற்றும் இறந்துவிட்ட விலங்குகளைப் புசிக்க விடாமல் தடுத்துள்ளது.

So far it has moved one third of military expenditure to health care. 

இதுவரை மூன்றில் ஒரு பங்கு ராணுவ செலவுகளை மனித சுகாதாரத்திற்கான செலவின் பக்கம் திருப்பியுள்ளது.

Arab countries have banned shisha.

அதன் காரணமாக, ஷீஷா என்னும் புகைப் பழக்கத்தை அரபு நாடுகள் தடை செய்துள்ளன

Coronavirus is pushing people to make dua 

கொரோனா கிருமிகள் மக்களை துஆ செய்யும்( இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்திக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.

It undermines dictators and their powers 

இது சர்வாதிகாரிகளையும் அவர்களின் அதிகாரங்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது

Humans are now worshipping God rather than progress and technology 

முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்பம் தான் எல்லாம் என்று நினைத்த மனித குலத்திற்கு இல்லை இறைவனே சகலமும் என்றுணர்த்தி அவனைப் பணிந்து வணங்க வைத்துள்ளது.

It is forcing authorities to look at its prisons and prisoners 

சிறைகளையும் சிறைக் கைதிகளையும் செவ்வனே கவனிக்க அதிகாரிகளை அது கட்டாயப்படுத்தியுள்ளது.

It has taught humans how to sneeze, yawn and cough as was taught by our Prophet SAW over 1400 years ago. 

1400 வருடங்களுக்கு முன்பே இறை தூதர் முஹம்மதர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சொல்லப்பட்ட தும்மல், கொட்டாவி, இருமலை சுன்னத்தான முறையில் இன்று அனைவரையும் செய்ய வைத்துள்ளது.

Coronavirus is now making us stay at home, living simple lives and we make shukr to Allah swt for waking us up to reality and to giving us an opportunity to ask Him for His forgiveness and His help. 

கொரோனா நம்மை வீட்டில் குடும்பத்துடன் இருக்கவும் எளிமையான வாழ்வு வாழவும் இறைவனுக்கு நன்றி செலுத்தவும் கற்றுக் கொடுத்ததோடல்லாமல் படைத்தவனிடம் மன்னிப்புக்கும் உதவிக்கும் மன்றாட ஒரு சந்தர்ப்பமாகவும் அமைந்தது.

There is a great lesson in this for those who are wise. 

ஞானமுள்ளவர்களுக்கு இதில் ஒரு சிறந்த பாடம் இருக்கிறது.

கொள்ளை நோய் ஓர் வரலாற்று பார்வை*



   ✒🖋 *மௌலவி இப்ராஹீம் நிஜாமி மக்தூமீ MA சேலம்*
📚📚📚📚📚📚📚📚📚📚📚

 *ஹிஜ்ரி 17, 18 ஆகிய வருடங்களில் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி காலத்தில் ஷாம் தேசத்தின் ரம்லா என்ற மாகாணத்திலிருந்து பைத்துல் முகத்தஸ் வரை உள்ள எல்லா ஊர்களிலும் தாஊன்  கொள்ளைநோய் பரவியது.  அதில் சுமார் 25 ஆயிரம் பேர் வபாத்தானார்கள்.  அச்சமயத்தில் எல்லா மருத்துவர்களும் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர்களும் தங்களது இயலாமையை ஒப்புக் கொண்டார்கள். உடனடியாக  கலீபா உமர்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்ரு இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். இந்த சோதனையிலிருந்து விடுபடுவதற்கான வழியை முயற்சியுங்கள் என்று.  உடனே  அம்ரு இப்னு ஆஸ் அவர்கள் கூறினார்கள்  நான் பலமுறை யோசித்துப் பார்த்து நான் இந்த முடிவுக்கு வந்தேன்.  மக்கள் ஒருவரை ஒருவர் ஒன்று கூடுவதால் தான் இந்த நோய் பரவுகிறது. எனவே அரசாங்க உத்தரவிட்டு மக்களை அவரவர் வீடுகளிலேயே தங்கிவிட  உத்தரவிட்டேன்.  அதன் பின்  மூன்றே நாட்களில் இந்த கொள்ளை நோயின் ஆபத்து முடிவுக்கு வந்தது என்று எழுதினார்கள்*.


 இந்த நிகழ்வு உலகப் புகழ்பெற்ற தபகாத் இப்னு ஸஅது என்ற நூலில்  இடம்பெற்றுள்ளது.
 மேலும் அல்லாமா இப்னு கல்தூன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் தங்களது வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்கள்.



*சஹாபாக்கள் காலத்தில் ஆறு முறை இந்த  கொள்ளை நோய் ஏற்பட்டுள்ளது என்று ரியாளுஸ்ஸாலிஹீன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது.*

முதலாவதாக ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு இதற்கு தாஊனே  ஷீரவியா என்று பெயர்.

 இரண்டாவதாக ஹிஜ்ரி 17 ல் வந்தது. இதற்கு தாஊனே  அமாவாஸ் என்று பெயர்.


 மூன்றாவதாக ஹிஜ்ரி ஐம்பதில் கூபா நகரில் வந்தது. இச்சமயத்தில் முகீரா இப்னு ஷுஃபா ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் வபாத்தானார்கள்.

 நான்காவதாக அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் ஹிஜ்ரி 67 ஆம் ஆண்டு ஏற்பட்டது.
 இதற்கு தானே ஜாரிப் என்று பெயர்.

 இந்த கொள்ளை நோயில் *மூன்று நாட்களில் இரண்டு லட்சத்தி பத்தாயிரம் பேர் வபாத் ஆனார்கள்*


 ஐந்தாவதாக ஹிஜ்ரி 67 ஆம் ஆண்டு அப்துல் மலிக் இப்னு மர்வான் அவரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டது.
 இதற்கு தாஊனே ஃபதயாத்  என்று பெயர்.

 இந்த கொள்ளை நோயில் அதிகபட்சமாக வயதுக்கு வந்த பெண்கள் வபாத்தானார்கள்.


 ஆறாவதாக ஹிஜ்ரி 100 ஆம் ஆண்டு  அதீ இப்னு அர்தாத்  காலத்தில் ஏற்பட்டது.

*இந்த செய்திகளை ரியாளுஸ்ஸாலிஹீன் விரிவுரை ரவ்லத்துஸ்ஸாலிஹீன்  என்ற கிதாபில் வாசிக்க நேர்ந்ததை  பதிந்துள்ளேன்*
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

ஒரு ஊருல பெரிய வெள்ளம் வரப்போகுதுன்னு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது 
பலரும் பாதுக்காப்பான இடங்களை நோக்கி சென்றுவிட்டனர்.

ஒரே ஒருவன் மட்டும் நான் எங்கும் போகமாட்டேன், என்னை கடவுள் காப்பாற்றுவார் என்றிருந்தான்.

 கூறியது போலவே பெரிய வெள்ளம் வந்துவிட்டது. 
ஊரே வெள்ளக்காடா
 காட்சி அளிக்கிறது. இவன் வெள்ளத்தில் தத்தளித்து ஒரு மேட்டின் மீது ஏறி அமர்ந்திருக்கின்றான். 

அப்போது மீட்புக்குழு ஒன்று வருகிறது, யாராவது இருக்கின்றார்களா என்று பார்த்து, இவனை கவனித்து அழைக்கிறது. வா வந்து படகில் ஏறு என்று. 
அவனோ வர மறுக்கிறான், என்னை கடவுள் காப்பாற்றுவார் நான் வரவில்லை என்றுவிட்டான்.

இரண்டாவது படகு வருகிறது. அழைக்கிறார்கள், வரமறுக்கிறான். என்னை கடவுள் காப்பாற்றுவார் என்றுவிட்டான்.

மூன்றாவது படகும் வருகிறது, அப்போதும் ஏற மறுத்துவிட்டான், என்னை கடவுள் காப்பாற்றுவார் என்றுவிட்டான்.

நேரம் ஆக ஆக நீரின் அளவு அதிகரித்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிடுகிறான்.

இறந்தவன் மேலே சென்று கடவுளிடம்  
நீ என்னை காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். 
ஆனால் நீ என்னை ஏமாற்றிவிட்டாய் என்று வாதாடுகிறான்.

அதற்கு கடவுள் நான் தான் உன்னை மூன்று முறை படகில் வந்து அழைத்தேனே 
நீதான் வரமாட்டேன் என மறுத்துவிட்டாய் என்றாராம்.

இப்போது கொரானாவை பற்றியோ அதன் பாதிப்பைப்பற்றியோ , அதற்கான பாதுகாப்பைப்பற்றியோ பேசும்பொழுது, பலர் இப்படிதான்,
 அதுலாம் ஒன்னும் பண்ணவேணாம், எல்லாத்தையும் அல்லாஹ் பாத்துப்பான் என்று அசட்டைபதில் தருகிறார்கள்.

அப்படியே கொரானா வந்தாதான் என்ன, அது வந்துதான் நமக்கு மௌத்னா அதுக்கென்ன பண்ணமுடியும் என்று கூறுவதை கேட்கும் பொழுது என்ன கூறுவதென்றே தெரிவதில்லை. 

கொரானா வந்து மௌத் என்பது என்ன அவ்வளவு லேசா?
குளிபாட்டுதல் இல்லாமல், கஃபன் இடாமல், உறவுகளிடம் ஒப்படைக்காமல், அப்படியே ஆழக்குழியில் புதைக்கப்படுவது தான் வேண்டுமா?....

நம்முடைய பாதுகாப்பு எதில் உள்ளது என்பது நமக்கு தெரியாது, மறைவான விஷயங்களை அல்லாஹ் ஒருவனே அறிவான்.
நம்மாலான முயற்சிளை நாம் செய்யவேண்டும், அதற்குமேல் முடிவு படைத்தவன் கையில்.
பாதுகாப்பு நடவடிக்கை என்பது நாம் எடுக்கும் முயற்சி நம் ஆயுளை நீட்டிப்பதும், மரணத்தை தருவதும் அவனுடைய முடிவு.
எதையுமே செய்யாமல் மெத்தனமாக இருந்துகொண்டு எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான் என்பது சரியில்லை. 
அதை அவனும் விரும்புவதில்லை.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள், ஒட்டகத்தையும் கட்டி வையுங்கள் என்றுதான் நமக்கு போதிக்கப்பட்டிருக்கு. 

நமக்கு சாப்பாடு வேணும்ன்னு அவனிடம் கையேந்தி கேட்கிறோம், அல்லாஹ் அதற்கு உண்டான வழிகளை காட்டுவான், நாம்தான் அதை சரியாக பயன்படுத்தி பாடுபட்டு உழைத்து வருமானம் ஈட்டி அதில் அரிசி வாங்கி சமைத்தால் தான் சோறு வரும். 

 அல்லாஹ்விடம் எனக்கு சோறு கொடு என்று கேட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துகொண்டால்
தட்டில் உணவு பறந்து வரப்போவதில்லை,.

இன்னும் உணராமல் பலரும் இப்படிதான் கொரானாவா வந்தா வரட்டும் பாத்துகலாம் என்றுதான் இருக்கிறார்கள். ....

படித்ததில் பிடித்தது.

*அன்று,* 
*கூடி வாழ்ந்தால்* 
*கோடி நன்மை ....*.

*இன்று*, 
*கூடி வாழ்ந்தால்*  
*கொரோனாவுக்கே* *நன்மை* ...

*அன்று*, 
*ஒன்றுபட்டால்* 
*உண்டு வாழ்வு ..*.

*இன்று,* 
*ஒன்றுபட்டால்* 
*உண்டு சாவு...*

*அன்று,* 
*தொட்டால்* 
*பூ மலரும்...*

*இன்று*, 
*தொட்டால்*
*நோய் பரவும்*...

*அன்று,* 
*ஒண்ணாயிருக்கக்*
*கத்துக்கனும் .*..

*இன்று,*
*ஒதுங்கி இருக்கக்* 
*கத்துக்கனும் ...*

*அன்று,* 
*தீண்டாமை ஒரு* 
*பாவச்செயல் ...*

*இன்று,* 
*தீண்டாமை* 
*பகுத்தறிவின்* *செயல் ...*

*அன்று*
*உலா வந்தால்*
*உடலுக்கு நன்மை*

*இன்று*
*உலா வந்தால்*
*உயிருக்கே  தீமை*

                    
*(கொரோனாவை வெல்வோம்)*
*வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்* #நபியவர்களின் #தற்காப்பு #நடவடிக்கை

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்' என்று தெரிவித்தார்கள். மேலும், *'கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும்* அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் வீட்டிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்' என்று கூறினார்கள். *நூல் அஹ்மத் : 24358*


என் இனிய முகநூல் நண்பர்களே!

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் படைகள் தம் பாதையில் வருவதைக் கண்ட எறும்பு இன நிர்வாக அதிகாரி ஒருவர் சக எறும்புகளை நோக்கி, "எறும்புகளே!  சுலைமான் நபியும்  அவரது படைகளும்  வருகின்றனர். அவர்கள் உங்களை (மிதித்து) நொறுக்கிவிடக் கூடாது .உங்கள்  புற்றுகளில் நுழைந்து (உங்களைத் தற்காத்துக்) கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்திய நிகழ்வு திருக் குர்ஆனில்  அந்நம்ல்-எறும்பு  எனும் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது‌. 

இன்றைய கொரோனா கிருமியின் படையெடுப்பிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள நாம் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்‌. வெளியே செல்லக் கூடாது என்ற  கட்டுப்பாடும் இந்த வசனத்தையே நமக்கு நினைவு படுத்துகின்றன.

அல்லாஹ் பாதுகாப்பான் எம் இந்திய தேசத்தை! மனமுருகி துஆ செய்வோம்! மனம் தளர வேண்டாம் உறவுகளே!