அபூ அமீன் என்ற சபியுல்லாஹ் பாஜில் பாகவி
Friday, 18 May 2018
பணிவு என்னும் அருங்குணம்
【மாமன்னரிடம் இருந்த பணிவு】
كان عمربن عبد العزيز رحمه الله يخدم الضيوف بنفسه ويقوم بصلح المصباح فاذا قيل له في ذالك ؟ يقول: قمت وأنا عمر وجلست وأنا عمر.
( تنبيه المغترين للإمام الشعراني صفحة :٣٠٥)
கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் விருந்தினருக்கு தானே முன்னின்று (பணியாட்களுக்கு கட்டளையிடாமல்) விரும்தோம்பல் செய்வார்கள்.
(இரவிலே) தானே (பணியாட்களுக்கு உத்திரவிடாமல்) எழுந்து சென்று விளக்கை சரி செய்வார்கள்.
இதுகுறித்து அவர்களிடம் வினவப்பட்டது.
அதற்கு கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் : நான் எழுந்து செல்லும்போது உமராகத் தான் இருந்தேன்.வந்து அமர்ந்த பின்பும் உமராகத் தான் இருந்தேன். (எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை)
(பணிவினால் கிடைத்த பயன்)
أحمد الرفاعيّ رضِيَ الله عنه كان أشدّ الناس تواضعًا في زمانه، واحد كان من اليهود سمِعَ أنَّ أحمد الرفاعيّ يقولون عنه أنَّه شديد التواضع، قال لأُجرّبَنَّهُ فيما يقولون عنه ، فذهب إليه وكان مع السيِّد أحمد جماعةٌ من جماعته، وكان في تلك الناحية "كلب" فقال لأحمد الرفاعيّ: أنتَ أفضل أم هذا الكلب؟
قال له : إِنْ نجَوْتُ على الصراطِ فأنا خيرٌ منه
الرجل بُهِرَ بذلك فأسلمَ وذهب وأخبرَ أهلهُ فأسلموا،
அஹ்மது ரிஃபாயி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அக்காலத்தில் மக்களிலேயே மிகவும் பணிவு மிக்கவராக இருந்தார்கள். இவ்வாறு மக்கள் பேசிக் கொள்வதைக் கேட்ட யூதன் ஒருவன் அன்னாரை சோதித்து பார்க்க எண்ணினான். ஒருநாள் அன்னார் தன் சீடர்களோடு இருந்தார்கள். நாய் ஒன்று ஒரு ஓரமாய் நின்று கொண்டிருந்தது.அது சமயம் அங்கே வந்த யூதன் அன்னாரை பார்த்து " நீங்கள் மிகவும் சிறப்பிற்குரியவரா அல்லது இந்த நாய் மிகவும் சிறந்ததா? என் கேட்டான்.
அதற்கு ரிபாய் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் " சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடந்து நான் வெற்றி பெற்றுவிட்டால் நான் அந்த நாயை விட நான் சிறந்தவன் " என்று அவனிடம் கூறினார்கள்.
இந்த பதிலால் அந்த யூதன் திகைப்பில் ஆனான்.
பின்பு இஸ்லாத்தை தழுவினான். தன் குடும்பத்தினரிடம் இந்த நிகழ்வை அவன் கூற அவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள்.
【யாரையும் இழிவாக எண்ணாதே!】
خرج عيسى عليه السلام ومعه صالح من صالح بنى اسرائيل فتبعهما رجل خاطىء مشهور بالفسق فيهم ، فقعد منتبذا عنهما ، منكسرا ، فدعا الله سبحانه وقال : اللهم اغفر لى.
ودعا هذا الصالح وقال اللهم لا تجمع غدا بينى و بين ذلك العاصى.
فا و حى الله تعالى الى عيسى عليه السلام : انى قد استجبت دعاءهما جميعا ، رددت ذلك الصالح ، وغفرت لذلك المجرم .
(الكتاب: رسالة القشيرية صفحة: 242)
ஈஸா (அலைஹிஸ்ஸலாம்)அவர்கள் வெளியே சென்றார்கள். அப்போது அன்னாருடன் பனூஇஸ்ரவேலர்களைச் சார்ந்த நல்ல மனிதர்களில் ஒருவரும் சென்றார்.
அப்போது அந்த இருவரையும் ஒரு மனிதர் பின்தொடர்ந்து வந்தார். அவரோ அந்த மக்களிலே பெரும்பாவி என்று மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர்.
அந்த மனிதர் தான் செய்த பாவத்தை நினைத்து மனம் உடைந்தவராக அந்த இருவரை விட்டு ஒதுங்கி ஒரு மூளையில் அமர்ந்தார்.
அப்போது அந்த மனிதர் அல்லாஹ் இடத்திலே (பின்வருமாறு) துஆ செய்தார் யா அல்லாஹ்! என்னை மன்னித்து விடுவாயாக!
ஆனால் அந்த ஈஸா நபியுடன் வந்த நல்ல மனிதர் “யா அல்லாஹ்! நாளை மறுமையிலே என்னையும் இந்த பாவியையும் ஒன்று சேர்த்து விடாதே என்று பிரார்த்தனை செய்தார்.
அப்போது ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அல்லாஹ் (பின்வருமாறு) வஹி அறிவித்தான்.
“நான் நான் இருவரின் துஆவிற்கும் பதிலளித்துவிட்டேன். நான் அந்த நல்ல மனிதரை நிராகரித்து விட்டேன்.
அந்த குற்றம் செய்த மனிதரை மன்னித்து விட்டேன்” என்று அல்லாஹ் கூறினான்.
【பணிவுக்கு கிடைத்த சன்மானம்】
قال الفضيل: أوحى الله سبحانه وتعالى إلى الجبال أني متكلم على واحد منكم نبيا فطاولت الجبال وتواضع طور سيناء فكلم الله سبحانه عليه موسى عليه السلام لتواضعه
(الكتاب: رسالة القشيرية صفحة: 268)
ஃபுழைல் இப்னு இயாழ்(ரஹிமஹுமுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ் எல்லா மலைகளிடத்திலேயும் (பின்வருமாறு) “நிச்சயமாக நான் உங்களில் ஒருவரின் மீது ஒரு நபியிடத்திலே பேசப்போகிறேன்” என்று வஹீ அறிவித்தான்.
எல்லா மலைகளும் (அல்லாஹ் என் மேல் வைத்து தான் பேசப்போகிறான் என்று) பெருமையடித்துக் கொண்டன. ஆனால் தூர்சீனா மலை மட்டும் பணிவேடு இருந்தது.
அது பணிவாக இருந்ததின் காரணத்தினால் தான் அல்லாஹ் அந்த மலையின் மீது வைத்து மூஸா நபியிடம் பேசினான்.
【எவ்வளவு உயர்ந்த மனிதனிடம் இவ்வளவு பணிவா?】
قال عمر بن الخطاب رضي الله عنه لو نادى مناد من السماء : ياأيها الناس انكم داخلون الجنة كلكم إلا رجلا واحدا لخفت أن أكون أنا هو
(الكتاب: التخويف من النار لإبن رجب صفحة: ١٧)
உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள் :
வானத்திலிருந்து ஒரு அறிவிப்பாளர் " மக்களே நிச்சயமாக நீங்கள் அனைவரும் சுவர்க்கம் செல்லக்கூடியவர்களாகயிருக்கும். ஒரே ஒரு மனிதரை தவிர" என்று அறிவிப்பு செய்தால் அந்த ஒருவர் நானாக இருப்பேனோ என்று அஞ்சுகிறேன்.
(மிகப்பெரும் பொறுப்பும் மிகப்பெரும் பணிவும்)
وقد ولي أبو هريرة رضي الله عنه من قبل معاوية بن ابي سفيان اكثر من مرة فلم تبدل الولاية من سماحة طبعه وخفة ظله شيئا فقد مر باحد طرق المدينة وهو وال عليها وكان يحمل الحطب على ظهره لاهل بيته فمربثعلبة بن مالك فقال له: اوسع الطريق للأمير يا بن مالك فقال له: يرحمك الله أما يكفيك هذا المجال كله؟ فقال أوسع الطريق للأمير وللحزمة التي معه
(الكتاب: صورمن حياة الصحابة )
அபூ ஹுரைரா ( ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் ,முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு)அவர்களின் மூலம் மதீனா நகருக்கு பலமுறை கவர்னராக பொறுப்பேற்றார்கள். அந்த பதவி அவர்களின் எளிமையான குணத்தையோ، இனிமையான ஆன்மாவையோ, எதையும் மாற்றவில்லை.
(ஒருநாள்) மதீனாவிற்கு கவர்னராகயிருக்கும்போது தன் குடும்பத்திற்காக(தேவைக்காக) தன்முதுகிலே விறகுகட்டை சுமந்துகொண்டு மதீனத்து வீதீகளில் ஒன்றில் நடந்து சென்றார்கள்.
அதுசமயம் சஹ்லபா இப்னு மாலிக்( ரலியல்லாஹு அன்ஹு ) அவர்களை கடந்து செல்லும்போது "கவர்னருக்கு வழிவிடுங்கள் இப்னு மாலிக்கே! என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ் உமக்கு ரஹ்மத் செய்வானாக இந்த இடைவெளி உமக்கு போதாதா? என்று கேட்டார்.
அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் " கவர்னருக்கும், அவரின் முதுகிலுள்ள விறகுகட்டுக்கும் (சேர்த்து) வழிவிடுங்கள் என்று கூறினார்கள்.
(மிகப்பெரும் மனிதரின் மகத்தான பணிவு)
ان ابا حنيفة (رحمه الله) قام الليل كله وهو يردد قوله جل وعز (بل الساعة موعدهم، والساعة ادهى وأمر)وهو يبكي من خشية الله بكاء يقطع نياط القلوب.
(صور من حياة التابعين)
இமாம் அபூ ஹனீஃபா
(ரஹிமஹுல்லாஹ்)
அவர்கள் இரவு முழுவதும் இந்த வசனத்தை
(இறுதித்தீர்ப்பு நாள் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும்; இறுதித் தீர்ப்பு நாள் மிகக் கடுமையானதாகும், மிகக் கசப்பானதாகும்.சூரா அல் கமர் -54:46 )
திரும்ப திரும்ப ஒதி நின்று வணங்கினார்கள். இன்னும் அல்லாஹ்வின் அச்சத்தால் இதயத்தின் இரத்த நாளங்கள் துண்டிக்கப்படும் அளவுக்கு அழுதார்கள்.
சாமானிய பெண்ணிடம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஜனாதிபதியின் பணிவு)
، عَنْ قَتَادَةَ ، قَالَ : خَرَجَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنَ الْمَسْجِدِ ، وَمَعَهُ الْجَارُودُ الْعَبْدِيُّ ، فَإِذَا بِامْرَأَةٍ بَرِزَةٍ عَلَى ظَهْرِ الطَّرِيقِ ، فَسَلَّمَ عَلَيْهَا ، فَرَدَّتْ عَلَيْهِ السَّلَامَ ، وَقَالَتْ : إِيهًا يَا عُمَرُ ، عَهِدْتُكَ وَأَنْتَ تُسَمَّى عُمَيْرًا فِي سُوقِ عُكَاظٍ ، تَرْعَى الصِّبْيَانَ بِعَصَاكَ ، فَلَمْ تَذْهَبِ الأَيَّامُ ، حَتَّى سُمِّيتَ عُمَرًا ، ثُمَّ لَمْ تَذْهَبِ الأَيَّامُ حَتَّى سُمِّيتَ أَمِيرَ الْمُؤْمِنِينَ ، فَاتَّقِ اللَّهَ فِي الرَّعِيَّةِ ، وَاعْلَمْ أَنَّهُ مَنْ خَافَ الْوَعِيدَ قَرُبَ عَلَيْهِ الْبَعِيدُ ، وَمَنْ خَافَ الْمَوْتَ خَشِيَ الْفَوْتَ ، فَقَالَ الْجَارُودُ : أَكْثَرْتِ أَيَّتُهَا الْمَرْأَةُ عَلَى أَمِيرِ الْمُؤْمِنِينَ ، فَقَالَ عُمَرُ : دَعْهَا ، أَمَا تَعْرِفُهَا ؟ هَذِهِ خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ الَّتِي سَمِعَ اللَّهُ قَوْلَهَا مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ ، فَعُمَرُ أَحَقُّ أَنْ يَسْمَعَ لَهَا .
( الكتاب: موطأ مالك)
ஒரு நாள் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஜாரூது (ரலியல்லாஹு அன்ஹு) என்ற நபித்தோழருடன் கடைவீதிக்கு சென்றார்கள். அப்போது அங்கு வயதான பெண்மணி ஒருவர் இருந்தார். அவருக்கு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஸலாம் கூறினார்கள்.
அந்த வயதான பெண்ணும் பதில் கூறினார்கள்.
"உமரே நில்லுங்கள் நீங்கள் (மக்கத்து கடைவீதியான) சூகே உகாழில் உமைர் அழைக்கப்பட்டபோதும் ,நீங்கள் சிறுவர்களுடன் மல்யுத்தம் செய்தபோதும் (அந்த நாள் முதல்) உம்மை நான் அறிவேன். (சில) காலங்கள் கூட செல்லவில்லை அதற்குள் உமர் என்று கேள்விப்பட்டேன். பின்பு சில காலங்களுக்குள் கலீபா என்று கேள்விப்படுகிறேன்.
நீங்கள் குடிமக்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அறிந்துக்கொள்ளுங்கள் யார் மரணத்தை அஞ்சுகிறாரோ அவர் தான் (நல்ல அமலுக்கான) வாய்ப்பு தவறிப்போவதை அஞ்சுவார்" என்று அந்த வயதான பெண்மணி கூறினார்.
இதைக்கேட்டு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அழுதுவிட்டார்கள்.
ஜாரூது (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அந்த வயதான பெண்மணியை பார்த்து "கலீபாவிடம் துணிச்சலாக நடந்து அழவைத்துவிட்டியே " என்று கூறினார்கள்.
அதற்கு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அந்த வயதான பெண்மணியை விட்டு விடும்படி சைக்கினை செய்தார்கள்.
ஜாரூது ( ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பேச்சை நிறுத்தியதும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவர்களிடம் இந்த பெண்மணியை பற்றி அறிவீரா? என்று வினவ, அவர்கள் தெரியாது என்றார்கள்.
உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் " இந்த பெண்மணி கவுலா பின்த் ஹகீமாகும். இவர்கள் எத்தகைய பெண்மணி என்றால் இந்த பெண்மணியின் வார்த்தையை அல்லாஹ்வே செவிமடுத்துள்ளான். எனவே இந்த பெண்மணியின் வார்த்தையை செவிமடுக்க உமர் தகுதியுள்ளவர்தான்" என்று கூறி பின்வரும் வசனத்தை சுட்டி காட்டினார்கள்.
(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.
( சூரத்துல் முஜாதலா :
வசனம் -)
No comments:
Post a Comment