#ரத்தம்_சிந்தும்_உலமாக்கள்!!
=====================
"என்னிடம் பத்து அம்புகள் இருந்தால் ஒன்பதை ரோமர்களை நோக்கியும் ஒன்றை எம்மை நோக்கியும் எய்வேன் என்று நீர் சொன்னீரா?" எனக் கேட்டான் எகிப்தின் சீஆ ஆட்சியாளன் அல் முஇஸ்ஸு லிதீனில்லாஹ்.!!
"இல்லை, நான் அவ்வாறு சொல்லவில்லை" என்றார் இமாம் அபூ பக்கர் அந்நாப்லஸி.
"அப்படி என்றால் வேறு எவ்வாறு சொன்னாய்" என மீண்டும் வினவினான் ஆட்சியாளன்.
"என்னிடம் பத்து அம்புகள் இருந்தால் ஒன்பதை உங்களை நோக்கியும் பத்தாவதை ரோமர்களை நோக்கியும் எறிவேன்" என்றுதான் சொன்னேன் " என்றார்கள் இமாம் அவர்கள் சற்றும் தளராத நெஞ்சுறுதியுடன்.
"ஏன் அப்படிச்ச் சொன்னீர்" எனக் கேட்டான் சீஆ ஆட்சியாளன்.
"நீங்கள் மார்க்கத்தை மாற்றிவிட்டீர்கள், நன் மக்களைக் கொண்றொழித்து விட்டீர்கள், இறை வணக்க ஒளியை அணைத்து உங்களுக்கு உரிமையில்லாத ஆட்சிக்கு உரிமை கொண்டாடுகிறீர்கள்" என்றார்கள் இமாம் அவர்கள்.
உடனே ஆட்சியாளன் இமாம் அவர்களுக்குத் தண்டனை விதித்து விட்டான்.
முதல் நாள் இமாம் அவர்கள் குற்றவாளி என நகர் முழுவதும் இழுத்துச் செல்லப்பட்டு அடையாளங் காட்டப்பட்டார்கள்.
இரண்டாம் நாள் இமாம் அவர்களுக்கு கசையடி வழங்கப்பட்டது.
மூன்றாம் நாள் கசாப்புக் கடை நடாத்தும் யூதன் ஒருவன் வரவழைக்கப்பட்டு இமாம் அவர்களை உயிரோடு தோலுரிக்கலானார்கள்.!!
தலையில் இருந்து தோலுரிக்க ஆரம்பிக்கப்பட்டதும் இமாம் அவர்கள் அல் குர் ஆனை ஓத ஆரம்பித்தார்கள்.
நெஞ்சு வரை வந்ததும் யூதன் இரக்கப்பட்டு இமாம் அவர்களின் இதயத்தில் தவறுதலாக கத்தி படுவது போல் செய்து இமாம் அவர்களுக்கு சித்திரவதையில் இருந்து விடுதலையளிக்கவே இமாம் அவர்களது இன்னுயிர் பிரிந்தது.
சமூகத்திற்குத் தேவை, மிம்பர் மேடைகளில் கண்ணீர் சிந்தும் உலமாக்கள் அல்ல. மாறாக சத்தியக் களத்தில் இரத்தம் சிந்தும் உலமாக்களே.
நன்றி: அல் பிதாயா வந் நிஹாயா (11/248)
இமாம் இப்னு கதீர் (றஹ்)
Translated by Sheikh Nowfer
No comments:
Post a Comment