ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Sunday, 24 February 2019

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்)

வலிமார்கள் வரலாறு

மௌலானா ஜலாலுத்தீன்
ரூமி (ரஹ்)

ஜனாபெ மெளலவியெ மஸ்னவி ' என்றும் , ஆசியாவிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த சூஃபிக் கவிஞர் என்றும் போற்றப்படும் மெளலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் , இளமையிலேயே அருள் வாய்க்கப் பெற்ற இறைநேசச் செல்வராக விளங்கினர் . ஏழு வயது தொடுத்தே தொழுகை , நோன்பு ஆகிய மார்க்கக் கடமைகளை
நியாமமாகச் செய்து வந்தவர்களுக்கு , அப்பொழுதிருந்தே பற்பல அப்களை பற்றும் ஆற்றலையும் இறைவன் வழங்கியிருந்தான் . அவர்கள் பதினொரு வயதுச் சிறுவராக இருக்கும் பொழுது தம் வயதொத் றுெவர்களுடன் நம் வீட்டு மேற்கூரை மீது விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது , ' நாம் அடுத்த வீட்டு மேற்கூரைக்குச் சென்று விளையாடுவோமே ' என்று தம் நண்பர்களிடம் கூறினர் . அதற்கு அவர்களும் ஒப்பினர் . " வா அங்குப் போகலாம் ' ' என்று அவர்கள் , அவர்களை அழைத்த பொழுது , ' ' நான் வரமாட்டேன் " என்றார்கள் அவர்கள் . " நீதானே எங்களை அங்கு அழைத்தாய் ? ' ' என்று அவர்கள் வினவிய பொழுது , ' ' ஆம் ; நான்தான் அழைத்தேன் . ஆனால் படிகளின் மீது இறங்கி , ஏற என்னால் இயலாது . ஆதலின் நீங்கள் செல்லுங்கள் . நான் | அங்கு வந்து விடுகிறேன் ' என்றார்கள் அவர்கள் . " என்ன இவ்வாறு கூறுகிறாய் . உன் வீட்டிற்கும் , அடுத்த வீட்டிற்கும் இடையில் அகன்ற விதி இருக்கிறதே . எவ்வாறு நீ அங்கு வருவாய் ? ' ' என்று வியப்புடன் வினவினர் தோழர்கள் . " அதைப் பற்றி உங்களுக்கு ஏன் கவலை ? நான் வருகிறேன் , நீங்கள் செல்லுங்கள் ! ' ' என்றனர் அவர்கள் . அவ்வாறே சென்ற அவர்களுக்கு , அங்குப் பெரிய வியப்பொன்று காத்து நின்றது . ஜலாலுத்தீன் அங்கு புன்முறுவல் பூத்த வண்ணம் அவர்களை எதிர்பார்த்துக் காத்து நின்றார்கள் . ' கெளன்யாவில் வாழத் தொடங்கியபின் கெளன்யாவின் மற்றொரு பெயரான ரூம் என்பதனைத் தம் பெயருடன் சேர்த்துக் கொண்ட மெளலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் , இளமையில் தம் தந்தை மிடமும் , பின்னர் சையிது புர்ஹானுத்தீன் என்னும் பெரியாரிடமும் கல்வி பயின்றனர் . தந்தை இறந்ததன் பின்னர் அவர்கள் தம் தந்தையின் பீடத்தில் அமர்ந்து மாணவர்களுக்குக் கல்வி போதித்தனர் . ஹிஜ்ரி 630 ஆம் ஆண்டில் , மேல் கல்வி பயில்வதற்காக அவர்கள் ஹலப் சென்றனர் . ஹலப் அக்காலத்தில் கல்வியின் பீடமாக இருந்து வந்தது . அதனை ஆண்ட சுல்தான் மலிக்குஸ் ஸாஹிர் , காஜி பஹாவுத்தீன் இப்னு ஷத்தாதின் ஆலோசனையின் மீது அங்கு பல கல்லூரிகளை நிர்மாணித்திருந்தார் . - அங்குள்ள மதரஸா ஹலாலிய்யாவில் சேர்ந்து கமாலுத்தீன் இப்னுல் ஆதிம் என்னும் ஆசிரியரின் திருமுன் கால் மடித்து அமர்ந்து , கல்வி பயின்ற அவர்கள் , அப்பொழுதே நீராத மார்க்கப் பிரச்சினைகளுக் கெல்லாம் , தீர்வு காணும் திறன் பெற்று விளங்கினர் . தாம் கண்ட

திர்வுகளுக்கு அவர்கள் அறிவார்ந்த காரணம் கூறும் பொழுது , அவை எந்த நாலிலும் காணப் பெறாததைக் கண்டு , சகமாணவர்களும் ஆசிரியர்களும் பெரிதும் வியந்து , அவர்களின் அறிவு வளத்தைப் பாராட்டினர் . பின்னர் திமிஷ்க் சென்று அங்குள்ள மதரஸா மக்தஸிப் பாலில் சேர்ந்து கல்வி பயின்ற அவர்களுக்கு , ஷைகு முஹ்யித்தீன் இப்னு அரபி , ஷைகு அதுத்தீன் நிறம் , ஷைகு அவ்வறதுத்தீன் கிர்மானீ , ஷைகு ஸத்ருத்தீன் மெளனவி ஆகியோரின் தொடர்பு கிடைத்தது . ஐந்தாண்டுகளுக்குப் பின் கெளன்யா திரும்பித் தம் தந்தையின் ஆசனத்தில் அமர்ந்து கல்வி போதிக்கத் தொடங்கிய அவர்களின் முன் , நானூறு மாணவர்கள் வரை கால் மடித்து வீற்றிருந்து , கல்லி பயிலலாயினர் . கல்வி போதிப்பது மட்டுமின்றி , தம்மிடம் வரும் சிக்கலான மார்க்கப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு ' ஃபத்வா வழங்குவ . தற்கு ஓர் அறக்கட்டளை அவர்களுக்குப் பதினைந்து தீனார் ஊழியம் வழங்கியது . எனவே , தாம் தியானத்தில் இருந்த போதிலும் சரி , வணக் கத்தில் இருந்த போதினும் சரி , மார்க்க ஃபத்வா வேண்டி எவரேனும் மதரஸா வரின் , உடனே அவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு அவர்கள் தம் ஊழியர்களுக்கு ஆணையிட்டிருந்தார்கள் . அதற்குக் காரணம் , பெறும் ஊதியத்திற்கு ஒழுங்காகப் பணி புரிய வேண்டும் என்று அவர்கள் கருதியதாகும் . இவ்வாறு ஏழு ஆண்டுகள் உருண்டோடின . எனினும் இத்தகு வாழ்வு அவர்களுக்கு மன நிறைவு நல்கவில்லை . அவர்களுக்கு இளமையிலிருந்தே ஆன்மீக ஆசானாக இருந்த சையிது ! புர்ஹானுத்தீனும் ஹிஜ்ரி 63 " ஆம் ஆண்டு இறப்பெய்தி விட்டார் . எனவே அவர்களின் ஆன்மீகச் செடி , பற்றிப் படர ஒரு கொழு கொம்பின்றித் தவித்துக் கொண்டிருந்தது . அவர்கள் ஆன்மீக விளக்கு , தூண்டுகோல் இன்றி மினுக் , மினுக் கென்று எரிந்து கொண்டிருந்தது . என் செய்வதென அறியாது அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள் . இச் சமயம் அவர்களின் வாழ்வையே மாற்றியமைக்க வல்ல ஒரு சம்பவம் நிகழ்ந்தது , - ஹிஜ்ரி 642 ஆம் ஆண்டு , ஜமாதியுல் ஆகிர் மாதம் , 26 ஆம் நாள் - மெளலானா ரூமி பள்ளி வாயலில் நீர்த் தேக்கத்தின் அருகில் அமர்ந்து சில நூல்களை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார்கள் . அப்பொழுது கம்பளி உடையணிந்த ஒருவர் அவர்களின் அருகே வந்தமர்ந்தார் . அவரை அவர்கள் அருவருப்புக் கண்களுடன் பார்த்தார்கள் . அப்பொழுது அவர் அந்த நூல்களை அவர்களிடம் கட்டிக் காட்டி , ' ' அவை என்ன நூல்கள் ? ' ' என்று வினவினார் . ' ' இவை ஞான உதிப்பால் எழுதப்பட்டவை . இவை பற்றி உமக்கு ஏன் அக்கரை ? " என்று வெடுக்கெனப் பதிலிறுத்தார்கள்

அவர்கள் , அடுத்த கணம் அவர் அந்நூல்களையெல்லாம் வாரி நீர்த் தேக்கத்தில் போட்டு விட்டார் .அது கண்டு அவர்களுக்கு உயிரே போய் விட்டது போன்றிருந்தது .தாம் அரும்பாடுபட்டுச் சேகரித்து வைத்திருந்த அரிய நூல்களல்லவா அவை ?எனவே , ' என்ன செய்தீர் ?என்ன செய்தீர் ?' ' என்று வாய்விட்டு அலறினார்கள் அவர்கள் .ஆனால் வந்தவரோ அவர்களின் அலறலைச் சற்றேனும் பொருட்படுத்தாது , புன்முறுவல் தம் முகத்திலே தவழ , தம் கைகளை நீர்த் தேக்கத்தில் விட்டு வெளியே எடுத்தார் .என்ன வியப்பு !அவை அனைத்தும் அணுவத் தனையும் நனையாதிருந்தன .அது கண்டு , ' ' இது என்ன புதுமை !இது என்ன புதுமை !!' ' என்று வினவினார்கள் மௌலானா ரூமி .' ' இது பற்றி உமக்கேன் அக்கரை ?' ' என்று அவர்களின் ' பாஷை ' யிலேயே அதற்கு மறுமொழி பகர்ந்தார் அவர் .அது கேட்டு மௌலானா ரூமியின் கண்கள் திறந்தன .தாம் சாமான்யர் என்று கருதியவர் , சாமான்யரல்லர் , மாபெரும் மகான் யார் ?

அவர்களே ஜெம்ஸத் தப்ரேஸ் ( ரஹ் ) ஆவார்கள் . அவர்களின் இயற்பெயர் ஷம்சுத்தீன் என்பதாகும் . அவர்களின் தந்தையின் பெயர் அலீ | பின் மலிக் தாவூத் ஆகும் . அவர்களின் தந்தை கொராஸானைச் சேர்ந்த பஸார் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்றும் வாணிபத்தின் பொருட்டு தப்ரேஸ் வந்திருந்த பொழுது அவர்கள் பிறந்தார்கள் என்றும் அஃப்லாக்கியும் ஜாமியும் கூறுகின்றனர் . அவர்களுக்கு இளமையிலிருந்தே அண்ணல் நபி ( ஸல் ) அவர்களின் மீது அடங்காக் காதல் இருந்தது . அவர்களின் நினைவிலேயே திளைத்த அவர்கள் அதன் காரணமாக முப்பது அல்லது நாற்பது நாட்கள் கூட ஊனை மறந்து உண்ணாதிருப்பர் எனறு அஃப்லாக்கி கூறுகிறார் . மார்க்கக் கல்வியைப் பயின்ற பின் ஆன்மீகக் கல்வியைக் கூடை பின்னி விற்று உயிர் வாழ்ந்து வந்த அபூபக்ர் என்பவரிடமும் பின்னர் ருக்னுத்தீன் ஸஞ்சரியிடமும் பயின்ற அவர்கள் பின்னர் ஆன்மீக ஞானிகளைத் தேடி தப்ரேஸ் , பக்தாது , ஜோர்தான் , ரூம் , கைஸரிய்யா , திமிஷ்க் ஆகிய நகரங்களெல்லாம் சுற்றித் திரிந்தார்கள் . இதன் காரணமாக அவர்களுக்கு பரிந்தா ( பறக்கும் பறவை ) என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது . அவர்கள் கால்சராய்க்குப் பயன்படுத்தும் நாடாவை நெய்து அதிலிருந்து கிடைக்கும் அற்ப வருவாயைக் கொண்டு தம் வாணாளைக் கழித்து வந்தனர் , தம்முடைய பொருளாதாரத் தாழ்வையோ , ஆன்மீக உயர்வையோ எவரிடமும் காட்டிக் கொள்ளாது வாழ்ந்து வந்த அவர்கள் , ஓர் ஊரில் தங்கியிருந்த பொழுது , வழக்கமாக ஒரு கடையில் ரொட்டி மட்டும் வாங்கி , அதனைத் தண்ணீரில் நனைத்து உண்டு வந்தனர் . இதனை , எவ்வாறோ அறிந்து கொண்ட அக் கடைக்காரர் ஒரு ரொட்டியில்

முன்னரே நெய் தோய்த்து வைத்திருந்து , அவர்கள் வந்து கேட்டதும் , அதனை எடுத்துக் கொடுத்தார் . அன்றிலிருந்து அக்கடையில் ரொட்டி வாங்குவதையே அவர்கள் நிறுத்திக் கொண்டனர் . பின்னர் அங்கிருந்து மிக் சென்ற அவர்கள் , அங்கு ஓராண்டு காலம் தங்கியிருந்தனர் . அந்த ஓராண்டு காலமும் ரொட்டி வாங்கி மண்பதையே நிறுத்திவிட்டு , வாரத்திற்கு ஒரு தடவை , ஒரு கோப்பை ' குப் ' வாங்கிக் குடிப்பதையே தமக்குப் போதுமாக்கிக் கொண்டவர் , வெளியூர்களில் அவர்கள் விடுதிகளிலே தங்கினார்கள் . அங்கு அறையின் கதவுகளை மூடிக் கொண்டு , இறை வணக்கத்தில் ஈடுபடுவார்கள் . ஆனால் , வெளியில் செல்லும் பொழுது , தம்முடைய ஆன்மீக உயர்வை மக்கள் அறியக்கூடாதென்று எண்ணி , செல்வ வணிகர் போன்று கம்பளி உடையணிந்து செல்வார்கள் . அப்பொழுது தம் அறைக்கதவை விலை உயர்ந்த பூட்டால் பூட்டி விட்டுச் செல்வார்கள் . ஆனால் , அறைக்குள்ளேயோ ஒரு கிழிந்த பாயையன்றி வேறொன்றும் இருக்காது . ஆன்மீக உச்சத்தை நோக்கி அடியெடுத்து வைத்து நடந்த அவர்கள் , தாம் நுகரும் தெய்வீகக் காதலின் இரகசியங்களைத் தம்முடன் பங்கு கொள்ள ஓர் அன்புத் தோழரைத் தமக்குக் காட்டியருளுமாறு ! இறைவளிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தார்கள் . அப்பொழுது இறைவன் உள்ளுணர்வின் மூலம் , அவர்களைக் கெளன்யா செல்லுமாறும் , அங்கு ஒர் ஆன்மா தெய்வீகக் காதலுக்காக ஏங்கிக் கொண்டிருப்பதாகவும் செய்தி அறிவித்தான் , அவ்வாறே அவர்கள் கௌன்யா வந்த பொழுது தான் நாம் மேலே குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்தது . இதன்பின் அவர்களைத் தம் இல்லம் அழைத்துச் சென்று , மரியாதையுடன் உபசரித்தனர் மௌலானா ரூமி . இருவரும் அறையின் கதவைத் தாளிட்டுக் கொண்டு , நாற்பது நாட்கள் , மற்றொரு வரலாற்றின் படி , ஆறு மாதங்கள் தனித்திருந்தனர் . இந்த ஆறு மாத காலத்தில் ஷம்சுத் தப்ரேஸ் ( ரஹ் ) அவர்கள் , மெளலானா ரூமியின் இதயத்தில் ஆன்மீக இரகசியங்களை ஊட்டினர் . மௌலானா ரூமியின் ஆன்மீகக் கண் . வெளிச்சம் பெற்றது . தாம் இதுகாறும் கற்ற கல்வியெல்லாம் சாதாரணமானவை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள் . இதனையே மெளலானா ரூமி அவர்கள் , "

உண்மையின் பாதையில் ஷம்சுத் தப்ரேஸ்தான் என்னை அழைத்துச் சென்றார்கள் . நான் பெற்ற ஆன்மீக ஞானமெல்லாம் அவர்கள் அளித்த பிச்சையாகவே இருந்தது "

ஒரு கண்ணியில் பாடுகிறார்கள் . மற்றொரு கண்ணியிலோ , ' ' ரூமின் எசமானர் அறிவார்ந்த ஞானியாகவில்லை . அவர் ஷம்சுத் தப்ரேஸின் அடிமையாகும் வரை ' ' என்று அவர்கள் பண்ணிசைக்கிறார்கள் . பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்த அறிஞர்களும் , துறவிகளும் , மெளலானா ரூமி அவர்களின் திருமுன் கால் மடித்து வீற்றிருந்து பாடம் கேட்டது ஒருபுறமிருக்க , இப்பொழுது மெளலானா ரூமி அவர்களே , ஷம்சுத் தப்ரேஸ் ( ரஹ் ) அவர்களின் திருமுன் , கால் மடித்து வீற்றிருந்து பாடம் கேட்கத் துவங்கி விட்டார்கள் . ஆசாள் மாணவராகி விட்டார்கள் . செ முடன் பங்கு இதுவேன் எகவும் செல் இதைப் பற்றி மெளலானா ரூமி அவர்களின் மகன் சுல்தான் வலத் கூறும் பொழுது , " ஷைகே மாணவராகி விட்டார்கள் . தம் ஆசானின் பாதத்தில் அமர்ந்து தம் பாடங்களைப் புதிதாகப் பயிலத் தொடங்கிவிட்டார்கள் . ஆன்மீகத்துறையில் அவர்கள் நிறைவு பெற்றிருந்த போதினும் , மீண்டும் ஒருமுறை அத்துறையில் பாடம் கேட்கத் தொடங்கி விட்டார்கள் . ' ' என்று எடுத்துரைக்கிறார் . தம் மகன் கூறுவது சரியே என்று சொல்வது போன்று மெளலானா ரூமியும் , " நானோ ஒரு துறவியாக இருந்தேன் . ( ஷம்சுத் தப்ரேஸாகிய ) தாங்களோ , எனக்கு மதுவூட்டி மயக்கமுறக் செய்து விட்டீர்கள் . மார்க்க மேதை என்று நான் பெரிதும் கெளரவிக்கப்பட்டேன் . தாங்களோ என்னைக் குழந்தைகளும் பார்த்துச் சிரிக்குமாறு செய்து விட்டீர்கள் " என்று பண்ணிசைக்கிறார்கள் . ' இதன் காரணமாக மௌலானா ரூமி , மதரஸாவில் அமர்ந்து மாணவர்களுக்கு பாடம் போதிப்பதையும் , மேடை மீதேறி மக்களுக்கு அறிவுரை பகர்வதையும் விட்டொழிந்தார்கள் . ' ஸமா ' என்ற பேரின்பம் இசை நிகழ்ச்சியை வெறுத்து வந்த அவர்கள் , இப்பொழுது அதனைப் பெரிதும் விரும்பிக் கேட்கலானார்கள் .

இதைப் பற்றி மெளலானா கு அவர்கள் குறிப்பிடும் பொழுது , மதுக்கிண்ணத்தை வைத்திருப்பவரின் தெற்கியை நான் பார்த்ததும் , போது என் தலைக்கேறியது . அடுத்த கணம் நான் என் முதுகோலை உடைத்தெடுத்து விட்டேன் என்று கூறுகிறார்கள் . அவர்களின் இந்த விபரீதப் போக்கைக் கண்டு மெளலானா ரூமியின் மாணவர்களுக்கு ஏற்பட்ட வருத்தத்திற்கு அளவில்லை , வருத்தம் , கத் தப்ரேல் மீது வெஞ்சினமாக மாறியது . அவர் யார் ? அவரின் தந்தை யார் ? அவரின் குலம் , கோத்திரம் யாது என்று எவருக்கேனும் தெரியுமா ? அவர் எங்கிருந்து வந்தார் என்பதை எவரேனும் கூறுவாருண்டோ ? ' என்று ஒருவர் மற்றவரைக் கேட்டுக் கொண்டார்கள் . ' எல்இருந்தோ வந்த மந்திரவாதி , மாயக்காரன் ஒரு நொடி யில் , மெளலானா அவர்களை மாற்றியமைத்து விட்டானே ' என்று தங்களுக் குன்னே இரகசியமாகப் பேசிக் கொண்டார்கள் . மாணவர்கள் மட்டுமல்லாது , மார்க்க அறிஞர்களும் , மெளலானா ரூமி மீது குறைபட்டுக் கொண்டார்கள் . ' ' தப் ரேஸ் வாசியான ஒரு மந்திரவாதியின் மாயவலையில் சிக்கி , மெளலானா ரூமி தம்முடையவும் , தம் தந்தையுடையவும் பெயரைக் கெடுத்துக் கொண்டாரே ' ' என்று அவர்களில் ஒருவர் கூறியது மெளலானா ரூமியின் செவிப்பட்டதும் , " நீரும் ஒரு மார்க்க அறிஞரா ? மார்க்க அறிஞராயிருப்பின் வீணே என் ஒருவர் மீது பொறாமையுறுகிறீர் ? ' ' என்று அவர்கள் னெமொழி பகர்ந்தார்கள் . மெளலானா ரூமியின் மாணவர்களுக்கு ஷம்சுத் தப்ரேஸின் மீது ஏற்பட்ட வெறுப்பு , நாளுக்கு நாள் பகையாக மாறிக் கொழுந்து விட்டெரிந்தது . இதனை உணர்ந்து கொண்ட ஷம்சுத் தப்ரேஸ் அவர்கள் , தாம் கெளன்யா வந்த பதினாறு மாதங்களுக்குப் பின் ஒரு நாள் , - ஹிஜ்ரி 43 ஆம் ஆண்டு , ஷவ்வால் பிறை , இருபத்தொன்று . வியாழன் அன்று - எவரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் கெளன்யாவை விட்டே நீங்கி விட்டார்கள் , என் ஆ 34 , வருக பால் ஒள் 4 கண்டு கலர்களின் ரடைப் இதனை அறிந்த மெளலானா ரூமியின் மாணவர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள் . உலகைக் கூத்தாடினார்கள் . ஆனால் , மெளலானா ரூமி அவர்களோ , ஆற்றொணாத் துயரத்தில் மூழ்கினார்கள் . மக்களின் சகவாசத்தையே விட்டொழித்து , பாவிகள் என் ஆசானை விரட்டி விட்டனரே . என்று காண்பேன் அவரை இனி ? " என்று ஏங்கித்தவித்து , கண்ணரை ஆறாகப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள் . கண்ணீரோடு சேர்ந்து கொண்டு காலமும் ஓடியது .

ஒரு நாள் அவர்களுக்கு திமிஷ்கிலிருந்து ஒரு மடல் வந்தது .யாருடைய மடல் என்று அதனை அவர்கள் பிரித்துப் பார்த்தார்கள் .அதனைப் பிரித்துப் பார்த்ததும் , அவர்களின் உடல் முழுவதும் ஒருவித இன்ப உணர்வு ஏற்பட்டது .அவர்களால் , அவர்களின் கண்களையே நம்ப இயலவில்லை .எவரிடமிருந்து அம்மடல் அவர்களுக்கு வந்தது ?ஷம்சுத் தப்ரேஸிடமிருந்து தான் , இதன்பின் சிறிது மன அமைதி அடைந்த அவர்கள் , ஷம்சுத் தப்ரேஸ் மீது பகைமை பாராட்டாத ஒரு சிலரைத் தம் அறைக்குள் வர அனுமதி வழங்கினார்கள் .' ஸமா ' என்ற பேரின்ப இசை நிகழ்ச்சியில் முன்னர் தாம் தம் ஆசானுடன் கலந்து இன்பம் துய்த்த நாட்களை நினைவு கூர்ந்து , மீண்டும் அவர்கள் ' ஸமா ' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு , துன்பம் மறந்திருந்தார்கள் .எனினும் தம் ஆசானின் நினைவு வந்ததும் , மீண்டும் துன்பத்திற்காளானார்கள் .ஒருநாள் அவர்கள் ஷம்சுத் தப்ரேஸ்க்குப் பின்வருமாறு மடல் தீட்டினார்கள் .' என் ஆசையின் கனியே !என் இதயத்திய் ஒளியே !மீண்டும் என்னிடம் வருவீர்களாக !தாங்கள் வரின் , நான் இன்புறுவேன் , இல்லையெனில் துன்புறுவதே என் தொழிலாகப் போய்விடும் .தொலைவிலிருந்த போதிலும் , அருகிலிருப்பது போல் தோன்றும் சூரியன் போன்று , தாங்கள் இருக்கிறீர்கள் .தாங்கள் தொலைவிலிருப் பினும் தங்களை நான் இங்கு என் அருகிலேயே காண்கிறேன் .ஆதலின் வருக , வருக , விரைவில் வருக !' ' இவ்வாறு ஒரு மடல் அல்ல மூன்று மடல்கள் எழுதினார்கள் .ஆனால் ஒன்றிற்கேனும் ஷம்சுத் தப்ரேஸிடமிருந்து பதில் வரவில்லை .அது கண்டு அவர்கள் நிலை குலைந்தார்கள் .மெளலானா ரூமி அவர்களின் பரிதாபகரமான நிலையைக் கண்டு , அவர்களின் மாணவர்கள் பெரிதும் இரங்கினர் .தாங்களே ஷம்சுத் தப்ரேஸிடம் சென்று , அவர்களிடம் மன்னிப்பு கோரி , அவர்களைக் கெளன்யா அழைத்து வருவதாக மௌலானா ரூமியிடம் வலியச் சென்று கூறினர் .அதுகேட்டு மகிழ்ந்த அவர்கள் , தம் மகன் சுல்தான் வலதின் தலைமையில் இருபது பேர்கள் அடங்கிய ஒரு குழுவை திமிஷ்கிற்கு அனுப்பி வைத்தார்கள் .அவர்களிடம் தம் ஆசானுக்குத் தம் அன்புக் காணிக்கையாக ஆயிரம் தினார்களையும் கொடுத்து , பின் வருமாறு ஒரு மடலும் தீட்டி அனுப்பி வைத்தார்கள் :
தாங்கள் என்னை விட்டுப் பிரிந்ததிலிருந்து . தேனை விட்டுப் பிரிக்கப்பட்ட மெழுகு போன்று நான் இருக்கிறேன் . இன்ப உறவை இழந்த நான் காதல் நெருப்பில் உருகிக் கொண்டிருக்கும் மெழுகு திரிபோல் ஆகிவிட்டேன் . தங்களின் பிரிவாற்றாமையால் நான் அழிந்தழிந்து கொண்டிருக்கிறேன் , என் ஆன்மா , கானகத்தில் வசிப்பது போன்று , தனிமையில் கிடந்து தவித்துக் கொண்டிருக்கிறது . தங்களின் வாகனத்தின் கடிவாளத்தைத் திருப்புவீர்களாக ! ( இந்தப் பாதையில் ) தங்களின் மகிழச்சியின் வாகனத்தைத் திருப்புமாறு நான் தங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் . தாங்கள் இல்லாத பொழுது , இன்னிசையே எனக்கு ' ஹராம் ஆகிவிட்டது . மேலும் மகிழ்வுடன் இருப்பதை நான் ஷைத்தானை வெறுப்பது போன்று வெறுக்கிறேன் , தங்களிடமிருந்து ஒரு மடல் வரும் வரை நான் ஒரு கவிதை கூட எழுதவில்லை . தங்களின் மடலைப் படித்தபின் தான் , மகிழ்ச்சி மிக்குற்று ! ஐந்து அல்லது ஆறு கவிதைகளை எழுதினேன் . இறைவனே ! எங்கள் இருவரையும் மீண்டும் சந்திக்க வைத்து , என்னுடைய மாலை நேரத்தைக் காலை நேரமாக ஆக்குவாயாக ! நிச்சயமாக , தாங்கள் சிரியா , அர்மீனியா , ரோம் ஆகிய நாடுகள் பெருமைப்படக் கூடிய மாமனிதராக இருக்கிறீர்கள் . ' ' மப்பும் இந்த மடலுடன் திமிஷ்க் சென்ற தாதுக்குழு , அங்கு ஷம்சுத் தப் ரேஸைத் தேடிக் கண்டுபிடித்து மடலையும் காணிக்கையையும் அவர்களிடம் சமர்ப்பித்து , அவர்களிடம் தாங்கள் செய்த தீமைகளுக்கு மன்னிப்புக் கோரி , அவர்களைக் கென்யாவுக்கு அரசரை அழைத்து வருவது போன்று அழைத்து வந்தது . ஷம்சுத் தத்பரேஸை வாகனத்திலேற்றி , மற்றவர்களெல்லாம் வாகனத்தில் ஏறிவந்த பொழுது , சுல்தான் வலது மட்டும் மரியாதையின் பொருட்டு , திமிஷ்கிலிருந்து கெளன்யா வரை நடந்தே வந்தார் . ஷம்சுத் தப்ரேஸை வரவேற்க கெளன்யா நகரமே திரண்டு வந்தது . தம் ஆன்மீக வழிகாட்டியை மீண்டும் கெளன்யா நகரில் கண்ட மெளலானா ரூமி , அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள் . அவர்களைத் தம் இல்லம் அழைத்துச் சென்று , அங்கேயே அவர்களைத் தங்க வைத்ததுடன் , தம் வளர்ப்புப் பெண்ணையும் அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்கள் . நாளுக்கு நாள் மௌலானா ரூமி , ஷம்சுத் தப்ரேஸ் மீது கொண்ட ஈடுபாடு உச்ச நிலையை எய்திக் கொண்டிருந்தது . இருவரும் தனித்துத் தியானத்தில் ஈடுபட்டும் , ஆன்மீகம் பற்றி உரையாடியும் , இன்பம் ! பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள் . இதைக் கண்டு மெளலானா ரூமியின் மாணவர்கள் மீண்டும் புழுங்கலாயினர் .

எவ்வாறு மௌலானா ரூமி , ஷம்சுத் தப்ரேஸ் மீது அன்பு செலுத்தினரோ , அதே போன்று ஷம்சுத் தப்ரேம் மெளலானா ரூமி மீது அன்பு செலுத்தினார்கள் . இருவர் அன்பும் ஒன்றுக்கொன்று மாற்றுக் குறையாமல் இருந்தது . ஒரு நாள் சிலர் மெளலானா ரூமியைப் பார்க்க வந்த பொழுது , வெளியில் இருந்து கொண்டிருந்த ஷம்சுத் தப்ரேஸ் , அவர்களை நோக்கி , ' தாங்கள் மெளலானாவுக்கு என்ன காணிக்கை கொண்டு வந்தீர்கள் ? ' ' என்று வினவினார்கள் . அதற்கு அவர்கள் , ' ' அது இருக்கட்டும் , தாங்கள் அவர்களுக்கு என்ன காணிக்கை கொண்டு வந்துள்ளீர்கள் ? " என்று இடக்காசு மறு வினா விடுத்தனர் . உடனே ஷம்சுத் தப்ரேஸ் அவர்கள் , " நான் என் அன்பாளருக்கு என் சிரசையே காணிக்கையாகக் கொண்டு வந்துள்ளேன் ' ' என்று பதிலிறுத்தார்கள் . இப்பொழுது ஒரு சம்பவம் நிகழ்ந்துது . ஷம்சுத் தப்பேரஸ் தம் மனைவியுடன் மௌலானா ரூமியின் இல்லத்தின் முகப்பிலிருந்த அறையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் . மௌலானா ரூமிக்கு இரண்டாம் மனைவி மூலம் பிறந்த மகனாகிய அலாவுத்தீன் என்பவரோ , தம் தந்தையைக் காண்பதற்காக அவ் இல்லம் வருந்தோறும் அந்த அறை வழியாகவே உள்ளே போகவும் வெளியே வரவும் செய்தார் . இதனை விரும்பாத ஷம்சுத் தப்ரேஸ் , அவரிடம் இவ்விதம் செய்ய வேண்டாமென்று எத்தனையோ தடவை இதமாக எடுத்துரைத்தும் , அதனை அணுவத்தனையும் கேளாததோடு , அவர்களை முறைத்துப் பார்த்துவிட்டும் சென்றார் . அலாவுத்தீனுக்கு ஏற்கனவே ஷம்சுத் தப்ரேஸ் மீது ஒருவகைக் காழ்ப்பும் வெறுப்பும் இருந்தன . அதற்குக் காரணம் ஷம்சுத் தப்ரேஸ் , சுல்தான் வலதின் மீது அதிக அன்பு செலுத்தியது தான் . எனவே அவர் . ' வஷம்சுத் தப்ரேஸ் மீது பொறாமை கொண்டு , புழுங்கிக் கொண்டிருந்தவர் களுடன் சேர்ந்து கொண்டு பகைமைத் தீயைக் கிளறி விட்டார் . துவக்கத்தில் ஷம்சுத் தப்ரேஸ் இதனை மௌலானா ரூமியிடம் கூறவில்லை . நாளுக்கு நாள் அது மீண்டும் வளர்ந்து கொண்டு வருவதைக் கண்ட அவர்கள் . தாம் விரைவில் கெளன்யாவை விட்டுத் தடயமே இல்லாது நீங்க வேண்டியிருக்கும் என்று சாடையாக மெளலானா ரூமிக்குத் தெரியப்படுத்தினர் . அதனை அறிந்த மெளலானா ரூமி ! துடித்துடித்து விட்டார்கள் . அந்த எண்ணத்தையே விட்டொழிக்குமாறு அவர்களைப் பெரிதும் வேண்டிக் கொண்டார்கள் . ' எனினும் பொறாமைக்காரர்கள் ஷம்சுத் தப்ரேஸுக்கு நாள் தவறாது செய்து வந்த இடையூறுகள் , அவர்களால் இனி ஒரு கணமேனும் பொறுக்க இயலா நிலையை எய்தியது . எனவே ஓரிரவு அவர்கள்

சொல்லாமல் , கொள்ளாமல் மீண்டும் கொக்காவை விட்டுப் புறப்பட்டு விட்டார்கள் .எப்பொழுது புறப்பட்டார்கள் எங்கும் சென்றார்கள் என எவருக்கும் தெரியலியலை .* லிபுத்தெழுந்தும் வம்சுத்தபிரலைக் காணாத பொழுது , மெளலானா ரூமிக்கு உயிரே நின்று விடும் போல் இருந்தது .நான் சுல்தான் பலரின் அறைக்கு டாடிச் சென்று , ' என் WI , இன்றுமா பறங்கிக் கொண்டிருக்கிறாய் வைககு எங்கேயோ போய்விட்டார்கள் .!அவர்களைத் தேடிக் கண்டு பிடி என்று அலறினார்கள் , அத்துடன் தாமும் ஷம்சுத் தப்ரேலைக் கண்டு பிடிக்க நாடெங்கும் சுற்றித் ஓரிந்தார்கள் , என்ன செய்தும் என்ன ?ஷம்சுத் தப்ரேஸில் தடயத்தையே காணவில்லை .அப்பொழுது மெளலானா ரூமிக்கு ஏற்பட்ட வருத்தமோ , முன்னை விடப் பன்மடங்கு அதிகமாகியது .அழுது , அழுது புலம்பினார்கள் .புலம்பிப் புலம்பி அழுதார்கள் .அவர்களின் உள்ளக் குமுறல் கவிதை வடிவாக வெளி வந்தது .அதுலே !" லோனெ - கேத் தப்ரேஸ் ' என்னும் கவிதைத் தொகுப்பாகும் . இப்பொழுது அவர்கள் தம் கவலையை மறக்கப் புல்லாங்குழல் இசையுடன் நின்று ஆடினார்கள் , அவர்களுடன் சேர்ந்து , அவர்களில் மாணவர்களும் ஞானப் பாடல்களைப் பாடிய வண்ணம் ஆடினார்கள் , உணர்ச்சி வயப்பட்டு 4 லார்கள் , என்ன ஆடியும் பாடியும் என் ஷம்சுத் தரேஸின் பிரிவால் அவர்களுக்கு ஏற்பட்ட சுவலை , அவர்களின் இதயத்தை அறுத்துக்

கொண்டிருந்தது . ரிஜ்ரி 13 ஆம் ஆண்டில் தார்த்தாரியர்களின் படையெடுப்பால் , மத்திய கிழக்கு நாடுகளில் நிகழ்ந்த படுகொலை களைப் பற்றிக் கேள்விப்பட்டதும் , தம் ஆசாரின் கதி என்னவாயிற்றோ என்று அவர்கள் பெரிதும் வருந்தினார்கள் , எவரேனும் அவர்களிடம் வந்து தாம் செம்சுத் தப்ரேலை இன்ன இடத்தில் கண்டதாகக் கூறின் , அதுகேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியுற்ற அவர்கள் , தம் கையில் கிடைத்த எந்தப் பொருள் M ம் எடுத்து அவருக்கு அன்பளிப்பாக வழங்கி விடுவார்கள் , ஒரு தடவை ஒருவர் வந்து ஓர் இடத்தைக் குறிப்பிட்டு , அந்த இடத்தில் எம்சுத் தப்ரேலைக் கண்டதாகக் கூறிய பொழுது , அவர்கள் தாம் அணிந்திருந்த மேலங்கியையே சுழற்றி அவருக்கு அன்பளிப்புச் செய்துவிட்டார்கள் . சிறிது நேரம் கழித்துமற்றொருவர் அவர்களிடம் வந்த , ' ' அவர் தங்களிடம் பொய்யுரைத்து ஏமாற்றிவிட்டார் ' என்று கூறியபொழுது , ' ' அதனால் தான் தான் என் மேலங்கியைக் கழற்றிக் கொடுத்தேன் , அவர் உண்மைச் செய்தியை கூறியிருப்பின் , நான் என் உயிரையே அவருக்குக் கொடுத்திருப்பேனே ' என்று பதில் சொன்னார்கள் . ) பிரிவாற்றாமை தாங்க இயலாது . இறுதியாக அவர்கள் சில நண்பர் களையும் அழைத்துக் கொண்டு , ஷம்சுத் தப்ரேஸைத் தேடி திமிஷ்கிற்கே புறப்பட்டு விட்டார்கள் , அங்கு அவர்கள் ஷம்சுத் தப்ரேஸைத் தேடி , அதன் வீதிகள் எங்கும் ஏங்கிப் புலம்பிய வண்ணம் அலைந்து திரிந்தார்கள் . ஒரு காலத்தில் கெளன்யா நகர வீதியில் அவர்கள் தம் கோவேறு கழுதையின் மீது ஏறிவரும் பொழுது , மாணவர்களும் , மார்க்க மேதைகளும் , பிரபுக்களும் கால் நடையாக அவர்களைச் சூழ வந்தது போக , அவர்களைக் கண்டதும் அரசர்களும் , ஆளுநர்களும் மரியாதையுடன் வரவேற்றது போக , இப்பொழுது அவர்கள் பஞ்சைப் பராரி போல் திமிஷ்க் நகர வீதிகளில் அலைந்து திரிந்தது உள்ளத்தை உருக்கும் காட்சியாக இருந்தது . அறிவாற்றல் மிகுந்த மார்க்க மேதை , ஆன்மீகச் சிகரத்தில் வீற்றிருக்கும் சான்றோர் ஒருவர் , இவ்வாறு ஒரு மனிதருக்காக அலங்கோல நிலையை அடைந்தது , அங்கிருந்த மார்க்க விற்பன்னர் களுக்குப் புரியாத புதிராக இருந்தது . திமிஷ்க் நகர வீதிகளில் பல நாட்களாக கால் நோவ , உடல் நோவ , உள்ளம் நோவ அலைந்து திரிந்தும் அவர்கள் ஷம்சுத் தப்ரேஸைக் காணாத பொழுது , அவர்களின் ஏமாற்றம் அளவைக் கடந்தது . இறுதியாக அவர்கள் தமக்கே தாம் பின் வருமாறு ஆறுதல் கூறிக் கொண்டார்கள் : " நானும் ஷம்சும் இருவரல்ல . ( ஒருவர்தாம் ) அவர் சூரியன் என்றால் ,

அதன் கதிர் தான் நான் . அவர் கடல் என்றால் , அதன் ஒரு திவலை தான் நான் . கதிருக்கு ஒளி அளிப்பது சூரியன் . திவலையை உண்டுபண்ணுவது கடல் . எனவே ஷம்சுக்கும் எனக்கும் இடையே எவ்விதப் பாகுபாடும் இல்லை , ' ' இவ்வாறு தமக்கே தாம் ஆறுதல் கூறிக் கொண்டு , கெளன்யா மீண்ட அவர்கள் , சிறிது காலம் அமைதியாக இருந்தார்கள் . அதன்பின் அவர்களுக்கு மீண்டும் ஷம்சுத் தப்ரேஸின் பிரிவாற்றாமை ஏற்பட , அவர்கள் மீண்டும் திமிஷ்க் சென்று ஷம்சுத்தப் ரேஸைத் தேடி அலைந்தார்கள் , எனினும் காணவில்லை . இதன்பின் தாமே ஷம்ஸ் ; ஷம்பைத் தேடித் தாம் அலைவதெல்லாம் தம்மையே தாம் அறிவதற்காக அலையும் அலைச்சலேயன்றி வேறில்லை ! என்று முடிவுக்கு வந்த மெளலானா ரூமி அவர்கள் . கெளன் யா ! திரும்பினர் , இப்பொழுது எந்த ஆன்மீக அறிவை வேண்டி , ஷம்ஸைத் தேடி அலைந்தார்களோ , அது தம் உள்ளிருந்தே பீரிட்டு வெளியே ! பாய்வதை அவர்கள் கண்டார்கள் . மெளலானா ரூமியின் ஆன்மீக மாணவர்களில் . ஷைகு ஸலாஹுத்தீன் என்பவரும் ஒருவர் . கெளன்யாவின் அண்மையிலிருந்த ஒரு சிற்றூரில் பிறந்த அவரின் தந்தை , மீன்விற்பவர் . அவர் ஒரு பொற்கொல்லர் . கெளன்யா மீண்ட சில நாட்களுக்குள் , மௌலானா ரூமி அவர் களுக்கு மீண்டும் அமைதியின்மை ஏற்பட , அவர்கள் தம் ஆன்மீக மாணவர் ஷைகு ஸலாஹுத்தீனிலே , தம் ஆன்மீக ஆசான் ஷம்சுத் தப்ரேஸைக் கண்டனர் . அவரைக் காணக் காண , அவர்களுக்கு ஆன்மீக உணர்வு அதிகப்படலாயிற்று . எனவே அவர்கள் , அவரைத் தம்முடைய ஷைகாக ஏற்படுத்திக் கொண்டதோடு தம்முடைய நண்பர்களையும் , மாணவர்களையும் அவருக்குக் கீழ்ப்படிந்தொழுகுமாறு பணித்தார்கள் . - ஒரு நாள் மௌலானா ரூமி அவர்களின் மாணவர்கள் , அவர்களை அணுகி , ' ' ஃபத்வா வழங்குவதற்கு தங்களுக்கு அறக்கட்டளையிலிருந்து பதினைந்து தீனாரே தரப்படுகிறது . ஸலாஹுத்தீனுக்கோ ஆயிரம் தீனார் வழங்கப்படுகிறதே ' ' என்று கூறிய பொழுது , " அவருக்குப் பணம் தேவை அதிகம் . எனவே எனக்குத் தரும் பதினைந்து நீளாரையும் அவருக்கு வழங்லி விட்டால் கூட நலமாக இருக்குமென்று தோன்றுகிறது என்று அவர்கள் கூறினார்கள் . அது கேட்டு அவர்களின் மாணவர்கள் எரிச்சலும் , பொறாமையும் கொண்டனர் . " ஷம்சுத் தப்ரேஸாவது படித்தவர் , ஆனால் இவரோ ஒரு

பொற் கொல்லர் .இவருக்கு மெளலானா ரூமி இத்துனை மதிப்பு வழங்கியுள்ளார்களே ' ' என்று கூக்குரலிட்டார்கள் .இது ஷைகு ஸலாதஹ த்தீனின் செவிப்பட்டதும் , ' மெளலானா ரூமி , தம் ஆன்மாவின் மீது அளவற்ற அன்பு செலுத்துகின்றார்கள் .நான் இதனை மறைப்பதற்காக திரையாகவே பயன்படுத்தப்படுகிறேன் .இதனை அவர்கள் அறியாதது ஏனோ ?' ' என்று கூறிக் குறைபட்டுக் கொண்டார் .|ஆம் ;மௌலானா ரூமி ஒரு சுடர் விளக்காக இருந்தனர் .எனினும் அது நன்றாக ஒளி வீசி எரிய ஒரு தூண்டுகோல் வேண்டியிருந்தது .அந்தத் தூண்டுகோலாகவே முன்னர் ஷம்சுத் தப்ரேஸ் இருந்தனர் .இப்பொழுது ஷைகு ஸலாஹுத்தீன் இருந்தார் , அவர் ஹிஜ்ரி 657 ஆம் ஆண்டு முஹர்ரம் முதல் நாள் இறப் பெய்தியதும் , மீண்டும் மௌலானா ரூமி என்ற ஒளி விளக்கு சுடர் வீசி எரிய ஒரு தூண்டுகோல் தேவைப்பட்டது .அத்தூண்டுகோலான மெளலானா ரூமி தம் ஆன்மீக மாணவர் ஷெ லபி ' ஹிஸாமுத்தீன் என்பவரைத் தேர்ந்தெடுத்து , அவர் மீது தம் அன்பைச் சொரிந்தனர் .அர்மீனியாவில் வாழ்ந்து வந்த ஓர் உயரிய குடும்பத்தில் பிறந்த ஹிஸாமுத்தீன் , தம் உடைமைகளையெல்லாம் மெளலானா ரூமிக்காகச் செலவு செய்தவர் .அவ்விதம் செய்தும் மெளலானா ரூமியின் குளியலறையிலுள்ள தண்ணீரைக் கூடத் தாம் ' உளுச் செய்வதற்குப் பயன்படுத்தமாட்டார் .கடும் குளிரிலும் தம் இல்லம் சென்றே ' உளு ' ச் செய்துவிட்டு வருவார் .மௌலானா ரூமியின் மீது அவருக்கு அவ்வளவு மதிப்பு !மெளலானா ரூமியும் , அவர் மீது கொண்டிருந்த பற்றும் , பாசமும் , மதிப்பும் அளவிறந்ததாகும் .மௌலானா ரூமி அவருடன் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால் , அவர்கள் ஹிஸாமுத்தீனுடைய சீடராக இருக்குமோ என்று புதிதாக இங்கு வருபவர்களை ஐயுறச் செய்யும் .மெளலானா ரூமிக்கு எந்த அன்பளிப்புகள் வந்த போதினும் உடனே அவற்றை அவர்கள் ஹிஸாமுத்தீனுக்கே அனுப்பி வைப்பர் .இதைப்பற்றி ஒரு நாள் அவர்களின் மகன் சுல்தான் வலத் குறைபட்டுக் கொண்ட பொழுது , " இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன் . என் கையில் ஒரே ஒரு ரொட்டித் துண்டே இருந்து , ஓரிலட்சம் நல்லோர்கள் பஞ்சத்தால் நலிவதாக இருந்தாலும் , உலகமே அழிந்துவிடும் நிலை ஏற்பட்டாலும் ,

நான் அந்த ரொட்டித் துண்டை மரியாதைக்குரிய ஷெலபிக்கே அனுப்பி வைப்பேன் ' ' என்று அவர்கள் கூறினர் .இப்பொழுதெல்லாம் மௌலானா ரூமி .தமக்கென எதனையும் விரும்பாத துறவியாய் , எளியார்க்கு எளியாராய் , விளங்கினர் .தம் மகள் சுல்தான் வலது பெரிதும் வற்புறுத்தி வேண்டிக் கொண்டதன் பேரில் , அவர்கள் தமக்கு அரசரிடமிருந்தும் , செல்வர்களிடமிருந்தும் வரும் நன்கொடைகளில் ஒரு பகுதியைத் தம் குடும்பத்தினருக்கென ஒதுக்கிக் கொடுத்தனர் .எனினும் தம் இல்லத்தில் உண்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை ஏற்படும் பொழுது தான் , அவர்கள் பெரிதும் மகிழ்ச்சியுறுவர் .அப்பொழுது அவர்கள் , " இப்பொழுது தான் என்னுடைய இல்லம் ஒரு பக்கீருடைய இல்லம் போன்று காட்சி வழங்குகிறது ' ' என்று உவகையுடன் கூறுவர் . தம்மிடம் வந்து ' இல்லை ' என்று கூறி இரப்போருக்கு , அவர்கள் ஒரு போதும் ' இல்லை ' என்று கூறுவதில்லை . எவர் வந்து தம்மிடம் இரப்பினும் , அவருக்கு உடனே எடுத்துக் கொடுப்பதற்கு வசதியாக . .இருக்கும் பொருட்டு , அவர்கள் தம் சட்டைக்கோ , மேலங்கிக்கோ ஒரு ' போதும் பி்தான் மாட்டுவதில்லை , ஒரு நாள் அவர்கள் தம் மாணவர்களுடன் ஒரு முடுக்கு வழியே சென்று கொண்டிருந்தார்கள் . அதன் குறுக்கே ஒரு நாய் படுத்து , அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது . அதன் உறக்கத்தைக் கலைக்கக் கூடாதென்று எண்ணி , அவர்கள் அங்கு சற்று நேரம் தாமதித்தார்கள் . அதற்குள் பொறுமை இழந்த அவர்களின் மாணவர் ஒருவர் அதனை விரட்ட அதுவோ தூக்க வெருட்சியுடன் வெருண்டோடியது . அப்பொழுதுமெளஅவர்களும் அவன் அங்கு வரும் வரை , பொறுமை |யுடன் நின்று கொண்டிருந்தார்கள் .மற்றொரு நாள் அவர்கள் தெரு வழியே சென்று கொண்டிருந்த பொழுது இருவர் , ஒருவர் மற்றவர் மீது வசைமாரி பொழிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் .அதைக் கண்ட அவர்கள் , அவ்விருவர் முன் சென்று , ' ' அன்பர்களே !நீங்கள் ஏன் ஒருவர் மற்றவரை ஏசிக் கொண்டிருக்கிறீர்கள் ?அந்த ஏச்சு , வசை , திட்டு ஆகிய அனைத்தையும் என் மீது வாரிக் கொட்டுங்கள் நான் அவற்றைப் பொறுமையுடன் சகித்துக்

கொள்கிறேன் ' ' என்று கூறினார்கள் .அது கேட்டு அவ்விருவரும் வெட்கமுற்று .அவர்களின் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர் .மெளலானா ரூமியின் மீது அளவற்ற அன்பு செலுத்தி வந்த கொல்லர் ஒருவர் , ஒரு தடவை அவர்களைச் சந்தித்த பொழுது , அவர் களுக்கு ஏழு தடவை ' ஸலாம் ' உரைத்தார் .அவருக்கு அவர்கள் ஏழு தடவையும் அலுக்காது அழகான முறையில் பதில் ' ஸலாம் கூறினார்கள் .ஏழைகள் மீது இவ்வளவு அன்பு செலுத்திய அவர்கள் அரசர்களும் , அரசிளங்குமரர்களும் , பிரபுக்களும் , செல்வர்களும் தம்மைக் காண வருவதைப் பெரிதும் வெறுத்தார்கள் .ஒரு தடவை செல்வர் ஒருவர் அவர்களைக் காண வந்த பொழுது , ' ' தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும் .அதிக வேலையின் காரணமாக நான் தங்களை அடிக்கடி வந்து காண இயல்வதில்லை , ' ' என்று கூறிக் குறைபட்டுக் கொண்டார் .அதற்கு அவர்கள் , ' அதைப்பற்றிக் கவலையுறாதீர்கள் !என்னை வந்து காணாதவர்கள் மீது தான் அதிகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளேன் ' ' என்று பதில் கூறினார்கள் .பெண்களை அவர்கள் பெரிதும் மதித்தனர் .தம் வீட்டுப் பணிப் பெண் மீது கூட அவர்கள் அன்புடன் நடந்து கொண்டனர் .அவ்விதமே !நடந்து கொள்ளுமாறு தம் மனைவிக்கும் அறிவுரை பகர்ந்தனர் .' ' பெண்கள் இறைவனின் படைப்பு மட்டுமல்ல , இறைவனின் ஒரு சுடருமாவர் ' ' என்று அவர்கள் கூறினார்கள் .மெளலானா ரூமியிடம் ஹாஸ்ய உணர்வும் அமைந்திருந்தது .ஒரு நாள் அவர்கள் தம் சீடர்களுடன் ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்த பொழுது , சில நாய்கள் ஒன்றின் கழுத்தின் மீது மற்றொன்று தலையை வைத்த வண்ணம் , அமைதியாகப் படுத்துறங்கிக் கொண்டிருந்தன .அது .கண்டு அவர்கள் , அவற்றின் உறக்கத்தைக் கலைக்கக் கூடாதென்றெண்ணி !ஒதுங்கிச் சென்றனர் .அப்பொழுது அவர்களின் சீடர் ஒருவர் , " எவ்வளவு ஒற்றுமையுடன் அவை உள்ளன ' ' என்று வியந்து கூறினார் . அப்பொழுது மெளலானா ரூமி குறுக்கிட்டு : ' ' அவற்றின் முன்னால் ஒர் எலும்புத் துண்டை , வீசி எறிந்த பின்பல்லவா , அவற்றின் ஒற்றுமையைப் பார்க்க வேண்டும் ? " என்று கூறினர் .- இறைவனைத் தொழுவதில் அவர்கள் எவருக்கும் இளைத்தவராக இருக்கவில்லை .சில பொழுது மஃரிபு ( பொழுதடைந்ததும் தொழும் ) .தொழுகையைத் தொழத் தொடங்கிவிட்டால் , பொழுது விடியும் வரை தொழுது கொண்டே இருப்பார்கள் .அவர்கள் இரவில் படுப்பதற்கெனப் பாயும் கிடையாது ;தலையணையும் கிடையாது , ஓய்வு கொள்வதற்காக

அவர்கள் தம் விலாவைப் பூமியில் சிறிது சாய்ப்பதுமில்லை , உறக்கம் மிகுந்து விடின் , உட்கார்ந்த நிலையிலேயே சற்று நேரம் உறங்குவார்கள் . நம் நிலையைப் பற்றி அவர்கள் குறிப்பிடும் பொழுது , " முள்ளாலான போர்வையைப் போர்த்திக் கொண்டுள்ள ஒருவன் எவ்வாறு படுத்துறங்க இயலும் ? ' ' என்று கூறுவார்கள் , - பேரின்ப இசை நிகழ்ச்சியின் போது அவர்களின் மாணவர்கள் களைப்புற்று உறங்கிவிடின் , அவர்களும் தம் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு , அவற்றின் மீது தம் தலையை வைத்த வண்ணம் உறங்குவது போன்று பாவனை செய்வர் . அவர்கள் அனைவரும் உறங்கிய பின் அவர்களின் உறக்கத்தைக் கலைக்கா வண்ணம் மெதுவாக எழுந்து சென்று இறைவனைத் துதிப்பதிலும் தியானிப்பதிலும் ஈடுபட்டு விடுவர் . அவர்கள் எந்த அவல்களில் ஈடுபட்ட போதிலும் தொழுகை நேரம் வந்ததும் , வேறுபட்ட மனிதராக ஆகிவிடுவர் . உடனே அவர்கள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு , தொழுகையில் ஈடுபட்டு விடுவர் , அப்பொழுது அவர்களின் முகம் வெளிறிவிடும் . அவர்கள் தம்மை மறந்த நிலையில் தொழுவர் . ஓரிரவு முழுவதும் இரண்டு ரக்அத்துகளே தொழுது முடிப்பர் . இதைப்பற்றி அவர்கள் ஒரு கவிதையில் பின்வரு மாறு கூறுகின்றனர் . ' மஃரிப் தொழுகை தொழுத பின் ஒருவர் விளக்கேற்றவோ , உணவருந்தவோ செய்கிறார் . ஆனால் நானோ , என்னை விட்டுப் பிரிந்து சென்ற ) தோழர்களை ! நினைத்துக் கண்ணீர் சிந்தவும் , பெருமூச்சு விடவும் செய்கிறேன் . ! கண்ணீருடன் நான் ' உளு ' ச் செய்கிறேன் ; என் இறைஞ்சுதல் நெருப்பால் நிறைந்துள்ளது . தொழுகையின் அழைப்பொலி கேட்டதும் , பள்ளியின் வாயில்கள் வெளிச்சத்தால் ஒளிர்கின்றன . பேரின்ப மயக்கமுற்ற ஒருவரின் தொழுகை , எவ்வளவு அற்புதமாக உள்ள து ! அது மாசுமறுவற்றது என்று கூறுவாயாக ! அது நேரத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டது . நான் இரண்டு ' ரகஅத் துகளோ , நான்கு ' ரகஅத்துகளோ தொழுதேன் . தான் தொழுகையில் என்ன ஓதினேன் என்று எனக்குத் தெரியாது .

நான் எவ்வாறு '
ஹ க் ' குடைய வாசலைத் தட்டுவேன் .என்னுடைய கைகளும் இதயமும் என்னுடையவையல்லவே .உம்மைப் போன்ற ஒரு நண்பர் என் இதயத்தைக் களவாடிச் சென்று விட்டாரே .இப்பொழுது இறைவன் தான் எனக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் .இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன் .எப்பொழுது தொழுகை முடிந்தது ?யார் தொழ வைத்தது என்பது எனக்குத் தெரியாது ." இவ்வாறு தொழும் மெளலானா ரூமி அவர்கள் , கடுமையான குளிர் நிரம்பிய இரவிலும் , ' தஹஜ்ஜுத் தொழுகை தொழத் தவறுவதில்லை . அப்பொழுது கண்ணீர் அவர்களின் தாடியில் விழுந்து உறைந்து , பனிக்கட்டி . யாகிவிடும் . எனினும் அதனைக் கூட அவர்கள் உணராது , தம்மை மறந்த நிலையில் தொழுது கொண்டிருப்பார்கள் . இத்தகு மாண்பாளர் , துவக்கத்தில் ஷம்சுத் தப்ரேஸையும் , பின்னர் ஷைகுஸலாஹுத்தினையும் , அதன்பின் ஷெலி ஹிஸாமுத்தினையும் தம்முடைய கூட்டாளராகக் கொண்டு , அவர்கள் மீது தம் அன்பைச் சொரிந்தார்களென்றால் , அதற்குக் காரணம் மெளலானா ரூமிக்கும் அவர்களுக்கும் இடையேயிருந்த கருத்தொற்றுமை தான் . அவர்கள் நால்வரும் இறைகாதல் பற்றி ஒருமித்த கருத்துடையவர்களாக இருந்தனர் . அதன் காரணமாக ஒருவர் மற்றொருவரை நேசித்தனர் . ஒரு தடவை சுல்தான் வலத் தம் தந்தையை நோக்கி , அம்மூவர் மீதும் அவர்கள் அளவமௌலானா ரூமியின் மாணவர்கள் ஹகீம் ஸனாயியின் ஹதீக்காவையோ , அத்தாருடையே மந்திக்குத் தைரையோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்ட ஹிஸாமுத்தீன் , அவர்களை அணுகி , " ஏன் இவற்றைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் ? ' என்று வினவிய பொழுது , ' ' என் செய்வது ? இவற்றில் தாம் நாங்கள் ஆன்மீக ஞானம் ஒளிர்வதைக் காண்கிறோம் . தெய்வீகக் காதல் மிளிர்வதைக் காண்கிறோம் . நம்முடை 1 ஆசானுடையகவிதைகளில் அவற்றைக் காணவில்லையே ' என்ற சறினார்கள் .

ஒருநாள் மௌலானா ரூமியுடன் ஹிஸாமுத்தீன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது .' ஹதீக்கா ' போன்றும் , ' மந்திக்குத் தைர் ' போன்றும் - இல்லை , இல்லை - அவற்றை விட மேலான முறையில் ஒரு ஞான காவியம் எழுத வேண்டும் என்று அவர்களை வேண்டிக் கொண்டார் .உடனே மௌலானா ரூமி அவர்கள் , சென்ற இரவு , நானும் இதே போன்று எண்ணினேன் .அதன் காரணமாகப் பதினெட்டு அடிகளை எழுதியுள்ளேன் , ' ' என்று கூறித் தம் தலைப் பாகையிலிருந்து ஒரு காகிதச் சுருளை எடுத்து ஹிஸாமுத்தீனிடம் கொடுத்தனர் .அது ' ' மூங்கிலாலான புல்லாங்குழலிலிருந்து அது என்ன கதை கூறுகிறது என்பதைக் கேட்போம் ' ' என்று தொடங்கி , ' ' இப்பொழுது என் பேச்சு முடிந்தது .உங்கள் மீது சாந்தி உண்டாவதாக !' ' என்று முடிந்திருந்தது .அதைப் படித்து முடித்ததும் , ஹிஸாமுத்தீன் அளவற்ற வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார் .தாம் எண்ணியதை அவர்களும் எண்ணி !யுள்ளார்களே என்பதானால் ஏற்பட்ட வியப்பு அது .தாம் விரும்பியதை அவர்களும் செய்யத் தொடங்கி விட்டார்கள் என்பதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது .இதுவே உலகப்புகழ் பெற்ற ஞான காவியமான மத்ன ?ஷரீஃபின் தொடக்கமாகும் .இதன்பின் ஒவ்வொரு நாள் இரவிலும் மத்னவீ ஷரீஃபின் வேலை வேகமாக நடந்தது .மெளலானா ரூமியின் வாயிலிருந்தும் கவிதை வெள்ளம் கரை புரண்டோடும் .அதனை உடனுக்குடன் ஹிஸாமுத்தீன் எழுதிக் கொள்வார் .இறுதியாக , எழுதியவை அனைத்தையும் ஒளிய குரலில் உரத்து சப்தமிட்டுப் பாடுவார் .அனைவரும் அதனைக் கேட்டுச் சொக்கி மகிழ்வர் .மெளலானா ரூமியின் இல்லத்தில் ஒரு தூண் இருந்தது .சில பொழுது அவர்கள் பேரின்ப போதை மேலிட்டதும் , தன்னுணர்வற்றவர் .களாய் அத்தனைப் பற்றிப் பிடித்துக் கொண்டு , அதனைச் சுற்றிச் சுழன்று கொண்டு வருவார்கள் .அப்பொழுது அவர்களின் வாய் , கவிமாரி பொழியும் .உடனே ஹிஸாமுத்தீனும் , ஏனையோரும் அதனை எழுதிக் கொள்வர் .இவ்வாறு இரவு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் , மதளவீ ஷரீஃபின் முதல் தொகுதி எழுதி முடிக்கப்பட்டதும் , ஹிஸாமுத்தீனின் துணைவியார் கடுமையான நோய்வாய்ப்பட்டு இறப்பெய்தினார் .அதன் காரணமாக ஹிஸாமுத்தீன் பெரிதும் மன முடைந்து ஆற்றொணாத் துக்கத்தில் ஆழ்ந்தார் .எனவே இரண்  டாண்டுகள் - வரை மத்னவீ ஷரீஃபின் வேலை தடைப்பட்டது .பின்னர் மீண்டும் ,

துவக்கப்பட்டு , மௌலானா ரூமி இறப்பெய்தும் வரை பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது .ஆறு தொகுதிகளில் 26 ,  ைஅடிகளைக் கொண்ட அந்த மாபெரும் ஞான காவியம் , பாரகே இலக்கியத்தின் சிகரமெனப் போற்றப்படுகிறது .பாரசீக மொழியில் ஃபிர்தெளஸியின் ' ஷா நாமா ' வும் , ஸஅத்தியின் “ குலிஸ்தானு ' ம் , ஹாபிஃப்டைய , ' நீவானு ம் சிறப்புற்று விளங்கிய போதினும் , இவை மூன்றினுக்கும் மேலான இடத்தை மெளலானா ரூமியின் ' மத்னவீ ஷரீஃப் பெற்றுத் தன்னிகரற்று விளங்குகிறது .அதனை அறிஞர் பெருமக்கள் , " பாரசீக மொழியிலுள்ள திருக்குர்ஆன் " என்று போற்றிப் புகழ்கிறார்கள் .திருக்குர்ஆனின் சாரத்தைப் பிழிந்து , அதனைச் சமைத்துள்ளதாக மெளலானா ரூமியே கூறுகிறார்கள் .அதில் மார்க்கத்தின் வேர்களும் , இயற்கை இரகசியங்களின் கண்டுபிடிப்புகளும் , தெய்வீக அறிவும் பொதிந்திருப்பதாக அதன் முதல் தொகுதியின் அரபி முன்னுரையில் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் .அதிலே மெளலானா ரூமி உன்னதமான உயரிய கருத்துக்களை , ஆழமான ஞானங்களை , இனிய உவமானங்கள் , கதைகள் மூலமாக எல்லார்க்கும் விளங்கக்கூடிய எளிய முறையில் எடுத்துரைக்கிறார்கள் .இதுவே , அவர்களின் நூல் , மக்களின் உள்ளங்களைக் கைப்பற்றி அவற்றில் கொலு வீற்றிருப்பதற்கு மூல காரணம் என்று கூறலாம் .' இறுதியாக மெளலானா ரூமியின் மாண்பார்ந்த பெருவாழ்வும் , தன் முடிவை நெருங்கியது .மக்கள் என்னை இவ்வுலகில் இருக்க வேண்டுமென்று விரும்பிய போதினும் , ஷம்சுத்தப்ரேஸ் என்னை அங்கு அழைத்துக் கொண்டிருக்கிறார் ' என்று கூறிக் கொண்டிருந்த மெளலானா !ரூமியும் , தம் முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்து , அதற்கான ஆயத்தங் களைச் செய்யத் தொடங்கினார்கள் .அவர்களின் பூத உடலை ஏற்றுக் கொள்ளத் தயாராகும் முறையில் மண்ணும் அசைந்தது .அவர்கள் இறப்பதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பிருந்து , கெளன்யா நகரில் இலேசான நில அதிர்ச்சிகள் ஏற்பட ஆரம்பித்தன .அவர்கள் இறப்புப் படுக்கையில் கிடந்த ஏழு நாட்களும் |அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன .அது கண்டு !மக்கள் திடுக்குற்று ஓடி வந்து , மெளலானா ரூமி அவர்களிடம் உதவி |வேண்டிய பொழுது ." பயப்படாதீர்கள் ! பாவம் ! பூமி பசித்துக் கொள் டுள்ளது . கொழுத்த உணவை அது விரும்பி ஏங்கிக் கொண்டுள்ளது . விரைவில் அவ்வுணவு அதற்குக் கிடைக்கும் . அதன்பின் அது பசி தீர்த அமைதியுற்று விடும் ' என்று அவர்கள் கூறினார்கள் , இப்பொழுது ஷைகு ஸத்ருத்தின் சில தர்வேஷ்களுடன் , அவர்களைக் காண வந்த பொழுது , அவர்களுக்கு ஆறுதல் கூறும்

முறையில் , ' ' இறைவன் தங்களுக்கு விரைவில் நலம் நல்கு வானாக !' ' என்று கூறினார் .அது கேட்டு அவர்கள் , ' ' காதலனுக்கும் காதலிக்கும் ஒரு மயிரிழையே இடை .ருக்கிறது .அந்த இடைவெளியும் அகன்று , முடிவற்ற பேரொலியில் நான் சேர்ந்து விடுவதைத் தாங்கள் விரும்ப வில்லையா ?' என்று கேட்டார்கள் .இவ்வாறு கூறிய மெளலானா ருமி , அவர்கள் , ஹிஜ்ரி 672 ஆம் ஆண்டு , ஜாமதியுல் ஆகிர் மாதம் ஐந்தாம் நாள் ;அறுபத்தெட்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் இவ்வுலகில் வாழ்ந்த பின் மறுமைப் பேற்றை அடைந்தார்கள் .அவர்களின் உடல் அடக்கப் பெறுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பொழுது .மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுத வண்ணம் , அதனைப் பின் தொடர்ந்து சென்றனர் , அந்த மக்கள் திரளில் ஏராளமான யூதர்களும் , கிறிஸ்தவர்களும் தங்களின் வேத நூல்களைப் படித்த வண்ணம் வந்து கொண்டிருப்பதைக் கண்ட முஸ்லிம்கள் , அவர்களை அங்கிருந்து விரட்டிய பொழுது , அவர்கள் திரும்பிச் செல்லாது தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர் .இதனால் முஸ்லிம்களுக்கும் , யூதர்களுக்கும் , கிறிஸ்தவர்களுக்கும் , இடையே கைகலப்பு ஏற்பட்டு விடுமோ என்னும் நிலையே ஏற்பட்டு விட்டது .இச்செய்தி அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட கெளன்யாவின் ஆளுநர் முயீனுத்தீன் பர்வானாவுக்குத் தெரியவந்த பொழுது , அவர் யூத ரப்பிகளையும் , கிறிஸ்தவப் பாதிரிமார்களையும் அழைத்து , ' ஒரு முஸ்லிம் மகானின் மயான ஊர்வலத்தில் நீங்களும் ஏன் கலந்து கொள்கிறீர்கள் ?' ' என்ற வினவிய பொழுது , " எங்களின் வேதங்களில் நபிமார்களின் பண்புகள் எத்தகையதாய் இருந்தன என்று பொறிக்கப் பட்டிருந்ததோ , அதனை நாங்கள் இவர்களிலே கண்கூடாகக் கண்டோம் . எனவே , இவர்களைக் கெளரவிக்கும் முறையில் , நாங்களும் இந்த மயான ஊர்வலத்திலே கலந்து கொள்கிறோம் என்று அவர்கள் பதில் கூறினர் . அது கேட்டு மகிழ்ந்த ஆளுநர் , அவர்களையும் அந்த மயான உணர்வலத்தில் தொடர்ந்துவர அனுமதி வழங்கனார் . ஊர்வலம் செல்லச் செல்ல மக்கள் அதில் ஓடோடி வந்து கலந்து கொண்டதால் , அது நீண்டு கொண்டே சென்றது . எனவே வைகறையில் புறப்பட்ட ஜனாஸா அடக்கலிடத்தை அடையும் பொழுது . பொழுது ! பட்டுவிட்டது . அதன் பின் அவர்களின் பொன்னுடல் , எல்லாவிதமான மரியாதைகளுடறும் . அவர்களின் தந்தையின் அடக்கம் தாள் மீது சுல்தான் அலாவத்தின் கைக்கு பாத்தால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

நன்றி..