بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
அமைதியை போதிக்கும் அற்புத மார்க்கம்
وَإِنْ جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ - الأنفال: 61
عَنْ جَرِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ يُحْرَمِ الرِّفْقَ، يُحْرَمِ الْخَيْرَ» صحيح مسلم
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று உலகில், தீவிரவாதத்தின்/பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் நற்பெயரை களங்கப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. இஸ்லாம் என்றால் கலவரம்,முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இஸ்லாம் தன்பெயராலும் கொள்கையாலும் செயல்பாட்டாலும் அமைதி மார்க்கம்.
v இஸ்லாம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் ஸலாம் என்பதாகும். ஸலாம் என்றால் அமைதி அடைதல்,பாதுகாப்புப் பெறுதல் என்பது இதன் பொருள். இஸ்லாம் என்றால் சரணடைதல், கட்டுப்படுதல் என்று பொருள்.
அதாவது படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை இது குறிக்கின்றது. இதன்படி, படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர் முஸ்லிம் ஆவார். பெயர் அடிப்படையில் இஸ்லாம் வன்முறைக்கு அப்பாற்பட்டது; அந்நியப்பட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த சான்றாகும்.
v ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை,சந்திக்கும் போது கூறுகின்ற முகமன், "அஸ்ஸலாமு அலைக்கும்'என்பதாகும். பதிலுக்கு அவர், "வ அலைக்குமுஸ்ஸலாம்' என்று கூறுவார். இந்த இரண்டு வாசகங்களுக்கும் பொருள், "உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக!'என்பதாகும்.
v ஏக இறைவன் அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று “ஸலாம்” [சாந்தி மிக்கவன்] “அல்-முஃமின்”[அமைதி அளிப்பவன்] என்பதாகும்.
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُالسَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ - الحشر: 23
அவன்தான் அல்லாஹ்! அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லை. அவன்தான் அரசன்; மிகவும் தூய்மையானவன்.சாந்தியுடையவன்; அமைதி அளிப்பவன்; பாதுகாவலன்;அனைவரையும் மிகைத்தவன்;தனது கட்டளையை வலிமையுடன் செயல்படுத்தக் கூடியவன்;பெருமைக்குரியவன். அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அல்-குர்ஆன்:59:23.
v இறைத்தூதர் ஸல் அவர்களின் பெயர்களில் ஒன்று கருணை நபி என்பதாகும்.
عَنْ عُثْمَانَ بْنِ حُنَيْفٍ، أَنَّ رَجُلًا ضَرِيرَ البَصَرِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ادْعُ اللَّهَ أَنْ يُعَافِيَنِي قَالَ: «إِنْ شِئْتَ دَعَوْتُ، وَإِنْ شِئْتَ صَبَرْتَ فَهُوَ خَيْرٌ لَكَ» . قَالَ: فَادْعُهْ، قَالَ: فَأَمَرَهُ أَنْ يَتَوَضَّأَ فَيُحْسِنَ وُضُوءَهُ وَيَدْعُوَ بِهَذَا الدُّعَاءِ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ، إِنِّي تَوَجَّهْتُ بِكَ إِلَى رَبِّي فِي حَاجَتِي هَذِهِ لِتُقْضَى لِيَ، اللَّهُمَّ فَشَفِّعْهُ فِيَّ»سنن الترمذي
கண்பார்வை பாதித்த ஒருவர் நபி[ஸல்] அவர்களிடம் வந்து,“இறைவன் எனக்கு சுகமளிக்க துஆச் செய்யுங்கள்” என்றார்.அதற்கு நபி [ஸல்] அவர்கள் “நீர் விரும்பினால் உமக்காக துஆச் செய்கிறேன். மேலும் நீர் விரும்பினால் பொறுமையாக இருப்பீராக அது உமக்கு நல்லதும் கூட” என்றார்கள். அதற்கவர்“இறைவனிடம் துஆச் செய்யுங்கள்”என்றார். அப்போது நபி [ஸல்]அவர்கள், அவரிடம் நல்ல முறையில் ஒளூச் செய்து, பின்வரும் துஆவை ஓதச்சொன்னார்கள். அறிவிப்பாளர் உஸ்மானிப்னு ஹுனைப் [ரலி] நூல்: திர்மிதி
[அபூ தாவூதுடைய அறிவிப்பில் நல்ல முறையில் ஒளூச் செய்து இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு பின் வரும் துஆவை ஓதச்சொன்னார்கள் என்று வருகிறது.]
«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ، إِنِّي تَوَجَّهْتُ بِكَ إِلَى رَبِّي فِي حَاجَتِي هَذِهِ لِتُقْضَى لِيَ، اللَّهُمَّ فَشَفِّعْهُ فِيَّ
v இறைவனின் திருப்பொருத்தப்படி வாழ்பவருக்காக அவன் தயார் செய்திருக்கும் மாளிகையின் பெயர் “தாருஸ் ஸலாம்”அமைதியின் இல்லம்.
وَاللَّهُ يَدْعُو إِلَى دَارِ السَّلَامِ وَيَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ (25)
அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோருக்கு நேரான பாதையைக் காட்டுகிறான்.அல்-குர்ஆன்: 10:25
கொள்கையில் அமைதி மார்க்கம்
அமைதி மற்றும் பாதுகாப்பு நிறைந்த சூழலை இறைவனிடமிருந்து கிடைக்கும் மிகப்பெரும் [நிஃமத்] பேறாக கருகிறது இஸ்லாம்.
فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ (3) الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ (4) قريش: 4
இவ்வீட்டின் (கஃபாவின்)இறைவனை அவர்கள்வணங்குவார்களாக.
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். அல்-குர்ஆன்:106:3,4.
இதற்கு மாறாக அமைதி நீங்கி அச்சமும் பதற்றமும் நிறைந்த சூழல் உருவாகுவதை இறைவனுடைய தண்டனை என்றும் இஸ்லாம் கூறும்.
وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ -النحل: 112
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும்,நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது;ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீயச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான். அல்-குர்ஆன்: 16:112.
அதனால்தான் போரா?சமாதானமா? என்று வந்தால் சாந்தியும் சமாதானமும் நிறைந்த அந்த இறைவன் சமாதானத்தையே முன்னிறுத்துகின்றான்.
وَإِنْ جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ - الأنفال: 61
அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து(இணங்கி) வந்தால், நீங்களும் அதன்பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதேஉறுதியான நம்பிக்கை வைப்பீராக -நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்)செவியுறுவோனாகவும்,நன்கறிபவனாகவும் இருக்கின்றான். அல்-குர்ஆன்: 8:61.
v இஸ்லாம் உலக மக்கள் அனைவருக்கும் நிம்மதியளிக்கும் மார்க்கம் என்ற கருத்தை தன் பெயரிலேயே தாங்கி இருப்பதால் பிறருக்கு துன்பம் தரும் எந்த செயலையும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை,அங்கீகரிப்பதுமில்லை.
v முஸ்லிம்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்குப் பெயர் ஈமான். அது மற்றவருக்கு பாதுகாப்பைத்தருவது என்ற கருத்தையும் உள்ளடக்கியது.
v எனவே எவரையும் அச்சுறுத்தும் விதமாகக்கூட நடந்து கொள்ள ஒரு முஃமினுக்கு அனுமதியில்லை.
6016 - عَنْ أَبِي شُرَيْحٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ» قِيلَ: وَمَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِي لاَ يَأْمَنُ جَارُهُ بَوَايِقَهُ» - صحيح البخاري
6016. அபூ ஷுரைஹ் (ரலி)அறிவித்தார்
'அல்லாஹ்வீன் மீதாணையாக!அவன் இறைநம்பிக்கையாளன்அல்லன். அல்லாஹ்வின்மீதாணையாக! அவன்இறைநம்பிக்கையாளன் அல்லன்.அல்லாஹ்வின் மீதாணையாகஅவன் இறைநம்பிக்கையாளன்அல்லன்' என்று (மூன்று முறை)இறைத்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள். 'அவன் யார்?இறைத்தூதர் அவர்களே!' என்றுகேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்)அவர்கள் 'எவனுடையநாசவேலைகளிலிருந்துஅவனுடைய அண்டை வீட்டார்பாதுகாப்பு உணர்வைப்பெறவில்லையோ அவன்தான்'என்று பதிலளித்தார்கள்.
v சக மனிதனின் உயிர், பொருள்,உடமை, மானம் இவைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தராத எந்த முஃமினின் ஈமானும் மறுபரிசீலனைக்குறியது என்கிற அளவுக்கு கொள்கையளவிலும் அமைதிக்கு முக்கியத்துவம் தருகிறது இஸ்லாம்.
பிறருக்கு துன்பம் தராமல் தவிர்ந்து கொள்வதும் வணக்கமே!
عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ[أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ] ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ» قِيلَ: أَرَأَيْتَ إِنْ لَمْ يَجِدْ؟ قَالَ «يَعْتَمِلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ» قَالَ قِيلَ: أَرَأَيْتَ إِنْ لَمْ يَسْتَطِعْ؟ قَالَ: «يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ» قَالَ قِيلَ لَهُ: أَرَأَيْتَ إِنْ لَمْ يَسْتَطِعْ؟ قَالَ: «يَأْمُرُ بِالْمَعْرُوفِ أَوِ الْخَيْرِ» قَالَ: أَرَأَيْتَ إِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: «يُمْسِكُ عَنِ الشَّرِّ، فَإِنَّهَا صَدَقَةٌ» صحيح مسلم
1834. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "தர்மம்செய்வது ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் கடமையாகும்" என்றுகூறினார்கள். அப்போது "(தர்மம்செய்ய ஏதும்) அவருக்குக்கிடைக்கவில்லையானால் (என்னசெய்வது), சொல்லுங்கள்?" என்றுகேட்கப்பட்டது. நபி (ஸல்)அவர்கள், "அவர் தம் கைகளால்உழைத்துத் தாமும் பயனடைவார்;பிறருக்கும் தர்மம் செய்வார்"என்று சொன்னார்கள். "அவருக்கு(உழைக்கஉடலில்) தெம்பு இல்லையானால்(என்ன செய்வார்),சொல்லுங்கள்?" என்றுகேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள்"பாதிக்கப்பட்ட தேவையாளிக்குஅவர் உதவட்டும்" என்றார்கள். "(இதற்கும் அவர்) சக்திபெறாவிட்டால் (என்ன செய்வது),சொல்லுங்கள்?" என்றுகேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள்"அவர் "நல்லதை" அல்லது"நற்செயலை"(ச் செய்யும்படிபிறரை) ஏவட்டும்" என்றார்கள். "(இயலாமையால் இதையும்) அவர்செய்யாவிட்டால் (என்னசெய்வது), சொல்லுங்கள்?" என்றுகேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், "அவர் தீங்கு செய்யாமல்இருக்கட்டும். அதுவே தர்மம்தான்"என்றார்கள்.
v இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறுவதை விடவும் உலகில் அமைதியை நிலைநிறுத்தும் மார்க்கம் என்று கூறுவதே மிகவும் பொருத்தமானது, ஏனெனில் தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் எவரும் அடிப்படையாக –அடுத்தவர்களுக்கு தீங்கிழைப்பதிலிருந்து தன்னை முழுமையாக தடுத்தாகவேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔وَالمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ» سنن الترمذي
"முஃமின் - இறை நம்பிக்கையாளர் யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யாரைப்பற்றி அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்'என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூல்: திர்மிதி
2465عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِيَّاكُمْ وَالجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ» ، فَقَالُوا: مَا لَنَا بُدٌّ، إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا، قَالَ: «فَإِذَا أَبَيْتُمْ إِلَّا المَجَالِسَ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا» ، قَالُوا: وَمَا حَقُّ الطَّرِيقِ؟ قَالَ: «غَضُّ البَصَرِ، وَكَفُّ الأَذَى، وَرَدُّ السَّلاَمِ، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ، وَنَهْيٌ عَنِ المُنْكَرِ» صحيح البخاري
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
"நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள்சபைகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்துஅம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின்உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத்தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும்,சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன்உரிமைகள்) ஆகும்" என்று பதிலளித்தார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 2465.
v இஸ்லாம் கூறும் வணக்கம் என்பது ஆலயங்களுக்குள்ளும் ஒருசில நிமிடங்களுக்குள்ளும் மட்டும் முடிந்து விடக்கூடியதல்ல. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு கனமும் கடைபிடிக்கப்பட வேண்டிய அளவுக்கு மிக விசாலமானது.
v அந்த வகையில் மனித சமுதாயத்திற்கு பலன்தரும் விதம் செய்யப்படும் பெரும் பெரும் அறக்காரியங்கள் முதல், சிறு சிறு காரியங்கள் வரை அனைத்தையும் வணக்கமாக பார்க்கிறது இஸ்லாம்.
652 - عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ» صحيح البخاري
”ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதை விட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி). நூல்: ஸஹீஹுல் புஹாரி :652
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ» صحيح مسلم
58. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான" கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும்பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: ஸஹீஹ் முஸ்லிம்.
v ஒரு முஸ்லிமின் செயல்பாடு பிறருக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உபத்திரமாக, ஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட இஸ்லாமிய போதனைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
நடைமுறையில் அமைதி மார்க்கம்
அமைதி கெடுவதற்கான காரணங்களில் சண்டை சச்சரவும் ஒன்று. அதை இஸ்லாம்ஊக்கப்படுத்தியதா?அங்கீகரித்ததா? அல்லதுஅனுமதித்ததா?
2457 - عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللَّهِ الأَلَدُّ الخَصِمُ»- صحيح البخاري
2457. இறைத்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்:
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயேமிகவும் வெறுப்புக்குரியவன்கடுமையாக (எப்போது பார்த்தாலும்)சச்சரவு செய்துகொண்டிருப்பவனேயாவான்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.ஸஹீஹுல் புஹாரீ.
3559 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: " لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا، وَكَانَ يَقُولُ: «إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلاَقًا»-صحيح البخاري
3559. அப்துல்லாஹ் இப்னுஅம்ர்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள்இயற்கையாகவோ,செயற்கையாகவோ கெட்டவார்த்தை பேசுபவர்களாகஇருந்ததில்லை. 'உங்களில்சிறந்தவர் உங்களில்நற்குணமுடையவரே' என்றுஅவர்கள் கூறுவார்கள். ஸஹீஹுல் புஹாரீ.
v பசித்திருந்து பட்டினி கிடந்து கடைபிடிக்கும் நோன்பின் போது கோபம் மேலிட்டு சண்டை சச்சரவு ஏற்பட அதிகம் வாய்ப்பு இருப்பதால் அது குறிப்பிட்டு தடுக்கப்படுகிறது.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ " صحيح البخاري
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.................................... உங்களில்ஒருவர் நோன்பு நோற்றால் அவர்கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்!கூச்சலிட்டு சச்சரவு செய்யவேண்டாம்! யாரேனும் அவரைஏசினால் அல்லது அவருடன்சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!'என்று அவர் சொல்லட்டும்!
அமைதி கெடுவதற்கானகாரணங்களில் அநீதி இழைப்பதும்ஒன்று. அதை இஸ்லாம்ஊக்கப்படுத்தியதா?அங்கீகரித்ததா? அல்லதுஅனுமதித்ததா?
2453 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّ أَبَا سَلَمَةَ، حَدَّثَهُ أَنَّهُ، كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ فَذَكَرَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَتْ: يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبِ الأَرْضَ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»-صحيح البخاري
2453. அபூ ஸலமா (ரலி)அறிவித்தார்.
எனக்கும் வேறு சிலருக்கும்இடையே ஒரு நிலம் சம்பந்தமானதகராறு இருந்து வந்தது. அதைநான் ஆயிஷா(ரலி) அவர்களிடம்கூறினேன். அவர்கள்சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக்கொள்வதைத்) தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில்,நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அங்குலம்அளவுநிலத்தை அநியாயமாக அபகரித்துக்கொள்கிறவரின் கழுத்தில் ஏழுநிலங்கள் மாலையாக (மறுமையில்)கட்டித் தொங்க விடப்படும்' என்றுகூறினார்கள். ஸஹீஹுல் புஹாரீ.
அநீதி இழைப்பதை இஸ்லாம் தவிர்க்கும் படிச் சொல்கிறது என்பதையும் தாண்டி, யாரேனும் அநீதி இழைப்பதைக் கண்டால் அதைத் தடுக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருப்பதாகச் சொல்கிறது இஸ்லாம்.
2444 - عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، هَذَا نَنْصُرُهُ مَظْلُومًا، فَكَيْفَ نَنْصُرُهُ ظَالِمًا؟ قَالَ: «تَأْخُذُ فَوْقَ يَدَيْهِ»- صحيح البخاري
2444. அனஸ் (ரலி)அறிவித்தார்.
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'உன் சகோதரன் அக்கிரமக்காரனாகஇருக்கும் நிலையிலும்அக்கிரமத்துக்குள்ளானவனாகஇருக்கும் நிலையிலும் அவனுக்குஉதவி செய்' என்று கூறினார்கள்.மக்கள், 'இறைத்தூதர் அவர்களே!அக்கிரமத்துக்குள்ளானவனுக்குநாங்கள் உதவுவோம்.அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படிஉதவுவோம்?' என்று கேட்டனர்.நபி(ஸல்) அவர்கள், 'அவனுடையகைகளைப் பிடித்து (அக்கிரமம்செய்யவிடாமல் தடுத்து)க்கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச்செய்யும் உதவி)' என்றுகூறினார்கள். ஸஹீஹுல் புஹாரீ.
ஒரு மனிதன் அல்லது ஒரு குடும்பம் அல்லது ஒரு சமூகம் அநீதி இழைக்கப்பட்டால் பாதிக்கப்படவர்களின் பக்கம் நின்றுதான் நாம் பேச வேண்டும் என்று மார்க்கம் கூறுகிறது.
1239 - عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: " أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ: أَمَرَنَا بِاتِّبَاعِ الجَنَائِزِ، وَعِيَادَةِ المَرِيضِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَنَصْرِ المَظْلُومِ، وَإِبْرَارِ القَسَمِ، وَرَدِّ السَّلاَمِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَنَهَانَا عَنْ: آنِيَةِ الفِضَّةِ، وَخَاتَمِ الذَّهَبِ، وَالحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالقَسِّيِّ، وَالإِسْتَبْرَقِ " صحيح البخاري
1239. பராவு இப்னு ஆஸிப்(ரலி)அறிவித்தார்.
அவர்கள் எங்களக்கு ஏழுவிஷயங்களை(ச் செய்யும்படி)கட்டளையிட்டு ஏழு விஷயங்களைதடை செய்தார்கள். ஜனாஸாவைபின் தொடரும் படியும், நோயாளியைநலம் விசாரிக்கும் படியும்,விருந்துக்கு அழைப்பவரின்அழைப்பை ஏற்றுக் கொள்ளும்படியும். அநீதிஇழைக்கப்பட்டவருக்குஉதவும்படியும், செய்தசத்தியத்தையும் பூரணமாகநிறைவேற்றும் படியும். ஸலாமுக்குபதில் கூறும்படியும். தும்முபவருக்குஅவர் அல்ஹம்துலில்லாஹ்..எல்லாப் புகழும் இறைவனுக்கே!என கூறினால் அருகிலிருப்பவர்யர்ஹமுகல்லாஹ்.. இறைவன்உங்களுக்கு கருணைகாட்டுவானாக' என மறுமொழிகூறும்படியும் கட்டளையிட்டார்கள்.வெள்ளிப் பாத்திரங்களைப்பயன்படுத்துவதிலிருந்தும்,ஆண்கள் தங்க மோதிரம்அணிவதிலிருந்தும்கலப்படமில்லாத பட்டையும்,அலங்காரப் பட்டையும் எம்ப்தியபட்டையும், தடித்த பட்டையும்அணிவதிலிருந்தும் எங்களைதடைசெய்தார்கள். ஸஹீஹுல் புஹாரீ.
அமைதி கெடுவதற்கானகாரணங்களில், பிறரின் மத உணர்வை காயப்படுத்துவதும் ஒன்று. அதை இஸ்லாம்ஊக்கப்படுத்தியதா?அங்கீகரித்ததா? அல்லதுஅனுமதித்ததா?
وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ - الأنعام: 108
இஸ்லாம் வன்முறை மாக்கமல்ல மென்முறை மார்க்கம்
இஸ்லாம் வன்முறயை எப்போதும் ஆதரித்ததில்லை. முஸ்லிம்கள் தங்கள் மீது போர் தொடுக்கப்படும்போது தவிர்க்க முடியாத சூழலில் எதிரிகளிடம் நடந்து கொள்ள வேண்டிய துணிச்சல் மிக்க நடவடிக்கை குறித்து இஸ்லாம் வழிகாட்டிருப்பதை வைத்துக்கொண்டு சிலர் இஸ்லாத்தைப்பற்றி தவறாக விமர்சிக்கின்றனர். ஆனால் யுத்த கால நடவடிக்கை என்பது எதிரிகளிடம் கடுமை காட்டுவதாகத்தான் இருக்க வேண்டும் என்பதை எல்லா அறிவு ஜீவிகளும் ஏற்று இருக்கின்றனர். இதில் எந்த நாடும் எந்த அரசும் மாற்றுக்கருத்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.
ஆயினும் இஸ்லாம் வகுத்தளித்திருக்கும் போர் நெறிமுறை, இன்று நடைமுறையில் இருந்து வரும் போர் முறைகளிருந்து முற்றிலும் வேறுபட்டது.
பொதுவாக இஸ்லாம், எந்த இக்கட்டான நேரத்திலும் எடுத்த எடுப்பிலேயே போரைத் தீர்வாக முன்வைக்கவில்லை. இறுதி முடிவாகத்தான் அனுமதி கொடுக்கிறது.
இன்று நடக்கும் போர்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள், சிறுவர்கள்,முதியவர்கள் என்று பலரும் கொத்து கொத்தாகக் கொல்லப்படுகிறார்கள். பொருளாதாரம் சுருட்டப்படுகின்றன;வளங்கள் சூறையாடப்படுகின்றன. நாடும் சமுதாயமும் ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கப்படுகிறது. இதன் மோசமான, கோரமான விளைவுகள் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்கும் தொடர்கின்றன.
இன்று நடக்கும் போர் முறைகளையும் நோக்கங்களையும் இஸ்லாம் அறவே ஆதரிக்கவில்லை. இத்தகைய காரியங்களை முஸ்லிம் சமுதாயத்தில் இருப்பவர்கள் செய்தாலும் சரியே..
அமைதி மார்க்கமாகிய இஸ்லாத்தில் அப்பாவி மனித உயிர்களைக் கொல்ல துளியும் அனுமதியில்லை.
அமைதியை போதிப்பதில் இஸ்லாத்திற்கு நிகர் இஸ்லாமே!
عَنْ جَرِيرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ يُحْرَمِ الرِّفْقَ، يُحْرَمِ الْخَيْرَ» صحيح مسلم
5054. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الرِّفْقَ لَا يَكُونُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ، وَلَا يُنْزَعُ مِنْ شَيْءٍ إِلَّا شَانَهُ» صحيح مسلم
5056. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மென்மை எதில் இருந்தாலும், அதைஅதுஅழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும்அலங்கோலமாகிவிடும்.
இதை நபி (ஸல்) அவர்களின்துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.
عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا عَائِشَةُ» إِنَّ اللهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ، وَيُعْطِي عَلَى الرِّفْقِ مَا لَا يُعْطِي عَلَى الْعُنْفِ، وَمَا لَا يُعْطِي عَلَى مَا سِوَاهُ "-صحيح مسلم
5055. நபி (ஸல்) அவர்களின்துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள்கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்(என்னிடம்), "ஆயிஷா! அல்லாஹ்மென்மையானவன். மென்மையானபோக்கையே அவன் விரும்புகிறான்.வன்மைக்கும் பிறவற்றுக்கும்வழங்காததையெல்லாம் அவன்மென்மைக்கு வழங்குகிறான்" என்றுகூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம்.
பிறரை அச்சுறுத்தும் எந்த நடவடிக்கையையும் இஸ்லாம் ஆதரிப்பதில்லை.
தமாசுக்கு கூட ஒருவரை பதற்றமடையச் செய்யக்கூடாது.
قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَشَارَ إِلَى أَخِيهِ بِحَدِيدَةٍ، فَإِنَّ الْمَلَائِكَةَ تَلْعَنُهُ، حَتَّى يَدَعَهُ وَإِنْ كَانَ أَخَاهُ لِأَبِيهِ وَأُمِّهِ»صحيح مسلم
299.எவரேனும் தன் முஸ்லிம் சகோதரனை நோக்கி இரும்பினால் ஆன ஆயுதம் போன்றவற்றால் சைக்கினை செய்தால், அவர் (சைக்கினை செய்வதை) விடும்வரை அவர்மீது மலக்குகள் சாபமிடுகின்றனர். அது அவருடைய உடன் பிறந்த சகோதரனாக இருந்தாலும் சரியே!'' என அபுல் காஸிம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் முஸ்லிம்.
தெளிவுரை:- ஒருவர் தமது சொந்தச் சகோதரனை நோக்கி இரும்பு போன்ற ஆயுதத்தால் சைக்கினை செய்தால், இவர் அவரைக் கொல்லவோ, அல்லது அவருக்கு தீங்கிழைக்கவோ விரும்புகிறார் என்பது பொருளல்ல. மாறாக அவர் விளையாட்டாகத்தான் அவ்வாறு செய்வார், அப்படியிருந்தும் மலக்குகள் அவரைச் சபிக்கின்றனர். சைக்கினையாகக் கூட ஒரு முஸ்லிமை நோக்கி ஆயுதத்தை அல்லது இரும்பைத் தூக்குவதை கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்பதே இந்த ஹதீஸின் கருத்தாகும்.
(மளாஹிர்ஹக்)
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: حَدَّثَنَا أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُمْ كَانُوا يَسِيرُونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَامَ رَجُلٌ مِنْهُمْ، فَانْطَلَقَ بَعْضُهُمْ إِلَى حَبْلٍ مَعَهُ فَأَخَذَهُ، فَفَزِعَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا»- سنن أبي داود
309.ஹஜ்ரத் அப்துர்ரஹ்மானிப்னு அபூலைலா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்,எங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் கீழ்க்காணும் நிகழ்ச்சியைச் சொன்னார்கள். ஒரு முறை அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவருக்குத் தூக்கம் வந்து தூங்கிவிட்டார். இன்னோருவர் விளையாட்டாக அவருடைய கயிற்றை எடுத்துக்கொண்டார்,தூங்கிக்கொண்டிருந்தவர் விழித்ததும், தன் கயிற்றைக் காணாது பதற்றமடைந்தார். எந்த ஒரு முஸ்லிமும் பிற முஸ்லிமைப் பதற்றமடையச் செய்வது கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத்.
v மது, விபச்சாரம், கொலை, மோசடி, வழிப்பறி, அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சி, பேராசை போன்ற பல விஷயங்கள் சமூகத்தில் பதற்ற நிலையை உருவாக்கும், அமைதியை கெடுக்கும் என்பதாலேயே இஸ்லாம் அவைகளை தடுத்திருக்கிறது.
v நடுநிலையோடு சிந்தித்துப் பார்க்கும் எவரும் இஸ்லாமிய வாழ்வியல் முறையை 100% சதவீதம் கடைபிடித்தால் மட்டுமே உலகில் அமைதி சாத்தியம் என்ற முடிவுக்கு வருவர்.
DAWOODI AALIMKAL SANGAMAM
: وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا ۖ فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَىٰ فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّىٰ تَفِيءَ إِلَىٰ أَمْرِ اللَّهِ ۚ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا ۖ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (9) إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ (10)
[وعن أبي هريرة قَالَ: قَالَ رسولُ اللَّه ﷺ: لا تَحاسدُوا، وَلا تناجشُوا، وَلا تَباغَضُوا، وَلا تَدابرُوا، وَلا يبِعْ بعْضُكُمْ عَلَى بيْعِ بعْضٍ، وكُونُوا عِبادَ اللَّه إِخْوانًا، المُسْلِمُ أَخُو الْمُسْلِم: لا يَظلِمُه، وَلا يَحْقِرُهُ، وَلا يَخْذُلُهُ، التَّقْوَى هَاهُنا
وعن أَنسٍ ، عن النَّبيِّ ﷺ قَالَ: لا يُؤْمِنُ أَحدُكُمْ حتَّى يُحِبَّ لأخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ متفقٌ عليه.
16/237- وعنه قال: قال رسولُ اللَّه ﷺ: انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا، فقَالَ رَجُلٌ: يَا رَسُول اللَّه، أَنْصرهُ إِذَا كَانَ مَظلُومًا، أَرَأَيْتَ إِنْ كَانَ ظَالِمًا كَيْفَ أَنْصُرُهُ؟ قَالَ: تَحْجُزُهُ –أَوْ: تَمْنعُهُ- مِنَ الظُّلْمِ، فَإِنَّ ذلِك نَصْرُه رواه البخاري.
[كل المسلم على المسلم حرام: دمه، وماله، وعرضه، وقبلها: بحسب امرئٍ من الشر أن يحقر أخاه المسلم
[ ஹுதைபியாவின் போது பெருமானார் மேற்கொண்ட நடவடிக்கைகள், பத்ரு கைதிகள் விஷயத்தில், மக்கா வெற்றியின் போது மேற்கொண்ட நடவடிக்கைகளை குறிப்பிடலாம்
عن عقبة بن عامر قال لقيت رسول الله صلى الله عليه وسلم فقال لي يا عقبة بن عامر صل من قطعك وأعط من حرمك واعف عمن ظلمك
முஸ்லீம்கள் ஸ்பெயினை 800 வருஷங்கள் ஆண்டார்கள். ஸ்பெயினில் உள்ள முஸ்லீம்கள் ஒரு போதும் வாளின் முனையில் மற்றவர்களை மதமாற்ற ஒரு போதும் முயற்சித்ததில்லை. ஆனால் அதன் பிறகு ஸ்பெயினுக்கு வந்த கிறிஸ்துவர்கள் அங்குள்ள முஸ்லிம்களை அழிப்பதிலேய தன் நோக்கமாக கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு முன் அழைக்கும் பாங்கு என்ற வணக்க அழைப்பை வெளிப்படையாக செய்ய முடியாத அளவுக்கு அவர்களுடைய நடவடிக்கைகள் இருந்தன.
1400 வருடங்களாக அரபு தேசத்தின் பிரபுக்களாக முஸ்லீம்கள் இருந்தார்கள். சில காலம் அரபு தேசம் பிரிட்டிஷாராலும், ஃப்ரெஞ்சுக்காரர்களாலும் ஆளப்பட்டாலும் நீண்ட நெடுங்காலம் ஆளப்பட்டது முஸ்லீம்களால் மட்டுமே. அந்த அரபு தேசத்தில் இப்போது இருக்கும் 14 மில்லியன் மக்கள் யார் தெரியுமா..? கிறிஸ்துவர்கள் அதாவது முந்தைய கிறிஸ்துவர்களின் வாரிசு வந்தவர்கள். அந்த நேரத்தில் வாளை பயன்படுத்தி இஸ்லாத்தை பரப்பியிருந்தால் அந்த 14 மில்லியன் மக்களில் ஒருவர் கூட கிறிஸ்தவராக இருந்திருக்க மாட்டார்கள்.
உலகிலேயே அதிக முஸ்லீம்களை கொண்ட நாடு இந்தோனேஷியா. மலேஷியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் முஸ்லீம்கள். மிக வேகமாக இஸ்லாம் பரவி வரும் ஒரு நாடு தென்னாப்பிரிக்கா. நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். எந்த இஸ்லாமிய படை இந்த நாடுகளுக்கு சென்று வாள்முனையில் இஸ்லாத்தை பரப்பியது..??
அவ்வளவு ஏன் வெளிநாடுகளைப்பற்றி பேச வேண்டும். நம் நாட்டிற்கே வருவோம். இந்தியாவை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர்கள் முஸ்லீம்கள். அவர்கள் அப்போது நினைத்திருந்தால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு முஸ்லிம் அல்லாதவரையும் மிரட்டி, அடிபணியவைத்து முஸ்லீமாக மாற்றியிருக்க முடியும். அப்படி செய்யவில்லை. அதனால் தான் நம் நாட்டில் இப்போது 80% பேர் முஸ்லீம் அல்லாதவர்கள். இஸ்லாம் வாள் முனையில் தன் மார்க்கத்தை பரப்பவில்லை என்பதற்கு இந்த 80% மக்களைத்தவிர வேறு யார் சாட்சியாக இருக்க முடியும்..??
டாக்டர் ஜோசஃப் ஆதம் பியர்சன் சொன்னார்; "நியூக்ளியர் அணு ஆயுதம் அரபுக்களின் கைகளுக்கு வந்து உலகை அவர்கள் ஆளும் நிலைக்கு வந்து விடுமோ என்று பயப்படுகிறவர்கள் ஒரு விஷயத்தை அறியவில்லை. அதை விட சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் முன்பே இஸ்லாம் என்ற பெயரில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறந்த அன்றே கிடைத்துவிட்டது."