பாதுகாப்பு வேண்டுமா ? ஹஜ்ரத் கஅப் (ரலி) கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் எதிரிகளின் கண்களிலிருந்து தன்னை மறைத்து கொள்ள பின்வரும் மூன்று ஆயத்துகளை ஓதுவார்கள். إِنَّا جَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا (سورة الكهف 57) أُولَٰئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ (سورة النحل 108) أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِ غِشَاوَةً (سورة الجاثية 23) இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மேலே கூறப்பட்ட மூன்று ஆயத்களுடன் சேர்த்து சூரா யாசீனின் ஆரம்ப ஒன்பது ஆயத்களையும் ஓத வேண்டும், ஏனெனில் நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய நாடிய போது தன் வீட்டை சூழ்ந்திருந்த எதிரிகளிடமிருந்து மறைய சூரா யாசீனின் ஆரம்ப ஒன்பது ஆயத்துகளை ஓதினார்கள். எதிரிகளின் தலையில் மண்ணை அள்ளி போட்டவர்களாக அவர்களுக்கு மத்தியிலிருந்தே வெளியேறினார்கள். يس (1) وَالْقُرْآنِ الْحَكِيمِ (2) إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ (3) عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ (4) تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ (5) لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ (6) لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَىٰ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ (7) إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ (8) وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ (9) (எனவே 3 + 9 மொத்தம் இந்த 12 ஆயத்துகளை ஓதிக் கொள்ள வேண்டும், மனனம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்) ஆதாரம் : தப்ஸீருல் குர்துபியில் وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَّسْتُورًا (நபியே!) நீங்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உங்களுக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு திரையை ஆக்கி விடுகிறோம். (அல்குர்ஆன் : 17:45) என்ற வசனத்தின் விளக்கவுரையை பார்க்கவும்.
ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு
Saturday, 18 June 2016
Monday, 13 June 2016
மக்கள் மீது பேராசை கொண்டவர்
ji:لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم சொற் சித்திரம் என்று தமிழில் ஒரு சொல் உண்டு. ஒரு நிகழ்வை வார்த்தைகளாலே காட்சி போல வர்ணித்து விடுவது. பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றிகுர் ஆனின் சொற்சித்திரம். حريص عليكم மக்கள் மீது பேராசை கொண்டவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முழு வாழ்க்கையையும் இந்த வர்ணனைக்குள் அடங்கும். இதையே இன்னொரு வசனம் உறுதிப்படுத்துகிறது. فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا(6الكهف ஆசை பேராசை ஒரு பெண் தாஜ் மாஹாலைப் பார்க்க வேண்டும் என்றாள். அது ஆசை. கணவன் தாஜ் மஹாலை சுற்றிக் காட்டிக் கொண்டிருந்த போது இது போல எனக்கும் ஒன்று வேண்டும் என்றாள். இது பேராசை. பெருமானாரின் பேராசை என்ன? அது தன்னைப் பற்றியது அல்ல.நம்மைப் பற்றியது. பெருமனாரின் ஒரே இலட்சியம் சொர்க்கத்திற்கு ஆள் சேர்ப்பது. ஒருவர் கூட நரகத்திற்கு சென்று விடக்கூடாது. எவ்வளவு உயர்ந்த பேராசை? பெருமானாரின் வாழ்வின் ஒவ்வொரு இழையிலும் இந்தப் பேராசையை காணலாம். உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த பெருமானார் : ஆயிஷா (ரலி) உங்களை உறங்க விடாமல் செய்வது எது என்று கேட்ட போது “ இந்த மக்கள் இவ்வாறு குப்ரில் இருக்கிறார்களே என்று பதிலளித்தார். தாயிப் மக்களை காப்பாற்றினார். பெருமானாரின் வாழ்வில் உஹதை விட சோகமான நிகழ்வு தாயிப் فقالوا: اخرج من بلادنا. وأغروا به سفهاءهم، فلما أراد الخروج تبعه سفهاؤهم وعبيدهم يسبونه ويصيحون به، حتى اجتمع عليه الناس، فوقفوا له سِمَاطَيْن [أي صفين] وجعلوا يرمونه بالحجارة، وبكلمات من السفه، ورجموا عراقيبه، حتى اختضب نعلاه بالدماء. وكان زيد بن حارثة يقيه بنفسه حتى أصابه شِجَاج في رأسه، ولم يزل به السفهاء كذلك حتى ألجأوه إلى حائط ورجع رسول الله صلى الله عليه وسلم في طريق مكة بعد خروجه من الحائط كئيبًا محزونًا كسير القلب، فلما بلغ قرن المنازل بعث الله إليه جبريل ومعه ملك الجبال، يستأمره أن يطبق الأخشبين على أهل مكة. وقد روى البخاري تفصيل القصة ـ بسنده ـ عن عروة بن الزبير، أن عائشة رضي اللهعنها حدثته أنها قالت للنبى صلى الله عليه وسلم: هل أتى عليك يوم كان أشد عليك من يوم أحد؟ قال: (لقيت من قومكِ ما لقيت، وكان أشد ما لقيت منهم يوم العقبة، إذ عرضت نفسي على ابن عبد يالِيل بن عبد كُلاَل، فلم يجبني إلى ما أردت، فانطلقت ـ وأنا مهموم ـ على وجهي، فلم أستفق إلا وأنا بقَرْنِ الثعالب ـ وهو المسمى بقَرْنِ المنازل ـ فرفعت رأسي فإذا أنا بسحابة قد أظلتني، فنظرت فإذا فيها جبريل، فناداني، فقال: إنالله قد سمع قول قومك لك، وما ردوا عليك، وقد بعث الله إليك ملك الجبال لتأمره بما شئت فيهم. فناداني ملك الجبال، فسلم عليّ ثم قال: يا محمد، ذلك، فما شئت، إن شئت أن أطبق عليهم الأخشبين ـ أي لفعلت، والأخشبان: هما جبلا مكة: أبو قُبَيْس والذي يقابله، وهو قُعَيْقِعَان ـ قال النبي صلى اللهعليه وسلم: بل أرجو أن يخرج الله عز وجل من أصلابهم من يعبد الله عز وجل وحده لا يشرك به شيئا). ·வஹ்ஸியை பெருமானார் மன்னித்தார். ·ஹிந்தாவை பெருமானார் மன்னித்தார். ·தன்னை கொல்ல முயற்சி செய்தவர்களை கூட மன்னித்தார். ·ஹுதைபிய்யாவில் அப்போது எதிரணி படைத்தலைவராக இருந்த காலித் பின் வலீத் (ரலி) பெருமானார் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது கொன்று விடலாம் என்று திட்டம் தீட்டினார். இதை பெருமானாருக்கு அறிவித்த ஜிப்ரயீல் (அலை) அச்ச நேரத்தொழுகை பற்றிய் குர் ஆனிய வசன்ங்களை கொண்டு வந்தார். தன்னுடைய் திட்டம் வெளிப்பட்டதை அறிந்த காலித் அடுத்த வருடம் பெருமானார் மக்காவிற்கு வந்த போது மக்காவை விட்டு வெளியே சென்று விட்டார். அதன் பிறகு அவர் இஸ்லாமை தழுவிய போது பெருமானார் மகிழ்ந்து வரவேற்றார். ·وفي سنة 7 من الهجرة بعد هذا الصلح أسلم عمرو بن العاص وخالد بن الوليد وعثمان بن طلحة، ولما حضروا عند النبـي صلى الله عليه وسلم قـال: (إن مكـة قد ألقت إلينا أفلاذ كبدها). ·எல்லாவற்றிற்கும் காரணம் அம்மக்கள் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதே! முஹம்மது (ஸல்) அவர்களின் இயல்பு யாரிடமும் கடுகடுப்பாக நடப்பது அல்ல. மக்காவின் தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் இடையில் வந்த போது பெருமானார் (ஸல்) கடுகடுத்த்தற்கு காரணம் அந்த காபிர்கள் சொர்க்கம் செல்வதற்கான ஒரு வாய்ப்பு தவறி விடக்கூடாது என்பதே! பெருமானாரின் ஒரு அறிவுரையில் தொனிக்கும் கவலையைப் பாருங்கள்! قَالَ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍالبخاري – 1417 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا مَثَلِي وَمَثَلُ أُمَّتِي كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا فَجَعَلَتْ الدَّوَابُّ وَالْفَرَاشُ يَقَعْنَ فِيهِ فَأَنَا آخِذٌ بِحُجَزِكُمْ وَأَنْتُمْ تَقَحَّمُونَ فِيهِ ·நம்மீது பாசம் கொண்டவர்களை நேசிப்பது மனித இயல்பு ·நம்மீது பேராசை கொண்டவ்வரல்லவா பெருமானார் அவர் மீது நாம் எத்தகைய நேசத்தை எப்படி எல்லாம் வெளிப்படுத்த கடமைப் பட்டுள்ளோம். ·நரகத்திற்கு செல்லாமல் நம்மைக் காக்கிற ஒவ்வொரு வழிகளையும் நாம் கண்டாய்ந்து நடப்பது பெருமானாருக்கு நாம் செய்யும் நன்றி [6/14, 2:58 AM] Habibullah Siraji: இமாம் அபூமூஸா மதீனி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஒருவராவர். இவர்கள் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார்கள் : அபூபக்கர் இப்னு முஜாஹித் எனும் ஹதீதுக்கலை அறிஞரிடம் முஹம்மது உமர் அவர்கள் ஹதீது பயின்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு ஷைகுஷிப்லி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வந்தார்கள். இவர்களைக் கண்டதும் எனது ஆசிரியர் எழுந்து நின்று (மரியாதை செய்து) அவர்களைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டார்கள். மாணவரான முஹம்மது இப்னு உமர் அவரது ஆசிரியரிடம் கேட்டார் : “பகுதாதில் உள்ளோர் யாவரும் ஷிப்லியை பைத்தியக்காரர் என்று நினைத்துக் கொண்டிருக்க நீங்கள் அவருக்கு இந்த அளவு மரியாதை செய்கிறீகளே!” அதற்கு ஆசிரியர் பதிலளித்தார் : “நபி (ﷺ) அவர்கள் இவ்வண்ணம் இந்த ஷிப்லிக்கு மரியாதை செய்வதை மனாமில் கண்ட நான், ‘யா ரசூவ்லுல்லாஹ் ஷிப்லிக்கு இந்த அளவு தாங்கள் மரியாதை செய்கிறீர்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ﷺ) அவர்கள் பதிலளித்தார்கள். இவர் அவரது (எல்லா) தொழுகைகளுக்குப் பின்னாலும் “லகத் ஜாஅகும் ரசூவ்லும் மின் அன்fபுஸிகும் அzசீzசுன் அலைஹி மா அனித்தும் ஹரீசுன் அலைகும் பில் முஹ்மினிய்ன ரவூfபுர் ரஹீம். fபய்ன் தவல்லவ் fபகுல் ஹஸ்பியல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவ அலைஹி தவக்கல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அலீம்” (அல்குர்ஆன் - 9-128, 129) ஆகிய வசனங்களை ஓதியபின்னால் என்மீது ஸலவாத்தும் ஓதுகிறார்.” இதே நிகழ்ச்சியை கவ்லுல் பதீஃ நூலில் ஹாபிள் ஸகாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் எழுதியிருக்கிறார்கள். இப்னு பிஷ்குவால் நூலிலும் சிறுமாற்றத்துடன் இந்நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஷைகுஷிப்லி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அபூபக்கர் இப்னு முஜாஹித் எனும் ஹதீதுக்கலை அறிஞரிடம் சென்றபோது அறிஞர் எழுந்து நின்று மரியாதை செய்தார். அப்பொழுது சபையிலுள்ளோர் ஹதீதுக்கலை அறிஞரிடம் கேட்டனர் : “அலீ இப்னு ஈஸா போன்ற நாட்டின் மந்திரிக்கும் எழுந்து நின்று மரியாதை செய்யாத நீங்கள் இருவருக்கு ஏன் மரியாதை செய்தீர்கள்?” அதற்கு ஹதீதுக்கலை அறிஞர் “நபி (ﷺ) அவர்கள் எவருக்கு மரியாதை செய்தார்களோ அவருக்கு நானும் எழுந்து நின்று மரியாதை செய்வது கூடாதா?” என்று கூறி தாம் கண்ட மனாமை விவரித்தார்கள் : மனாமில் தோன்றிய மாநபி (ﷺ) அவர்கள் என்னிடம் கூறினார்கள். “அபாபக்கர்! நாளை சுவனவாசியான ஒருவர் உங்களிடம் வருவார். அவர் உங்களிடம் வரும்போது அவரை கௌரவப்படுத்துங்கள்". நான் ஷைகு ஷிப்லியை கௌரவப்படுத்திய இரண்டு நாட்களுக்குப் பின்பு மீண்டும் நபி (ﷺ) அவர்கள் எனது மனாமில் தோன்றி, “சுவனவாசியான ஒருவரை நீர் கௌரவித்ததற்க்காக அபாபக்கர்! உங்களை அல்லாஹ் கௌரவப்படுத்துவானாக!” என்றார்கள். நான் நபி (ﷺ) அவர்களிடம் கேட்டேன் : “யா ரசூவ்லுல்லாஹ்! தங்களிடம் ஷைகுஷிப்லி இத்தகைய மகிமையைப் பெறுவதற்குரிய காரணம் யாது?” அதற்கு நபி (ﷺ) அவர்கள் பதிலளித்தார்கள் : "ஷிப்லி ஐங்காலத்தொழுகையைத் தொழுதபின் அல்குர்ஆனின் 9-128, 129 வசனங்களை ஓதிவிட்டு என்மீது ஸலவாத்தும் ஓதுகிறார். இவ்வாறு கடந்த எண்பது ஆண்டுகளாகச் செய்து வருகிறார். இவ்வாறு ஓதி வருபவரை நானும் கௌரவிக்க வேண்டுமே!" இமாம் ஹாபிள் ஸகாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் : ஐங்காலத் தொழுகைகளுக்குப் பின்னால் ஸலவாத் ஓதுவதற்கு அபூஉமாமா رضي الله عنه அவர்களின் ஹதீதும் சான்றாக உள்ளது. நபி (ﷺ) அவர்கள் நவின்றார்கள் : எவராவது ஐங்காலத் தொழுகைக்குப் பின்னால் “அல்லாஹும்ம அஃதி முஹம்மதன் அல்வஸீலத வஜ்அல் fபில் முஸ்தfபிய்ன முஹப்பதஹு வfபில் ஆலமீன தரஜதஹு வfபில் முகர்ரபீன தாரஹு” பொருள் : “யா அல்லாஹ்! முஹம்மது நபி (ﷺ) அவர்களுக்கு ‘வஸீலா’ எனும் மேலான பதவியை வழங்குவாயாக! உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடம் அவர்களது நேசத்தையும், உலக மக்களிடம் அவர்களது மதிப்பையும், உன்னிடம் நெருங்கியவர்களிடம் அவர்களைப் பற்றி (நினைவு)ச் சுழற்சியையும் நீ வழங்குவாயாக!” என்ற இந்த துஆவை ஓதி வருபவர்களுக்கெல்லாம் எனது ஷபாஅத் உரியதாகும். நூல் – தப்ரானீ
Sunday, 5 June 2016
பிர் உஸ்மான்"
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) முஸ்லிம்களின் நலனிற்காக மிக மிக அதிகம் வாரி வழங்கிய வள்ளல்களில் மிகவும் முக்கியமான நபிதோழர் மூன்றாம் கலிபா உஸ்மான் இப்னு அஃபான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை மதினாவில் தண்ணீர் பஞ்சம் ஆனால் ருமாத் அல் ஜிஃபாரி என்ற ஒரு யூதனின் கிணற்றில் மட்டும் தண்ணீர் இருந்தது... பஞ்சத்தை முதலாக்கினான் அந்த யகூதி... ஒரு குடம் தண்ணீருக்கு முஸ்லிம்களிடம் அதிக விலை வாங்கினான் அந்த யகூதி... அப்போது நபிகள் நாயகம் (ஸல்) ஒரு அறிவிப்பை செய்தார்கள்... " உங்களில் யார் அந்த கிணற்றை வாங்கி முஸ்லிம்களுக்கு நியாயமான முறையில் தண்ணீர் கிடைக்க உதவுகிராரோ அவருக்கு சுவனம் நிச்சயம்" என்றார்கள்... அந்த யூதனை அணுகினார் உஸ்மான் ரலி... அவனோ தண்ணீர் வியாபாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அந்த கிணற்றை விற்க மறுத்தான்... மிகச்சிறந்த வியாபார தந்திரங்கள் மிக்கவராக விளங்கிய உஸ்மான் அவர்கள் அவனிடம் அந்த கிணற்றை முழுவதும் தராவிட்டாலும் பரவாயில்லை பகுதியை தா என்றார்கள்... அதற்கு மிகப்பெரிய அளவில் ஒரு தொகையையும் வாக்களித்தார்கள்.. அதன்படி வியாபார ஒப்பந்தம் ஆனது ஒருநாள் உஸ்மான் தண்ணீர் எடுக்கலாம்... மறுநாள் யூதன் தண்ணீர் எடுப்பான்... இதுவே அந்த ஒப்பந்தம் உஸ்மான் அவர்கள் தனது தினத்தில் அனைவருக்கும் இலவசமாக தண்ணீரை வழங்கினார்கள்... மறுநாள் யூதனின் வியாபாரம் நடக்கவில்லை... உஸ்மானின் புத்திகூர்மையை உணர்ந்த யூதன் கிணற்றை முழுவதுமாக உஸ்மான் அவர்களுக்கே விற்றுவிட்டான்... அந்த கிணற்றை உஸ்மான் அவர்கள் மதினாவின் ஏழைகளுக்கு வக்ஃப் செய்துவிட்டார்கள்... இன்றும் அந்த கிணறு மதினாவின் ஒரு பகுதியை செழிப்பாக வைத்துள்ளது... மஸ்ஜிதுன் கிபிலைதைன் அருகில் இருக்கிறது "பிர் உஸ்மான்" (உஸ்மானின் ரலி கிணறு)