ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Saturday, 23 September 2017

இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களின் வாழ்க்கை

[9/23, 7:40 PM] ‪+91 98653 10034‬: இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களின் வாழ்கை
                            ஓர் பார்வை :-

பிறப்பு:-

இமாம் ஷாஃபி அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டிலுள்ள "கஸ்ஸா' என்ற ஊரில் ஹிஜிரி150ஆம் வருடம் பிறந்தார்கள்.

இவர்களுடையஇயற்பெயர்:-முஹம்மத்,

தந்தையார் பெயர் :-
இத்ரீஸ் என்பதாகும்.

ஷாஃபிஇமாம் அவர்களின் பரம்பரை :-
நபி (ஸல்) அவர்களுடைய பாரம்பரியமாகிய "குஸை' என்றகிளையாரிடமிருந்து ஆரம்பித்ததாகும்.
இமாம் ஷாஃபி அவர்கள் நபி (ஸல்) அவர்களோடு "அப்து மனாஃப்' கோத்திரத்தில்இணைகிறார்கள்.

1-இளமைப் பருவமும்  கல்வி கற்றலும்:-

*இமாம் ஷாஃபி அவர்களுக்கு இரண்டுவயதான போது இமாமவர்களின் தாயார்மக்கமா நகரத்திற்குக் குடிபெயர்ந்தார்.

*இன்னும்குர்ஆனை ஓதினார்கள். இமாம் அவர்கள்"ஹுதைல்' எனும் கோத்திரத்தாரிடம்பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள் அரபி மொழிப்புலமையையும், கவிதைகளையும் கற்றுக்கொண்டார்கள்.

*இமாம் ஷாஃபி அவர்கள் "ஃபிக்ஹ்' எனும்மார்க்கச் சட்டக் கலையை அன்றையசூழ்நிலையில் மக்காவில் மார்க்கத் தீர்ப்புவழங்கும் முஃப்தியாக இருந்த அறிஞர் "முஸ்லிம்பின் ஹாலித் அஸ்ஸன்ஜி' என்பவரிடம்கற்றார்கள்.

*பிறகு மதீனாவிற்குப் பயணம் செய்துஅங்கு இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம்மாணவராகச் சேர்ந்தார்கள். அவர்களிடமிருந்து"முஅத்தா' என்ற நூலைப் பாடம் பயின்று அதைமுழுவதுமாக மீண்டும்  அவர்களிடம் படித்துக்காட்டினார்கள்.

*ஹிஜிரி 184ம் வருடம் யமன் நாட்டின் ஒருபகுதியில் இமாம் ஷாஃபி அவர்கள் பணியாற்றும்பொறுப்பை ஏற்றார்கள்.

*பிறகு மீண்டும் மக்கமா நகரத்திற்குவந்தார்கள். கல்விக்காக இராக்கிற்கும், ஹிஜாஸ் பகுதிக்கும் இடையே எண்ணற்றதடவை பயணம் மேற் கொண்டார்கள்.

*பிறகுஹிஜிரி 199ம் ஆண்டிலிருந்து எகிப்து தேசத்தில்தங்கியிருந்தார்கள். அங்கு தான் அவர்கள்தங்களது மார்க்கப் பணியைத் துவக்கினார்கள். இமாம் அவர்களின் ஆய்வுகளும், கருத்துக்களும் உலகெங்கும் பரவியது. அவர்களிடம் கல்வி பயின்ற தலைசிறந்தமாணவர்களும் உருவானார்கள்.

2-இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களின்
பணிகள்:-

*இமாம் ஷாஃபி அவர்கள் ஃபிக்ஹ்துறையில் மட்டுமின்றி ஹதீஸ் கலைதொடர்பான விஷயங்களிலும் மிகவும் தேர்ச்சிபெற்றவர்களாகவும், சிந்தனைமிக்கவர்களாகவும் விளங்கினார்கள்.

*நபியவர்கள் கூறியதாக வரக்கூடியஹதீஸ் உறுதியான அறிவிப்பாளர்கள் மூலம், அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்புவிடுபடாமல் வருமென்றால் அதை யார்செய்திருந்தாலும்,  செய்யா விட்டாலும்நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இமாம்ஷாஃபி அவர்களின் உறுதியான கருத்தாகும்.

*ஆனால் இமாம் மாலிக் தன்னுடையஆசிரியராக இருந்தாலும், இமாம் அபூஹனீஃபா தனக்கு முந்திய கால அறிஞராகஇருந்தாலும் அவர்களுடைய கருத்து தவறுஎன்பதைத் தெளிவு படுத்தி அதற்கு மாற்றமானதன்னுடைய கருத்தை இமாம் ஷாஃபி அவர்கள்பதிவு செய்திருக்கிறார்கள்.

*இதன் காரணமாக ஹதீஸ் கலைஅறிஞர்கள் இமாம் ஷாஃபி அவர்களுக்கு"நாஸிருஸ் ஸுன்னா' நபி வழிக்கு உதவிசெய்தவர் என்ற பட்டப் பெயரைச்சூட்டியுள்ளனர்.

3-இமாம் அவர்களின் சில முக்கியமான புத்தகங்கள் :-

*ஹதீஸ் கலை தொடர்பாக "அல் உம்மு'' என்ற நூலில் "அர்ரிஸாலா'' என்ற தொகுப்பைமிகப் பெரும் ஆய்வாக இமாம் ஷாஃபி அவர்கள்தொகுத்துள்ளார்கள். ஹதீஸ் கலைதொடர்பாகவோ, நபி வழிச் சட்டங்கள் ஆய்வுதொடர்பாகவோ, நூல் எழுதக் கூடிய யாராகஇருந்தாலும் அவர் இமாம் ஷாஃபிஅவர்களுக்குக் கடன் பட்டவராகத் தான்இருப்பார்கள். அந்த அளவிற்கு யாரும் மறுக்கமுடியாத தெளிவான ஆய்வுகளை முதன்மையான படைப்பாக வழங்கிஉள்ளார்கள்.

4-இமாம் அவர்களை பற்றி அறிஞர்களின் கருத்துகள்:-

*ஹதீஸ் கலை அறிஞர்கள் என்றாவது ஒருநாள் பேசினால் அது இமாம் ஷாஃபி உடையநாவைக் கொண்டு தான் இருக்கும் (அதாவதுஅவரது கருத்தாகத் தான் இருக்கும்)'' என்று  முஹம்மத் பின் ஹசன் அவர்கள் கூறியுள்ளார்கள்.

*ஹதீஸ் கலை அறிஞர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை ஷாஃபிவிழிக்கச் செய்தார்'' என அறிஞர் "ஸஃபரானி' அவர்கள் கூறியுள்ளார்கள்.

*நாங்கள் நபியவர்களுடைய ஹதீஸ்களில்முஜ்மல் (மூடலானது) எது? "முஃபஸ்ஸிர்'' (தெளிவு படுத்துவது) எது? "நாஸிஹ்'' (பழையசட்டத்தை மாற்றிய ஹதீஸ்) எது? "மன்ஸூஹ்'' (மாற்றப்பட்ட சட்டம்) எது? என்பதைஷாஃபியுடன் அமர்கின்ற வரைஅறியாதவர்களாகத் தான் இருந்தோம்'' என்றுஇமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள்கூறியுள்ளார்கள். (ஆதாரம்: ஹுல்யத்துல்அவ்லியா, பாகம்: 9, பக்கம்: 97)

இன்னும்பல ....

இமாம் அவர்களின் சில முக்கிய போதனைகள் :-

*ஆதாரம் இல்லாமல் ஏற்காதே!

இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள். ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனின்உதாரணம் இரவில் விறகு சுமப்பவனின்உதாரணத்தைப் போன்றதாகும்.  அவன் ஒருகட்டு விறகைச் சுமக்கின்றான். அதில் ஒரு கடும்விஷப் பாம்பு இருக்கிறது. அவன் அறியாதநேரத்தில் அவனைத் தீண்டி விடும். (இதுபோன்று தான் ஆதாரம் இல்லாமல் கல்வியைத்தேடுபவனை அக்கல்வி அவன் அறியாதவிதத்தில் அவனை வழிதவறச் செய்து விடும்) (மத்கல் - இமாம் பைஹகீ பாகம்: 1, பக்கம்: 211)

*ஆதாரப்பூர்வமான ஹதீஸை மட்டும்பின்பற்று!

ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸைஅறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபிஅவர்களிடம், நீங்கள் இதனை ஆதாரமாகஎடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம்ஷாஃபி அவர்கள் "எப்போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து  ஒரு ஹதீஸ்அறிவிக்கப்பட்டு நான் அதை பற்றிப்பிடிக்கவில்லையோ (அப்போது)  என்னுடையஅறிவு மழுங்கி விட்டது என்று நான் உங்களிடம்சான்று பகர்கிறேன்' என்று கூறி தன்னுடையகரத்தால் தம்முடைய தலையை நோக்கிசுட்டிக் காட்டினார்கள். (முஹ்தஸர்அல்முஅம்மல், பாகம்: 1 பக்கம்: 57)

*தவறு இல்லாத நூல்கள் இல்லை!

ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள். "நான் இந்தப் புத்தகங்களை தொகுத்துள்ளேன். நான் ஆய்வு செய்வதில் குறை வைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக்கொள்ளப்படும். ஏனென்றால் அல்லாஹ்"அல்லாஹ் அல்லாதவர்களிமிருந்துவருமென்றால் அதிலே அவர்கள் அதிகமானமுரண்பாடுகளை பெற்றிருப்பார்கள்' என்று தன்திருமறையில் கூறுகிறான். என்னுடைய இந்தப்புத்தகங்களிலே திருமறைக் குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால்நிச்சயமாக நான் அதை விட்டும் திரும்பிவிட்டேன். (அதாவது என்னுடைய கருத்துதவறானது. நபிவழி தான் சரியானதுஎன்பதாகும்) (முஹ்தஸர் அல்முஅம்மல், பாகம்: 1 பக்கம்: 57)

இறப்பு:-

இமாம் ஷாஃபி அவர்கள் ஹிஜிரி 204ம்வருடம் எகிப்தில் வஃபாத் ஆனார்கள்.

-Moulavy SM.Ismail Nadwi
[9/23, 7:42 PM] ‪+91 98653 10034‬: இமாம் அபூ ஹனீபfa நுஃமான் பின் தாபித்து (ரஹ்) அவர்கள் ஓர் பிfக்ஹூ சட்ட மேதை மட்டுமல்ல அவர் ஓர் முஹத்திஸும் (ஹதீஸ் கலை வல்லுனர் ) ஆவார்கள் , அன்னாரின் முஸ்னத் இமாம் அபூ ஹனீபா மிக பிரசித்திப்பெற்ற ஒரு  ஹதீஸ் புத்தகம் இதை இமாம் அபூ நயீம் அல்அஸ்பஹானி அவர்கள் ஒன்று திரட்டினார்கள்
இதிலிருந்து இமாம் அவர்கள் தங்களுக்கும் ஹதீஸிர்கும் சம்பந்தமில்லாமல் சுய கருத்துகளை மார்க சட்டதில் கூறினார்கள் என்பது தவறு என்று விளக்கப்படுகிறது .
அறிஞர் முஹம்மது அல்கவார்ஸமி தன் புத்தகமான "ஜாமிஃ
இமாம் அல் அஃலமில்
" (ஹிஜ்ரி 1332 ல் இந்தியாவில் அச்சிடப்பட்டது )

அறிஞர் முஹம்மத் அல்பாரியாபி ஆய்வு செய்து இதை ரியாத் ,சவூதி அரேபியவில் உள்ள ,மக்தபா அல்கவ்தர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிட தக்கது .

பின் வரும் 15 அறிஞர்களும் முஸ்னத் அபீ ஹனீபாவை திரட்டியுள்ளனர் என்று
குறிப்பிடுகின்றார்கள் .

(1)
الإمام الحافظ أبو عبد الله بن محمد بن يعقوب بن
الحارث الحارثي

(2)
الإمام الحافظ القاسم طلحة بن محمد بن جعفر الشاهد العدل رحمه الله تعالى.

(3)
الإمام الحافظ أبوالحسين محمد بن مطهر بن موسى بن عيسى بن محمد رحمه الله تعالى.

(4)
الإمام الحافظ أحمد بن عبد الله بن أحمد الأصفهاني رحمه الله تعالى.
(5)
الشيخ الإمام الثقة العدل أبو بكر محمد بن عبد الباقي ابن محمد الأنصاري رحمه الله تعالى.

(6)
الإمام الحافظ صاحب الجرح والتعديل أبو أحمد عبد الله بن عدي الجرجاني رحمه الله تعالى.

(7)
الإمام الحسن بن زياد اللؤلؤي رحمه الله تعالى الثامن : مسند له جمعه الإمام الحافظ عمر بن الحسن الأشناني رحمه الله تعالى.
(9)
التاسع : مسند له جمعه الإمام الحافظ أحمد بن محمد بن خالد
بن خلي الكلاعي رحمه الله تعالى.

(10)
الإمام الحافظ أبو عبدالله محمد بن الحسين بن محمد بن خسرو البلخي رحمه الله تعالى.

(11)
الإمام أبو يوسف القاضي يعقوب بن إبراهيم الأنصاري رحمه الله تعالى ورواه عنه يسمى : نسخة أبي يوسف.

(12)
الإمام محمد بن الحسن الشيباني رحمه الله تعالى ورواه عنه يسمى : نسخة محمد ، مطبوع ومتداول.

(13)
الإمام حماد بن أبي حنيفة ورواه عن أبيه رضي الله عنهما.
(இமாம் அவர்களின் புதல்வர்)

(14)
الإمام محمد بن الحسن معظمه عن التابعين ورواه عنه يسمى : الآثار.
مطبوع ومتداول.

(15)
الإمام الحافظ أبو القاسم عبد الله بن محمد بن أبي العوام السغدي رحمه الله تعالى
[9/23, 7:42 PM] ‪+91 98653 10034‬: ஆரோக்கியமான விமர்சனங்கள்
வெற்றிகான படிக்கட்டுகள்
--------------------------------------------------------------

நமது மார்கத்திலே "விமர்சனம் -تنقيد -criticism "
என்பது வரவேற்க தக்க ஒன்று

இமாம் மாலிக் (ரஹ்)
கூறுகிறார்கள்

" இறை தூதுவர் (ஸல்) அவர்களை தவிர அனைவரின் வார்த்தைகளும் ஏற்கப்படும் இன்னும் மறுக்கப்படும்.

‎كُلُّ أحدٍ يُؤخذ من قوله ويُرَد، إلاَّ صاحب هذا القبر - يعني: النبي

ஆனால் இன்று சமூக வலை தளங்களில் "விமர்சனம் என்ற பெயரில் சிந்தனை படு கொலைகளும் இன்னும் அத்துமீறல்களும்
சர்வசாதரணமாக
நடந்தேறி கொண்டிருக்கின்றது ,
கருத்துக்கள் வேறுபடலாம் ஆனால் உள்ளங்கள் வேறுபடலாமா !!

அதபுல் இக்திலாப் -أدب الإختلاف
கறுத்து வேறுபாட்டில் பேணவேண்டிய ஓழுக்கங்களை
இந்த புதிய தலைமுறைகளுக்கு சரியான முறையில்
போதிக்க
வேண்டும் இதை நம் முன்னோர்கள் எவ்வாறு கையாண்டார்கள்
என்பதை ஷேக் அபுல் ஹசன் நத்வி (ரஹ்) அவர்கள் மௌலானா அபுல் அஃலா மௌதூதியை (ரஹ்) விமர்சித்த அழகை நம்மால் கண்டு கொள்ளமுடியும்

Asr-i Hazir Mai Din Ki Tahfim-o-Tashrih-Book by
Asheik Abul Hasan Ali Nadwi

‎‏"நவீன காலத்திலே மார்க்க போதனைகளும் ,
‎‏சிந்தனை தெளிவும் "

‎‏என்ற இந்த முழு புத்தகத்தை படித்த பின்பு
‎‏கீழ் கண்ட கருத்துகளை நம்மால் அவதானிக்க
‎‏முடிகிறது

‎‏#ஒரு இஸ்லாமிய இயக்கம் எவ்வாறு நடுநிலை போங்கை
‎‏கையாள வேண்டும் என்றும்.

‎‏#இறைச் செய்தி (வஹி)இறங்கிய அந்த காலம் தொட்டு  கியாமத் வரை இஸ்லாம் அதனுடைய அடிப்படை கொள்கையை யாருக்காகவும் ,
‎‏எதற்காகவும் மாற்றி கொள்ளாது

‎‏# இயக்க குறைகள் சுட்டிக்காட்டப்
‎‏பட்டால் அதை தனது இஸ்லாமிய வளர்ச்சிக்காகவும் இன்னும் மேம்பாட்டிற்காகவும் என்பதனை ஒரு இயக்கம் சுய சீர்திருத்தம் செய்யாத வரை அது வெற்றி பெற முடியாது

‎‏#தனிநபர் வழிபாடு என்பது ஒரு நல்ல வளர்சியை நோக்கி
‎‏செல்லும் ஒரு இயக்கதிற்க்கு
தகுதியானது என்பது
‎‏மட்டுமல்ல ,
‎‏இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையான ஏகத்துவம் இன்னும் நம்பிகைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது

‎‏# ஒரு இஸ்லாமிய இயக்க சிந்தனைகள் நவீன சிந்தனைகளால் மெருகூட்டப்படலாம்
‎‏ஆனால் தனது  முன்னோர்களான சஹாபாக்கள் கடந்து சென்ற வழியை விட்டு ஒதுங்கி  விட க்கூடாது

# குறிப்பாக ஜமாதே இஸ்லாமி ஹிந்தின் மார்க்க பணிகளும் அதன் ஸ்தாபகருமான மௌலானா அபுல் அஃலா மவ்தூதி அவர்கள் 19 ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் நவீன கல்வியை படித்து வாழ்கை தத்துவம் இன்னும் மேற்கத்திய சிந்தனைகளால் பாதிக்கப்பட்டிருந்த இளைய சமூகதை பக்குவபடுத்தி இஸ்லாமிய சிந்தனைகளாலும்
வாழ்கையின் நெறி இஸ்லாம் தான் என்பதினை தெளிவு படுத்திய விடயத்தில் மௌலானா மவ்தூதிக்கு நல்ல பங்கு உண்டு

# ஆனால் தங்களின் இஸ்லாமிய சிந்தனைகள் வரம்பு மீறாமலும்
நெறி தவறாமலும் இருக்க வேண்டும் எனவே மௌலானா மவ்தூதி அவர்கள் சில விடயங்களில் விமர்சிக்கபட வேண்டியவர்களே உதாரணமாக அவர்களின் அரபு மொழி புலமையின்மையினால் அவர்கள் விளங்கி கொண்ட இஸ்லாமிய அடிப்படை கொள்கையான இறைத்தன்மை(உலூஹிய்யத்)  என்பதினில் ஹாகிமிய்யத் (ஆட்சி அதிகாரம் ) என்ற ஒரு இறை பண்பை சற்று மிகைப்படுத்தி முழுமையான மார்க்கமாக அரசியல் சிந்தனைகளை உள்ளடக்கி எவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறை இடுவது இணைவைத்தலோ அது போன்று
இறை ஆட்சியை (இஸ்லாமிய ஆட்சியை )ஏற்று கொள்ள வில்லை என்றால் ஷிர்க் (இணைவைத்தல்) ஆகும் என்ற ஒரு புதிதான கொள்கை ரீதியான சிந்தனையை தனது இயக்கத்தில் இன்றியமையாத ஒன்றாக ஆக்கினார் ....

ஆனால் இந்த விமர்சனங்களை
அழகிய முறையில் மௌலானா அபுல் ஹசன் நத்வி (ரஹ்) அவர்கள் அபுல் அஃலா மவ்தூதி (ரஹ்) அவர்களிடத்தில் எவ்வாறு
சுட்டி காட்டினார்கள் தெரியுமா ??

இது தான் நம் முன்னோர்களின் பாதையாகவும் (மன்ஹஜ் சலபு-منهج السلف )
இருந்தது இன்னும் கருத்து வேறுபாட்டில் பேணப்பட வேண்டிய ஒழுக்கங்களையும் (அதபுல் இக்திலாப்f-ادب الاختلاف )
நமது இளைய தலைமுறைக்கு
எடுத்துறைக்கிறது ....

அதாவது இந்த புத்தகத்தினை பிரசுரிக்கும் முன்பே தனது பணிவான ஒரு கடிதத்துடன் நத்வி அவர்கள் மவ்தூதி அவர்களுக்கு
அவர்கள் வாழும் காலத்திலே வழங்கினார் ,அதற்க்கு மவ்தூதி (ரஹ்) அவர்கள் மகிழ்ச்சியுடன் அதை பெற்று நான் ஒன்றும் விமர்சினதிற்க்கு அப்பாற்பட்டவனல்ல என்றார்கள்
எவ்வாறு இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் "ஒவ்வொருவரும் அவரின் பேச்சுக்கள் ஏற்கப்படும் இன்னும் மறுக்கப்படும் ஆனால் இந்த மன்னரையில் அடக்கப்பட்டிருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பேச்சை தவிர  என்ற அந்த நடுநிலையான ,சமநிலை சிந்தனைகளை மௌலானா மவ்தூதி (ரஹ்) பெற்றிருந்தார்கள்

ஆக சுருக்கமாக "மார்க்கமென்பது
உபதேசமே "என்ற நபி மொழியை மௌலானா நத்வி (ரஹ்) அவர்கள்
மையப்படுத்தி இயக்க வளர்ச்சி மேம்பட சில விமர்னங்களை உபதேசங்களாக இந்த புத்தகத்தில் கூறுகிறார்களே தவிர மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் வழிகேடர் என்றோ அவர்களின் இயக்கம் வழிதவறியது என்றோ எங்கும் கூற வில்லை
மாறாக தானகவே இவ்வாறு சொல்கிறார்கள் "இந்த விமர்சனங்களை நான் என் சுய லாபத்திற்கோ அல்லது அரசியல் நோக்கிற்கோ அல்லது இயக்கதை இழிவு படுத்தும் எண்ணதிலோ எழுதவில்லை
என்று கூறி ஹதீஸ் புத்தகமாகிய
ஸுனனுத் திர்மிதியில் பதிய பட்ட ஒரு அறிவிப்பின் சுருக்கத்தை கூறுகிறார்கள் அதாவது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் லுஹருடைய 4 ரகதுகளை 2 ஆக ஒரு தடவை தொழ வைத்த பொழுது ஷஹாபாக்கள் சுருக்கப்பட்டுவிட்டதா தொழுகை ?
அல்லது மறக்க அடிக்க பட்டுவட்டதா ? என்றனர்
இறைதூதர் (ஸல்) அவர்கள் மீதமான 2 ரகதுகளை மீண்டும் தொழ வைத்தார்கள் என்ற சம்பவதையும் கூறி இந்த புத்தகத்தை எழுதிய நோக்கதை
இதன் முன்னுரையில் தெளிவு படுத்தி இருக்கிறார்கள் .

ஆனால் நாமோ இன்று அரை குறையான நம் இஸ்லாமிய அறிவை அதுவும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ படித்து சரியான முறையில் இந்த
இஸ்லாமிய அறிவை முட்டி யிட்டு மூல மொழியாகிய அரபு மொழியை பல வருடங்கள் தியாகம் செய்து படித்த சீறிய சிந்தனை பெற்ற மார்க்க அறிஞர்களை முறைகேடாக விமர்சித்து இதையே நமது தஃவாவாக அழைப்பு பணியாக கருதி தானும்
வழி கெட்டு பாமர ஜனங்களையும்
வழி கெடுக்கும் நவீன விமர்சகிகள் இன்று நம் மத்தியில்
ஏராளம் .

--------------------------------------------------------------

‎‏அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
அல் குர்ஆன்
(59:10 )
-------------------------------
#அன்றாட வாழ்வில் அல் குர்ஆன் கூறும் வழிகாட்டுதல்#

-மௌலவி SM.இஸ்மாயில் நத்வி

No comments:

Post a Comment