ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Thursday, 26 March 2020

கொள்ளை நோய் ஓர் வரலாற்று பார்வை*



   ✒🖋 *மௌலவி இப்ராஹீம் நிஜாமி மக்தூமீ MA சேலம்*
📚📚📚📚📚📚📚📚📚📚📚

 *ஹிஜ்ரி 17, 18 ஆகிய வருடங்களில் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி காலத்தில் ஷாம் தேசத்தின் ரம்லா என்ற மாகாணத்திலிருந்து பைத்துல் முகத்தஸ் வரை உள்ள எல்லா ஊர்களிலும் தாஊன்  கொள்ளைநோய் பரவியது.  அதில் சுமார் 25 ஆயிரம் பேர் வபாத்தானார்கள்.  அச்சமயத்தில் எல்லா மருத்துவர்களும் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர்களும் தங்களது இயலாமையை ஒப்புக் கொண்டார்கள். உடனடியாக  கலீபா உமர்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்ரு இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். இந்த சோதனையிலிருந்து விடுபடுவதற்கான வழியை முயற்சியுங்கள் என்று.  உடனே  அம்ரு இப்னு ஆஸ் அவர்கள் கூறினார்கள்  நான் பலமுறை யோசித்துப் பார்த்து நான் இந்த முடிவுக்கு வந்தேன்.  மக்கள் ஒருவரை ஒருவர் ஒன்று கூடுவதால் தான் இந்த நோய் பரவுகிறது. எனவே அரசாங்க உத்தரவிட்டு மக்களை அவரவர் வீடுகளிலேயே தங்கிவிட  உத்தரவிட்டேன்.  அதன் பின்  மூன்றே நாட்களில் இந்த கொள்ளை நோயின் ஆபத்து முடிவுக்கு வந்தது என்று எழுதினார்கள்*.


 இந்த நிகழ்வு உலகப் புகழ்பெற்ற தபகாத் இப்னு ஸஅது என்ற நூலில்  இடம்பெற்றுள்ளது.
 மேலும் அல்லாமா இப்னு கல்தூன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் தங்களது வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்கள்.



*சஹாபாக்கள் காலத்தில் ஆறு முறை இந்த  கொள்ளை நோய் ஏற்பட்டுள்ளது என்று ரியாளுஸ்ஸாலிஹீன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது.*

முதலாவதாக ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு இதற்கு தாஊனே  ஷீரவியா என்று பெயர்.

 இரண்டாவதாக ஹிஜ்ரி 17 ல் வந்தது. இதற்கு தாஊனே  அமாவாஸ் என்று பெயர்.


 மூன்றாவதாக ஹிஜ்ரி ஐம்பதில் கூபா நகரில் வந்தது. இச்சமயத்தில் முகீரா இப்னு ஷுஃபா ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் வபாத்தானார்கள்.

 நான்காவதாக அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் ஹிஜ்ரி 67 ஆம் ஆண்டு ஏற்பட்டது.
 இதற்கு தானே ஜாரிப் என்று பெயர்.

 இந்த கொள்ளை நோயில் *மூன்று நாட்களில் இரண்டு லட்சத்தி பத்தாயிரம் பேர் வபாத் ஆனார்கள்*


 ஐந்தாவதாக ஹிஜ்ரி 67 ஆம் ஆண்டு அப்துல் மலிக் இப்னு மர்வான் அவரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டது.
 இதற்கு தாஊனே ஃபதயாத்  என்று பெயர்.

 இந்த கொள்ளை நோயில் அதிகபட்சமாக வயதுக்கு வந்த பெண்கள் வபாத்தானார்கள்.


 ஆறாவதாக ஹிஜ்ரி 100 ஆம் ஆண்டு  அதீ இப்னு அர்தாத்  காலத்தில் ஏற்பட்டது.

*இந்த செய்திகளை ரியாளுஸ்ஸாலிஹீன் விரிவுரை ரவ்லத்துஸ்ஸாலிஹீன்  என்ற கிதாபில் வாசிக்க நேர்ந்ததை  பதிந்துள்ளேன்*
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

ஒரு ஊருல பெரிய வெள்ளம் வரப்போகுதுன்னு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது 
பலரும் பாதுக்காப்பான இடங்களை நோக்கி சென்றுவிட்டனர்.

ஒரே ஒருவன் மட்டும் நான் எங்கும் போகமாட்டேன், என்னை கடவுள் காப்பாற்றுவார் என்றிருந்தான்.

 கூறியது போலவே பெரிய வெள்ளம் வந்துவிட்டது. 
ஊரே வெள்ளக்காடா
 காட்சி அளிக்கிறது. இவன் வெள்ளத்தில் தத்தளித்து ஒரு மேட்டின் மீது ஏறி அமர்ந்திருக்கின்றான். 

அப்போது மீட்புக்குழு ஒன்று வருகிறது, யாராவது இருக்கின்றார்களா என்று பார்த்து, இவனை கவனித்து அழைக்கிறது. வா வந்து படகில் ஏறு என்று. 
அவனோ வர மறுக்கிறான், என்னை கடவுள் காப்பாற்றுவார் நான் வரவில்லை என்றுவிட்டான்.

இரண்டாவது படகு வருகிறது. அழைக்கிறார்கள், வரமறுக்கிறான். என்னை கடவுள் காப்பாற்றுவார் என்றுவிட்டான்.

மூன்றாவது படகும் வருகிறது, அப்போதும் ஏற மறுத்துவிட்டான், என்னை கடவுள் காப்பாற்றுவார் என்றுவிட்டான்.

நேரம் ஆக ஆக நீரின் அளவு அதிகரித்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிடுகிறான்.

இறந்தவன் மேலே சென்று கடவுளிடம்  
நீ என்னை காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். 
ஆனால் நீ என்னை ஏமாற்றிவிட்டாய் என்று வாதாடுகிறான்.

அதற்கு கடவுள் நான் தான் உன்னை மூன்று முறை படகில் வந்து அழைத்தேனே 
நீதான் வரமாட்டேன் என மறுத்துவிட்டாய் என்றாராம்.

இப்போது கொரானாவை பற்றியோ அதன் பாதிப்பைப்பற்றியோ , அதற்கான பாதுகாப்பைப்பற்றியோ பேசும்பொழுது, பலர் இப்படிதான்,
 அதுலாம் ஒன்னும் பண்ணவேணாம், எல்லாத்தையும் அல்லாஹ் பாத்துப்பான் என்று அசட்டைபதில் தருகிறார்கள்.

அப்படியே கொரானா வந்தாதான் என்ன, அது வந்துதான் நமக்கு மௌத்னா அதுக்கென்ன பண்ணமுடியும் என்று கூறுவதை கேட்கும் பொழுது என்ன கூறுவதென்றே தெரிவதில்லை. 

கொரானா வந்து மௌத் என்பது என்ன அவ்வளவு லேசா?
குளிபாட்டுதல் இல்லாமல், கஃபன் இடாமல், உறவுகளிடம் ஒப்படைக்காமல், அப்படியே ஆழக்குழியில் புதைக்கப்படுவது தான் வேண்டுமா?....

நம்முடைய பாதுகாப்பு எதில் உள்ளது என்பது நமக்கு தெரியாது, மறைவான விஷயங்களை அல்லாஹ் ஒருவனே அறிவான்.
நம்மாலான முயற்சிளை நாம் செய்யவேண்டும், அதற்குமேல் முடிவு படைத்தவன் கையில்.
பாதுகாப்பு நடவடிக்கை என்பது நாம் எடுக்கும் முயற்சி நம் ஆயுளை நீட்டிப்பதும், மரணத்தை தருவதும் அவனுடைய முடிவு.
எதையுமே செய்யாமல் மெத்தனமாக இருந்துகொண்டு எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான் என்பது சரியில்லை. 
அதை அவனும் விரும்புவதில்லை.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள், ஒட்டகத்தையும் கட்டி வையுங்கள் என்றுதான் நமக்கு போதிக்கப்பட்டிருக்கு. 

நமக்கு சாப்பாடு வேணும்ன்னு அவனிடம் கையேந்தி கேட்கிறோம், அல்லாஹ் அதற்கு உண்டான வழிகளை காட்டுவான், நாம்தான் அதை சரியாக பயன்படுத்தி பாடுபட்டு உழைத்து வருமானம் ஈட்டி அதில் அரிசி வாங்கி சமைத்தால் தான் சோறு வரும். 

 அல்லாஹ்விடம் எனக்கு சோறு கொடு என்று கேட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துகொண்டால்
தட்டில் உணவு பறந்து வரப்போவதில்லை,.

இன்னும் உணராமல் பலரும் இப்படிதான் கொரானாவா வந்தா வரட்டும் பாத்துகலாம் என்றுதான் இருக்கிறார்கள். ....

படித்ததில் பிடித்தது.

*அன்று,* 
*கூடி வாழ்ந்தால்* 
*கோடி நன்மை ....*.

*இன்று*, 
*கூடி வாழ்ந்தால்*  
*கொரோனாவுக்கே* *நன்மை* ...

*அன்று*, 
*ஒன்றுபட்டால்* 
*உண்டு வாழ்வு ..*.

*இன்று,* 
*ஒன்றுபட்டால்* 
*உண்டு சாவு...*

*அன்று,* 
*தொட்டால்* 
*பூ மலரும்...*

*இன்று*, 
*தொட்டால்*
*நோய் பரவும்*...

*அன்று,* 
*ஒண்ணாயிருக்கக்*
*கத்துக்கனும் .*..

*இன்று,*
*ஒதுங்கி இருக்கக்* 
*கத்துக்கனும் ...*

*அன்று,* 
*தீண்டாமை ஒரு* 
*பாவச்செயல் ...*

*இன்று,* 
*தீண்டாமை* 
*பகுத்தறிவின்* *செயல் ...*

*அன்று*
*உலா வந்தால்*
*உடலுக்கு நன்மை*

*இன்று*
*உலா வந்தால்*
*உயிருக்கே  தீமை*

                    
*(கொரோனாவை வெல்வோம்)*
*வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்* #நபியவர்களின் #தற்காப்பு #நடவடிக்கை

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்' என்று தெரிவித்தார்கள். மேலும், *'கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும்* அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் வீட்டிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்' என்று கூறினார்கள். *நூல் அஹ்மத் : 24358*


என் இனிய முகநூல் நண்பர்களே!

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் படைகள் தம் பாதையில் வருவதைக் கண்ட எறும்பு இன நிர்வாக அதிகாரி ஒருவர் சக எறும்புகளை நோக்கி, "எறும்புகளே!  சுலைமான் நபியும்  அவரது படைகளும்  வருகின்றனர். அவர்கள் உங்களை (மிதித்து) நொறுக்கிவிடக் கூடாது .உங்கள்  புற்றுகளில் நுழைந்து (உங்களைத் தற்காத்துக்) கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்திய நிகழ்வு திருக் குர்ஆனில்  அந்நம்ல்-எறும்பு  எனும் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது‌. 

இன்றைய கொரோனா கிருமியின் படையெடுப்பிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள நாம் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்‌. வெளியே செல்லக் கூடாது என்ற  கட்டுப்பாடும் இந்த வசனத்தையே நமக்கு நினைவு படுத்துகின்றன.

அல்லாஹ் பாதுகாப்பான் எம் இந்திய தேசத்தை! மனமுருகி துஆ செய்வோம்! மனம் தளர வேண்டாம் உறவுகளே!

No comments:

Post a Comment