⭐🌹⭐🌹⭐🌹⭐🌹⭐
அஸ்ஸலாமு அலைக்கும்
18/01/2019 🔹வெள்ளி
فكرة اليوم🔸இன்றையச் சிந்தனை
......................................................
➡3⃣9⃣2⃣⬅
*மனிதா உன்னிடம் இறையச்சமும், பேணுதலும் இருந்ததால் உன்னிடமிருந்து ஆரோக்கியமான சந்ததிகள் தலைத்தோங்கும்.*
يحكى أن رجلاً اسمه المبارك كان عبدًا رقيقًا لرجل غني اسمه نوح ابن مريم، فطلب منه سيده أن يذهب ليحرس البساتين التي يملكها فذهب.
وبعد عدة شهور ذهب نوح ليتفقد أحوال البساتين ومعه مجموعة من أصحابه.
فقال للمبارك: ائتني برمان حلو وعنب حلو، فقطف له رمانات ثم قدمها إليهم، فإذا هي حامضة وكذلك العنب.
فقال له نوح: يا مبارك ألا تعرف الحلو من الحامض؟
قال: لم تأذن لي ياسيدي أن آكل منه حتى أعرف الحلو من الحامض.
فتعجب الرجل وقال: أما أكلت شيئًا وأنت هنا منذ شهور؟
قال المبارك: لا والله ما ذقت شيئًا، ووالله ما راقبتك ولكني راقبت ربي، فتعجب سيده من تلك العفة، ومن هذا الورع، وظن في البداية أنه يخدعه، فلما سأل الجيران.
قالوا: ما رأيناه يأكل شيئًا أبدًا، فتأكد من صدقه وورعه وعفته.
فقال: يا مبارك أريد أن أستشيرك في أمر عظيم، قال: ما هو يا سيدي؟
قال: إن لي ابنة واحدة وتقدم لها فلان وفلان وفلان "من الأثرياء" فيا ترى لمن أزوجها.
قال له المبارك: يا سيدي إن اليهود يزوجون للمال، والنصارى يزوجون للجمال، والعرب للحسب والنسب، والمسلمون يزوجون للتقوى، فمن أي الأصناف أنت؟ زوِّج ابنتك للصنف الذي أنت منه.
فقال نوح: والله لا شيء أفضل من التقوى، ووالله ما وجدت إنسانًا أتقى لله منك فقد اعتقتك لوجه الله وزوجتك ابنتي.
(الكتاب : موسوعة الأخلاق والزهد والرقائق جلد- 1صفحة: 282)
*முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் நூஹ் இப்னு மர்யம் என்ற செல்வந்தருக்கு அடிமையாக இருந்தார்கள்.*
*ஒருநாள் எஜமான் நூஹ் இப்னு மர்யம் அவர்கள் தன்னுடைய தோட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பை அன்னாரிடம் ஒப்படைத்திருந்தார்.*
*அதனால் முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தோட்டத்திற்கு சென்றார்கள்.*
*சில மாதங்கள் கழித்து எஜமான் நூஹ் அவர்கள் தோட்டத்தினுடைய நிலையை அறிவதற்காக தன் நண்பர்களோடு அந்த தோட்டத்திற்குச் சென்று முபாரக் (ரஹிமஹல்லாஹ்) அவர்களிடம் இனிப்பான மாதுளம் பழங்களையும் திராட்ஷைகளையும் கொண்டு வா” என்றார்.*
*முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மாதுளம் பழங்களையும் திராட்ஷைகளையும் பறித்து அவருக்கு முன்னால் வைத்தார்கள்.*
*அவைகள் அனைத்தும் புளிப்பாக இருந்தன.*
*உடனே எஜமான் நூஹ் அவர்கள் “முபாரக்கே! புளிப்பான பழம் எது? இனிப்பான பழம் எது? என்று நீ அறியவில்லையா?” என்று கேட்டார்.*
*அதற்கு முபாரக் அவர்கள் “என் எஜமானரே! எனக்கு இந்த கனிகளை உண்ணுவதற்கு நீங்கள் அனுமதி தரவில்லை. அப்படி அனுமதி தந்திருந்தால் நான் புளிப்பு எது? இனிப்பு எது? என்று அறிந்து இருப்பேன்” என்றார்கள்.*
*இதை கேட்டு ஆச்சரியமடைந்த அந்த எஜமான் நூஹ் அவர்கள் “இத்தனை மாதங்களாக இங்கே வேலை செய்தும் நீ ஒரு கனியைக் கூட சாப்பிட்டது இல்லையா?” என்று கேட்டார்.*
*அதற்கு முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒரு கனியைக் கூட நான் சுவைத்ததில்லை. அல்லாஹ் மீது ஆணையாக நீங்கள் என்னைக் கண்காணிக்கின்றீர்கள் என்று நான் கருதவில்லை. ஆனால் என் ரப்பு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்விலேயே இருக்கின்றேன். அதனால் ஒரு கனியைக் கூட நான் சுவைக்கவில்லை என்றார்கள்.*
*ஆரம்பத்தில் தன்னை ஏமாற்றுகிறாரோ? என்று நினைத்த எஜமான் நூஹ் அவர்கள் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தார். அருகே இருந்த தோட்டக்காரர்கள் “இந்த முபாரக் என்பவர் ஒரு பழத்தை கூட சுவைத்ததில்லை” என்று கூறினார்கள்.*
*விசாரித்ததில் முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் வாய்மை, பேணுதல் உறுதியாகிவிட்டப்போதுமுபாரக் (ரஹிமஹல்லாஹ்) அவர்களின் பேணுதலைக் கண்டு அன்னாரின் எஜமான் ஆச்சரியமடைந்தார்.*
*பிறகு எஜமான் நூஹ் அவர்கள் முபாரக் அவர்களே! உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் குறித்து ஆலோசனை செய்ய போகிறேன் என்றார்.*
*அதற்கு முபாரக் அவர்கள் என்ன விஷயம் என்று கேட்டார்கள்.*
*அதற்கு அவர் “எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அந்த மகளே இன்னன்ன மனிதர்கள் எல்லாம் பெண் கேட்டுள்ளார். நான் யாருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.*
*அதற்கு முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் “எஜமான் அவர்களே! தங்களின் பெண் மக்களை யூதர்கள் காசு பணத்தை அடிப்படையாக வைத்து திருமணம் முடித்துக் கொடுப்பார்கள். கிறிஸ்துவர்கள் அழகை அடிப்படையாக வைத்து திருமணம் முடித்துக் கொடுப்பார்கள். அரபுகள் குடும்ப பாரம்பரியத்தை அடிப்படையாக வைத்து திருமணம் முடித்துக் கொடுப்பார்கள். முஸ்லிம்கள் இறையச்சத்தை அடிப்படையாக வைத்து திருமணம் முடித்துக் கொடுப்பார்கள். நீங்கள் எந்த வகையைச் சார்ந்தவரோ அந்த வகையைச் சார்ந்தவர்க்கு உங்கள் பெண்ணை திருமணம் முடித்துக் கொடுங்கள்” என்றார்.*
*உடனே எஜமான் அவர்கள் இறையச்சத்தைவிட சிறந்த துணை எதுவுமில்லை இல்லை. உம்மை விட சிறந்த இறையச்சமுள்ள மனிதனை நான் கண்டதுமில்லை. எனவே அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி உம்மை நான் விடுதலை செய்து என் மகளை திருமணம் முடித்து கொடுக்கிறேன் என்றார்.*
*முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு மகனாக பிறந்தவர்கள் தான் மிகப்பெரும் ஹதீஸ் கலை அறிஞரும், சட்டத்துறை வல்லுனரும், மிகப்பெரும் இறைநேச் செல்வரான அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள். இவர்கள் இமாம் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவங்களின் காலத்தை சேர்ந்தவர்களாகும்.*
✍மௌலவி
*மு.அபூ அமீன் ஃபாஜில் பாகவி.*
*பேராசிரியர் :ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி. நீடூர்.*
🌹☀🌹☀🌹☀🌹☀🌹
No comments:
Post a Comment