ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Saturday, 29 April 2017

நுண்ணறிவை கொண்டு சட்டத்தின் தீர்ப்பு

இமாம் அவர்களின் தீர்ப்பு
**************************************
ஒருநாள் ஒரு வீட்டுக்குள் கொள்ளையன் புகுந்து வீட்டுக்காரனை கட்டிப்போட்டு,வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்துச்  சென்றான்.போகும்போது வீட்டுக்காரனிடம் "திருடன் யார் என்று சொல்லமாட்டேன்,அப்படிச் சொன்னால் என் மனைவி தலாக்"
என்று குர்ஆனை கையில் கொடுத்து சத்தியம் செய்யச் சொன்னான்.இல்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் உயிருக்கு பயந்து வீட்டுயுடையவர் அப்படியே சத்தியம் செய்துவிட்டார்.
மறுநாள் இவருடைய பொருட்களை இவருக்கு முன்பாகவே தைரியமாக விற்றுக் கொண்டிருக்கிறான். இவரால் ஒன்றும் செய்யவோ,சொல்லவோ முடியவில்லை.அப்படி சொன்னால் தலாக் நிகழ்ந்து விடுமே.ரெம்ப கைசேதத்தோடு இமாம் அபூஹனீபாஅவர்களிடம் சென்று தனக்கு நேர்ந்த அவலத்தை அழாத குறையாக எடுத்துக்கூறினார்.
அதற்கு இமாம் அவர்கள்,அவரிடம் உனது மஹல்லாவிலுள்ள முக்கியஸ்தர்களை அனைவரையும் ஒன்று கூட்டி வை. நான் அங்கு வந்து அவர்களிடம் பேசி இதற்கு தீர்வு காண முடியும் என்றார்கள்.அவ்விதம் எல்லோரும் வந்து சேர்ந்ததும்,நீங்களெல்லாம் இவருடைய கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் யாவும் திரும்ப இவருக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?அப்படியானால் உங்க மஹல்லாவிலுள்ளஅனைவரையும் உங்கள் மஸ்ஜிதில் வரவழைத்து,எல்லோரும் வந்த பின்பு ஒருவர் பின் ஒருவராக வெளியே வரும்போது (திருடன்)இவரா?என இவரிடம் கேட்கவேண்டும்.இவர் இல்லை இல்லை என்று மறுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
திருடியவன் வெளியே வரும்போது மட்டும் மறுப்பேதும் தெரிவிக்காமல் பேசாமல் இருக்க வேண்டும்.ஆமா என்றும் சொல்லக்கூடாது,இல்லை என்றும் சொல்லக்கூடாது.மௌனமாக நிற்க வேண்டும்.அப்போது இவர் சொல்லாமலே திருடன் யார் என்று தெரிந்துவிடும்.மனைவியும் தலாக்
ஆக மாட்டாள். என்று தங்களுக்கே உரிய நுண்ணறிவை கொண்டு சட்டத்தின் தீர்ப்பை வழங்கினார்கள் இமாம்  அபூஹனீபா அவர்கள்.

No comments:

Post a Comment