நபி ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம்
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் விண்ணுலகப் பயணம் –மிஃராஜ் சென்றிருந்த போது ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.
உரையாடலின் இடையே அல்லாஹ்வின் தூதர் {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் } அவர்கள்,,,
”நீங்கள் எவ்வாறு எதற்காக கொலை
செய்யப்பட்டீர்கள்?” என்று கேட்டார்கள்...,,,
அதற்கு, நபி ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள்,,,
“எனது மகன் யஹ்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள் ஸாலிஹான, அழகுமிக்க,நல்லொழுக்கமுள்ள, தெளிவான
சிந்தனையும்,
பெண்களின் மீதான மோகமும் இல்லாத சிறந்த இளைஞராக இருந்தார்.
இஸ்ரவேலர்களைச் சார்ந்த ஓர் அரசனின் மனைவி ஒருத்தி என் மகன் யஹ்யாவின் மீது மோகம்
கொண்டு,
அவருடன் தவறான உறவு
கொள்ள விரும்பி, தன்னுடைய பணிப்பெண் ஒருவரை தூதனுப்பினாள்.
பல முறை அவள் தூதனுப்பினாள்.
ஆனால், என் மகன் யஹ்யா மறுத்து விட்டார்....!!
அல்லாஹ் என் மகனை அத்தீய செயலிலிருந்து காப்பாற்றினான்.
இதனால் என் மகன் மீது
சினங்கொண்ட அவள் என் மகன் யஹ்யாவை கொலை செய்ய திட்டமிட்டாள்.
இவ்வாறிருக்க ஆண்டு தோரும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும்
அவர்களின் பண்டிகை நாளும் வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் அரசன் தன் மனைவிக்கு
அவள் விரும்புகிற பரிசில்களை வழங்குவான்.
இந்நிலையில்,
எல்லா நாட்களையும் விட
அன்று மிகவும் அழகாக தன் மனைவி இருப்பதைக்
கண்டு
“இவ்வாண்டு உனக்கு மிக உயர்ந்த ஓர் பரிசை, அதுவும் நீ எதை விரும்பினாலும் உனக்கு தர வேண்டுமென விரும்புகின்றேன்” என்றான் அரசன்.
அதற்கவள், ”யஹ்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களின் தலை தான் வேண்டும்” என்று கூறினாள்.
இது அல்லாத வேறெதைக் கேட்டாளும் தருகின்றேன்”
என்றான் அரசன்.
ஆனால், அவளோ ”எனக்கு
யஹ்யாவின் தலை தான் வேண்டும்” என்றாள்.
மனைவியின் அழகில் அடிமைப் பட்டுக்கிடந்த
அரசன்
”யஹ்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களின் தலையைக்
கொய்து வருமாறு தன் சேவகர்களுக்கு ஆணை
பிறப்பித்தான்.
அரசனின் சேவகர்கள் பைத்துல் முகத்தஸ் நோக்கி வந்தார்கள்.
நானும், யஹ்யாவும் மிஹ்ராபின் அருகே சற்று இடைவெளி விட்டு நின்று
தொழுது கொண்டிருந்தோம்...!!
அரசனின் சேவகர்கள் யஹ்யாவின் தலையை
வெட்டி அவரது தலையையும், இரத்தத்தையும் ஒரு
தட்டில் ஏந்தியவர்களாக அரசனின் மனைவியிடம்
கொண்டு சென்றார்கள்.
அப்போது, நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் } அவர்கள்...
“நீங்கள் எப்படி இவ்வளவு பொறுமையாக
இருந்தீர்கள்?” என்று கேட்டதற்கு,
ஜகரிய்யா(அலைஹிஸ்ஸலாம் )அவர்கள் ”நான் என் ரப்போடு உரையாடிக்
கொண்டிருந்தேன்....
தொழுது கொண்டிருந்தேன் நடந்த எதுவும் எனக்குத்
தெரியாது. தொழுது முடித்த பின்னர் தான் இந்த விவரமெல்லாம் எனக்குத்
தெரிந்தது” என்று பதில் கூறிவிட்டு…,,,,,
யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொலை செய்யப்பட்ட அன்று மாலை
நேரத்தில் அரசனும்,
அவன் மனைவியும்,
குடும்பத்தார்களும், அவனின் சேவகர்களும்
அரண்மனையோடு அல்லாஹ்வின் கோபத்தால் இருந்த
இடத்திலேயே பூமிக்குள் இழுக்கப்பட்டார்கள்...!!
இதை அறிந்து கொண்ட
இஸ்ரவேலர்கள்,,,, “ஜகரிய்யாவின் இறைவன்
ஜகரிய்யாவிற்காக கோபப்பட்டான்....!!
இஸ்ரவேலர்களே! ஒன்று படுங்கள்! நாம் நம் அரசருக்காக கோபப்படுவோம்.
நாமும் ஜகரிய்யாவை
ஒன்று திரண்டு கொல்வோம்” என சபதமிட்டுப் பழிவாங்க திட்டமிட்டார்கள்.
இச்செய்தி எனக்கு எட்டியதும் நான் அவர்கள் கண்ணில் படாதிருக்க காட்டு வழியே ஓடினேன்.
ஒரு கட்டத்தில் அவர்கள் என்னை நெருங்கி வந்து விட்டதை உணர்ந்தேன். அப்போது,,,,
எனக்கு முன்பாக இருந்த ஓர் மரம்“அல்லாஹ்வின் நபியே! என்னுள் ஒளிந்து
கொள்ளுங்கள்! உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்றது.
நான் அதனுள் சென்று ஒளிந்து கொண்டேன். என்னைப் பின் தொடர்ந்து வந்தவர்களுக்கு இப்லீஸ்
வழிகாட்டிக் கொண்டு வந்தான்....,,,,
ஆனால், மிக விரைவாக என்னைப் பின் தொடர்ந்த அவன் மரத்தின் உள்ளே நான் ஒளியும் போது எனது ஆடையின் சிறிய ஒரு பகுதியைப் பிடித்து இழுத்துக் கொண்டான்.
பிளந்த மரம் மூடிய போது என் ஆடையின் சிறிய பகுதி வெளியே தெரிந்தது.
இஸ்ரவேலர்கள் மரத்தை நெருங்கியதும்,,,
இப்லீஸ் அடையாளம் காட்டிக் கொடுத்தான். கடும் கோபத்தில் இருந்த
இஸ்ரவேலர்கள் என்னை மரத்தோடு வைத்து தீயிட்டுக் கொளுத்திட முனைந்தார்கள்.
ஆனால், இப்லீஸோ ரம்பத்தால் இருகூறாக என் உடல் பிளக்கப்பட வேண்டும் என ஆலோசனை கூறினான்.
அதன் பின்னர் ரம்பத்தால்
மரத்தையும், என்னையும் இரண்டாகப் பிளந்தார்கள்”
என்று கூறினார்கள்.
அப்போது, நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் } அவர்கள்
“அறுக்கப்பட்ட போது உங்களுக்கு அதன் வேதனை தெரியவில்லையா?” என்று வினவியதற்கு,
ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள் “அல்லாஹ் தான்
எனது உயிர் இவ்வாறு பிரிய வேண்டும் என
நாடியுள்ளான்;
அவ்வாறிருக்கையில், எனக்கு எப்படி அது வேதனையாக தெரியும். இல்லை,,,
எனக்கு அப்படியொரு உணர்வு அப்போது
ஏற்படவில்லை” என்று பதில் கூறினார்கள்...!!
ஸுப்ஹானல்லாஹ்
( நூல்: அல்பிதாயா வன்
நிஹாயா லி இமாமி இப்னு கஸீர்(ரஹிமஹுமுல்லாஹு அலைஹி)
No comments:
Post a Comment