ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Saturday, 12 August 2017

இப்ராஹிம் இப்னு அத்ஹம்

✍🏿 : *இஸ்மாயில் சிராஜி*

*வலிமார்கள் வாழ்வினிலே*

அந்த நாட்டின் மன்னரோ அரண்மனையை விட்டு வெளியேறி சில வருடங்கள் ஆகிவிட்டன அவரை தேடி அரசப் பிரதிநிதிகள் பல ஊர்கள் சுற்றியும் மன்னர் எங்கு இருக்கின்றார் என்கின்ற தகவல் மட்டும் கிடைக்கவே இல்லை !

இது இவ்வாறு இருக்க அரண்மனையை விட்டு வெளியேறிய மன்னர் ஒரு கடற்கரை நகரின் கடற்கரைப் பகுதியில் உள்ளதாக தகவல் வர அந்த கடற்கரையை நோக்கி பயனித்தனர் அரச பிரதிநிதிகள்!

அங்கு சென்று தம் அரசரின் நிலையை பார்த்த அரச பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தினர் நாடாளும் மன்னரான  தன் மன்னர் பகட்டான உடை  உடுத்தி படோபகமாக காட்சி அளித்த தங்கள் மன்னர் கடற்கரை ஓரமாக ஒரு பக்கீரை போல கிழிந்த ஆடை அணிந்து கிழிந்த தன் ஆடையை தைத்தவராக கண்டார்கள் .

தன் மன்னரை அணுகிய அந்த பிரதிநிதிகள் தாங்கள் இந்த தவ வாழ்வை விடுத்து தங்களுடன் அரண்மனை திரும்ப வேண்டும் எனக் கூறினார்கள்.

அந்த பெருந்தகையோ தான் துணி தைத்துக் கொண்டு இருந்த ஊசியை கடலில் எறிந்து விட்டு இதை யாரும் கடலில் குதித்து மீட்டு எடுத்து வர இயலுமா என வினவ அரச பிரதிநிதிகள் தயங்கி நிற்க இது  உங்களால் முடியாது இல்லையா எனக் கூறிய அந்த பெருந்தகை ஒரு சிறிய சத்தத்தை எழுப்பினார்கள் என்ன ஆச்சரியம் பல சிறிய தங்க நிற மீன்கள் தங்கள் வாயில் தங்க ஊசிகளை தாங்கி வந்த போதும் அந்த பெருந்தகை தைத்த ஊசியை தாங்கிவந்த மீனின் வாயில் இருந்த அந்த ஊசியை மட்டும் எடுத்துக் கொண்டு இத்தகைய ஆட்சியை பெற்றவன் எப்படி உலக ஆட்சியை விரும்புவான்  என அந்த அரச பிரதிநிகளிடம் கேட்டு விட்டு நீங்கள் அனைவரும் என்னைத் தேடுவதை விட்டு விட்டு நாடு திரும்பி நேர் வழியில் ஆட்சியை நடத்தி வாருங்கள் என அறிவுரை செய்தார்கள்

இத்தகைய மாண்பை பெற்றவர்கள் தான் *பல்க்*நாட்டின் மன்னராக இருந்து ஆன்மீக உச்சம் பெற்ற *ஹழ்ரத் சுல்தான் இப்ராஹிம் இப்னு அத்ஹம் (ரஹ்)*

அன்னவர்கள் ஆவார்கள்:-

Ismail siraji

2 comments:

  1. பத்ருப் போருக்கு சென்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மதினாவில் நிர்வாகப் பொறுப்பை கொடுத்துள்ளார்கள் பின்பு நபி ஸல்லல்லாஹு அவர்கள் இன்னொரு நபித்தோழரை அழைத்து நிர்வாகப் பொறுப்பை கொடுக்கிறார் கள் அந்த நபித்தோழர் யார்

    ReplyDelete
    Replies
    1. அபூலுபாபா رضي الله تعالى عنه

      Delete