ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Sunday, 6 August 2017

மஸ்ஜிதே மாமூர் பள்ளி வாசல் வரலாறு

சென்னை மண்ணடியில் உள்ள மஸ்ஜிதே மாமூர் பள்ளிவாசலின் சரித்திரம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!!!!!!!

ஆம் அதை கட்டியவர் ஆற்காடு நவாபு அவர்கள் இது ஒரு ஷாபி பள்ளிவாசல்......

இந்த பள்ளிவாசல் கட்டியதின் நோக்கம்?????ஒரே ஒரு ஹதீஸ்  வசனம்தான்!!!!!

ஒரு முறை ஆற்காடு நவாப் அவர்கள் நபி(சல்லல்லாஹு அளைஹிவசல்லம்) அவர்களின் ஹதீஸை படித்து  கொண்டு இருக்கையில் ஒரு வாசகத்தை  மட்டும் திரும்ப திரும்ப ஓதினார்கள்
இந்த உலகம் காபிர்களின் சொர்க்கம், முஸ்லிம்களின் சிறைச்சாலை....

இப்போது நவாபுக்கு வருத்தம் அதிகமாகி விட்டது  நாமோ பகட்டான அரண்மனை வாழ்க்கை, உயர்ந்த உடை, பலவகை உணவு, செல்வ   செழிப்பான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அல்லாஹ்(svt) முஸ்லிம்களுக்கு இந்த உலகம் சிறைச்சாலை என்று அல்லவா கூறுகிறான் என்று.........  

உடனே ஊரில் உள்ள அத்துனை ஆலிம்கள் மற்றும் உலமாக்களை அழைத்து அவர்களை கண்ணியம் செய்யும் விதமாக விருந்தும் படைத்தார் அந்த விருந்துக்கு வந்திருந்த அணைத்து ஆலிம்கள், உலமாக்களுக்கு தன் கையாலேயே அவர்கள் கைகளை கழுவ தண்ணீர் ஊற்றினார் நவாப்.

மன்னர் தண்ணீர் ஊற்றுகிறார் என்று எல்லோரும் பட்டும் படாததுமாக கையை கழுவி விட்டு போய் விட்டார்கள் அதில் ஒருவர் பெரியவர் மட்டும்  கை, முகம், கால்கள் என்று சாவகசமாக  எல்லோரும் வியக்கும் விதமாக நடந்து கொண்டார்கள்...

எல்லா ஆலிம்களும், உலமாக்களும் சொன்ன விளக்கங்கள் மன்னருக்கு நிம்மதி தரவில்லை.  .....

அந்த ஒரு பெரியவர் மன்னரிடத்தில் உங்கள் கேள்வி என்ன என்று கேட்க அந்த மன்னர் அந்த ஹதீஸின் வசனத்தை கூறினார்.

இதை பொறுமையாக கேட்ட அந்த பெரியவர் அந்த மன்னரிடம்,

நீங்கள் தான் மன்னர் ஆச்சே உங்களுக்கு குடிக்கும் பழக்கம் இருக்கா என்று நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று.

நீங்கள் பல பெண்களுடன் உறவு வைத்து உண்டா,  நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று.

நீங்கள் சூது விளையாடியது உண்டா, நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று.

இப்படி ஒவ்வொன்றாக கேட்டு விட்டு பிறகு அந்த பெரியவர் நவாபிடம் கூறினார் ஒரு மன்னர் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்று இருந்தும்  அல்லாஹ் தடுத்த விஷயத்தை விட்டும் உங்கள் கல்ப்ஹை சிறை வைத்து இருப்பதால் நீங்களும் சிறைவாசிதான்..... கவலை பட தேவை இல்லை என்று சொன்னதும் நவாப் மகிழ்ந்து விட்டார்...

அந்த பெரியவருக்கு நவாப் அவர்கள் பொன்னும் பொருளும் கொடுத்தும் அவர்கள் அதை ஏற்க வில்லை, அந்த பெரியவரோ எனக்கு எதுவும் வேண்டாம் அப்படி தருவதாக இருந்தால் அல்லாஹ்வின் பாதையில் ஒரு பள்ளிவாசலை மட்டும் கட்டுங்கள் என்று கூறினார்கள்..... அது தான் மண்ணடியில் உள்ள மஸ்ஜிதே மாமூர் பள்ளி வாசல் ....

மார்க்க விளக்கம் தந்த அந்த பெரியவர்கள் தான் கீழக்கரையில் மறைந்து வாழும்  வலியுல்லாஹ் (இறை நேச செல்வர் )சதகத்துல்லா அப்பா அவா்கள்.

No comments:

Post a Comment