ஹஜ்ஜின் வகைகள்
அவரவர் வசதிக்கு ஏற்ப்ப மூன்று விதமாக ஹஜ்ஜை நிறைவேற்ற முடியும்.
1. இஃப்ராத் : ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுதல்.
இதற்கு மீக்காத்தில் அல்லாஹ{ம்ம லப்பைக்க ஹஜ்ஜன் என்று நிய்யத் வைக்க வேண்டும் இவர் உம்ரா செய்யாது ஹஜ்ஜை மட்டும் செய்வார் இவர் குர்பான் பொடுப்பது கடமை இல்லை.
2. கிறான் : ஹஜ்ஜையும் உம்றாவையும் ஒன்றாக சேர்த்து நிறைவேற்றுதல்.
இதற்கு மீக்காத்தில் அல்லாஹ{ம்ம லப்பைக்க உம்றத்தன் வஹஜ்ஜன் என்று நிய்யத் வைக்க வேண்டும்.
இவர் உம்ராவை முடித்து விட்டு இஹ்ராமை களையக் கூடாது அதே இஹ்ராத்துடன் ஹஜ்ஜையும் நிறைவேற்றிய பிறகே இஹ்ராமை களைதல் வேண்டும். ஹஜ் கிரான் செய்பவர் ஓரு ஆடு குர்பானி கொடுப்பது கடமையாகும்.
3. தமத்துஉ : உம்றாவையும் ஹஜ்ஜையும் வௌ;வேறாக நிறைவேற்றுதல்.
இதற்கு மீக்காத்தில் அல்லாஹ{ம்ம லப்பைக்க உம்றத்தன் என நிய்யத் வைத்து இஹ்ராம் தரித்து உம்றாவை நிறைவேற்றியதன் பிறகு இஹ்ராமைக் களைந்திட வேண்டும். பிறகு. துல்ஹஜ் பிறை 8ல் தான் இருக்கும் இடத்திலேயே அல்லாஹ{ம்ம லப்பைக்க ஹஜ்ஜன் என நிய்யத் வைத்து ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். இவரும் ஓரு ஆடு குர்பானி கொடுப்பது கடமையாகும்.
ஹஜ்ஜின் (பர்ளு )கடமைகள் -4
இஹ்ராம் தரித்தல்
அரஃபாவில் தங்குதல்
தவாப் செய்தல்
ஸயி செய்தல்
ஹஜ்ஜின் (வாஜிப்) கடமைகள்
மீகாத்தில் இஹ்ராம் கட்டுதல்
அரபாவில் சூரியன் மறையும் வரை தங்குதல்
முஸ்தலிபாவில் தங்குதல்
பிறை 11, 12, 13 இரவுகளில் மினாவில் தங்குதல்
அகபா ஜம்ராத் தூண்களில் வரிசைப்படி கல் எறிதல்
தலைமுடி மழித்தல் அல்லது குறைத்தல்
விடை பெறும் தவாப் அல் -வதாஉ செய்தல்
ஹஜ்ஜின் ஸ{ன்னத்கள்
இஹ்ராம் தரிக்கும் பொழுது குளித்தல்
ஆண்கள் வெள்ளை ஆடைகளில்; இஹ்ராம் தரித்தல்
தல்பியா சொல்லுதல்
அரஃபா நாளின் இரவு (பிறை 8 மாலையில்) மினாவில் தங்குதல்
மக்கா நகருக்குச் சென்றவுடன் செய்யும் தவாபில் ஆண்கள் மட்டும் முதல் மூன்று சுற்றுகளில் சற்று வேகமாக நடக்குதல்.
வலது புஜம் திறந்த நிலையில் மேலங்கி அணிதல்
ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுதல்
ஹஜ் – உம்றா செய்யும் முறை
உம்றாவின் கடமைகள் -4
1. இஹ்ராம்
2. தவாப்
3. ஸயி
4. தலைமுடி மழித்தல் – குறைத்தல்
உம்றா செய்யும் முறை
இஹ்ராம்
உம்றா நிறைவேற்றப் புனிதப் பய ணம் மேற்கொள்பவர் தமக்குரிய (எல்லை) மீகாத் வந்ததும் குளித்து இஹ்ராம் கட்டி அல்லா ஹ{ம்ம லப்பைக்க உம்றத்தன் என்று நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும். நிய்யத் வைத்தலிலிருந்து புனித கஃபாவை அடையும் வரை தொடர்ந்து தல்பிய்யாவைச் சொல்லிக் கொண் டிருக்க வேண்டும்.
தல்பிய்யா
لَبَّيْكَ الَّلهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ اِنَّ الْحَمْدَ وَ النِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَشّرِيْكَ لَكَ
லப்பை(க்)க அல்லாஹ{ம்ம லப்பைக்ää லப்பை(க்)க லா சரீக்க ல(க்)க லப்பைக்ää இன்னல் ஹம்த வன்நிஃ;மத்த லக்க வல் முல்க்க லா சரீக்க லக்
மக்கா சென்றதும் கஃபாவுக்குச் செல்ல வேண்டும். அங்கு வலது காலை வைத்து
بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَي رَسٌوْلِ اللهِ اَلَّلهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ
பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸ_லுல்லாஹி அல்லாஹ{ம்மப்தஹ் லீ அப்வாப ரஹ்மத்திக்க என்று ஓதியவாறு உள்ளே நுழைய வேண்டும்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால்! ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்மீது உண்டாவதாக யா அல்லாஹ் எனக்கு உன் அருள் வாயில்களைத் திறந்து விடுவாயாக. என்ற துஆவை ஓத வேண்டும் அத்துடன் தல்பியா ஓதுவதை நிறுத்தி விட்டு உடனடியாகத் தவாபை ஆரம்பிக்க வேண்டும்.
தவாப்
ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடல் அல்லது வலது கையால் தொட்டு கையை முத்தமிட்டு விட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் என்று கூறி சுற்றைத் தொடங்க வேண்டும். முத்தமிட அல்லது தொட முடியவில்லையெனில் அதை நோக்கி கையால் சைக்கினை செய்ய வேண்டும். சைகை செய்த கையை முத்தமிடக் கூடாது.
இவ்வாறு ஹஜருல் அஸ்வத் கல்லில் ஆரம்பித்து மீண்டும் ஹஜருல் அஸ்வத் கல்லை வந்தடையும் போது தவாபின் ஒரு சுற்று முடிவடையும் இவ்வாறு ஏழுமுறைகள் சுற்றி வர வேண்டும்.
முதல் மூன்று சுற்றுக்களில் ரமல் அதாவது ஓரளவு வேகமாக நடக்க வேண்டும்.
இஹ்ராமின் மேலங்கியை வலது அக்குளின் கீழ் சுற்றி அதன் இரு முனைகளையும் இடது தோள் புஜத்தின் மீது போட்டு வலது தோள் புஜம் திறந்திருக்க வேண்டும்.
ருக்னுல் யமானியில் இருந்து ஹஜ்ருல் அஸ்வத் வரும் வரை ரப்பனா ஆத்தினா பித்துன்யா எனும் துஆவை முழுமையாக ஓத வேண்டும்ää
தவாப் முடிந்த பிறகு ம(க்)காமே இப்ராஹீமுக்கு எதிரில் வந்து இரு ரக்அத் தொழ வேண்டும். முதல் ரக்அத்தில் பாத்திஹா சூராவுக்குப் பிறகு குல் யா அய்யுஹல் காகுபிரூன் சூராவையும் இரண்டாம் ரக்அத்தில் பாத்திஹா சூராவுக்குப் பிறகு குல் ஹ{ வல்லாஹ{ அஹத் சூராவையும் ஓத வேண்டும்.
ஸயி
பிறகு ஸபா- மர்வாவிற்கு இடையில் ஸயி (தொங்கோட்டம்) செய்ய வேண்டும். முதலாவது ஸபா மலை மீது ஏறி நின்று கஃ;பாவை முன்னோக்கியவாறு
اِنَّ الصَّفاَ وَ الْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ فِمَنْ حَجَّ الْبَيْتَ أوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أن يَّطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَاِنَّ اللهَ شَاكِرٌ عَلِيْمٌ
எனும் அல்-குர்ஆன் வசனத்தை ஓத வேண்டும். அதனைத் தொடர்ந்து ஸபா வில் பின் வரும் துஆவையும் ஓத வேண்டும்.
اللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ لا اله اِلاَّ اِللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكَ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَي كُلَِ شَيْءٍ قَدِيْرٌ لا َالهَ اِللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ أنْجَزَ وَعْدَهُ وَ نَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ
அல்லாஹ{ அக்பர்ää அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{அக்பர் ää லா இ லாஹ இல்லல்லாஹ{ வஹ் தஹ{ லா ஷரீக லஹ{ லஹ{ல் முல்கு வலஹ{ல் ஹம்து யுஹ்யீ வ யுமீத்து வஹ{வ அலா குல்லி ஷை யின் கஸீர்ää லா இலாஹ இல்லல்லாஹ{ வஹ்தஹ{ லாஷ ரீக்கலஹ்ää அன் ஜஸ வஅ;த ஹ{ வ நஸர அப்தஹ{ வ ஹஸ மல் அஹ்ஸாப வஹ்தஹ்
பிறகு கைகளை உயர்த்தி தமது தேவைகளை வேண்டி துஆ செய்ய வேண்டும். இவ்வாறு மூன்றுமுறை ஓத வேண்டும் பிறகு ஸபாவிலிருந்து மர்வா மலைக்குச் செல்ல வேண்டும்.
அவ்வாறு செல்லும் வழியில் பச்சை விளக்குகளால் அடையாளமிடப்பட்ட பகுதியில் வேகமாக நடக்க வேண்டும். பிறகு மர்வாவை அடைந்ததும்; ஸபாவில் செய்தது போன்று செய்ய வேண்டும். அல்-குர்ஆன் வசனத்தை ஓதக்கூடாது. இப்போது ஸயியின் ஒரு சுற்று முடிந்து விடும் பிறகு மர்வாவிலிருந்து ஸபாவுக்கு செல்லும் போது ஸயியின் இரண்டு சுற்றுக்கள் முடிந்து விடும். இவ்வாறு ஏழு முறைகள் செய்ய வேண்டும்.
தலைமுடி மழித்தல் அல்லது குறைத்தல்
ஸயி முடிந்ததும் தலைமுடியை மழித்த்துக் கொள்ள அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். குறைப்பதாயின் தலை முழுவதிலிருந்தும்; குறைத்தல் வேண்டும்.
ஹஜ் செய்முறை
மீக்காத்தில் இஹ்ராம் கட்டுதல்
தவாப் செய்தல்
ஸயி செய்தல்
ஹஜ்ஜு தமத்துவு செய்பவர் தலைமுடியைக் கத்தரித்து இஹ்ராம் களைதல் வேண்டும்.
பிறை 8 ல்
மினாவுக்குச் செல்லுதல்
ஹஜ்ஜு தமத்துஉ செய்பவர் தான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ஹஜ்ஜுக்கு நிய்யத் வைக்க வேண்டும்.
பிறை 9 ல்
அரபா மைதானத்திற்குச் செல்ல வேண்டும்.
அரபாவில் சூரியன் மறையும் வரை தங்கியிருக்க வேண்டும்.
பிறகு முஸ்தலிபாவில் அன்றய இரவு தங்க வேண்டும்.
பிறை 10 ல்
ஸ{ப்ஹ{ தொழுததன் பிறகு முஸ்தலிபாவிலிருந்து மினாவுக்குச் செல்ல வேண்டும்.
அகபா தூண்களில்; கல் எறிய வேண்டும்ää
குர்பானி கொடுக்க வேண்டும்ää
தலை முடியை மழிக்க அல்லது குறைக்க வேண்டும்ää
தவாப் அல்-இபாழா செய்ய வேண்டும்;
ஸயி செய்ய வேண்டும்;
பிறை: 11, 12, 13
மினாவில் இரவு தங்கி ஜம்றா தூண்களில் நன்பகலுக்குப் பிறகிலிருந்து கல் எறிய வேண்டும். இவ்வாறு இரவு முழுதும் எறியலாம். பிறை 12 ல் மஃக்ரிப்புக்கு முன்னரே அங்கிருந்து வெளியேறினால் அந்த இரவு மினாவில் தங்குவது கடமை இல்லை.
இறுதியாகப் பிரியாவிடைத் தவாப்; செய்தல் இந்த தவாபிற்க்குப் பிறகு தாமதிக்காமல் மக்காவை விட்டு வௌியேறிவிட வேண்டும்.
No comments:
Post a Comment