இமாம் கஸ்ஸாலி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
ஈமானை பாதுகாக்க வழி
ஒரு அரசன் விலை உயர்ந்த வைரத்தை பாதுகாக்க ஒரு தங்கப்பெட்டி செய்தான்.தங்கப்பெட்டியை பாதுகாக்க செம்புப்பெட்டி செய்தான்.செம்புப்பெட்டியை பாதுகாக்க இரும்புப்பெட்டி செய்தான் பின் இரும்புப்பெட்டியை பாதுகாக்க மண்ணாலான குடுவை செய்தான்.
இப்போது திருடன் வந்து மண் பானையை திருடிச்சென்று உடைத்தால் இரும்புப்பெட்டி கிடைக்கும் அதை உடைத்தால் செம்பு அதை உடைத்தால் தங்கம் அதை உடைத்தால் வைரம் கிடைக்கும்.
அதுபோலவே,அந்த வைரம் தான் ஈமான்.அந்த தங்கப்பெட்டி பர்ளான வணக்கம்.செம்புப்பெட்டு தான் சுன்னத்.இரும்புப்பெட்டி வாஜிபு.மண்பானை தான் நபிலான வணக்கம்.
அந்த திருடன் தான் ஷைத்தான்.முதலில் மண்பானை பிறகு இரும்பு பிறகு செம்பு பிறகு தங்கப்பெட்டிகளை உடைப்பான் நம் மனதிலிருந்து.பின் தான் வைரத்தில் கை வைக்க முடியும்.அதற்கு வழி வகுக்காமல் நம் அமல்களை பேணிப்பாதுகாத்தால் மண்பானையை கூட உடைக்க விடாமல் பாதுகாக்கலாம்.
No comments:
Post a Comment