ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Thursday, 13 December 2018

இஷ்கேஅவ்லியா

#
#கௌஸ்நாயகத்திற்கு
#அல்லாஹ்செய்த
#அற்புதமானஉதவி
(((((((!!!!!!!!!!!!!)))))))

கௌஸூல் அஃளம்
அவர்கள்
ஓதும் போது பட்ட கஷ்டத்தை
"குன்யதுத் தாலிபீன்"
என்ற நூலில்
கைபட எழுதியுள்ள
அருமையான
நிகழ்ச்சி..!

"பக்தாத் பல்கலைக்கழத்தில்
நான்
கல்வி கற்று
கொண்டிருந்தேன்.

"அங்கு
தங்குவதற்கு மட்டுமே
இடம் தருவார்கள்
உணவு
கிடையாது..!"

அதனால்
"என்னுடைய  தாயார்
கொடுத்து அனுப்பிய
பணம் சிலநாளில் தீர்ந்துவிட்டது..!"

"கடுமையான பசி
கையில் காசுஇல்லை..
அல்லாஹ்வை தவிர
யாரிடமும்
கேட்டு பழக்கமில்லை..!"

"பசி பொறுக்க
முடியாமல்
கடைகாரரிடம்
கடன் கேட்டேன்
அவரும் இறக்கப்பட்டு
கொடுத்தார்..!"

"ஆனால்,
கடன் அதிகமாகி
விட்டதால்...
கடனுக்கு சாப்பிட்டுவதை
நிறுத்தி விட்டேன்..!"

"3 நாள் தொடர்ந்து பட்டினி
மயக்கத்தோடு
ஒரு சத்திரத்தில்
உட்கார்ந்தேன்.!"

"அங்கே
ஒரு இளைஞர்
சாப்பிட்டுக் கொண்டு
இருந்தார்...
என்னுடைய
நிலையைப் பார்த்து
எனக்கும் உணவு
கொடுத்தார்..!"

"இது ஹலாலா..?
ஹராமா..? என
சந்தேகம் வந்தது..."

"அல்லாஹ் நமக்கு
ஹராமான உணவு
தரமாட்டான்..
என்ற நம்பிக்கையோடு
சாப்பிட்டேன்..!"

அப்போது
அந்த இளைஞர்
"இங்கு நிஜாமிய்யா
மதரஸா இருக்கிறதா?"
எனக் கேட்டார்.

"ஆம்..! என்றேன்"

"நான் ஜீலானியில்
இருந்து வருகிறேன்..!"

"ஒரு
வயதான தாய்
என்னிடம் பணம் கொடுத்து
இதை
அப்துல் காதரிடம்
கொடுத்து விடு
..!"
என்றார்கள்.

"பல நாட்களாக
தேடிப் பார்த்தேன்
கிடைக்கவில்லை..!"

"என் கையில்
இருந்த காசும் காலியாகிவிட்டது.."

ஆகவே
"அந்த தாயார்
கொடுத்த பணத்தில் தான்
இந்த
உணவை வாங்கி
சாப்பிட்டுக் கொண்டு
இருக்கிறேன்..!"
என்றதும்

"நான் தான்
அந்த அப்துல்காதிர்
எனச் சொல்லி...
கோ வென
சப்தம் போட்டு
அழுதுவிட்டேன்..!"

"என் தாயின்
பாசமும்..
அல்லாஹ்வின்
கருணையும்
என்னை அப்படி
அழவைத்து விட்டது..!"

"சோதனைகளை
சகித்து கொண்டால்
அல்லாஹ்
நிச்சயம் வெற்றி தருவான்
இது என்வாழ்வில்
நான் அனுபவித்த பாடம்..!"

No comments:

Post a Comment