பெண்ணே!உன் பெருமை.
*✳ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அல்லாஹூத்தஆலா அனைத்திலும் சம உரிமையை வழங்கி இருக்கின்றான்.*
*✳உணவில் சம உரிமை, உறங்குவதில் சம உரிமை, உடுத்துவதில் சம உரிமை, கல்வியில் சம உரிமை,சம்பாதிப்பதில் சம உரிமை என வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சம உரிமையை வழங்கி இருக்கின்றான்.*
*✳பெண்களுக்கு தாய்மை போன்று பல சிறப்புகளை தந்த அல்லாஹ், முஸ்லிம் பெண்களுக்கு சலுகைகள், சிறப்புகள் என வழங்கி மேன்மை படுத்தி இருக்கின்றான்.*
*🌹அகீகா – பெண்ணுக்கு ஒரு ஆடு, ஆணுக்கு இரண்டு ஆடு*
*🌹தங்க நகைகள் ஆணுக்கு ஹராம் , பெண்ணுக்கு ஹலால்*
*🌹பட்டாடை ஆணுக்கு ஹராம் , பெண்ணுக்கு ஹலால்*
*🌹தனக்கு விருப்பமான கணவரை பெண் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.*
*🌹திருமணத்தின் போது பெண்ணுக்கு எந்தவொரு பொருளாதார செலவும் இல்லை. ஆனால் பெண் கேட்கும் மஹர் தொகையை ஆண்மகன் கட்டாயம் கொடுக்க வேண்டும்*
*🌹தனக்கு பிடிக்காத கணவரிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமை பெண்ணுக்கும் உண்டு.*
*🌹குழந்தைகளுக்காக பொருளாதாரம் திரட்டுவது ஆணுக்குத் தான் கடமை, பெண்களுக்கு கடமை இல்லை.*
*🌹பெண் சம்பாதிக்க தேவையில்லை, ஆண் சம்பாதித்து பெண்ணுக்கும் கொடுக்க வேண்டும்.*
*🌹ஒரு பெண் சம்பாதித்ததை ஆணுக்கு தர தேவையில்லை, ஆண் சம்பாதித்து கட்டாயம் பெண்ணுக்கு தர வேண்டும்*
*🌹கடைசிவரை பெற்றோரை பாதுகாப்பது ஆணுக்கு கடமை, பெண்ணுக்கு அது இல்லை.*
*🌹அகீகா தந்தை கொடுக்க வேண்டும், தாய்க்கு அது இல்லை.*
*🌹மூமினான பெண்கள் மீது யாரும் அவதூறு கூற முடியாது. அப்படி களங்கம் சுமத்தினால் நான்கு சாட்சிகளை கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அவனுக்கு 80 கசையடி கொடுக்க வேண்டும். அவனது சாட்சியை ஏற்றுக் கொள்ளவே கூடாது என இஸ்லாம் சொல்கின்றது.*
*🌹ஒரு ஆண்மகன் மாதத்தின் எல்லா நாட்களிலும் தொழுதே ஆக வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும் பிரசவ காலத்திலும் தொழ வேண்டாம் என தொழுகையில் இறைவன் சலுகையளித்துள்ளான்.*
*🌹ஒரு ஆண்மகன் ரமலான் மாதத்தின் எல்லா நாட்களிலும் நோன்பு வைத்தே ஆக வேண்டும். ஆனால் பெண்கள் மாதவிடாய் காலத்திலும் பிரசவ காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் நோன்பு வைக்க வேண்டாம், அடுத்தடுத்த மாதங்களில் வைத்தால் போதும் என இறைவன் பெண்களுக்கென நோன்பில் சலுகை வழங்கி இருக்கின்றான்.*
*🌹இவ்வாறு இறைவன் சலுகைகளையும் உரிமைகளையும் சிறப்புகளையும் பெண்களுக்கு வழங்கி மேன்மைபடுத்தி இருக்கின்றான்.*
*அது மட்டுமா!*
*🌹இறைவன் இரண்டு பெண்மணிகளை சுட்டிக்காட்டி இவர்கள் , உலக மூமின்களுக்கு முன்மாதிரி என்று குறிப்பிடுகின்றான். திருக்குர்ஆனின் 66 வது அத்தியாயாம் 11 & 12 வது வசனங்களில் அல்லாஹு_தஆலா உலகிலுள்ள நம்பிக்கை கொண்ட மூமின்கள் அனைவருக்கும் ஆஸியா மற்றும் மர்யம் அம்மையார்களையே முன்மாதிரியாக சொல்கிறான்.*
*🌹இறுதியாக இங்கே இன்னொரு சம்பவத்தையும் நான் குறிப்பிடுகின்றேன்.*
*🌹தனது குழந்தை தாகத்தால் தவித்த போது மக்காவில் ஸஃபா மர்வா மலைகளுக்கிடையில் அன்னை ஹாஜர் அவர்கள் தண்ணீருக்காக ஓடினார். அந்த அம்மையார் செய்தது போல உம்ரா, ஹஜ்ஜூக்காக செல்பவர்கள் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இன்று உலக முஸ்லிம்கள் அனைவரும் அந்த பெண்மணி செய்தது போல் செய்கிறார்கள்.*
*🌹இவ்வாறு அல்லாஹ_தஆலா பெண்களை மேன்மைபடுத்தி வைத்திருக்கும் நிலையில் நம் முஸ்லிம் பெண்கள் மீது பரிதாபம் காட்ட காவிகள் முன் வருவது வினோதமே .*
No comments:
Post a Comment