ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Thursday, 4 January 2018

மாறும் உலகில் மாறாத இஸ்லாம்

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
🌼 *"ஜும்ஆ குறிப்பு 29-12-17"*🌼

🌹الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ🌹
            
     *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்          
         உலமா பெருமக்களுக்கான
               பயான் குறிப்புத் தளம்
 

🌹🌹 *தலைப்பு:-*
    *"மாறும் உலகில் மாறாத இஸ்லாம்!!"*

🌸🌸 *ஆக்கம்:-*
*மௌலவி N.S.M பஷீர் அஹ்மத் உஸ்மானி ஹழ்ரத்*
*இமாம் ஹுதா மஸ்ஜித் கேளம்பாக்கம் சென்னை*
*மஸாபீஹுல் மிஹ்ராப்*

*http://vellimedaiplus.blogspot.com/2015/10/blog-post_7.html?m=1*

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
  
  *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
*For Youtube channel subscribe:-*
*நமது Youtube channel*

*https://www.youtube.com/channel/UCdBAIdZfGHKWQUGxMMOFZ4w*

ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

      *"மாறும் உலகில் மாறாத இஸ்லாம்!!"*

உலகளாவிய அளவில்இஸ்லாத்திற்கெதிராகவும், முஸ்லிம்களுக்குஎதிராகவும் முனைப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிற மேற்கத்திய எதிரிகளும், இந்ததேசத்தின் பாஸிஸ்ட்டுகளும் இஸ்லாமிய கொள்கைகளில் இருந்து முஸ்லிம்களையும்,இப்பரந்த உலகத்திலிருந்து இஸ்லாத்தையும்பிரித்து அழித்திட வேண்டும் என எல்லாஆற்றல்களையும் ஒன்றிணைத்து செயலாற்றிவருகின்றனர்.

இஸ்லாத்தையும், அதன் கோட்பாடுகளையும் மாற்றத்துடிக்கும் எவருக்கும் “இஸ்லாத்தையோ அதன் கொள்கை கோட்பாடுகளையோ மாற்றும் சக்தி உலகில் எவருக்கும் இல்லை, எந்தக் கொள்கைக்கும் இல்லை, இஸ்லாத்திற்கு மட்டும் தான் மாற்றம் தருகிற ஆற்றலும், சக்தியும் உண்டு” என நாம் ஓர் இஸ்லாமிய சமூகமாக இருந்து உலக சமூகத்திற்கும், இஸ்லாத்தை எதிர்க்கும் சக்திகளுக்கும் பிரகடனப் படுத்த கடமைப் பட்டிருக்கின்றோம்.

ஜனநாயக தேசமென்றும் மதசார்பற்ற நாடென்றும் உலக அரங்கில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிற இந்த தேசத்தில் வகுப்புவாத மற்றும் ஃபாசிஸ சக்திகள் சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களுக்கு எதிராக சுதந்திர இந்தியாவிற்கு முன்பும், சுதந்திர இந்தியாவிற்குப் பின்னும் திட்டங்கள் பல தீட்டி, படிப்படியாக முன்னேறி, இன்று சிறிய அளவிலான வெற்றியையும் அடைந்திருக்கின்றார்கள்.

சமீபகாலமாக முஸ்லிம்களுக்கு எதிரான விரோதப்போக்கில் ஆட்சியின் துணை கொண்டு முழு வீச்சில் களப்பணியாற்றி வருகின்றார்கள்.

இதற்குச் சான்றாக சமீபத்திய மூன்று நிகழ்வுகளை நாம் இங்கே சுட்டிக் காட்டுவது பொறுத்தமாக இருக்கும்.

நிகழ்வு 1.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் ‘Muhammad: Messenger of God’என்ற ஈரானிய சினிமா படத்திற்கு இசையமைத்தார். மஜித் மஜிதி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் முஹம்மது {ஸல்}அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து படத்தின் இயக்குனருக்கும் இசையமைப்பாளருக்கும் எதிர்ப்புகள் கிளம்பின. மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு அமைப்பான ரஸா அகாடமி ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ஃபத்வா கொடுத்தனர்.

இந்நிலையில் இப்பிரச்சினையின் நடுவே விஸ்வ இந்து பரிஷத் அமைப்புஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்து மதத்தில் சேர அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து வி.எச்.பி இணை பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியதாவது…

“இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்‘Muhammad: Messenger of God’ படத்திற்கு இசையமைத்தது மதம் தொடர்பானது அல்ல. அவருக்கு அளிக்கப்பட்ட ஃபத்வா துரதிர்ஷ்டவசமானது. எனவே அவரது தாய் மதமான இந்து மதத்தில் அவர் இணைய வேண்டும்.

அதாவது கர்-வாப்ஸிக்கு உகந்த நேரம் இதுவே. அவரை அன்புடன் வரவேற்கிறோம். இந்து சமூகம் அவரின் வருகைக்காக காத்திருக்கிறது. அவருக்கு எந்த வித தீங்கும்ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்வோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்”என்றார்.                                 ( தி இந்து தமிழ் நாளிதழ் )

ஒரு முஸ்லிமை பொது ஊடகத்தின் வாயிலாக இந்து மதத்திற்கு மாறுமாறும், இஸ்லாமியக் கொள்கைகளுக்கு உடன்பட வேண்டாம் எனவும் பகிரங்க அழைப்பு விடும் அளவிற்கு ஃபாஸிஸக் குரல்கள் ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன.

நிகழ்வு 2.

அடுத்து, உத்தரபிரதேச மாநிலம், கவுதம புத்தர் மாவட்டத்தில் தாத்ரி தாலுகாவில் பிசோதா எனும் சிறிய கிராமத்தைச் சார்ந்த முஹம்மது அஃக்லாக் எனும் 58 வயது முதியவர் ஈதுல் அள்ஹாவை முன்னிட்டு பசுமாட்டை பலியிட்டு சாப்பிட்டதாக கடந்த திங்கள்கிழமை வதந்தி பரவியது.

அன்றிரவு ஒரு 200 பேர் கொண்ட கும்பல் ஒன்று முஹம்மது அஃக்லாக் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் அஃக்லாக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரின் தாய், மனைவி, மகள், மகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் அவரது மகன் தானிஷ் கடுமையான முறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்.

இத்தனைக்கும் அவரது மூத்த மகன் இந்திய தேசத்தின் முக்கியப் பாதுகாப்பு படையான விமானப்படையில் ஃபிளைட் என்ஜீனியராக பணியாற்றி வருகின்றார்.

உபி அரசு 20 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகள், காங்கிரஸ், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஸதுத்தீன் உவைசி ஆகியோர் முதலில் உத்தரபிரதேச அரசு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

இதன் பின்னர் உபி போலிஸார் சிவம்குமார், விஷால் ராணா எனும் இருவரை கைது செய்தனர். இதில் விஷால் ராணா தாத்ரி தாலுகாவின் பாஜாக வின் முக்கியப் பிரமுகரான சஞ்சய் ராணா என்பவரின் மகனாவார்.

தற்போது, சென்னையில் தான் அவரது மூத்த மகன் விமானப் படையில் பணிபுரிந்து வருகிறார். எனவே, அவரது குடும்பத்தை சென்னைக்கோ அல்லது விமானப்படை குடியிருப்புகள் உள்ள வேறொரு இடத்துக்கோ பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமானப் படை ஏர்சீப் மார்ஷல் அரூப் ரகா தெரிவித்துள்ளார்.              ( மாலை மலர், 4.10.2015 )

இந்தப் படுபாதகச் செயல் குறித்து சமாஜ்வாதியின் மந்திரி ஆஸம்கான் ஐ. நா இந்த விவகாரத்தில் தலையிட்டு சிறுபான்மைச் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தேசத்தின் உயரிய பணியான பாதுகாப்புப் பணியில், அதுவும் விமானப் படையில் பணிபுரிந்து வரும் ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கே இந்த கதி என்றால் சாமானிய முஸ்லிம்களின் கதி என்னவாகும் என்று கேள்வி கேட்க வைத்திருக்கிறது இம்மாபாதகச் செயல்.

ஒன்றை அவர்கள் தெளிவாக மக்கள் மன்றத்தில் முன்வைத்திருக்கின்றார்கள்: ”இந்த தேசத்தில் எந்தவொரு முஸ்லிமையும் அவன் எங்களுக்கு எதிரானவன் என்று நாங்கள் முடிவு செய்து விட்டால், அவன் இந்த தேசத்தின் எவ்வளவு பெரிய அரசுத் துறையில் பணிபுரிந்தாலும் இந்த கதி தான் ஏற்படும். எச்சரிக்கையாக இருங்கள்” என்று.

நிகழ்வு 3.

அடுத்து, சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற ஆர். எஸ். எஸ் மாநாட்டில் ஒன்று கூடி விவாதித்து 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அந்த மாநாட்டில் பாரதப் பிரதமர் உட்பட முக்கிய மந்திரிப்பிரதானிகளும் கலந்து கொண்டனர்.

அவர்கள் முன்வைத்த 14 அம்ச கோரிக்கைகளில் ஒன்று வெகு விரைவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

ஒட்டு மொத்தத்தில், இந்த தேசத்தில் சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஃபாஸிஸ்டுகள் தற்போது முன்னேற்றம் காணத்துடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

1. முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டும். அதற்காக கர்- வாப்ஸி என்று கோஷமிடுகின்றனர்.

2. அடக்குமுறையைக் கையாண்டு பயமுறுத்துகின்றனர். அதற்காக கொடூரமான முறையில் கொலையும் செய்கின்றனர்.

3. இஸ்லாமிய சட்டதிட்டத்தின் அடிப்படையில் வாழும் முஸ்லிம்களை திசை திருப்ப முயல்கின்றனர். அதற்காக பொது சிவில் சட்டம் கொண்டு வர துடிக்கின்றனர்.

4. முஸ்லிம்களை மாற்ற வேண்டும் அல்லது இஸ்லாத்தை இந்த தேசத்தை விட்டும் மாற்ற வேண்டும்.

இப்படிப் பட்ட அபாயகரமானச் சூழலில் வாழும் இந்திய முஸ்லிம் சமூகம் எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்ளப்போகின்றது?

இஸ்லாம் கூறும் வழிகாட்டல் என்ன? என்பதைப் பற்றி நாம் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.

உலக வரலாற்றில் இஸ்லாம் பல சவால்களை, எதிர்ப்புகளைக் கடந்தே வந்திருக்கின்றது. ஆனால், அது எங்கேயும் தன் தனித்துவத்தை இழக்கவோ, மாற்றங்களைக் கண்டதாகவோ எந்தப் பதிவும் இல்லை. ஏனெனில், அது அல்லாஹ்வினால் சம்பூரணமாக்கப்பட்ட மார்க்கமாகும்.

இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காக, எல்லாக் காலத்திலும் முஸ்லிம் சமூகம் சித்ரவதைகளை, பொருளாதார மற்றும் உயிரிழப்புக்களைச் சந்தித்தே வந்திருக்கின்றது.

ஆனால், எங்கேயும் முஸ்லிம் சமூகம் இவ்வுலக வாழ்வின் இன்ப சுகங்களுக்காக தம் உயிரினும் மேலான சத்திய சன்மார்க்கத்தை உதறித் தள்ளியதும் இல்லை. தரந்தாழ்ந்து நடந்து கொண்டதுமில்லை.

يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ (32)

அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ்வின் ஒளியைத் ( இஸ்லாமிய மார்க்கத்தை ) தம் வாயால் ஊதி அணைத்து விட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆயினும் அல்லாஹ் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். இறை நிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!”

                                                       ( அல்குர்ஆன்: 9: 32 )

1. இஸ்லாம் மாற்றத்திற்கு உள்ளாகுமா?....

இந்த உலகம் மாற்றத்தைச் சந்திக்கும்.இந்த உலகத்தில் உள்ள சில விஷயங்கள் மாற்றங்களைச் சந்திக்கும் என்று குர்ஆன் பேசுகின்றது.

1. மஹ்ஷர் பெருவெளிக்காக வானமும் பூமியும் மாற்றப்படும்.

يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ

“அந்த நாளில், இந்த பூமி வேறு பூமியாகவும், இந்த வானங்கள் வேறு வானங்களாகவும் மாற்றப்படும்”.                          (அல்குர்ஆன்: 14: 48 )

2. கண்ணியம், கேவலம்,ஆட்சியதிகாரம் மாற்றத்திற்கு உள்ளாகும்.

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ

”( நபியே! ) நீர் கூறுவீராக! அல்லாஹ்வே!ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் நீயே அதிபதி! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்கு கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவு படுத்துகின்றாய்”.                                             (அல்குர்ஆன்: 3: 26 )

3. வெற்றியும், தோல்வியும் மாற்றத்திற்கு உள்ளாகும்.

إِنْ يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِثْلُهُ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ

“இப்போது உங்களுக்கு காயம் ( தோல்வி )ஏற்பட்டுள்ளதென்றால், இதற்கு முன்னர் உங்கள் எதிரணியினருக்கும் இதே போன்ற காயம் (தோல்வி ) ஏற்படத்தான் செய்தது.இவையெல்லாம் காலத்தின் மாற்றங்களாகும்.இவற்றை மக்களிடையே நாம் மாறி மாறி வரச்செய்கின்றோம்”.          ( அல்குர்ஆன்: 3: 140 )

4. மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளும் மாற்றம் காணும்.

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ

“எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை”.

                                                      ( அல்குர்ஆன்: 13: 11 )

ஒரு படி மேலே ஏறி இஸ்லாம் இப்படிக் கூறுகின்றது.

إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ

“எவர் மன்னிப்புக் கோரி, மேலும்,நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரியத் தொடங்கி விட்டிருக்கின்றாரோ இத்தகையோரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுகின்றான்”.                         ( அல்குர்ஆன்: 25: 70 )

ஆனால், இஸ்லாம் ஒரு போதும் மாற்றத்திற்கு உள்ளாகாது.

அல்லாஹ் தன் திருமறையில் மூன்று அம்சங்கள் எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாகாது எனப்பிரகடனப் படுத்துகின்றான்.

1. அல்லாஹ்வின் படைப்புகள் அதன் இயற்கைத் தன்மைகளில் இருந்து மாறாது.

لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ

அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய முடியாது”.                                (அல்குர்ஆன்: 30: 30 )

உதாரணத்திற்கு இரவு பகல், சூரியன் சந்திரன் படைப்பின் அமைப்பு குறித்து குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.

وَآيَةٌ لَهُمُ اللَّيْلُ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَإِذَا هُمْ مُظْلِمُونَ (37) وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ (38) وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ (39) لَا الشَّمْسُ يَنْبَغِي لَهَا أَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ (40)

“மேலும், இரவு அவர்களுக்கு மற்றொரு சான்றாகும். அதிலிருந்து நாம் பகலை அகற்றி விடும் போது அவர்கள் மீதுஇருள் சூழ்ந்து கொள்கிறது. மேலும், சூரியனும் ஒரு சான்றாகும்.அது தனக்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது பேரறிவு படைத்தவனும் வல்லமை மிக்கவனுமான இறைவனின் நிர்ணயமாகும்.

மேலும், சந்திரன் இன்னொரு சான்றாகும்.அதற்கு நாம் பல்வேறு நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். எதுவரையெனில், அது பல நிலைகளைக் கடந்து உலர்ந்து வளைந்து போன பேரீச்சங்காம்பு போல் மீண்டும் ஆகிவிடுகின்றது.

சூரியன் சந்திரனைச் சென்றடைய முடியாது. மேலும், இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன”.

                                                  ( அல்குர்ஆன்: 36: 37 – 40 )

உலகில் எவ்வளவோ விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்த போதும் இது வரை விஞ்ஞானத்தின் துணை கொண்டு இவைகளின் இயக்கத்தை எவராலும் மாற்றிட இயலவில்லை.இனியும் எவராலும் மாற்றிட இயலாது.

இரவு நேரத்தில் சூரியனையோ, பகல் நேரத்தில் இருளையோ ஏற்படுத்த முடியவில்லை.காரணம் படைத்த ரப்பின் ஆற்றலின் துணை கொண்டே அவைகள் இயங்குகின்றன.

2. அல்லாஹ்வின் நியதியில் யாதொரு மாற்றமும் நிகழாது…

فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَبْدِيلًا وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَحْوِيلًا (43)

 “அல்லாஹ்வின் நியதியில் யாதொரு மாற்றத்தையும் எப்போதும் நீர் காணமாட்டீர்.மேலும், அல்லாஹ்வின் நியதியை எந்தவொரு சக்தியாலும் திருப்பிட முடியும் என்பதையும் நீர் காணமாட்டீர்”.                      ( அல்குர்ஆன்: 35: 43 )

அல்லாஹ் உலகில் படைத்திருக்கிற எல்லா படைப்பிற்கும் ஒரு நியதியை நிர்ணயித்துள்ளான்.

إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

அல்லாஹ் கூறுகின்றான்: ”நிச்சயமாக!நாம் ஒவ்வொரு பொருட்களையும் ஒரு குறிப்பிட்டவிதிமுறையின் படி இயங்குவதாகவேபடைத்திருக்கின்றோம்.”

உதாரணமாக, ஆண் பெண் ஜோடிகள்இணைந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுஅதன் மூலம் பெண் கருத்தரித்து குழந்தையைஈன்றெடுக்கின்றாள்.

இதுவே, குட்டிகளை ஈன்றெடுக்கும்பிராணிகளுக்கும், குஞ்சுகளை ஈன்றெடுக்கும்உயிரினங்களுக்கும் பொருந்துவதாக அல்லாஹ்நியதியை உருவாக்கி இருக்கின்றான்.

ஆனால், உலகில் எங்காவது இதற்குமாற்றமாக ஆண் படைப்பு கருத்தரித்ததாக,குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக இறைவன்வகுத்த நியதியை மாற்றி நடந்துள்ளதா?

இன்று, ஆண் பெண்ணாக மாறுவதற்குஅறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நவீன காலமும் கூட அப்படி ஆணாக இருந்துபெண்ணாக மாறிய எவரும் இந்த நியதியில்மாற்றத்தை ஏற்படுத்தியதாக வரலாறு இல்லை.

3. அல்லாஹ்வின் வார்த்தையில்மாற்றத்தைக் காண இயலாது….

இஸ்லாம் என்பது அல்லாஹ்வின்வார்த்தை. முஸ்லிம் என்பது அல்லாஹ்இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகஏற்றுக் கொண்டவர்களுக்கு அவனே சூட்டி அழகுபார்க்கும் பெயர்.

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ

“திண்ணமாக, இஸ்லாம் மட்டுமேஅல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட வாழ்க்கைநெறி ( மார்க்கம் – தீன் ) ஆகும்”. ( அல்குர்ஆன்: 3: 19 )

هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا

“மேலும், அவன் தனது பணிக்காகஉங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும்,அவன் வழங்கிய மார்க்கத்தில் ( இஸ்லாத்தில் )உங்களுக்கு எவ்வித சிரமத்தையும்வைத்திடவில்லை.

உங்கள் தந்தை இப்ராஹீமின்மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் தான்இதற்கு முன்பும், இப்போதும் உங்களுக்குமுஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான். தூதர்உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள்மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழவேண்டும் என்பதற்காக!”.         ( அல்குர்ஆன்: 22: 78 )

ஆக இஸ்லாம் என்பது அல்லாஹ்மொழிந்த வார்த்தை எனவே, இஸ்லாத்தை ஒருபோதும் மாற்ற இயலாது. இஸ்லாமியமார்க்கத்திலும் ஒரு போதும் மாற்றத்தைக்கொண்டு வர எவராலும் இயலாது.

2. அடக்கு முறையைக் கையாண்டுமுஸ்லிம்களை ஒடுக்கி, இஸ்லாத்தில்இருந்தும் வெளியேற்றி விட முடியுமா?

வறுமைக்கு பயந்தோ, உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையிலோ, பதவியின் மீதானமோகத்திற்காகவோ, ஆட்சி, அதிகாரத்தின்மீதான ஆசைக்காகவோ ஒரு போதும் தன்ஈமானை ஓர் இறைநம்பிக்கையாளன் விலைபேசவும் மாட்டான், விலை போகவும் மாட்டான்.

ஏனென்றால், இந்த மார்க்கத்தின்உயிர்ப்பும், அதன் விலையும் அவனுடையஉயிரை விட மிகவும் மேலானது என்று அவனுக்குஉறுதியாகத் தெரியும்.

1. ஃபிர்அவ்ன் ஒடுக்கு முறையும்…முஸ்லிம்களின் அர்ப்பணமும்…

அல்லாஹ்வின் அற்புதத்தை மூஸா(அலை) வெளிப்படுத்திய போது, அவன்வழங்கிய அற்புதப் படைப்பான அழகியகண்ணின் துணை கொண்டு பார்த்து விட்டு,அந்த சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்து..

فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى (70) قَالَ آمَنْتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَا أَشَدُّ عَذَابًا وَأَبْقَى (71)

“நாங்கள் ஹாரூன் மற்றும் மூஸாவின்இறைவனை ரப்பாக ஏற்றுக் கொண்டோம்” என்றுஉரக்கக் கூறினார்கள்.

அப்போது ஃபிர்அவ்ன் கூறினான்: “நான்உங்களுக்கு அனுமதி அளிக்கும் முன் நீங்கள்அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா?அவர் தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்களின் குரு என்று இப்போதுதெரிந்து விட்டது.

இப்போது, நான் உங்களின் மாறுகை,மாறுகால்களைத் துண்டித்து விடுவேன். மேலும்,பேரீச்சம் மரத்தின் கம்பங்களில் அறைந்துஉங்களை கொல்லப்போகின்றேன், அப்போதுதெரியும் யாருடைய வேதனைமிகக்கடுமையானது என்று”.

قَالُوا لَنْ نُؤْثِرَكَ عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا (72) إِنَّا آمَنَّا بِرَبِّنَا

அதற்கு, முஸ்லிம்களாக மாறியிருந்தசூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக!தெளிவான சான்றுகள் எங்கள் கண்முன்னேநடந்த பின்னரும் நாங்கள் சத்தியத்தை விடஉனக்கு ஒரு போதும் முன்னுரிமை தரமாட்டோம்.

எனவே, நீ என்ன செய்யவிரும்புகின்றாயோ செய்து கொள். அதிகபட்சம்இவ்வுலக வாழ்வில் மட்டுமே உன்னால் தீர்ப்புவழங்க முடியும். திண்ணமாக, நாங்கள் எங்கள்இறைவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டோம்”.

                                                  ( அல்குர்ஆன்: 20: 59 – 73 )

எவ்வளவு பெரிய அடக்குமுறையைஃபிர்அவ்ன் அவர்களின் மீது கட்டவிழ்த்துவிட்டான். அவனிடம் அனுமதி வாங்கவில்லையாம். ஆதலால், கொடுமை நிறைந்தசித்ரவதைகளை செய்திடுவேன் எனமிரட்டினான்.

இஸ்லாத்தால் கவரப்பட்ட அடுத்தவினாடியில், முஸ்லிமாக வாழ ஆரம்பித்து ஒருவினாடி தான் ஆகியிருந்தது. அவர்களின் வாயில்இருந்து வந்த பதில் எவ்வளவு வீரியம்நிறைந்ததாய் அமைந்திருந்தது!?”

2. தீக்குண்டத்தாரும்…இறைநம்பிக்கையாளர்களின் ஒப்பற்றஉயிர்த் தியாகமும்…

وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ (1) وَالْيَوْمِ الْمَوْعُودِ (2) وَشَاهِدٍ وَمَشْهُودٍ (3) قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ (4) النَّارِ ذَاتِ الْوَقُودِ (5) إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ (6) وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ (7) وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ (8) الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (9)

”உறுதியான கோட்டைகளைக் கொண்டவானத்தின் மீது சத்தியமாக! வாக்களிக்கப்பட்டஅந்த நாளின் மீது சத்தியமாக! மேலும்,பார்க்கின்றவர் மீதும், பார்க்கப்படும் பொருளின்மீதும் சத்தியமாக! தீக்குண்டத்தார்அழிக்கப்பட்டார்கள்!

அது எத்தகைய தீக்குண்டமெனில், அதில்நன்கு கொழுந்து விட்டெரியும் எரி பொருள்இருந்தது. அவர்கள் அதன் ஓரத்தில்அமர்ந்திருந்து இறை நம்பிக்கையாளர்களுக்குத்தாம் செய்து கொண்டிருந்த அக்கிரமச்செயல்களைப் பார்த்து ரசித்த வண்ணம்இருந்தார்கள்.

அந்த இறைநம்பிக்கையாளர்களிடம்தீக்குண்டத்தார்கள் பகைமை பாராட்டிக் கொள்ளகாரணம் இதைத் தவிர வேறெதுவும்இருக்கவில்லை.

“யாவற்றையும் மிகைத்தவனும்தனக்குத்தானே புகழுக்குரியவனும் வானங்கள்மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்குஉரிமையாளனுமாகிய அல்லாஹ்வின் மீதுஅவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதுதான்!”       ( அல்குர்ஆன்: 85: 1- 9 )

இது முந்தைய பனூ இஸ்ராயீல்களின்காலத்தில் நடைபெற்ற வியப்பின் விளிம்பிற்கேஅழைத்துச் செல்லும் வினோதமானவரலாறாகும்.

ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள்வாயிலாக இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள்அறிவிக்கும் நீண்ட ஹதீஸ் முஸ்லிம் ஷரீஃபில்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னை கடவுளாக அறிவித்து, தன்னைவணங்க வேண்டும் என ஆணை பிறப்பித்திருந்தஓர் அரசனின் பிரதேசத்தில் ஈமான்கொண்டிருந்த ஒரு சிறுவனின் மரணத்தின்மூலம் ஒட்டு மொத்த நாட்டு மக்களும்முஸ்லிமானார்கள்.

قد آمن الناس كلهم. فأمر بأفواه السكك فَخُدّت فيها الأخاديد، وأضرمت فيها النيران، وقال: من رجع عن دينه فدعوه وإلا فأقحموه فيها. قال: فكانوا يتعادون فيها ويتدافعون

அப்போது, அரசன் பெரிய கிடங்குகள்தோண்டச் சொல்லி அதில் நெருப்பு மூட்டுமாறுகட்டளைப் பிறப்பித்து, “யார் யாரெல்லாம்தங்களது ஈமானை கைவிட வில்லையோஅவர்களைப் பிடித்து இவற்றில்வீசியெறியுங்கள்! அல்லது இந்த நெருப்பில்இறங்குங்கள் என்று அவர்களைநிர்ப்பந்தியுங்கள்! என்று தம் சேவகர்களுக்குஉத்தரவிட்டான்.

فجاءت امرأة بابن لها ترضعه، فكأنها تقاعست أن تقع في النار، فقال الصبي: اصبري يا أماه، فإنك على الحق".

அவர்களும் அவ்வாறே செய்தனர்.அல்லாஹ்வைக் கொண்டு நம்பிக்கைக் கொண்டஅத்துனை பேர்களும் தீக்குண்டத்தில்வீசியெறியப்பட்டார்கள். இறுதியாக, ஒருபெண்மணி வந்தாள். பால்குடி பருவத்தில் உள்ளதன் குழந்தையை கையில் சுமந்தவாறுதீக்குண்டத்தின் வாசல் அருகே தயங்கிய படிநின்ற போது, அந்தக் குழந்தை சொன்னது: “தாயே! பொறுமை காத்திடு! நிச்சயமாக நீசத்தியத்தின் மீது இருக்கின்றாய்” என்று. ( நூல்:இப்னு கஸீர், ரியாளுஸ்ஸாலிஹீன், பாபுஸ் ஸப்ர்,ஹதீஸ்எண்: 30 )

3. அபூதாலிப் பள்ளத்தாகும்…தடுமாறாத ஈமானும்…

زادت حيرة المشركين إذ نفدت بهم الحيل، ووجدوا بني هاشم وبني المطلب مصممين على حفظ نبى الله صلى الله عليه وسلم والقيام دونه، كائنًا ما كان، فاجتمعوا في خيف بني كنانة من وادى المُحَصَّبِ فتحالفوا على بني هاشم وبني المطلب ألا يناكحوهم، ولا يبايعوهم، ولا يجالسوهم، ولا يخالطوهم، ولا يدخلوا بيوتهم، ولا يكلموهم،

تم هذا الميثاق وعلقت الصحيفة في جوف الكعبة، فانحاز بنو هاشم وبنو المطلب، مؤمنهم وكافرهم ـ إلا أبا لهب ـ وحبسوا في شعب أبي طالب، وذلك فيما يقال : ليلة هلال المحرم سنة سبع من البعثة .

நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு கினானாகிளையாருக்குச் சொந்தமான முஹஸ்ஸப் என்றபள்ளத்தாக்கில் ஒன்று கூடிய மக்கத்துஇணைவைப்பாளார்கள் “இது வரை நாம்முஹம்மதுக்கு எதிராக எடுத்த எந்தநடவடிக்கைக்கும் முஹம்மதும், முஹம்மதின்தோழர்களும் உடன்படாததாலும், ஹாஷிம்மற்றும் முத்தலிப் கிளையார்கள் தொடர்ந்துஅவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாலும்நாம் இவர்கள் விஷயமாக தீர்க்கமான ஒருதீர்மானத்திற்கு வர வேண்டிய கட்டாயத்துக்குதள்ளப்பட்டுள்ளோம். எனவே, நல்லஆலோசனைகள் வழங்கிட ஒத்துழைப்புதாருங்கள் என்று தங்களுக்குள்கோரிக்கொண்டனர்.

இறுதியாக, ”ஹாஷிம் மற்றும் முத்தலிப்கிளையாரிடம் திருமண உறவு, கொடுக்கல்வாங்கல், அவர்களுடன் அமர்வது, அவர்களுடன்பழகுவது, அவர்களது வீட்டுக்குச் செல்வது,அவர்களிடம் பேசுவது, அவர்களுக்கு கருணைகாட்டுவது, அவர்களின் சமரச பேச்சை ஏற்பது,இது போன்ற எந்த ஒரு தொடர்பையும்அவர்களோடு மேற்கொள்ளக் கூடாது” எனதீர்மானமாக எழுதி கஅபாவில் தொங்கவிடப்பட்டது.

ஹாஷிம், முத்தலிப் கிளையாரில்அபூலஹபைத் தவிர மற்ற நிராகரிப்பாளர்கள்மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் அபூதாலிப்பள்ளத்தாக்கில் ஊர் விலக்கம் செய்து ஒதுக்கிவைக்கப்பட்டனர்.

மூன்றாண்டுகள் சொல்லெனாதுயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் முஸ்லிம்கள்.

உத்பா இப்னு ஃகஸ்வான் (ரலி) அவர்கள்”முஸ்லிம்கள் அபூதாலிப் பள்ளத்தாக்கில்அனுபவித்த சிரமங்களை பின் நாளில் தாம்பஸராவின் கவர்னராக இருக்கும் போது,பஸராவின் மக்களிடையே கண்ணீர் மல்க”நினைவு கூறினார்கள்.


أخبرنا يحيى بن محمود بن سعد بإسناده عن أبي بكر بن أبي عاصم قال: حدثنا أزهر بن حميد أبو الحسن، حدثنا محمد بن عبد الرحمن الطفاوي، حدثنا أيوب السختياني، عن حميد بن هلال، عن خالد بن عمير: أن عتبة بن غزوان - وكان أمير البصرة - خطب فقال في خطبته:

" ألا إن الدنيا قد ولّت حذّاء، ولم يبق منها إلا صبابة كصبابة الإناء يتصابها أحدكم، وإنكم ستنتقلون منها لا محالة، فانتقلوا منها بخير ما بحضرتكم إلى دار لا زوال لها ، وأعوذ بالله أن أكون عظيماً في نفسي صغيراً في أعين الناس، "

لقد رأيتني سابع سبعة مع رسول الله صلى الله عليه وسلم، ما لنا طعام إلا ورق الشجر، حتى قرحت اشداقنا.

ولقد رزقت يوما بردة، فشققتها نصفين، أعطيت نصفها سعد بن مالك، ولبست نصفها الآخر"

”மக்களே! அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக! உலகம் தான் அழிந்து போவதை அறிவித்து விட்டது. முதுகைக் காட்டிய வண்ணம் விரைந்து செல்கிறது. பாத்திரத்தில் எஞ்சியிருக்கும் பானத்தைப் போல, உலக வாழ்க்கையில் கொஞ்சம் தான் எஞ்சியுள்ளது. அந்த எஞ்சிய பானத்தை மனிதன் உறிஞ்சி விடுகின்றான்.

மக்களே! இவ்வுலக வாழ்வும் அதன் சொகுசும் மிக விரைவில் அழிந்து போய் விடும்!அழிவே இல்லாத ஒரு உலகத்தை நோக்கியே நாம் வாழ வேண்டும் என நபி {ஸல்} அவர்களால் வழிகாட்டப்பட்டு இருக்கின்றோம்.

அந்த உலகத்திற்கு நீங்கள் செல்ல வேண்டுமேயானால் மிகச் சிறந்த நற்செயல்கள் செய்திருக்க வேண்டும்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது;அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இஸ்லாத்தை அறிமுகம் செய்த போது அவர்களுடன் இருந்தது ஒரு சின்னஞ்சிறு கூட்டம் அந்தக் கூட்டத்தில் ஏழாவது நபராக நான் இருந்தேன்.

அண்ணலாரையும், அவர்தம் குடும்பத்தார்களையும், தோழர்களையும் ஊர் விலக்கு செய்து அபூ தாலிப் கணவாயில் தங்கியிருந்த போது அவர்களுள் நானும் ஒருவன்,உண்ண உணவின்றி இலைகளையும்,தழைகளையும் உண்டதால் எங்களின் உதடுகளிலும் வாய்களிலும் கொப்பளங்கள் ஏற்பட்டது.

மேலும், என்னிடம் அணிந்து கொள்ள ஆடை கூட கிடையாது, ஒரு போது யாரோ தூக்கியெறிந்த ஒரு பழைய துணி ஒன்று வீதியில் கிடந்தது. அதை எடுத்து பாதியாகக் கிழித்து நானும் ஸஅத் இப்னு மாலிக் (ரலி)அவர்களும் இடுப்பில் அரைத் துணியாக கட்டிக் கொண்டோம்.

ஆனால், இன்றோ அக்குழுவில் இருந்த எங்களில் சிலர் சில நகரங்களுக்கு தலைவர்களாக ஆகியிருக்கின்றோம்.

                  ( நூல்: உஸ்துல் ஃகாபா,ரிஜாலுன் ஹவ்லர் ரசூல் {ஸல்}.. )

மேற்கூறிய சம்பவங்கள் உணர்த்துகிற,சொல்கிற செய்தி ஒன்றே ஒன்று தான் உலகில் முஸ்லிம்கள் எங்கு கொடுமைப் படுத்தப்பட்டாலும் அவர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்கள் என்பதற்காகத்தான் கொடுமை படுத்தப்பட்டிருக்கின்றார்கள். கொடுமை படுத்தப்படுவார்கள். முஸ்லிம்கள் எத்தனை எத்துனையோ எதிரிகளையும், எத்துனை எத்துனையோ அடக்குமுறைகளையும் சந்தித்து இருக்கின்றார்கள்.

ஆனால், எங்கேயும், எப்போதும் அடக்கு முறைக்கு அஞ்சி, ஒடுக்கு முறைக்கு பயந்து தரம் தாழ்ந்து நடக்கவும் இல்லை. உயிரினும் மேலாக மதிக்கும் ஈமானை இழக்கவும் இல்லை.

இன்றைக்கும் இந்த தேசத்தில் 1992 –க்குப் பிறகு ஏற்பட்ட எத்தனையோ கலவரங்களில் தன் மனைவியை, தாயை, தந்தையை, பிள்ளைகளை,தன் கணவனை, சகோதரனை, சகோதரியை கொடூரமான முறையில் இழந்த எந்த ஒரு முஸ்லிமும் “நான் முஸ்லிமாக இருப்பதால் தானே எனக்கு இந்த நிலைமை, எனவே, நான் முஸ்லிமாக வாழப்போவதில்லை” என்று எங்காவது சொன்னதுண்டா?

இஸ்லாத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறியதுண்டா? சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரின் போன்ற விரல் விட்டு எண்ணுகிற அளவிலான சில சுயநலக் கிருமிகளைத் தவிர்த்து வெறெவரையாவது அடையாளம் காட்ட முடியுமா?

ஏன் இப்போதும் கூட கடுமையாக தாக்கப்பட்டு பாதிப்பிற்குள்ளான முஹம்மது அஃக்லாக்கின் குடும்பத்தார்களின் வாயில் இருந்தாவது இது போன்ற வெளிப்பாடுகள் வந்ததா?

எனவே, முஸ்லிம்கள் அடக்கு முறைக்கு அஞ்சுவார்கள், கொலை மிரட்டலுக்கு பயப்படுவார்கள் என்று தப்புக் கணக்கு போடுகின்றவர்களுக்கு ஒன்றை நாம் தெளிவாகச் சொல்லிக் கொள்வோம் “நாங்கள் அடக்கியாள்வோனின் அடியார்கள், அடக்க,அடக்க காட்டாற்று வெள்ளம் போல் பொங்கி எழுவோம்!”

எனவே, மாறும் உலகில் மாறாத இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக வழங்கிய அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்வோம்!

யா அல்லாஹ்! எங்களை இந்த சத்திய தீனில் நிலைத்திருக்கச் செய்வாயாக! எந்த நிலையிலும் ஈமானை இழந்திடச் செய்யும் அபாயகரமான காரியங்களில் இருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இந்த தேசத்தில் பாதுகாப்பாயாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!



ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

No comments:

Post a Comment