﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
🌼 *ஜும்ஆ குறிப்பு 05-01-18*🌼
🌹الصــلوة والسلام عليك يارسول الله ﷺ🌹
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
உலமா பெருமக்களுக்கான
பயான் குறிப்புத் தளம்
🌹🌹 *தலைப்பு-:-*
*"ஷரீஅத் நமது உயிர்"*
🌸🌸 *ஆக்கம்:-*
*அல்-ஆலிம் அப்துல் அஜீஸ் பாகவி ஹழ்ரத் கோவை*
*வெள்ளிமேடை منبر الجمعة*
*http://vellimedai.blogspot.in/2015/11/blog-post.html?m=1*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
*For Youtube channel subscribe:-*
*நமது Youtube channel*
*https://www.youtube.com/channel/UCdBAIdZfGHKWQUGxMMOFZ4w*
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
*"ஷரீஅத் நமது உயிர்"*
இஸ்லாம் அதனுடையை கொள்கையால்மட்டும் இந்த உலகில் நிலைத்திருக்கவில்லை, அதன் சட்ட அமைப்பினாலும்நிலைத்திருக்கிறது,
இன்றும் உலகில் இஸ்லாமிய ஷரி அத் உயிர்த்துடிப்போடு இருக்கிறது,
இதை சிதைக்கும் திட்டத்தில் பல்வேறு முய்றசிகள் செய்யப்படுகின்றன.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையில் இருக்கிறது. இஸ்லாமிய ஷரீ ஆ சட்டத்தில் சில அமசங்கள் பெண்களுக்கு எதிரானவையாக இருக்கின்றன. எனவே இது விசயங்களில் அரசின் சட்டத்திற் கேற்பவே தீர்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். பொதுவான ஒரு சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என மீண்டும் ஒரு முறை உச்சநீதிமன்றத்தின் காவல் நீதிபதிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமிய ஷரீஆ சட்ட விதிகளுக்கு எதிரான எந்தப் பேச்சும் முஸ்லிம்களின் மீதான காழ்ப்புணர்வின் காரணமாகவும்., முஸ்லிம்களின் மத உரிமையை அச்சுறுத்துளுக்குள்ளாக்குவதற்காகவும் பேசப்படுபவை ஆகும்.
இந்து சமூகச் சட்டங்கள் அதே போல சில ஜாதீய சட்டங்கள் அதே போல கன்னியாஸ்திரி நடைமுறை ஏற்கும் கிருத்துவ சட்டங்கள் பெண்களுக்கு இழைக்கும் கணக்கிடலங்கா அக்கிரமங்களை கண்டு கொள்ளாமல் இருந்து கொண்டு, ஒரு நியதியின் அடிப்படையில் ஆயிரத்து ஐநூறு வருசங்களாக நடை முறையில் இருக்கும் ஒரு சட்டத்தை – இந்த நாட்டில் அது அப்படியே கடை பிடிப்பதற்கு ஏற்ற அரசியல் சாசன தீர்மாணம் இருந்தும் கூட - கண்டிப்பதும், கால மாற்றத்திற்கேப் மாற வேண்டும் என்பதும் அப்பட்டமான ஒரு சார்பாகும். நீதியின் பெயரைச் சொல்லி நீதியை குழி தோண்டி புதைப்பதாகும்.
முஸ்லிம் உம்மத் தன் ஈமானில் பற்றுறுதியோடு இருக்கும் வரை, ஷரீஅத் நடைமுறையில் இருக்கும் இன்ஷா அல்லாஹ் கியாமத் வரை,
இஸ்லாமிய சட்ட அமைப்புக்கு ஷரீஆஎன்று பெயர்.
الشريعة الإسلامية هي ما شرعه الله لعباده المسلمين من أحكام وقواعد ونظم
لتنظيم علاقة الناس بربهم وعلاقاتتهم بعضهم ببعض
وتحقيق سعادتهم في الدنيا والآخرة.
கலிமா சொல்லி விட்ட ஒருவர் இதற்குகட்டுப்பட கடமைப் பட்டவர் ஆவார்.
இதை ஏன் ஏற்றுக் கொள்ளனும்
1. அல்லாஹ் வழங்கிய சட்டஅமைப்பு
சட்டங்களின் தொகுப்பாக அமைந்தஅந்நூர் அத்தியாயம் இப்படித்தொடங்குகிறது.
سُورَةٌ أَنزَلْنَاهَا وَفَرَضْنَاهَا وَأَنزَلْنَا فِيهَا آيَاتٍ بَيِّنَاتٍ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ) 1(
அந்நிஸா அத்தியாயத்தில் வாரிசுரிமைச்சட்டங்களை கூறி முடித்த பிறகுஅல்லாஹ் இப்படிக் கூறுகிறான்
فَرِيضَةً مِنْ اللَّهِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا(11
தேவையான சந்தர்ப்பத்தில் அல்லாஹ்உடனுக்குடன் சட்டங்களை அருளினான்.
ஹுதைபிய்யாவின் போது முஸ்லிம்கள் லுஹர் தொழுகையை ஜமாத்தாக தொழுவதைப் பார்த்தத காலீத் பின் வலீத் – அப்போது அவர் காபிர்களின் குதிரைப்படைக்கு தலைவராக இருந்தார்- அஸர் தொழுகையில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக ஈடுபட்டிருக்கிற போது பெருமானார் (ஸல்) அவர்களை கொன்று விடலாம் எனத் திட்டமிட்டார். அப்போது அல்லாஹ் அச்ச நேரத் தொழுகை பற்றிய சட்டத்தை அருளினான்.
وَإِذَا كُنتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمْ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً النساء 102
இந்தச் சட்ட அமைப்பையே கடை பிடிக்கவேண்டும் என அல்லாஹ்உத்தரவிட்டுள்ளான்.
· إِنِ الْحُكْمُ إِلا لِلَّهِ أَمَرَ أَلا تَعْبُدُوا إِلا إِيَّاهُ} [يوسف:40]،
· {أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ} [آل عمران:83].
2. இறுதியானது. த லாஸ்ட்கமான்மெண்ட்
·
{مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَـٰكِن رَّسُولَ اللَّـهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا}
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி நபியாக இருப்பதால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஷரீ அத் தான் இறுதி ஷரீ அத்தாகும். இதன் சட்டங்கள் அதற்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளன.
ரயில் வே கால அட்டவணயில் இறுதியானதையே பார்க்க வேண்டும். முந்தைய் அட்டவனைகள் ரயில் அட்டவணை என்றாலும் இறுதி அட்டவனையின் மூலம் அவை காலாவதியாகி விட்ட படியால் இறுதி அட்டவனையையையே பார்க்க வேண்டும். அதே போல முந்தைய வேதங்கள் ஷரீ அத்துக்கள் சரியானவையே என்ற போதும் இறுதி ஷரீ அத்தையே பின்பற்ற வேண்டும்.
இல்லை எனில் சத்தியத்தை தவற விட்டு விடுவோம்.
3. சிறப்பானது.
وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ} [المائدة:50]
இஸ்லாமிய ஷரீஆ மனித குலத்திடம்இருக்கிற சட்ட அமைப்புக்களில் மிகச்சிறப்பானதாகும். இதற்கு நிகராகவோஇதற்
கு அடுத்ததாகவோகருதப்படக்கூடிய எந்தச் சட்ட அமைப்பும்,நாகரீகமும், சாசனமும் இந்த உலகத்தில்இல்லை,
இதை மிக உறுதியாக நாம் நம்புகிறோம்.அதை உறுதியுடன் உலகிற்கு எடுத்துக்கூறவும் செய்கிறோம்.
சொல்லிக் கொள்ளும் படியான சட்ட அமைப்பு எதுவும் இன்றைய சமயங்களிடம் இல்லை. பிற சமயச் சட்டத்தின் படி எங்கள் நாடு செயல்படுகிறது என்ற தீர்மாணமும் இந்த உலகில் இல்லை, முஸ்லிம்களைத் தவிர – சவூதி சூடான் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இன்றளவும் இஸ்லாமிய ஷரீ அத்தை தமது சட்டமாக கூறி பிரகடனப்படுத்தியுள்ள நாடுகளாகும்.
பல் விளக்க வலியுறுத்து வதிலிருந்து , அதிகாரத்தை கேட்காதே !கிடைத்தால் வாங்கிக் கொள்! என்பது வரை இஸ்லாத்தின் ஒவ்வொரு சட்டமும் அந்த துறையில் சிறப்பானதாகும்.
عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنْ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ – البخاري 246
இரண்டு தடவை அல்ல ஐந்து தடவை பல் விளக்கு!
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلَاةٍ– البخاري 887 –
பதவியிலிருப்போர் அன்பளிப்புக்களை ஏற்க கூடாது,
عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ اسْتَعْمَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ الْأَزْدِ يُقَالُ لَهُ ابْنُ الْأُتْبِيَّةِ عَلَى الصَّدَقَةِ فَلَمَّا قَدِمَ قَالَ هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي قَالَ فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ أَوْ بَيْتِ أُمِّهِ فَيَنْظُرَ يُهْدَى لَهُ أَمْ لَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَأْخُذُ أَحَدٌ مِنْهُ شَيْئًا إِلَّا جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ أَوْ شَاةً تَيْعَرُ ثُمَّ رَفَعَ بِيَدِهِ حَتَّى رَأَيْنَا عُفْرَةَ إِبْطَيْهِ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ ثَلَاثًا– البخاري2597
عبد الرحمن بن سمرة قال قال لي النبي صلى الله عليه وسلم يا عبد الرحمن بن سمرة لا تسأل الإمارة فإنك إن أعطيتها عن مسألة وكلت إليها وإن أعطيتها عن غير مسألة أعنت عليها
· சத்தியம் செய்து விட்டால்முறித்தால் பரிகாரம் செய்யவேண்டும் .
· திருமணம் அனுமதிக்கப்பட்டது.
· விபச்சாரம் தடுக்கப்பட்டது.
· வட்டி தடுக்கப்பட்டது
· வியாபாரம் அனுமதிக்கப்பட்டது.
· அனுமதிக்கப்பட்ட பிராணிகளை இறைவன் பேரைச் சொல்லி அறுத்தால் சாப்பிடலாம். செத்த்தால் சாப்பிடக் கூடாது,
· போதை தரும் அனைத்துப் பொருடகளுமே ஹராம். அதை பயன்படுத்தவும் கூடாது. விறகவும் கூடாது. அந்தப் பணமே ஆகாது.
இது போன்ற இன்னும் பன்னூற்றுக்கணக்கான சட்டங்கள் இஸ்லாமிய ஷரீ அத்தின் சட்ட அமைப்பின் அழகையும் கம்பீரத்ததையும் தூய்மையையும் பறை சாற்றீக் கொண்டிருக்கின்றன.
4. பரிபூரணமானது.
வாழ்க்கையில் எல்லாவிசயத்திற்கும்,எல்லோருக்கும்
எல்லா நிலையிலுமான சட்டங்களை ஷரீஆ பேசுகிறது,
شمول أحكام الشريعة الإسلامية لجميع جوانب الحياة:
1- أحكام تتعلق بالعقيدة الصحيحة للإنسان: قال رسول الله صلى الله عليه وسلم: «الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَلِقَائِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ الآخِرِ» [متفق عليه].
2- أحكام تتعلق بالعبادة الصحيحة للإنسان: «بُنِيَ الإِسْلامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ» [متفق عليه].
3- أحكام تتعلق بالأخلاق وما يتحلى به وما يتخلى عنه: {وَلاَ تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولاً} [الإسراء:36].
4- أحكام تتعلق بعلاقته بغيره: [أحكام الأسرة، القضاء، المعاملات، العلاقة مع غير المسلمين على المستوى الداخلي والخارجي نظام الحكم واختيار الحاكم، العلاقة المالية موارد الدولة ومصارفها، أحكام تتعلق بالجرائم ومقدار العقوبة وغير ذلك... ].
இத்தகைய பரிபூரண சட்ட அமைப்பைநிறுவுவதில் இஸ்லாமிய ஷரீ அத், இனம் ஜாதி பணம் பதவி ஆகியபாகுபாடுகள் எதற்கும் இடமளிக்காமல்இரண்டு சிறப்பன அடிப்படைகளுக்குமட்டுமே இடமளிதது,
الأولى: مراعاة الأخلاق.
عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
والثانية: مراعاة الحل والحرمة،
قال النبي صلى الله عليه وسلم للخصوم: «إِنَّمَا أَنَا بَشَرٌ وَإِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ وَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَلْحَنَ بِحُجَّت
ِهِ مِنْ بَعْضٍ فَأَقْضِي لَهُ عَلَى نَحْوِ مَا أَسْمَعُ مِنْهُ فَمَنْ قَضَيْتُ لَهُ بِشَيْءٍ مِنْ حَقِّ أَخِيهِ فَلَا يَأْخُذَنَّهُ فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّار» [متفق عليه].
5. மனித ஆய்வுக்குஇடமளிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட அளவிலான சட்டங்களைஉறுதிப்படுத்தி குர் ஆனும் சுன்னாவும்மற்ற இஸ்லாமிய சட்ட அறிஞர்களும்புதிய விசயங்களுக்கேற்ற சட்டங்களைஇயற்றிக் கொள்ளும் ஆய்வுக்கானஉரிமையை மக்களுக்கு வழங்குகிறது.
عن الحارث بن عمرو ابن أخي المغيرة بن شعبة عن أناس من أهل حمص من أصحاب معاذ بن جبل: أن رسول الله صلى الله عليه وسلم لما أراد أن يبعث معاذا إلى اليمن قال: كيف تقضي إذا عرض لك قضاء؟ قال: أقضى بكتاب الله، قال فإن لم تجد في كتاب الله؟ قال فبسنة رسول الله صلى الله عليه وسلم، قال فإن لم تجد في سنة رسول الله صلى الله عليه وسلم ولا في كتاب الله؟ قال أجتهد رأيي ولا آلو؟ فضرب رسول الله صلّى الله عليه وسلّم صدره وقال: الحمد لله الذي وفّق رسول رسول الله لما يُرضي رسول الله.
· جاء في كتاب عمر رضي الله عنه إلى شريح رحمه الله حيث قال له: اقضِ بما في كتاب الله، فإن لم تجد فبما في سنة رسول الله صلى الله عليه وسلم، فإن لم تجد فبما قضى به الصالحون قبلك. ، وفي رواية: فبما أجمع عليه الناس. أخرجه ابن أبي شيبة في المصنف 7/240، و البيهقي 10/115، و النسائي 8/231
சிந்திக்கிற ஆற்றல் பெற்ற மனிதனுக்குஅவன் எல்லை தாண்ட முடியாதபடிஓரளவிலான தெய்வீக கட்டுப்பாடுகள்விதிக்கப்படுவது போல அவனதுசிந்தனை மற்றும் ஆய்வுக்கானதளங்களும் இருக்க வேண்டும். இஸ்லாம்ஒரு சிஸ்டமாகவே அந்த ஆய்வுக்கானதளத்தை இஜ்திஹாத் கியாஸ் எனவழங்கியிருக்கிறது,
பனூகுறைழாவில் அஸர் தொழுகை பற்றிய உத்தரவை அறிவார்த்தமாக அணுகிய தோழர்களை ஏற்றுக்கொண்ட பெருமானார்
عن نافع عن عبد الله قال نادى فينا رسول الله صلى الله عليه وسلم يوم انصرف عن الأحزاب أن لا يصلين أحد الظهر إلا في بني قريظة فتخوف ناس فوت الوقت فصلوا دون بني قريظة وقال آخرون لا نصلي إلا حيث أمرنا رسول الله صلى الله عليه وسلم وإن فاتنا الوقت قال فما عنف واحدا من الفريقين
6. நெகிழ்வுத் தன்மையுடையது.
ஒரு சட்டம் சிறப்பானதாக இருப்பதற்குஅதில் சில நெகிழ்வுத் தன்மைகளும்இருக்க வேண்டும் என்பது சட்டஅறிஞர்களின் கருத்தாகும்.
இஸ்லாமிய சட்டங்கள்உறுதியானவையாக இருந்தாலும்அதிலும் நெகிழ்வுத் தன்மைகள் உண்டு,
· நின்று தொழ வேண்டும் என்பதுகடமை என்றாலும் முடியாதவர்கள்உட்கார்ந்து தொழலாம்.
· உட்கார முடியாத இடத்தில்நின்றபடி சிறுநீர் கழிக்கலாம்.
· உயிரைக் காப்பாற்றிக் கொள்ளதேவையான ஹராமைச்சாப்பிடலாம்.
7. முன்னுதாரணம் கொண்டது.
{لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا}
குர் ஆனிய சட்டங்கள் அனைத்துக்கும் பெருமானாரிடம் முன்னுதாரனம் உண்டு, வளர்ப்பு மகன் சொந்தப் பிள்ளையாக முடியாது என்ற சட்டத்திற்கும் பெருமானாரே முன்னுதாரணம்.
நபியின் சொத்துக்கு வாரிசுரிமை கோர முடியாது என்ற சட்டத்திற்கு பெருமானாரே முன்னுதாரண்ம்.
8. மனித இயல்புகளுக்கு ஏற்றது, கடுமையற்றது.
وعن أنس بن مالك رضي الله عنه قال: جَاءَ ثَلاثَة رَهْط إِلَى بيُوت أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أخبروا كَأَنَّهُمْ تقالوها، فَقَالُوا: وَأَيْنَ نَحْنُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ، قَالَ أحدهم: أما أَنا فَإِنِّي أُصَلِّي اللَّيْل أبدًا، وَقَالَ آخر: أَنا أَصوم الدَّهْر وَلا أفطر، وَقَالَ آخر: أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلا أَتَزَوَّجُ أَبَدًا، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ فَقَالَ: «أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّي لأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مني» [متفق عليه].
9. பத்திரமாக பாதுகாக்கப்பட்ட மூலங்களை கொண்டது,
إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون ( 9 )
10. ஈருலக வெற்றிக்கு காரணியாகக் கூடியது,
பிற்கால வாழ்வை நம்புகிற யாருக்கும்நன்மைக்கான உத்தரவாதம்இஸ்லாமினுடைய கலிபா தய்யிபாவின்மூலமே கிடைக்கும்.
ஷரீஆ உன்னதமான ஒருவாழ்வியல் அடிப்படை. இதன் வழிநடக்கிற எவரும் ஈருலகிலும்வெற்றியடைவர்
மனிதனுக்கும் இறைவனுக்கும்இடையே உள்ள தொடர்பும்மனிதனுக்கும் சகமனிதர்களுக்கும் இடையே உள்ளதொடர்பும் இதனடிப்படையில்சீராகும்
كان بعضُ بائعي اللبن يخلط اللبن بالماء، واشتكى المسلمون من ذلك، فأرسل الخليفة
أمير المؤمنين عمر بن الخطاب أحد رجاله ينادي في بائعي اللبن بعدم الغش، فدخل المنادي إلى السوق ونادى: يا بائعي اللبن لا تَشُوبوا اللبن بالماء، فتغُشّوا المسلمين، وإن من يفعل ذلك؛ فسوف يعاقبه أمير المؤمنين عقابًا شديدًا. وذات ليلة خرج عمر بن الخطاب مع خادمه أسلم ليتفقد أحوال المسلمين في جوف الليل، وفي أحد الطرق استراح من التجوال بجانب جدار، فإذا به يسمع امرأة تقول: قومي إلى ذلك اللبن فامذقيه (اخلطيه) بالماء. فقالت الابنة: يا أُمَّتَاه، وما علمتِ ما كان من عَزْمَة أمير المؤمنين اليوم؟ قالت الأم: وما كان من عزمته؟ قالت: إنه أمر مناديًا فنادي: لا يُشَأبُ اللبن بالماء ، فقالت الأم: يا بنتاه، قومي إلى اللبن فامْذقيه بالماء فإنك في موضع لا يراك عمر، ولا منادي عمر. فقالت الصبيّة: واللَّه ما كنت لأطيعه في الملأ وأعصيه في الخلاء، إن كان عمر لا يرانا، فرب أمير المؤمنين يرانا ،فلما سمع عمر بن الخطاب ذلك، أعجب بالفتاة لورعها ومراقبتها لله رب العالمين. وقال: «يا أسلم، علِّم الباب، واعرف الموضع.» ثم مضى. فلما أصبح قال: «يا أسلم، امضِ إلى الموضع فانظر من القائلة؟ ومن المقول لها؟ وهل لهما من بعل.» فذهب أسلم إلى المكان، فوجد امرأة عجوزًا، وابنتها أم عمارة، وعلم أنْ ليس لهما رجل، ثم عاد فأخبر عمر ، فدعا عمر أولاده، فقال: هل فيكم من يحتاج إلى امرأة أزوّجه، ولو كان بأبيكم حَركة إلى النساء ما سبقه منكم أحد إلى هذه الجارية ، فقال عبد الله بن عمر:لي زوجة. وقال أخوه عبد الرحمن: لي زوجة. وقالعاصم: يا أبتاه لا زوجة لي فزوِّجني. فبعث إلى الجارية فزوّجها من عاصم، فولدت لعاصم بنتًا، ولدت هذه البنت ابنة صارت أمَّا لعمر بن عبد العزيز الخليفة الراشد - تاريخ دمشق
இந்த ஷரீ அத்தை நமது வாழ்வின்ஒவ்வொரு கட்டத்திலும் செயல்படுத்தவேண்டும் என்ற சிந்தனையும் துடிப்பும்முஸ்லிம் உம்மத்திடம் இருக்க வேண்டும்.
ஷரீ அத்திற்கு எதிரான - அதை முடக்குவதற்கான - முயற்சிகள் நடை பெறுகிற போது நாம் ஆத்திரப் படக்கூடாது,
மாறாக ஷரீ அத்தை மேலும் வலுவாக பற்றிக் கொள்ள வேண்டும்.
ஷரீ அத்தை நமது வாழ்வில் செயல் படுத்துவதன் 6 விசய்ங்களில் நாம் பாதுகாப்புப் பெற முடியும் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
நமது தீனை
நமது உயிரை
நமது அறிவை
நமது பொருளை
நமது பரம்பரையை
நமது மானத்தை
இன்ஷா அல்லாஹ் இன்னொரு முறை இதைப் பற்றி விரிவாகப்பார்க்கலாம்.
அதே நேரம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு செய்தி இருக்கிறது,
அப்பட்டமாக ஷரீ அத்தின் சட்டத்தை – அதில் ஒன்றை - மறுப்பதோ வெறுப்பதே ஈமானைப் பறிகொடுக்கிற குற்றமாக ஆகும். வேடிக்கை விளையாட்டு அலட்சிய மனப்பாங்கு இதில் எந்த விதத்திலும் ஷரீஅத்தை
எதிர்த்தோ மறுத்தோ நாம் பேசி விடக்கூடாது,
பெருமானாரின் தீர்ப்பை ஏற்காமல்தன்னிடம் தீர்ப்புக் கேட்டு வந்தவரைஉமர் (ரலி) தன்னுடைய வாளால் தீர்த்துக்கட்டினார்கள், இது பற்றி அவரதுஉறவினர்கள் கலிமா சொன்ன ஒருவரைஎப்படிக் கொல்லலாம் என சர்ச்சையைகிளப்பிய போது – அல்லாஹ் சொன்னவார்த்தையை நாம் என்றும் நினைவில்நிறுத்த வேண்டும்,
{فَلا وَرَبِّكَ لا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا} [النساء:65].
நம்முடைய நாட்டில் ஷரீ ஆ வுக்குஎதிரான அநீதியான குரல்கள்அடக்குமுறை தீர்ப்புக்கள் மூலம்வலுப்பெறுவது போல தோன்றலாம்.முஸ்லிம்களிடம் ஷரீ அத் எங்களது உயிர்எனும் உணர்வு இருக்கும் வரை, தமதுஒவ்வொரு காரியத்திலும் ஷரீ அத்தின்அடிப்படையில் தீர்வு காணும் வரை எந்தபிர் அவ்னிய அரசுகளாலும் ஷரீ த்தைசாய்த்து விட முடியாது,
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
No comments:
Post a Comment