அவசரப்படாமல் பொறுமையாக இருந்தால் ஹராமான வருமானத்திற்குப் பதிலாக ஹலாலான ரிஜ்க் கிடைக்கும் என்பதற்கு 08/05/2017 ல் லால்பேட்டை பட்டமளிப்பு விழாவில் பேசிய அடையார் மஸ்ஜித தலைமை இமாம் ஸதீதுத்தீன் பாகவி ஹஜரத் அவர்கள் ஒரு வரலாற்று நிகழ்வினைச் சொன்னார்கள்,
ஹஜரத் அலி(ரழி) அவர்கள் தங்கள் ஒட்டகத்தில் ஏறி ஒரு மஸ்ஜிதிற்கு வந்தார்கள். அவர்கள் கீழே இறங்கிய பொழுது அங்கே இருந்த ஒரு இளைஞன் மிகப் பணிவாக வந்து 'நீங்கள் தொழுதுவிட்டு வாங்க அதுவரை நான் ஒட்டகத்தை பார்த்துக் கொள்கிறேன்' என்று சொன்னார்.
அவரிடம் ஒட்டகத்தை கொடுத்த ஹஜ்ரத் அலி அவர்கள் அவனின் பணிவையும்,உதவும் மனப்பான்மையையும் கண்டு திரும்பி போகும்போது அவனுக்கு ஏதேனும் அன்பளிப்பை தர வேண்டும் என்று நினைத்தார்கள்.
தன் சட்டப்பையைப் பார்த்தார்கள்.அதில்
இரண்டு திர்ஹம் இருந்தது. அதை அவனுக்கு கொடுத்து விடலாம் என்று நினைத்தார்கள்.
தொழுதுவிட்டு வெளியே வந்தால் ஒட்டகம் மட்டும் அங்கே நின்று கொண்டிருந்தது.
அதில் கட்டியிருந்த மூக்கணாங்கயிற்றை அவன் திருடி விட்டு சென்று விட்டான்.
வீட்டிற்கு வந்த ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னிடமிருந்த இரண்டு திர்ஹத்தை கொடுத்து மூக்கணாங்கயிற்றை வாங்கி வருமாறு தன் மகன் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அனுப்பினார்கள்.
கடைத்தெருவில் பல இடங்களில் தேடியும் அந்த ஒட்டகத்திற்கு பொறுத்தமான மூக்கணாங்கயிறு கிடைக்கவில்லை.
திரும்பி வரும் போது மூக்கணாங்கயிற்றை திருடிய அந்த இளைஞன், மூக்கணாங்கயிறு வேண்டுமா என்று கேட்டான்.
எவ்வளவு என்று கேட்க இரண்டு திர்ஹம் என்றான். இரண்டு திர்ஹத்தை கொடுத்து ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவனிடமிருந்து. வாங்கி வந்தார்கள்.
பொறுமையாக அந்த இளைஞன் காத்திருந்தால் ஹராமான முறையில் சம்பாதித்த அந்த இரண்டு திர்ஹம் அன்பளிப்பாக ஹலாலான முறையில் கிடைத்திருக்கும்.
No comments:
Post a Comment