ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Tuesday, 2 May 2017

பறவையின் வாழ்க்கைப் பயணம்

ஒரு மனிதனால் இரண்டு இரவுகள் தூங்க முடியாமல் போனால் அவன் பாதி பைத்தியக்காரனாக ஆகிவிடுவான். ஆனால் ஒரு பறவை ஒன்பது இரவும், பகலும் உறங்காமல் விழித்திருக்க முடிகிறது. விழித்திருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த ஒன்பது இரவும், பகலும் எங்குமே நிறுத்தாத தொடர் பயணமும் செய்கிறது.

"Bar-tailed godwit" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பறவையை "பட்டை மூக்கன் பறவை" தமிழில் அழைக்கப்படுகிறது.

இந்த பறவை அலாஸ்காவிலிருந்து நியூசிலாந்திற்கான தூரமான 11,500 கிலோ மீட்டர் தூரத்தை ஒன்பது இரவுகள் மற்றும் பகல்களில் கடக்கிறது.

பயணத்தில் உணவிற்காகவோ அல்லது ஓய்விற்காகவோ எங்குமே நிற்காத இந்த பறவையின் பாதி மூளை சில மணி நேரங்கள் இயங்குவதாகவும், அந்த சமயத்தில் மற்றொரு பாதி ஓய்வு எடுப்பதாகவும் அதை ஆய்வு செய்தவர்கள் சொல்கிறார்கள். இப்படி மாறி, மாறி அது இயங்குவதாகவும் அது எப்படி சாத்தியமானது என்றும் ஆய்வாளர்கள் அதிர்கிறார்களாம்.

படைப்பினங்களின் செயல்திறன் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த செயல்திறனை அந்த பறவைக்கு தந்த அந்த இறைவனின் ஆற்றல் அளப்பறியது.

எல்லாம் வல்ல இறைவன் தூய்மையானவன், அவனே நுண்ணறிவாளன்.

ஆகாய ஆச்சரியம்.!
🐦
அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.

இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்?

ஆச்சரியம் உண்டு!பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?

அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.

பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!

*மஹர் 🎁 கொடுக்குமாம் இந்த தூக்கணாங்குருவி...🐤*

🔬ஒவ்வொரு பறவையிலும் அல்லாஹ் ஒவ்வொரு அத்தாட்சியை வைத்துள்ளான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு அதில் ஒரு படிப்பினை உள்ளது.

உதாரணமாக 🐤தூக்கனாங் குருவி என்பது  ஒரு  பறவை என்று மட்டும் தான் நமக்கு தெரியும்.☹

ஆனால்,  அந்த பறவை கூட மஹர் என்ற திருமணக்கொடை🎁 கொடுத்து தான் தனது வாழ்க்கையை தொடங்கும் என்பது யாருக்காவது தெரியுமா? 😧

🔬தூக்கனாங் குருவியின்🐤 இனத்தைப் பொறுத்தவரையில் ஆண் தூக்கனாங் குருவி தான் எப்போதுமே தனது வீடான🎄 கூட்டைக் கட்டும் அதில் நாம் வசிப்பது போன்றே பல அறைகள் இருக்குமாம்.

🔬பெண் தூக்கனாங் குருவியானது🐤 ஒவ்வொரு கூட்டிலும் நுழைந்து எந்த ஆண் தூக்கனாங் குருவி கட்டிய வீடு🎄 தனக்கு பிடித்திருக்கிறதோ அந்த ஆண் தூக்கனாங் குருவியை தன் துணையாக்கி அதனோடு தன் வாழ்க்கையை ஆரம்பித்து இனப் பெருக்கம் செய்யுமாம்.😯

👍🏻எவ்வளவு பெரிய அற்புதம் பாருங்கள். ஆனால் மனித சமுதாயம் வரதட்சனை என்ற பெயரில் பெண்ணுடைய வாழ்க்கையையே சுரண்டிக் கொண்டிருக்கிறது.😣 சதாரண பறவையிலிருந்து எவ்வளவு பெரிய ஒரு படிப்பினையை அல்லாஹ் காட்டியுள்ளான்.📖

📖 பறவைகளை பற்றி அல்லாஹூ தஆலா குர்ஆனில் கூறுகிறான்...

📖 பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், 🐛🐌🐞🐜🕷🐍🦎🦂🦀..... தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும்🦅🦇🐝🕊..... உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை. இவற்றில் எதையும் நம் பதிவுப் புத்தகத்தில்✍🏻 நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை. இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்று சேர்க்கப்படும்.
(அல்குர்ஆன்-6:38)

📖 இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? 🕊🐝🦇🦅..... அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை -🙅🏻‍♂ நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.

(அல்குர்ஆன்-67:19)

No comments:

Post a Comment