ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Tuesday, 7 March 2017

அல்லாஹ்வின் ,கருணை யை தான்

✍🏿 இஸ்மாயீல் சிராஜி
சென்னை . :
""'"""""''''''''''""""""""""""""""""""'''""""""""""""
பனூ இஸ்ராயில் கூட்டத்தில்  உள்ள நபர் ஆயிரம் வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்ந்து மரணித்தார் !

இறைவன்  ,அவரை பார்த்து,,"என் ரஹ்மத் என்னும் கருணை கொண்டு இவரை சொர்க்கத்திற்கு  கூட்டி செல்லுங்கள் என்றான் ..!
இவருக்கோ 
ஒரு  ஆதங்கம் !
உன் ரஹ்மத்தை  கொண்டு  நான் சொர்க்கவாதி ,என்றால் ஆயிரம் ஆண்டுகள்   விடாமல்  வணங்கின  என் இபாதத் ,,வணக்கம் என்ன ஆச்சு ? அதற்க்கு கூலி இல்லையா ?
என்று கேட்டார் ?
அல்லாஹ்வுக்கு கோபம் வந்து,,இவரை நரகத்திற்கு  அழைத்து செல்லுங்கள் !என  உத்தரவு இட்டான் !

அவனுக்கு கோபம் வந்தால் ,,அவனுக்கு கருணை வந்தால் ,,எந்த ஆணையும் பிறப்பிப்பான் !
அவன்  அரசன் ,நம் எஜமானன் !
அடிமைகளான  நமக்கு,," ஏன்"  என்ற கேள்வி கேட்க்க எந்த அதிகாரம் இருக்கிறது  மூமிநீன்களே ?
  

       நரகத்திற்கு  செல்ல செல்ல ,,அந்த  நெருப்பின் சூட்டால் ,,இவருக்கு  தாங்க முடியாத  தண்ணீர் தாகம்  வந்து விட்டது
தண்ணீர் தண்ணீர்  என  கதறினார் .
ஒருவர்  தண்ணீர்  கொண்டு வந்தார்

நான் தண்ணீர் வியாபாரி ..ஒரு குவளை நீருக்கு நீர் கிரயம் தந்தால்தான்  தர முடியும் என்றார் ?

என்னிடம் என்ன பொருள் இருக்கிறது ? ஒன்றும் இல்லையே ,என சொல்ல ,,அவரோ உன் அமல்களின்  நன்மையை  தாருங்கள் என்றார் .
ஆயிரம் வருட  அமல்களின்  நன்மையை  தந்தால் ..ஒரு குவளை  நீர் தருவேன் .என்றார் !

அவ்வளவு நன்மையையும் கொடுத்து விட்டால் ,நான் என்ன செய்வேன் ?ஆகவே ஐநூறு வருட அமல்களின் நன்மையை தருகிறேன் .என்றார் !
தண்ணீர் வியாபாரியோ  மறுத்து  ,,விட்டார்

மறுபடியும்  கொஞ்ச நேரம் கழித்து ,,நாக்கு வெளியே வந்து ,,தாகத்தால்  தவித்து  கதறினார் ,மன்றாடினார் ,அழுதார் தவித்தார்

தண்ணீர் வியாபாரியோ ,நீர் பேரம் பேசிக் கொண்டிருப்பீர் ,,வாங்க மாட்டீர்  என்று  சொல்லி விட்டார்

இவரால் தாங்க முடியாமல்  சரி என் ஆயிரம் வருடம்  நன்மைகளை தந்து விட்டேன் என்று சொல்ல தண்ணீர் கிடைத்து  ,தாகம் தீர்த்து கொண்டார் !

இறைவன் புறத்தில் இருந்து  ஒரு  சப்தம் ,"உன் அத்தனை நன்மைகளின் மதிப்பும் ஒரு குவளை தண்ணீருக்கு தான் சமம் ?அப்புறம் எப்படி  சுவர்க்கம் செல்வீர் ? என்று

தன  தவறை  உணர்ந்த  அவரோ ,கதறியழுது  மன்னிப்பு கேட்டார் ,",உன் கருணை ,உன் ரஹ்மத் அன்றி  நான் எக்காரணமும் கொண்டு ஈடேற்றம் அடைய முடியாது
சுவர்க்கம் செல்லமுடியாது "என அழுதழுது முறையிட
கருணையாளன் மன்னித்து
சுவர்க்கம் வழங்கினான் !

இதிலிருந்து  நாம் அறிந்த  விடயம் ...,

நாம்  அமல்களை  அல்லாஹ்வின்  கட்டளைக்கிணங்க  ,,செய்யனும் !

ஆனால் ,,அல்லாஹ்வின்  ,கருணை யை தான்  ஆதரவு வைக்கணும் ,,
அந்த  கருணை நமக்கு கிடைக்க
மிக எளிதான  வழியையும்  ,
வல்லவன்       தன மறையில்  பல இடத்தில விளக்கியுள்ளான் !

முதலாவது  வழி ..நம் கண்மணி நாயகத்தை  ,நம் உயிருக்கும் மேலாக நேசிப்பதும் ,,அவர்கள்  மீதும்      சலவாத்  சொல்லிக்கொண்டே
இருப்பதும்தான் !
அடுத்து ,அவன்           நேசர்களை  பற்றி பிடித்துக் கொண்டு ,,அவர்களிடம்  கீழ்ப்படிந்து  ,இருந்தாலே  ...அவனின்  கருணையை  மிக எளிதாக
அடைந்து கொள்ளலாம் !!

இந்த இரண்டு வழி  நமக்கு  தெரிவதற்கும் ,,நடப்பதற்கும் அவன் கருணை வேண்டும் ,,என்பதையும் மறந்து விடக்கூடாது !
By
# இஸ்மாயீல் சிராஜி

دخل ابن السماك يوماً، على أمير المؤمنين هارون الرشيد، فوافق أن وجده يرفع الماء إلى فمه ليشرب فقال:‏ ‏ ناشدتك الله يا أمير المؤمنين أن تنتظر به قليلاً. فلما وضع الماء قال له:‏ ‏ أستحلفك بالله تعالى، لو أنك مـُنعت هذه الشربة من الماء، فبكم كنت تشتريها؟ قال:‏ ‏ بنصف ملكي، قال:‏ ‏ اشرب هنأك الله، فلما شرب قال:‏ ‏ أستحلفك بالله تعالى، لو أنك منعت خروجها من جوفك بعد هذا، فبكم كنت تشتريها؟ قال:‏ ‏ بملكي كله. فقال:‏ ‏ يا أمير المؤمنين إن ملكا تربو عليه شربة ماء، وتفضله بولة واحدة، لخليق ألا يـُنافس فيه،

👤 அல்லாஹ் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய ₹ விலை:*

😬ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 6,000

❤மாற்று இதயம் பொறுத்த - ரூ 11/2 கோடி

💙செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்

🔶ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொறுத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )

👰செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்

🖐🏿ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்

👬செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம்

👀கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000

🚶எலும்புக்கு பதிலாக plate வைக்க -ரூ 50,000

🙇கிட்னி க்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000

💞இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000

🚼ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000

🌡இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000

👤மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.

🍷🍾🍺🚬💊🛌🏍🚕 *கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள்.*

💰💷💶 *கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் அவற்றால் இயற்கை உறுப்புகள் போன்று நமக்கு உதவ முடியாது.* 👍�👍�👍. 

மிகவும் சிந்திக்க வைத்த பதிவு.

||| 80 வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் ஆப்ரேஷன் நடந்தது.

நல்லபடியாக நடந்து முடிந்த பின்...

+ அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர்......

+ அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....

+ அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த.....
மருத்துவர் கூறுகிறார்....
அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த
அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றனர்....

+ அதற்க்கு பெரியவரின் பதிலை என்னவென்று பாருங்கள்.....

+ எனக்கு அது பிரச்சினையில்லை,
பில் 10 லட்சமாக இருந்தாலும் நான் தர தயாராக உள்ளேன்.....

+ ஆனால் 80 வருடமாக எவ்வித பிரச்சினையுமின்றி என் இதயத்தை பாதுகாத்த _இறைவன் ஒரு ரூபாய்கூட பில் கேட்க்கவில்லையே.....
இவ்வளவு நாள், இதனை உணர்ந்ததேயில்லை, இப்போது நினைத்து உணர்ந்தபோது,
கண்ணீர் வழிகிறது,

+ மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்க்கு எட்டு லட்சத்திற்க்கு  பில்....

+ எல்லாம் வல்ல கடவுள்
கருணையையும் அன்பையும் நினைத்து அழுதுவிட்டேன் என்றார்......

+ இறைவனின்
அருட்கொடைக்கு
நிகர் இறைவனே.....
- நாம் தான் நன்றி கெட்டவர்களாக
இந்த மண்ணில் வாழ்கிறோம்.....

+ எந்த எதிர் பார்ப்புமே இல்லாமல் எப்போழுதும் நம்மை கண்ணும் கருத்துமாக பத்திரமாக பாதுகாப்பவர் அன்பே உருவானவர் இறைவன் மட்டுமே....

நமக்கு கிடைத்த வாழ்கை எத்தனை பேருக்கு கிடைக்க வில்லை என உணர்ந்தால், நாம் தினமும் இறைவனுக்கு நன்றி சொல்ல  மட்டும் பள்ளி செல்வோம்.
🌺🌺🌺🌺
Forwarded as Received

[5/22, 4:00 PM] Habibullah Siraji: முதல் தராவீஹ் பயான்.

தலைப்பு: நினைவு கூர்வதும் ஓர் (இபாதத்) வழிபாடே!.

1. அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூர்வது.  

2. அல்லாஹ்வை நினைவு கூர்வது.

3. கடந்த கால சமூகத்தின் வரலாற்றை நினைவு கூர்வது.   

قال الله عز وجل: أذكروا نعمتي التي انعمت عليكم...
قال الله عزوجل: فاذكروني اذكركم....
قال الله عز وجل: وإذ قال موسى لقومه.... وإذ يرفع ابراهم القواعد. .. وإذ قلتم يموسى لن نصبر.... أي واذكر قال موسى لقومه... واذكر يرفع إبراهيم.
[5/22, 4:00 PM] Habibullah Siraji: روى الحاكم في المستدرك على الصحيحين ج4/ص278, قال رحمه الله:" أخبرني أحمد بن محمد بن سلمة العنزي ثنا عثمان بن سعيد الدارمي ثنا عبد الله بن صالح المقرئ ثنا سليمان بن هرم القرشي وحدثنا علي بن حمشاد العدل ثنا عبيد بن شريك ثنا يحيى بن بكير ثنا الليث بن سعد عن سليمان بن هرم عن محمد بن المنكدر عن جابر بن عبد الله رضي الله عنهما قال خرج علينا النبي صلى الله عليه وسلم فقال:" خرج من عندي خليلي جبريل آنفا فقال يا محمد والذي بعثك بالحق إن لله عبدا من عبيده عبد الله تعالى خمس مائة سنة على رأس جبل في البحر عرضه وطوله ثلاثون ذراعا في ثلاثين ذراعا والبحر محيط به أربعة آلاف فرسخ من كل ناحية وأخرج الله تعالى له عينا عذبة بعرض الأصبع تبض بماء عذب فتستنقع في أسفل الجبل وشجرة رمان تخرج له كل ليلة رمانة فتغذيه يومه فإذا أمسى نزل فأصاب من الوضوء وأخذ تلك الرمانة فأكلها ثم قام لصلاته فسأل ربه عز وجل عند وقت الأجل أن يقبضه ساجدا وأن لا يجعل للأرض ولا لشيء يفسده عليه سبيلا حتى بعثه وهو ساجد قال ففعل فنحن نمر عليه إذا هبطنا وإذا عرجنا فنجد له في العلم أنه يبعث يوم القيامة فيوقف بين يدي الله عز وجل فيقول له الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول يا رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الله عز وجل للملائكة قايسوا عبدي بنعمتي عليه وبعمله فتوجد نعمة البصر قد أحاطت بعبادة خمس مائة سنة وبقيت نعمة الجسد فضلا عليه

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நாங்கள் குழுமியிருந்த சபைக்கு வருகை தந்த அண்ணல் நபி {ஸல்} எங்களை நோக்கி “தோழர்களே! கொஞ்ச நேரத்திற்கு முன்பாகத்தான் என் நண்பர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்து வியத்தகு வரலாறு ஒன்றைக் கூறி என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திப்போனார்” என்று கூறி விட்டு எங்களிடம் “என்னிடம் வருகை தந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “முஹம்மத் {ஸல்} அவர்களே! சத்தியத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் அடியார்களில் ஒரு நல்லடியார் இருந்தார்.

அந்த அடியார் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட மலைப்பிரதேசத்தில் மலையின் உச்சியில் 500 ஆண்டு காலம் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதிலேயே கழித்து வந்தார்.

கடல் சூழ்ந்த – உப்பு நீர் நிறைந்த அந்தப் பகுதியிலும் கூட அல்லாஹ் அவருக்கு மதுரமான ஓர் நீரூற்றை ஓடச் செய்தான். அருகில் ஓர் மாதுளை மரத்தையும் உருவாக்கிக் கொடுத்தான்.

தினமும் மாலை நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கு வரும் அவர் அந்த மாதுளை மரத்திலிருந்து ஒரு கனியை உண்டு விட்டு, அந்த நீரூற்றிலிருந்து சிறிது நீர் அருந்தி விட்டு உளூ செய்து விட்டு மீண்டும் மலை உச்சிக்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு விடுவார்.

ஒரு நாள் அந்த நல்லடியார் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது “யாஅல்லாஹ்! என் உயிர் பிரியும் தருவாயில் என் ரூஹ் உனக்கு நான் ஸஜ்தா செய்யும் நிலையிலேயே பிரிய வேண்டும் என ஆசிக்கின்றேன்! மேலும், என் உடலை மறுமை நாள் பரியந்தம் வரையில் அந்த நிலையிலேயே நீ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்! மேலும், அதே நிலையிலேயே நான் எழுப்பப்பட வேண்டும்! என்னுடைய இந்த ஆசையை நீ நிறைவேற்றித் தர வேண்டும்” என்று கோரினார்.

அல்லாஹ்வும் அவரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அப்படியே செய்தான்.

வானவர்களாகிய நாங்கள் விண்ணுலகத்திலிருந்து பூமிக்கு வரும் போதும், பூமியிலிருந்து விண்ணுலகிற்கு செல்லும் போதும் அவரை அதே நிலையிலேயேக் கண்டோம்.

தொடர்ந்து ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறினார்கள்: “ நாளை மறுமையில் மஹ்ஷர் பெருவெளியில் மக்களோடு மக்களாக அந்த நல்லடியார் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நின்றிருப்பார்.

அப்போது, அல்லாஹ் வானவர்களிடம், அவரை நோக்கி “இதோ என்னுடைய இந்த அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்பான்.

அதற்கு, அவர் அல்லாஹ்விடம் “அல்லாஹ்வே! நான் செய்த என்னுடைய அமலின் துணை கொண்டு என்னை சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வானவர்களுக்கு நீ ஆணையிடுவாய் என்றல்லவா நான் எதிர் பார்த்தேன். ஆனால், நீயோ உன் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆணையிடுகின்றாய்! அப்படியானால், என்னுடைய 500 ஆண்டு கால இபாதத் என்னவாயிற்று?” என்று வினவுவார்.

அப்போது, அல்லாஹ் தன் வானவர்களுக்கு “இந்த அடியானுக்கு நான் வழங்கிய அருட்கொடைகளையும், இந்த அடியான் செய்த இபாதத்களையும் கணக்குப் பாருங்கள்” என்று கட்டளையிடுவான்.

அப்போது வானவர்கள் “இவரின் 500 ஆண்டு கால இபாதத் அனைத்தும் நீ அவருக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றான கண்பார்வைக்கு ஈடாகி விட்டது.

நீ வழங்கிய மற்றெந்த அருட்கொடைகளுக்கும் ஈடாக வேறெந்த அமலும் அவரின் பதிவேட்டில் இல்லை” என்று அல்லாஹ்விடம் கூறுவார்கள்.

فيقول أدخلوا عبدي النار قال فيجر إلى النار فينادي رب برحمتك أدخلني الجنة فيقول ردوه فيوقف بين يديه فيقول يا عبدي من خلقك ولم تك شيئا فيقول أنت يا رب فيقول كان ذلك من قبلك أو برحمتي فيقول بل برحمتك فيقول من قواك لعبادة خمس مائة عام فيقول أنت يا رب فيقول من أنزلك في جبل وسط اللجة وأخرج لك الماء العذب من الماء المالح وأخرج لك كل ليلة رمانة وإنما تخرج مرة في السنة وسألتني أن أقبضك ساجدا ففعلت ذلك بك فيقول أنت يا رب فقال الله عز وجل فذلك برحمتي وبرحمتي أدخلك الجنة أدخلوا عبدي الجنة فنعم العبد كنت يا عبدي فيدخله الله الجنة قال جبريل عليه السلام إنما الأشياء برحمة الله تعالى يا محمد". هذا حديث صحيح الإسناد
 
அது கேட்ட அல்லாஹ் வானவர்களிடம் “இதோ இந்த அடியானை நரகத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்” என்பான்.

அவர் நரகத்திற்கு இழுத்து செல்லப்படுவார். வழி நெடுக அவர் “இறைவா! உன் அருளின் துணை கொண்டே என்னை சுவனத்தில் நுழையச்செய்!” என அலறுவார்.

அந்த அலறலைக் கேட்டதும் அல்லாஹ் வானவர்களிடம் “அந்த அடியானை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்!” என்பான். அவர் அல்லாஹ்வின் திருமுன் நிறுத்தப்படுவார்.

அப்போது, அல்லாஹ்வுக்கும் அந்த அடியானுக்கும் இடையே நடக்கின்ற அந்த உரையாடல் இதோ….

அல்லாஹ்: என் அடியானே! ஒன்றுமே இல்லாமல் இருந்த உன்னை படைத்தது யார்?

அடியான்: நீ தான் என் இறைவா!

அல்லாஹ்: என் அடியார்களிலேயே 500 ஆண்டு கால ஆயுளையும், வணக்க வழிபாடுகள் செய்கிற ஆற்றலையும் கொடுத்து உன்னை வாழ வைத்தது யார்?

அடியான்: நீ தான் என் இறைவா!

அல்லாஹ்: கடலும் –உப்பு நீரும் சூழ்ந்த இடத்தில் மதுரமான நீரூற்றையும், புற்பூண்டுகளே முளைத்திடாத பாறையிலிருந்து மாதுளை மரத்தையும் உனக்குக் கொடையாக வழங்கியது யார்?

அடியான்: நீதான் என் இறைவா!

அல்லாஹ்: உன் ரூஹ் ஸஜ்தா – சிரம் பணிந்த நிலையில் பிரிய வேண்டும் என்று நீ ஆசித்த போது உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தது யார்?

அடியான்: நீதான் என் இறைவா!

இந்த உரையாடலை முடித்து வைக்கும் முகமாக, இறுதியாக அல்லாஹ் அந்த அடியானிடம் “என் அடியானே! இவை அனைத்தும் என் அருளின் மூலமாகத்தான் நீ பெற்றாய்! இப்போதும், நீ என் அருளின் துணை கொண்டு தான் சுவனத்திற்கும் செல்ல இருக்கின்றாய்! அடியானே! என் அடியார்களில் நீ நல்லவனே” என்று கூறி விட்டு வானவர்களை நோக்கி “இதோ இந்த என் அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்தில் கொண்டு போய் விட்டு விடுங்கள்!” என்பான்.

இதைக் கூறி விட்டு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் “முஹம்மத் {ஸல்} அவர்களே! ஓர் அடியானைச் சுற்றி ஈருலகிலும் நடைபெறும் அத்துனை காரியங்களும் அல்லாஹ்வின் அருளின் துணை கொண்டே தான் அமையப் பெறுகின்றது” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்” என்று நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.                 ( நூல்: முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் )

No comments:

Post a Comment