ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Friday, 31 March 2017

நன்மையின் பால் விரைவோம்

[3/31, 1:16 PM] ‪+91 98659 50618‬: மறுமைக்கு தயார் ஆகுங்கள்

அமல்களைஅதிகம் கவனம் செலுத்துங்கள்

நன்மை தீமைகளை தினமும் கணக்கு பாருங்கள்

ரஜப் துவங்கி விட்டது ரமாலானுக்கு தயார் ஆகுங்கள்
[3/31, 1:16 PM] ‪+91 98659 50618‬: மறுமை கணக்கு பயந்து பொருள் அனைத்தையும்தர்மம் செய்த ஸஹாபி

ஒருமுறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் வீட்டில் இருந்த சமயம் மதீனாவில்
பெரும் ஆரவார சப்தம் வந்ததைச் செவியுற்று இது என்ன ஆரவாரம்  என்று
கேட்டார்கள் .அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ( ரலி) அவர்களின்
வணிகச் சரக்கு ஒட்டகைகள் ஷாம் தேசத்திலிருந்து பலவகையான மூட்டைகளுடன்
வந்துள்ளன என்று மக்கள் பதிலளித்தனர். 700 ஒட்டகைகள் அவை அவற்றின்
சப்தத்தால் மதினாவே எதிரொலித்துக் கொண்டிருந்தது.

அப்போது ஆயிஷா ( ரலி) அவர்கள் நிச்சயமாக அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப (
ரலி)  அவர்கள் சுவனத்தில் அமர்ந்து தவழ்ந்தவர்களாக நுழையக் கண்டேன் என
நாயகம் அவர்கள் கூறியதைக் கேட்டுள்ளேன்  என்று கூறினார்கள். அப்துர்
ரஹ்மான் பின் அவ்ஃப் ( ரலி) அவர்களுக்கு இந்தச் செய்தி கிடைத்தபோது
என்னால் முடிந்தால் இன்ஷா அல்லாஹ் (நன்மைகள்-தர்மம் மிக அதிகம் செய்து
தலை நிமிர்ந்து) நடந்த நிலையில் சுவர்க்கத்தில் நுழை(ய முயற்சி செய்)
வேன் என்று கூறியவர்களாக அவ்வொட்டகைகள் அனைத்தையும் அவற்றின் பொதிகளுடன்
அல்லாஹ்வின் பாதையில் அர்ப் பணித்து விட்டார்கள் ( முஸ்னது அஹ்மத் 24842)
[3/31, 1:16 PM] ‪+91 98659 50618‬: அமல் செய்வதில்தான் எத்துனை ஆர்வம் இவருக்கு..?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நபி [ஸல்] அவர்களின் இந்த உம்மத்தில் தலைசிறந்தவர் அபூபக்கர் சித்தீக்[ரலி] அவர்கள் என்பதை நாமெல்லாம் அறிந்துவைத்துள்ளோம். இத்தகைய சிறப்பு அவர்களுக்கு இருந்தும், சொர்க்கத்திற்கு உரியவர் என்று இறைத்தூதரால் பிரகடனப் படுத்தப்பட்ட பின்பும் அபூபக்கர்[ரலி] அவர்களின் அமல்கள் குறைந்ததா என்றால் இல்லை. நல்லமல்கள் என்று எவையெல்லாம் உள்ளதோ அவைகளை அன்றாடம் செய்யக்கூடிய அற்புத மனிதராக அபூபக்கர்[ரலி] அவர்கள் திகழ்ந்துள்ளதற்கு சான்றாகவும், நமக்கும் அத்தகைய ஆர்வம் வரவேண்டும் என்பதற்காகவும் இந்த பொன்மொழி இங்கு பதியப்படுகிறது;

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

[ஒருநாள்] இறைத்தூதர்[ஸல்] அவர்கள் [எங்களிடம்] இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார் என்று கேட்டார்கள்.

அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றைய தினம் உங்களில், ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்றவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் உங்களில் ஒரு ஏழைக்கு உணவளித்தவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் ஒரு உங்களில் ஒரு ஒரு நோயாளியின்நலம் விசாரித்தவர் யார் என்று கேட்டார்கள்.

அபூபக்கர்[ரலி]அவர்கள், 'நான்' என்றார்கள்.

அப்போது இறைத்தூதர் அவர்கள், இவை அனைத்தும் ஒரு மனிதரிடத்தில் ஒன்று சேர்ந்தால் அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை என்று கூறினார்கள். [நூல்;முஸ்லிம்].

வரலாற்றில்  ஒரு ஏடு...!!

முதலாம் கலீஃபா ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹூ அன்ஹூ..!!

அவர்கள் ஆட்சியாளராக இருந்த காலத்தில், ஒவ்வொரு தினமும் சுபுஹுக்குப்  காலைத் தொழுகை பிறகும் பாலைவனத்தை நோக்கி
தனியாகச் செல்வார்கள்.,,,
எங்கு செல்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது....!!!

இதனை கவனித்து வந்த ஹழ்ரத் உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள், கலீஃபா (தலைவர்) அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று அறிய ஆவல் கொண்டவர்களாக ஒருநாள் அவர்களுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து செல்கிறார்கள்...!!

ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் வழக்கமாக செல்லும் பாதையில் சென்று ஒரு சிறிய குடிசை ஒன்றில் நுழைந்தார்கள்...!!

ஹழ்ரத் உமர் ரலியல்லாஹூ அவர்கள் சிறிது தொலைவில் நின்று இதனை பார்க்கிறார்கள்.
சிறிது நேரம் கழித்து கலீஃபா அங்கிருந்து வெளியே சென்று விட்டார்கள்....!!

ஹழ்ரத் உமர் ரலியல்லாஹூ அவர்கள் அந்த குடிசையின் வாயிலை அடைந்ததும், அங்கு ஒரு வயதான பெண்மணியும் அவரின் குழந்தைகளும் இருப்பதை பார்த்தார்கள்....!!

அந்த பெண்மணியிடம் நீங்கள் யார் என்பதாக கேட்க, அவரோ தான் ஒரு பார்வையற்ற விதவை பெண்மணி, இவர்கள் என் குழந்தைகள் என்று பதிலளித்தார்....!!

இதனைக்கேட்ட உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சிறிதுநேரம் முன்பு இங்கு வந்து சென்றார்களே அவர்கள் யார் ? என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்கள்,,,

அந்த பெண்ணோ அவர்கள் யாரென்று தெரியாது,,,,

வந்தவர்கள் அமீருல் முஃமினீன் என்பதை அந்த பெண் அறிந்திருக்கவில்லை என்பதை உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் விளங்கிக் கொண்டார்கள்...!!

தினமும் காலை வந்து வீடு சுத்தம் செய்து, கால் நடைகளுக்கு உணவு புகட்டி, எங்களுக்கும் உணவு தயாரித்து வைத்துவிட்டு சென்று வவிடுவார்கள் என்றார்..!!

பின்பு உமர் ரலியல்லாஹூ அவர்கள் கேட்டார்கள், அவர்களுக்கு இதற்காக நீங்கள் ஏதேனும் பொருள் வழங்குகிறீர்களா?

எனக்கேட்க, அந்த பெண்ணோ, நாங்கள் வறுமையில் இருப்பதால்,,,,
எங்களால் எதனையும் கொடுக்கமுடியாத நிலையில் இருக்கிறோம் என்றார்கள்.

பின்பு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள், எத்தனை நாட்களாக அவர்கள் இந்த உதவிகளை உங்களுக்கு செய்து வருகிறார்கள் என்று கேட்க,,,

நீண்டகாலமாக செய்து தருகிறார்கள் என்று அந்த பெண்மணி பதிலளித்தார்...!!

அதனைக்கேட்டு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொன்னார்கள்,
"யா அமீருல் முஃமினீன், உங்களுக்கு பிறகு தலைவராக வருபவருக்கு மிகப்பெரும் கடமைகளை விட்டுச் செல்கிறீர்கள் " என்று கூறினார்கள்..!!!

ஒரு பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த தலைவர் தன்னை யார் என்றுகூட காட்டிக்கொள்ளாத நிலையில் தன் மக்களென்று நினைத்து அவர்களுக்குச் சேவகம் செய்தார்கள்...!!!

ஆட்சியும், அதிகாரமும் தங்களுக்கு ஒரு பொறுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது, அது நம்மை நாமே பெருமைப் படுத்திக் கொள்ள கொடுக்கப் படவில்லை என்பதை சொல்லில் மட்டுமல்லாமல் வாழ்ந்து காட்டினார்கள்..

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் இந்த உலகத்திற்கு விட்டுச்சென்ற தம் தோழர்கள் எத்தகையவர்கள் என்றால்,,,,

அதற்கு முன்பும் அதற்கு பின்பும் அத்தகைய குணங்களையுடைய மனிதர்கள் வரலாறுகளில் எங்குமில்லை.....!!!

ஸல்லல்லாஹூ  அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம்

No comments:

Post a Comment