ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Saturday, 6 June 2020

இயக்கங்கள் பிரிந்த கதை



ஸ்பெயின் முழுவதும் இஸ்லாமிய நாடாக இருந்து முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட குழப்பம் காரணமாக பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு முழுவதும் கிறிஸ்தவ நாடாக மாறி விட்டது. அங்கு ஏற்பட்ட முதல் குழப்பம் குகைவாசிகள் எத்தனை பேர்? என்ற கேள்விதான். இதே திட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த பல்வேறு குழப்பங்கள் உருவாக்கப்பட்டன.

1980க்கு பிறகு ஒரு குழு உருவானது. அவர்கள் மத்ஹபு நான்காக பிரிந்து கிடக்கிறது முஸ்லிம்கள் ஒரே உம்மத்தாக இருக்க வேண்டும் என ஒரு இயக்கம் ஆரம்பித்தனர்.

திருச்சியில் இருந்து #அந்நஜாத் என்ற மாத இதழ் வெளியிட்டனர். அதனால் அவர்களை மக்கள் #நஜாத்காரர்கள் என்று அழைத்தனர்.

பின் அந்த நஜாத் காரர்களிடையே தலைமை போட்டி வந்தது.
#JAQH - Jammiyathul Ahle Quran val Hadees என்ற இயக்கம் உருவானது
இது அவர்களின் முதல் பிளவு.

பின் #தவ்ஹீத்_ஜமாத், #தமுமுக என்று இரண்டு இயக்கங்கள் உருவாகின.
மத்ஹபு 4 குறை கூறியவர்களே 4 பிரிவாகினர். பின்பு தவ்ஹீத் ஜமாத் கொள்கை வேறுபட்டு SM பாக்கர் தலைமையில் #இந்திய_தவ்ஹீத்_ஜமாத் (INTJ) உருவானது.

நஜாத்காரர்கள் பலர் அல் உம்மா இயக்கத்தில் சேர்ந்தனர் பின் அதிலிருந்து தடா ரஹீம் தலைமையிலான #இந்திய_தேசிய_லீக் உருவானது.

சில நஜாத்காரர்கள் #பாப்புலர்_பிரண்ட்_ஆப்_இந்தியா (PFI) இயக்கத்திலும் பின் #SDPI கட்சியிலும் இணைந்தனர். 

தமுமுக விலிருந்து ஜவாஹிருல்லா தலைமையில் #மனித_நேய_மக்கள்_கட்சி ஆரம்பிக்க பட்டு பின் அதிலிருந்து விலகி தமீமுன் அன்சாரி #மனித_நேய_ஜனநாயக_கட்சி ஆரம்பித்தார்.

தவ்ஹீத் ஜமாத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறி வெளியேற்றப்பட்டார். பின் அவர் தனி இயக்கமாக செயல் படுகிறார். 

அதே தவ்ஹீத் ஜமாத்தில் அல்தாபி என்பவர் ஒரு பெண் தொடர்பான சர்ச்சையில் வெளியேற்றப்பட்டார். பின் #ஏகத்துவ_முஸ்லிம்_ஜமாத் என்ற இயக்கத்தை நடத்துகிறார்.

இப்போது தெரிந்து கொள்ளுங்கள் 4 மத்ஹப்களாக பிரிந்து இருக்கிறார்கள் என சுன்னத் ஜமாஅத்தை குறை கூறி வெளியேறிய நஜாத்காரர்கள் இன்று சுமார் 10 க்கு மேற்பட்ட இயக்கங்களாக பிரிந்து கிடக்கின்றனர்.

முஸ்லிம்களிடையே குழப்பம் ஏற்படுத்த நினைத்தவர்கள் பல இயக்கங்களாக பிரிந்து அரசியல் பிச்சை எடுத்து வருகின்றனர்.

ஆனால் சுன்னத் ஜமாஅத் அன்றும் இன்றும் என்றும் இன்ஷா அல்லாஹ் மாறாது.

1 comment:

  1. உண்மையான தகவல் தானா???

    ReplyDelete