இமாம்களின் வாழ்வினிலே!
***************************
இமாம் அபூஹனீபா (ரஹ்)அவர்களின் காலத்தில் கலீபா உஸ்மான்(ரலி) அவர்களை 'காபிர்'என்றும் அவர்களை"யூதர்" மோசடிக்காரர் என்றும் ஒருவர் கடுமையாக பிரச்சாரம் செய்து வந்தார்
இமாம் அவர்கள் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கே சென்று விட்டார்கள்
இனி அவர்களின் உரையாடல்:
அஸ்ஸலாமு அலைக்கும்
வஅலைக்குமுஸ்ஸலாம்
வாருங்கள் இமாம் அவர்களே!
நல்லது நண்பரே! நான் ஒரு முக்கியமான விசயமாக உங்களிடம் பேச வந்திருக்கிறேன்
'உஸ்மான்' விசயமாகத்தான் இருக்கும் என்று கருதிக்கொண்ட அவர் அதைப்பற்றி பேசவாரம்பித்தார்
இமாம் அபூஹனீபா(ரஹ்)அவர்கள் அவரை கையமர்த்தி விட்டு சொன்னார்கள்
"அதை விடுங்கள் நான் அதுபற்றி பேச வரவில்லை உங்களுக்கு பருவ வயதை அடைந்த ஒரு மகள் இருக்கிறார் அல்லவா?"
விசயம் உஸ்மான் பற்றியல்ல என்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு
"ஆமாம்"என்று கூறினார்
"எனக்கு தெரிந்த குடும்பத்தில் ஒரு நல்ல இளைஞன் இருக்கிறார், நல்ல ஒழுக்கமானவர், தந்தையுடன் வியாபாரத்தை கவணித்துக்கொள்கிறார், அழகானவர் என்று இமாம் கூற,
அவருக்கு மிகுந்த சந்தோசமாயிற்று
"ஓ......அப்படியா?
நல்லதாயிற்று நானும் என்னுடைய மகளுக்கு தகுந்த வரை தேடிக்கொண்டிருக்கிறேன் பேசலாமே"என்றார்
"உங்களுக்கு சம்மதம் என்றால் நானே மணமகனின் தந்தையிடம் பேசுகிறேன்" என்று இமாம் கேட்க
அவர் "தாராளமாக
பேசுங்கள்" என்றார்
இப்போது இமாம் அவர்கள்
"அவரைக்கூட உங்களுக்கு தெரியும்" என்று அவரைப்பற்றிய விபரங்களை கூறவாரம்பித்தார்கள்
அவர் யாரென்று இவருக்கு புரிய வேகமாக எழுந்து கோபமாக சொன்னார்
"அவன் ஒரு யூதனாயிற்றே? நான்முஸ்லிம் என்று தெரிந்தும் என்ன துனிச்சலில் என்னிடம் பெண் கேட்கிறீர்கள்?"
உடனே இமாம் அவர்கள்
"நீங்கள் கூறி வருவது போல நபி (ஸல்)அவர்கள் யூதராகிய உஸ்மான் (ரலி)அவர்களுக்கா தமது இரு மகள்களை திருமணம் செய்துவைத்தார்கள்?"
என்று கேட்டுவிட்டு அமைதியாக வெளியேறினார்கள்
No comments:
Post a Comment