ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Monday, 24 July 2017

இப்னு அரபி அவர்களின் புத்தூஹாத்துல் மக்கியா

இப்னு அரபி ரஹ்மதுல்லாஹி  அலைஹி ரலியல்லாஹுஅன்ஹுமா

அவர்கள்....தான் எழுதிய புத்தூஹாத்துல் மக்கியா என்ற நூலை வெளியிடவிரும்பி....
அந்த நூலை... ""இறைவனின் அங்கீகாரத்துடன் தான் வெளியிடுவேன்""
என்றார் கள்!!

அதற்காக... சோதனை ஒன்றை மேற்கொண்டார்கள்!!💐💐

தான் ..எழுதிய நூலின் தாள்களை அடுக்கி ....அதை கட்டாமல்  மொத்தமாக
மக்காவின் கஃபதுல்லாஹ்.. ஆலயத்தின் மொட்டை மாடியில் வைத்துவிட்டு...
"" இன்று முதல் ஆறுமாதம் வரை...
இந்நூலின் ஒரு தாளாவது பறந்து சென்றாலோ அல்லது வெயில்,காற்று,மழை இவற்றால் சேதமுற்றாலோ இறைவன் இந்த நூலுக்கு அனுமதி வழங்கவில்லை என்று நூலை வெளியிடமாட்டேன்!!
மாறாக இந்நூல் சேதமடையாமல் இருந்தால் இறைவன் அனுமதித்தாக கருதி வெளியிடுவேன்""

என்று... அங்கு குழுமியிருந்த திரளான  மக்களை நோக்கிச் சொன்னார்கள்.
ஆனால் அந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இயற்கை சீற்றத்தால் புயலும்,மழையும் உண்டாயின.

மக்கள்  இப்னு அரபியின் அந்த நூல் அழிந்து போயிருக்கும் என்று நம்பினர்.

ஆறுமாதம் கழிந்து இப்னு அரபி ரலியல்லாஹு  அன்ஹுமா...அந்த நூல் வைக்கப்பட்டிருந்த கஃபாவின் மேல்புறத்தில்  ஏறி பார்க்கும் போது
அடிக்க கூடியிருந்த மக்களும்,இப்னு அரபியும் திடுக்கிட்டு போயினர்
கடுமையான...புயலும்... மழையும் ...
அந்நூலின் அத்தனை தாள்களும் பறந்து காற்றில் எங்கோ சென்றிருந்தன.!!

சற்று நேரத்தில்

அந்த விநோதம் அங்கே நிகழ்ந்தேறியது.

பறந்து போன நூலின் தாள்களெல்லாம் எங்கிருந்தோ தாமாக பறந்து வந்து  ஹரம் ஷரீஃப்பை சுற்றிப் பறந்தன.

பின்னர் கஃபா வாசலில் அவை ஒன்றன்பின் ஒன்றாக இறங்கின.

அந்நூல் பிரகாசத்தால் தகதகவென்று மின்னிக்கொண்டிருக்க,

அசரீரி ஒன்று இடியெனக் கேட்டது.

""இப்னு அரபியே!!
நாம் உம்மை மெச்சினோம்.
இந்நூலை ஏற்றுக்கொண்டோம்.
இதை இனி வெளியிடும்""!!!

என்று சொல்லி மறைந்தது

.மக்கள் அனைவரும் இப்னு அரபியையும் அவரது நூலையும் பாராட்டி இவர் உண்மையிலேயே அவ்லியாக்களில் ஒருவர் தான்....என்று ஏற்றுக்கொண்டனர்

.அந்நூல் தான் சூஃபியிசத்தின் கொள்கையான ""வஹ்தத்துல் உஜூது"" கொள்கையை விளக்குவதாகும்.!!!💐💐💐

No comments:

Post a Comment