#பிஜெ சிடியை பார்த்து மார்க்கம் பயின்றவர்களுக்காகவே :)
இஸ்லாமிய உலகத்தையே அழித்து விட வேண்டும் என குரலெழுப்பி ஆரம்பிக்கப்பட்ட சிலுவைப் போரில் பிரித்தானியா ரோம் படைகளை எதிர்த்து வெற்றி கண்ட மகத்தான புரட்சியாளர் ஹழ்ரத் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி ரஹ்மதுல்லாஹி அலைஹி காதிரிய்யா தரீக்கா மரபைச் சார்ந்தவர்கள்,
பிரிட்டிஷாருக்கு எதிராக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லை மாகாணப் பகுதிகளில் ஜிஹாது இயக்கத்தை முன்னெடுத்த ரேபரேலியின் சையித் அஹ்மது (1786-1831), இவர் சிஷ்திய்யா, காதரிய்யா மற்றும் நக்ஷ்பந்திய்யா சூஃபி மரபில் வந்தவர்
ரஷ்யாவின் ஜார் சாம்ராஜ்யத்தை எதிர்த்துச் சுமார் அரை நூற்றாண்டு காலம் வீரப்போர் தொடுத்த தாகிஸ்தானின் இமாம் ஷாமில் (1797-1871) இவர் நக்ஷ்பந்திய்யா மரபின் முரீது இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்
முசோலினியின் ஃபாசிஸ இத்தாலிய இராணுவத்துக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த பாலைவனச் சிங்கம் உமர் முக்தார் (1862-1931) சனூசிய்யா சூஃபி மரபைச் சேர்ந்தவர்
அல்ஜீரியாவின் மீதான பிரெஞ்சு ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய அப்துல் காதிர் அல்-ஜஸாயிரி (1808-1883) அவர்கள் காதரிய்யா சூஃபி ஒழுங்கை சேர்ந்தவர்
பிரெஞ்சுக் காலனியத்திற்கு எதிராகப் போராடிய செனிகலின் ஷெய்க் அஹ்மதூ பம்பா (1853-1927) அவர்கள் முரீதிய்யா சூஃபி ஒழுங்கின் நிறுவனர்
மொரோக்கோவில் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிர்த்தியாகம் செய்த சூஃபி ஷெய்குகளான சித்தி முஹம்மது இப்னு அப்துல் காதிர், அல்-கத்தானி மற்றும் அஹ்மது ஹிபா ஆகியோர் மாபெரும் சூஃபியாக்கள்,
ஸ்பானிய மற்றும் பிரெஞ்சுக் காலனியத்திற்கு எதிராக வட ஆப்பிரிக்காவில் வெடித்த ‘ரிஃப் கிளர்ச்சியை’ தலைமையேற்று நடத்திய முஹம்மது அப்துல் கரீம் (1882-1963) அவர்கள் ஒரு சூஃபி,
பிரிட்டிஷ், இத்தாலிய மற்றும் எத்தியோப்பிய படைகளுக்கு எதிராக இருபதாண்டுகள் போராடிய தெர்வீஷ் அரசை நிறுவிய சூஃபி தலைவர் முஹம்மது அப்துல்லாஹ் ஹசன் (1856-1920)
கினியா, செனிகல் மற்றும் மாலியில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்திய திஜானிய்யா சூஃபி ஒழுங்கின் தலைவர் அல்-ஹாஜ் உமர் தல் (1797-1864).
மலேசியாவில் சூஃபி ஷெய்குகளும் உலமாக்களும் மக்களை காலனியத்திற்கு எதிராக அணிதிரட்டினார்கள். இந்தோனேசியாவின் சுமத்ராவில் டச்சுக்காரர்களுக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தியதும் சூஃபிகளே
இன்றைய பாலஸ்தீனிய போராட்டத்திற்கு விதையிட்ட ஷைஹ் இஜ்ஜத்தீன் அல் கஸ்ஸாம் அவர்கள் காதிரிய்யா மரபை சார்ந்தவர்கள். இன்று ஹமாசின் இராக்கெட் படைப்பிரிவிற்கு இவர்களுடைய பெயர் தான் சூட்டப்பட்டு உள்ளது. 1920களிலேயே இஸ்ரேல் கிறித்தவ படைகளுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அறிஞர் இந்த சூஃபிதான்.
இன்னும் சூஃபிகளின் பங்களிப்புகள் இச்சமுதாயத்திற்கும் , உலகிற்கும் ஏராளமாய் உள்ளன. இஸ்லாமிய கிலாஃபத்தை உடைத்து பிரித்தானிய படைகளிடம் அடிமை சாசனம் செய்து கொண்டு அரேபியாவை சஊத் அரேபியா என பெயர் மாற்றிக்கொண்ட பதவி வெறி பிடித்த வஹ்ஹாபிகளின் அடிமைகளுக்கான பதிவுதான் இது.
வெளியே தெரிந்த வரலாறு இது, மக்கள் புரட்சி வெடிக்கும் என்று ஏகாதிபத்தியங்கள் மூடி மறைத்த வரலாறு ஏராளம்.
தமிழ்நாட்டு வரலாறே தெரியாத அரைகுறைகளுக்கு இதுவெல்லாம் விளங்காது தான்.
தொகுப்பு இன்குலாப் இறைதாசன்
No comments:
Post a Comment