புனித ரமலான் சிந்தனை....!!!
வல்ல அல்லாஹ்வின் பெயரால்......!!!
புனித ரமலானின் இறுதிப் பத்து நாட்களில்
இருக்கின்ற நாம் ""கியாமுல்லைல் ""என்ற ஹதீஸ் படி ""தராவீஹ்"" எட்டு ரக்அத்துகள் தான் என்று சிலர் கூக்குரல் இட்டுக் கொண்டிருக்க ,""தராவீஹ்"" ஹஸ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் முறைப் படுத்தப்பட்டாலும் கூட, """குலஃபாயே ராஷிதீன்களின் சுன்னத்தும் எனது சுன்னத்தே !!!""" என்ற மற்றொரு ஹதீஸின் அடிப்படையிலும் கியாமுல் லைல் தராவீஹ் பற்றிய ஹதீஸ் அல்ல என்பதன் அடிப்படையிலும் 20 ரக் அத் கொண்ட தராவீஹ் நம்மால் ஜமா அத் தாக சுன்னத்தான தொழுகையாக தொழப்பட்டு
இன்று குர் ஆன் முடிக்கப் பட்டு கதமல் குர்ஆன் இறைவன் அருளால் முடிந்தது.....!!!
ரமலானின் முதல் பத்து தஹாதஹா
ஊர்ந்து செல்லக்கூடிய நாட்கள்...
ஊர்ந்து சென்று விட்டது......!!!
இரண்டாவது பத்து நாட்கள் தஹா ரவா(ன்)
ஓடக்கூடிய நாட்கள்........
ஓடிச் சென்று விட்டது......!!!
மூன்றாவது பத்து நாட்கள் தஹா ஃபரா(ன்)
பறக்கக் கூடிய நாட்கள்.......
பறந்து கொண்டு இருக்கிறது....
இப்போதுதான் வ பல்லிஃக்னா ரமலான் என துஆ செய்து கொண்டு இருந்தோம்...
இன்று........!!!
அல் விதாஉ ....அல்விதாஉ...!!!
யா ஷஹரர் ரமலான்.....!!!
அஸ்ஸலாமு அலைக்க யா ஷஹரர் ரமலான்..!!
அஸ்ஸலாமு அலைக்க யா தராவீஹ் வத் தஸாபீஹ்...!!!
அஸ்ஸலாமு அலைக்க யா ஜகாத்தி வஸ் ஸதகா.....!!!
என்று ஸலாம் கொடுத்து வழி அனுப்பும் நிலைக்கு வந்து விட்டோம்
சுபுஹானல்லாஹ்......!!!
அல்ஹம்துலில்லாஹ்......!!!
அல்லாஹு அக்பர்......!!!
அடுத்து பிறையில் குழப்பம் ஏற்படுத்த ஒரு கூட்டம் காத்திருக்கிறது.
அல்லாஹ் சுபுஹானஹு வ த ஆலா
சூரா அர் ரஹ்மானில்
""ரப்புல்மஷ்ரிகைனிவல்மக்ரிபைன்""
இரண்டு கிழக்குகளுக்கும் இரண்டு மேற்குகளுக்கு ரப்பாக இருக்கிறான்
என்று சொல்வதன் மூலம் பூமி உருண்டை
என்று பறை சாற்றுகிறான்...!!
பூமி உருண்டை என்பதால் ஒரே நேரத்தில்
ஒரு பக்கம் பகலும் ஒரு பக்கம் இரவும்
இருக்கும் என்பது தெளிவு.....
அவ்வாறு இருப்பதால் இரண்டு மஷ்ரிக் இரண்டு மஃக்ரிபு திசைகள் என்று குர் ஆன் இயம்புகிறது....!!!
அதனால் இரண்டு தடவை பிறை பார்த்து
இரண்டு நாட்களில் பெருநாள் வரும் என்று
பொருள் கொள்ள வேண்டும்...!!!
இன்று இந்தியாவில் வியாழன் என்றால்
உலகம் முழுதும் வியாழன் தானே என்று
விஞ்ஞானம் அறியாதவர்களும் பிறை பார்த்து நோன்பு நோற்றலும் விடுதும்
வேண்டும் என்ற ஹதீஸு தெரியாதவர்களும்
உருகுகிறார்கள்.......!!!
ஜப்பானில் இஷா .....!!
அதே நேரம் மலேஷியாவில் மஃக்ரிப்...!!
இந்தியா வில் அஸர் ....!!!
அரபு நாடுகளில் லுஹர் ....!!!
அமெரிக்கா வில் ஃபஜ்ர்....!!
ஒரே நேரத்தில் சூர்யனையே பார்க்க
இயலாத போது
சந்திரப் பிறையை அல் ஹிலாலை....
எப்படிப் பார்ப்பீர்கள்....!!!
ஒரே நேரத்தில் ஒரே நாளில் பெருநாள்
கொண்டாட விஞ்ஞானத்தில் இடமில்லை
இஸ்லாத்திலும் இடமில்லை...!!!
பூமி தட்டையில்லை; ஒரேநாளில் கொண்டாட......!!!
குர்ஆனின் வசனம் உண்மையானது:;
ஆகவே எந்த ஒரு பண்டிகையும் இந்தப் பூவுலகில் இரண்டுநாட்களில் கொண்டாடப்படும்....!!!
கிறிஸ்த் மஸும் கூட அப்படித்தான்
கொண்டாடப் படுகிறது....!!!
ஆகவே எனதருமை முஸ்லிம் சகோதர்களே...!!!
குர் ஆன் உண்மை....!!!
ஹதீஸ் பொய்க்காது....!!!
உலகம் உருண்டை என்றால்
பெருநாள் இரண்டு நாட்களில்
தான் வரும்.....!!!
குழப்பம் வேண்டாம்....!!!
அல்லாஹ்வின் அடியான்...!!!
Dr.ஷம்சுதீன் இப்ராஹிம் உம்மி
அதிகம் பகிருங்கள் நண்பர்களே
உண்மையை உரக்கச் சொல்லுங்கள்....!!!
No comments:
Post a Comment