ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Tuesday, 6 June 2017

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து

" ஓரு மனிதன் இன்னொரு மனிதனிடம் வந்து . . . . . .

  அல்லாஹ் எல்லாரையும் வசதியாக எல்லாம் செல்வங்கலோடு வைத்திருக்கிறான் ,ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன் . .

  " இதுவரை எதுவும் எனக்கு தந்ததில்லை.. என்று சலித்துக் கொண்டான் . .

மனிதன் 2 : " நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு . .

மனிதன் 1 : " இல்லை " முடியாது . .

மனிதன் 2 : 10 லட்சம் தருகிறேன்.உன்னுடைய ஒரு காலை வெட்டி எனக்கு தந்து விடு.

மனிதன் 1 : " இல்லை " முடியாது . .

மனிதன் 2 : நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன் உனது இரு கண்களையும் எனக்கு தந்துவிடு . .

மனிதன் 1 : " நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களை கொடுத்தாலும் என் கண்களை குடுக்க முடியவே முடியாது . .

மனிதன் 2 : அல்லாஹ் உனக்கு எவ்வளவு விலை உயர்ந்த நியமத்துகனை தந்துயிருக்கிறான் , ஆனால் அதற்கு நன்றி  செலுத்தாமல் , இதுவரை எனக்கு எதுவும் தந்ததில்லை... என்று சலிக்கின்றாயே ? ? ?

  "  எந்த சூழ்நிலையிலும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள் . .

     " அல்ஹம்துலில்லாஹ் ! ! !
     " அல்ஹம்துலில்லாஹ் ! ! !
     " அல்ஹம்துலில்லாஹ் ! ! !

     " அவன் தான் அல்லாஹ் . .

     " பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கு உணவு வழங்குபவன் . .

    கடலில் உள்ள திமிங்கலதிற்கு ஒரு நாளைக்கு 33 டன் " அதாவது, 36,960 கிலோ  " மீன்களை " உணவு வழங்குகிறான் . .

     " சுப்ஹானல்லாஹ் ! ! !
    
     " உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள் , . .

     " அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான் . .

     " இன்னும் சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான் . .

      " ஆக , ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள் . .

      "நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவா சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று . .

     " உங்களைப் படைத்து, ரிஜ்க் அளித்து பரிபாலிக்கக்கூடிய ரப்பை அவனுடைய அடிப்படையை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் . .

      " அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து . .

     " நீ உனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றாய் . .

     " எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர் . .
   
     " அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து . .

     "நீ உனது தொழிலை நோக்கி செல்கின்றாய் . .
  
      "  எத்தனையோ பேர் தொழில் இல்லாமல்  அலைகின்றனர் . .

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து . .

     " நீ உடல் " ஆரோக்கியத்துடன் " உலா வருகின்றாய் . .

     " எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர் . .

     " அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து . .

      " நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாய் . .

    " எத்தனையோ மண்ணறைவாசிகள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர் . .

     "அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து . .

      " நீ உனது தேவைகளை முறையிட்டு வணங்குவற்கு உனக்கொரு இறைவன் இருக்கின்றான் . .

     " எத்தனையோ பேர் கல்லுக்கும் மண்ணுக்கும் சிரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றனர் . .

     " அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து . .

     "நீ நீயாக இருக்கின்றாய் .  .

      "  எத்தனையோ பேர் அவர்கள் உன்னைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர் . .

      "அல்லாஹ்விற்கே நன்றி செலுத்து நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாக பிறந்ததற்கு . .

      " எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இரு . .

     " அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து . .

     " பிறரை மகிழ்வி . , ,

ஸூரத்துத் தீன்  95 வது அத்தியாயம்.  . !

    لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

    " நிச்சயமாக  நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில்  படைத்திருக்கின்றோம் . .

   (அல்குர்ஆன் : 95:4)

No comments:

Post a Comment