ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Wednesday, 30 April 2014

மே- தொழிலாளர் தினம்

தொழிலாளர் தினம்

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே முதல் தேதியை மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (Chartists). சாசன இயக்கம் 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது .
1830 ஆம் ஆண்டு, பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர்.
இதனை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற வாசகத்தை முன்வைத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், இது தோல்வியில் முடிந்தது. ஆஸ்திரேலியா விலுள்ள மெல் போர்னில் கட்டிடத் தொழிலாளர்கள் 1856 இல் முதன்முதலாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.
1890 மே 1 ஆம் நாள், அனைத் துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலே, மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினமாக - மே தினமாக வருவதற்குக் காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டிலிருந்து உலக நாடுகள் பலவற்றில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
தொழிலாளர் உரிமைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்பேயே இஸ்லாம் தன் உரிமைக் குரலை பதிவு செய்திருக்கிறது. கிப்தி நாட்டு கொடுங்கோல் அரசன் பிர்அவ்நிடம் நூற்றாண்டு காலமாய் அடிமைப் பட்டு கிடந்த பனூ இஸ்ராயீல் மக்களுக்கு ஆதரவாக நபி மூஸா (அலை) போராடிய வரலாற்றை அல்குர்ஆன் எடுத்து இயம்புகிறது.

   عن أم سلمة: أن رسول الله صلى الله عليه وسلم كان يقول في مرضه الذي توفي فيه: الصلاة وما ملكت أيمانكم، فما زال يقولها حتى يفيض بها لسانه وصححه الألباني.
(سنن ابن ماجه)
நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில் இந்த உலகத்திற்கு இரண்டு விஷயங்களை வலியுறுத்தினார்கள்.
1,தொழுகை  2. தொழிலாளர் உரிமை .


.  عَنْ أَنَسٍ ، قَالَ : لَقَدْ خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ ، فَوَاللَّهِ مَا قَالَ لِي أُفٍّ قَطُّ ، وَلَمْ يَقُلْ لِشَيْءٍ فَعَلْتُهُ لِمَ فَعَلْتَ كَذَا ، وَلا لِشَيْءٍ لِمَ أَفْعَلْهُ أَلا فَعَلْتَ كَذَا " . صَحِيحٌ أَخْرَجَهُ مُسْلِمٌ
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபிகளாரிடம் நான் பணி புரிந்த 10 ஆண்டுகளில் என் மனம் புண்படும்படி சீ யென அலுத்துக் கொண்டதில்லை, ஏன் இதை செய்தாய் என்றோ ஏன் இதை செய்யவில்லை என்றோ கண்டித்ததுமில்லை.


ஊழியரும் ஊதியமும்

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطى بي ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يعط أجره
صحيح البخاري) » كتاب البيوع       » باب إثم من باع

    "வாக்களித்துவிட்டு மாறு செய்பவன், சுதந்திரமனிதனை அடிமைச் சந்தையில் விற்கு அதன் கிரயத்தை உண்டவன், வேலைக்கு ஒருவனை அமர்த்தி, குறிப்பிட்ட கூலியையும் பேசி, வேலையையும் வாங்கிவிட்டு பேசிய கூலியை கொடுக்காதவன்  ஆக இம்மூன்றுகுற்றவாளிகளுக்கெதிராக நின்று நாளை மறுமையில் நான் இறை நீதிமன்றத்தில் வழக்காடுவேன்" என்பதாக அல்லாஹ் கூறுகின்றான்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் (புகாரி)

َ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ، قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُه

தொழிலாளியின் வியர்வை உலறும் முன் அவனது கூலியை வழங்கிவிடுமாறு பணிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள். (இப்னுமாஜா)

இன்றைய உலகில் சில முதலாளிகள்  தொழிலாளர்களிடம் குறிப்பிட்ட கூலி பேசிவிட்டு வேலை முடிந்த பின் குறைத்துக் கூலி தருவதையும், அதிகப்படியான வேலை வாங்கிவிட்டு குறைவான கூலி கொடுப்பதையும், சிலர் கூலியே கொடுக்காமல் உழைப்பாளிகளை ஏமாற்றுவதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.   ஒரு சின்ன வேலையானாலும் கூலி பேசப்பட்டு விட்டால் அதில் குறைவு செய்திட எவருக்கும் அனுமதி இல்லை.
வியாபார நிறுவனங்களும் முதலாளிமார்களும் ஊதியம் அளிப்பதை உதவி யென்றும் உபகாரமென்றும் நினைக்கிறார்கள். இதனால் தான் உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள்  கீழ்த்தரமிக்க மக்களாக நடத்தப்படுகிறார்கள்.
நாய் ,எருமை , முட்டாள் போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளால் அழைக்கப்படுகிறார்கள்.

عَنْ الْمَعْرُورِ قَالَ لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلَامِهِ حُلَّةٌ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ إِنِّي سَابَبْتُ رَجُلًا فَعَيَّرْتُهُ بِأُمِّهِ1 فَقَالَ لِي النَّبِيُّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ إِخْوَانُكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمْ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ وَلَا تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ (بخاري)

அபூதர் (ரலி) எனும் தோழரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழிலாளர்கள் உங்கள் சகோதரர்கள், நீங்கள் உண்ணும் உணவை அவர்களுக்கு உண்ணக் கொடுங்கள். நீங்கள் உடுத்தும் உடையை உடுத்தக்கொடுங்கள். தொழிலாளியின் சக்திக்கு மீறிய வேலை இருந்தால் முதலாளியும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்தும் இதில் உண்டு
ஓய்வே இல்லாத வகையில் வேலை வாங்கக் கூடாது. பணியாளரையும் நம்மைப் போல் ஒரு மனிதனாக கருத வேண்டும்.


தொழிலாளர் கடமைகள் :
     عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «المَمْلُوكُ الَّذِي يُحْسِنُ عِبَادَةَ رَبِّهِ، وَيُؤَدِّي إِلَى سَيِّدِهِ الَّذِي لَهُ عَلَيْهِ مِنَ الحَقِّ، وَالنَّصِيحَةِ وَالطَّاعَةِ لَهُ أَجْرَانِ»
   தன் இறைவன்,  முதலாளி இருவருக்குமான கடமைகளை பேணி நடந்த தொழிலாளிக்கு இருமடங்கு கூலி உண்டு (புகாரி, முஸ்லிம்)

"தனக்கு வழங்கப்பட்ட வேலையை ஒழுங்குபடச் செய்யும் உழைப்பாளனே இறைவனுக்கு உகப்பானவன் (பைஹகீ)

அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு வராமலிருப்பதும் அரட்டையிலும், அரைத் தூக்கத்திலுமாக பணி செய்வதும்  வருடத்தில் பகுதி நாட்கள் விடுமுறை எடுப்பதும் எடுத்ததற்கெல்லாம் ஸ்டிரைக், உண்ணாவிரதம் என வேலை நிறுத்தப் போராட்டம் செய்வதும் வியாபார நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதும் இஸ்லாமிய மார்க்கத்தால் கண்டிக்கப்பட்ட விஷயங்களாகும்.

   "நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள், உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஒரு முதலாளி, தொழிலாளி யின் பொறுப்பாளர். ஏனவே அது குறித்து அவர் விசாரணைக்குட்படுத்தப்படுவார். (புகாரி)

பதிவிட்டவர் அ.க. அப்துல்நாசர் சிராஜி M.A.

30.04.2014

No comments:

Post a Comment