ஷெய்க் முஹம்மது நிம்ர் அல்-காதிப் (1918 - 2010) அன்னவர்கள் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த சூஃபி குடும்பத்தை சார்ந்த சிறந்த மார்க்க அறிஞர்.
ஷெய்க் நிம்ர் அல்-காதிப் அன்னவர்கள் பாலஸ்தீனத்தில் ஒருமுறை காரில் இருந்த போது, எதிரிகள் திடீரென அவரது காரின் மீது கடுமையான துப்பாக்கி சூடு நடத்தினர். அத்தாக்குதலில் காரில் இருந்த ஓட்டுனர் மற்றும் பயனிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆனால் ஷெய்க் நிம்ர் அவர்கள் மட்டும் பாதுகாப்பாக உயிர் தப்பினார்கள் !
ஷெய்க் அவர்கள் இந்நிகழ்வை குறித்து சத்தியமிட்டு கூறுகிறார்கள்:
அந்த துப்பாக்கி தாக்குதல் முடிந்த போது, எனது சட்டையை எடுத்து பார்த்தேன், அதில் 30 புல்லட்கள் எனது சட்டையை துளைத்து ஓட்டை போட்டிருந்தன. ஆனாலும் என் உள்ளே எந்த குண்டுகளும் பாயவில்லை!
இவ்வற்புதம் எவ்வாறெனில், நான் ஒவ்வொரு நாள் காலையிலும் புர்தா ஷரிஃபில் வரும் ஒரு வரியை அனுதினமும் ஓதி வரும் வழக்கம் கொண்டிருந்தேன்.
*وَمَنْ تَـكُنْ بِرَسُـولِ اللهِ نُصْرَتُـهُ*
*إِنْ تَلْقَهُ الْأُسْـدُ فِي آجَــامِهَا تَجِمِ*
*யார்_ஒருவர்_அல்லாஹ்வின்_ரசூலின் ﷺ உதவியை நாடி, ரசூல் நாயகத்தின் உதவியை பெற்றிருப்பாரோ, அவர் சிங்கத்தின் குகைக்குள்ளேயே இருந்தாலும் சிங்கமே அவரை கண்டு பயந்து நிற்கும்!*
(புர்தா ஷரிஃப்)
(அண்ண லாரி னுதவியை
அண்டி நின்ற வர்களுக்
கண்ணு மரியும் புலியெலாம்
அஞ்சி நிற்கு முண்மையே.
அண்ண லாரி னருளினை
அடைந்த வர்த மக்கெலாம்
உண்ணுந் தீரச் சீயமும்
கண்டொ துங்கி நிற்குமாம்.)
(அற்புத அகில நாதர்)
என்ற புர்தா வரிகளையும், ஸலவாத்துக்களையும் நான் அதிகம் ஓதி வந்ததால் நான் குண்டு துளைக்காமல் பாதுகாக்கப்பட்டேன் என்றார்கள் !
ஷெய்க் நிம்ர் அல்-காதிப் அவர்கள் பின்னாட்களில் மதீனா ஷரிஃபில் மறைந்து அல்- பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் !
இதைப்போன்றே, நக்ஷபந்தியா தரீக்கா வை சேர்ந்த ராணுவ தலைவர் ஷெய்க் இமாம் ஷாமில் (1797 - 1871) அவர்களின் ரஷ்ய வல்லரசுக்கு எதிரான வெற்றியின் ரகசியமும் ஸலவாத்தே ஆகும்.
இமாம் ஷாமில் அவர்களை எதிர்த்து ரஷ்யர்கள் 20 வருடங்களுக்கு மேலாக போர் புரிந்தும் அன்னவர்கள் வாளால் குத்தப்பட்டும் அவர்களை அது ஒன்றும் செய்யவில்லை. இறுதியில் இமாம் ஷாமில் அவர்கள் மதீனா வந்தடைந்து ரசூல் நாயகம் ﷺ அவர்கள் வாழும் புனித பூமியில் அடக்கம் செய்யப்பட்டார்கள் !
சத்திய சஹாபாக்கள் எவ்வாறு அல்லாஹ்வின் தூதரை, உயிருக்கு மேலாக போற்றி, அருமை நாயகம் ﷺ பயன்படுத்திய புனித பொருட்களை வஸீலாவாக கொண்டு உதவியையும் வலிமையையும் தேடினார்களோ. அதைப்போல் நாமும் ரசூலுல்லாஹ் நாயகம் ﷺ மீது அதிகமதிகம் ஸலவாத்து ஓதி அவர்களின் உதவியை பெறுவோமாக !
Courtesy: Shaykh Mohammed Aslam (UK)
தமிழில்:
ஜமால் முஹம்மது
No comments:
Post a Comment