ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Monday, 1 July 2019

பெரியோர்களின் கை, கால்களை முத்தமிடல்

புனித வியாழன்று இந்து மற்றும் இஸ்லாமியர்களின் பாதங்களை கழுவி போப் பிரான்சிஸ் முத்தமிட்டார்.

ஏசுபிரான் உயிர் துறக்கும் முன்பு, தனது 12 சீடர்களுக்கு சேவை புரியும் விதமாக அவர்களது பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்வு புனித வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் 12 கிறிஸ்தவர்களின் பாதங்களை கழுவி போப் பிரான்சிஸ் முத்தமிடுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை அகதிகள் முகாமிற்குச் சென்ற போப், அங்கிருந்த இஸ்லாமியர், இந்து உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்த 12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். அப்போது பேசிய அவர், மக்கள் பல்வேறு மதங்கள், கலாச்சாரங்களை பின்பற்றினாலும் அனைவரும் சகோதரர்கள்‌தான் என்று கூறினார். பிரஸ்சல்ஸ் வெடிகுண்டு தாக்குதலுக்கும் போப் ‌பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்தார்.

பெரியோர்களின் கை , கால்களை முத்தமிடுவது குறித்து இஸ்லாம் சொல்வது என்ன ?

"திடனாக ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து , ' அல்லாஹ் தங்களுக்கு மக்காவை வெற்றியாக்கி தந்தால் , நான் பைத்துல்லாஹ்வுக்கு சென்று அதன் வாசல்படியை முத்தமிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன் ' என்று கூற ,

அது கேட்ட நபியவர்கள் , " நீர் உமது தாயுடைய இரண்டு பாதத்தையும் முத்தமிட்டுக் கொள்ளும் .உமது நேர்ச்சை நிறைவேறும் '' என்று கூறினார்கள்
(நூல் : உம்தத்துல் காரி ,பாகம் - 2, பக் - 82 )

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னைவிட வயதில் முதிர்ந்தவர் என்ற ஒரு நோக்கத்துக்காக அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கையையும் இரு காலையும் முத்தமிட்டார்கள்.
(நூல்: இமாம் புஹாரியின் அதபுல் முப்ரத் பக்கம் 976)

இரு யஹூதிகள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டு பதில் கிடைத்தவுடன் திடுக்கிட்டு நாயகத்தை நபியாக ஏற்று நபிகளாரின் கையையும் கால்களையும் முத்தமிட்டனர்.
(நூல் : திர்மிதீ, பாடம்: சூரத் இஸ்ரா விளக்கவுரை)

​முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மகளாகிய அன்னை பாதிமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு சென்றால் அவர்கள் தன் தந்தை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கையை முத்தமிடுபவளாக இருந்தார்கள

கஃப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி அல்லாஹ் மன்னித்து விட்டதாக நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த போது அந்த ஸஹாபியவர்கள் உடனே வந்து நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கையை முத்தமிட்டார்கள்.
(நூல்: துர்ருல் மன்தூர் பாகம் 4, பக்கம் 314)

அப்துல் கைஸ் தூது குழுவினர் கூறினார்கள் : நாம் மதீனாவுக்கு வந்த போது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கை மற்றும் கால் பாதத்தை எங்களில் யார் முதலில் முத்தமிடுவது என்பதற்காக ஓடுவோம்.
(​​நூல்கள்: அபூதாவூத் 5206, ஸூனன் பைஹகீ, முஸ்னத் பஸ்ஸார்)

​சில யூதர்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கைகள், கால் பாதத்தை முத்தமிட்டார்கள்.
(​​நூல் : இப்னு மாஜா 3705 )

அப்துல்லாஹ் பின் ஸஃதில் அப்தீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

"நாங்கள் நாயகம் (ஸல்) அவர்களின் திருச்சபைக்கு வந்தோம். அப்போது நான் நபியவர்களை நெருங்கி அவர்களின் திருக்கரத்தை முத்தமிட்டேன் "
(நூல் : தாரீகுல் கபீர் , பாகம் 8 , பக் 31 )

இமாம் புகாரி (ரஹ்) அவர்களைக் குறித்து கூறும் போது , " இமாம் முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ் (ரஹ் ) - (ஸஹீஹ் முஸ்லிமின் ஆசிரியர்) அவர்கள் இமாம் புகாரி (ரஹ்) அவர்களை வந்து சந்தித்த போது அவர்களை நோக்கி, " என்னை விட்டு விடுங்கள் .அதாவது தங்களின் முபாரக்கான பாதத்தை முத்தமிடுவதற்கு அனுமதியுங்கள் " என்று கேட்டனர்
- (அப்துல்ஹக் முஹத்தில் தெஹ்லவி (ரஹ்) அவர்கள் எழுதிய அஷ்அத்துல்லம் ஆத் பக் 9)

ர.ரா

No comments:

Post a Comment