ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Tuesday, 4 September 2018

முடிகளை கருப்பு நிறத்தால் சாயம் பூசலாமா?

கேள்வி :

*முடிகளை கருப்பு நிறத்தால் சாயம் பூசலாமா?*

*الجواب بعون الله*👇

"يستحب للنساء والرجال تغيير  الشيب بلون غير السواد ،
பொதுவாக ஆண்களாயினும் பெண்களாயினும் கருப்பு அல்லாத மற்ற நிறங்களை கொண்டு நரைத்த முடிகளை மாற்றிக்கொள்வதற்கு சாயம் பூசி கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு

صبغ الشيب سنة جاء بها الإسلام ، وتكون في شيب الرأس واللحية للرجال ، وللنساء في شعر الرأس .

ஆண்கள் நரைத்த தமது தாடியையும் பெண்கள் தங்களது நரைத்த  தலைமுடியையும் சாயம் பூசிக்கொள்வது நபி காட்டி தந்த வழிமுறையாகும்

عن أبي هريرة رضي الله عنه قال : قال النبي صلى الله عليه وسلم

: " إنَّ اليهود والنصارى لا يصبغون فخالفوهم " .  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தாடிகளுக்கும் தலைமுடிகளுக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை.

ஆகவே,  நீங்கள் அவர்களுக்கு மாறு செய்யுங்கள்

رواه البخاري ( 3275 )
ومسلم ( 2103 )

وعن أبي أمامة رضي الله عنه
قال : يا معشر الأنصار حمِّروا وصفِّروا وخالفوا الأعاجم .

அன்சாரி பெருமக்களே உங்களது முடிகளை செந் நிறத்தாலும் மஞ்சள் நிறத்தாலும்  சாயம் பூசிக் கொள்ளுங்கள் அந்நியர்களுக்கு எப்பொழுதும் மாற்றமாய் செயல்படுங்கள்

رواه أحمد ( 21780 ) .

والحديث : حسَّن إسناده الحافظ ابن حجر في " الفتح " ( 10 / 354 ) .

أما تغيير الشيب بالسواد فهذا حرام وهو قول جمهور العلماء يحرمونه تحريماً باتاً ،

فقد قال النووي ـ رحمه الله ـ في المجموع: 
والصحيح، بل الصواب أنه حرام

அதேசமயம் கருப்பு நிறத்தால் நரைத்த முடிகளை சாயம் பூசி கொள்வதற்கு பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் ஹராமுடைய ஹுக்மை  தருகிறார்கள்

وذلك لحديث الرسول صلى الله عليه وسلم لما رأى أبا قحافة ، يقول جابر :

" قال رسول الله صلى الله عليه وسلم لما رأى رأسه كأنها الثغامة بياضاً غيِّروا هذا .. " . واجتنبوا السواد

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூ குஹாஃபா, (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார்.

அவரது தலை முடியும், தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்.

கருப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்

رواه مسلم ( 2102 ) .

ولحديث : " يكون أقوام يخضبون بالسواد كحواصل الحمام لا يريحون رائحة الجنة ".
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

புறாவின் கழுத்தில் உள்ள (தூய கருப்பு நிறத்)தைப் போன்ற கருப்புச் சாயத்தைப் பூசிக்கொள்ளும் ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றும்.

அவர்கள் சொர்க்கத்தின் வாடையை கூட நுகர மாட்டார்கள்.

ஆக கருப்பு நிறத்தைத் தவிர்த்து நரை முடியை வேறு எந்த நிறத்தில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்று விளங்க முடிகிறது

رواه أبو داود ( 4212 )
والنسائي ( 5075 ) .

والحديث قال ابن حجر : إسناده قوي ،

" فتح الباري " ( 6 / 499 ) .

وقد خضب أبو بكر رضي الله عنه بالحناء والكتم .

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது, அவர்களுடைய தோழர்களிலேயே அபூபக்ர்(ரலி) அவர்கள் தாம் அதிக வயதுடையவர்களாக இருந்தார்கள்.

பிறகு, அபூபக்ர்(ரலி) தம் (தாடிமுடியை) மருதாணியாலும், 'கதம்' எனும் இலைச் சாயத்தாலும் தோய்த்து (நரை முடியை) மறைத்துக் கொண்டார்கள்.

அதனால் அதன் நிறம் கருஞ் சிவப்பாகியிருந்தது

رواه مسلم ( 2341 ) .

والكتم نبات باليمن يخرج الصبغ أسود يميل إلى الحمرة وصبغ الحناء أحمر فالصبغ بهما معا يخرج بين السواد والحمرة . "

மருதாணியும் கதமும் சரிசமமான அளவில் சாறெடுக்கப் பயன்படுத்தப்படுமாயின்,
அக்கலவை பூசப்படும் (வெள்ளை)நரையின் நிறம் கருஞ்சிவப்பாகிவிடும்.

மருதாணி இலை கூடிவிட்டால் இளஞ்சிவப்பாகும்;

கதம் கூடிவிட்டால் கருப்பாகிவிடும்

فتح الباري " ( 10 / 355 ) .

صبغ الصحابة بالكتم

نعم فعلوه وفعله رسول الله صلى الله عليه وسلم .

ஆக நபியவர்களும் நபித்தோழர்களும் கதம்  என்னும் இலைச்சாறு சாயத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்

عن عثمان بن عبد الله بن وهب قال :
دخلنا على أم سلمة رضي الله عنها
فأخرجت إلينا شعراً من شعر رسول الله صلى الله عليه وسلم مخضوباً ( أحمر ) .

உம்மு சல்மா ரழி அவர்கள் நபியின் ரோமத்தை காட்டியபோது அது சிவப்பு நிறத்தால் சாயம் இடப்பட்டதாக இருந்தது

رواه البخاري ( 5558 )  

زاد  ابن ماجه ( 3623 )
وأحمد ( 25995 ) : " بالحناء والكتم  " .

وقد قال رسول الله صلى الله عليه وسلم:

" إن أحسن ما غيرتم به الشيب الحناء والكتم " .
மருதாணி இலையாலும் கதம் என்னும் இலையாலும் நரைமுடியை நீங்கள் மாற்றிக் கொள்வது மிக அழகாய் இருக்கும் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள்

رواه الترمذي ( 1753 )
وأبو داود ( 4205 )
وابن ماجه ( 3622 ) .

والحديث : قال الترمذي عنه : حسن صحيح .

يلاحظ أن الأحاديث التي ذكرت الكتم جعلته مقروناً بالحناء

لأنَّ المراد بالأحاديث صبغ الشعر بالكتم مخلوطاً بالحناء .

يقول ابن القيم :  

إن النهي هو عن التسويد البحت
فأما إذا أضيف إلى الحناء شيء آخر كالكتم ونحوه فلا بأس به

فإن الكتم والحناء يجعل الشعر بين الأحمر والأسود ،

بخلاف الوسمة فإنها تجعله أسود فاحماً ، وهذا هو الصحيح .
ஆக மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் பார்க்கின்ற பொழுது பியூர் கருப்பு நிறத்தில் முடிகளுக்கு சாயமிட்டு கொள்வதற்கு அனுமதி இல்லை மாறாக கருஞ்சிவப்பு நிறத்தில் நரைமுடிகளை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி உண்டு என அறியமுடிகிறது

" زاد المعاد " ( 4 / 336)

தூயகருப்பு நிறத்தில் ரோமத்திற்கு மருதாணி வைப்பதும்  பெரும் பாவமாகும்

ஆனால் சிவப்பு நிறத்தில் மெஹந்தி மருதாணி வைத்துக் கொள்ளலாம்

அதேசமயம் அது தண்ணீரைப்போல இளகலாக இருக்க வேண்டும்,

முடிகள் வரை தண்ணீரை சேர்ப்பதற்கு அது தடையாக இருக்கக் கூடாது

ஆனாலும் அந்த தன்மைக்கொண்ட மருதாணியைக்கொண்டு தலைமுடிகளில் ஃபேஷனாக நிறம் பூசுவதும், அலங்கரிப்பதும் அது தவிர்க்கப்பட வேண்டிய விஷயமாகும்..

فتاوی رحیمیہ (7/146)

அதே போன்று முடிகளுக்கு கருப்பு டை அடிப்பது மிகப்பெரிய குற்றமும் ஹராமுமாகும்

فتاوی رحیمیہ (6/290)

*والله اعلم بالصواب ✍*

இளம் வயதில் நரைத்து விட்ட முடிகளை இயற்கை வழிகளில் கருநிறமாய் மாற்றிட சில டிப்ஸ் 👇

https://www.maalaimalar.com/amp/Health/Naturalbeauty/2016/09/15110254/1038991/Natural-ways-white-hair-to-turn-black.vpf

பதிவு 👇
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்

No comments:

Post a Comment