﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
🌼 *ஜுமுஆ குறிப்பு 27-07-18*🌼
🌹الصــلوة والسلام عليك يارسول الله ﷺ🌹
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
உலமா பெருமக்களுக்கான
பயான் குறிப்புத் தளம்
🌹🌹 *தலைப்பு-:-*
*"(கண்திருஷ்டி) பார்வைகள் படுத்தும் பாடு"*
🌸🌸 *தொகுப்பு:-*
*மௌலவி அல்ஹாபிழ் அ.முகம்மது வலியுல்லா அல்தாபி B.com..,MBA*
*தலைமை இமாம் இலுப்பூர் மதீனா பள்ளிவாசல், புதுகோட்டை மாவட்டம்*
*(தந்தை)*
*மௌலவி அல்ஹாஜ் M.அப்துல் மாலிக் ரஷாதி*
*பேராசிரியர்:-நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி, ஜங்ஷன் சேலம்*
https://jumuaamedai.wordpress.com/2018/07/25/கண்திருஷ்டி-பார்வைகள்-ப/
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
உலமா பெருமக்களுக்கான
பயான் குறிப்புத் தளம்
*For Youtube channel subscribe:-*
*நமது Youtube channel*
https://www.youtube.com/channel/UCdBAIdZfGHKWQUGxMMOFZ4w
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
*"(கண்திருஷ்டி) பார்வைகள் படுத்தும் பாடு"*
ஜூம்ஆ மேடை
JULY 25, 2018MOHAMMED VALIYULLA ALTHAFI B.COM.,M.B.A.
முன்னுரை
وَنُنَزِّلُ مِنَ الْـقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَۙ وَلَا يَزِيْدُ الظّٰلِمِيْنَ اِلَّا خَسَارًا
இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
(அல்குர்ஆன் : 17:82)
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ الْخَـنَّاسِ ۙ
–
(அல்குர்ஆன் : 114:4)
الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ
மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.)
(அல்குர்ஆன் : 114:4-5)
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 114:6)
பார்வை படுத்தும் பாடு
கல்லடி பட்டாலும் படலாம்! கண்ணடி படக்கூடாது! என்பர். அந்த கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுடிச்சி என்பர். கண்ணேறு என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர். பிறரோட பார்வை மட்டும் அல்ல நம்மோட பார்வையே கூட சில சமயம் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
கண்திருஷ்டி என்றால் என்ன?
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கண்திருஷ்டிக்கான விளக்கத்தைக் கூறும் போது தீய உணர்வுகள் கொண்ட ஒருவர் ஒரு நல்லவிடயத்தைப் பொறாமை உணர்வோடு அது நீங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு உற்று நோக்குவதே கண்திருஷ்டியாகும்.
அரபுப் பாஷையில் கண்திருஷ்டி ‘அய்ன்’ , ‘நழ்ரத்’ போன்ற பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றன. ‘நழ்ரத்’ என்பதன் அர்த்தம் பார்வை என்பதாகும். ‘அய்ன்’ என்பது கண்திருஷ்டியாகும்.
தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி அல்லது கண்ணேறு என்று கூறுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: புஹாரி 5740, 5944, இப்னுமாஜா 3506)
‘ஆந்தையினால் ஏதும் இல்லை, (ஆந்தை அலறுவதால் ஏதும் இல்லை) கண்ணேறு உண்மையாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாபிஸ் அத்தைமீமி (ரலி), நூல்: திர்மிதி 2140)
கண்திருஷ்டி எவ்வாறு ஏற்படுகிறது?
கண்ணேறு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘அது ஷைத்தானின் வேலையாகும்’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூது 3859)
கண்திருஷ்டி உண்டு என்பதற்கான குர்ஆனின் ஆதாரங்கள் :
(1) ومن شر حاسد إذا حسد
‘பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போது அவனின் தீங்கைவிட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.’
(ஸுரதுல் பலக் 113:5) இவ்வாறு அல்லாஹ் பாதுகாப்புக் கேட்குமாறு பணித்துள்ளான்.
இப்னு கய்யிம் (ரஹ்) அவர்கள்: ‘கண்திருஷ்டி படக்கூடியவர்கள் அனைவரும் பொறாமைக்காரர்களாகும், ஆனால் பொறமைக்காரர்கள் அனைவரும் கண்திருஷ்டி படக்கூடியவர்களல்லர்’ எனக் கூறுகிறார்கள். (தாதுல் மஆத் 4:167)
குழந்தைகள் கண்திருஷ்டியின் பாதிப்புகள்
குழந்தை என்றாலே அழுகு தான். அதனாலேயே குழந்தைகளுக்கு அவ்வப்போது திருஷ்டி ஏற்படும். இதனால் குழந்தைகள் சரியாக சாப்பிட மாட்டார்கள், தூங்க மாட்டார்கள், அவ்வப்போது சோர்ந்து விடுவார்கள். குழைதைகளுக்கு ஏற்பட்டிருக்கும் திஷ்டியை நீக்குவதற்கு பல வழிகள் உள்ளன
கண்ணேறு முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரையை உண்டாக்கும். அதற்கான ஆதாரம்.
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில் இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5739)
கண்திருஷ்டியினால் வியாதிகள், சுகவீனம் உண்டாகும் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.
கண்திருஷ்டியால் கடுமையாக பாதிப்படைந்த ஸஹாபி
ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளயே செல்லும்போது ஸஹல்பின் ஹனீஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் மக்காவை நோக்கி உடன் நடந்து வந்தார்கள். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குளித்தார்கள். மிக அழகிய உடல்கட்டும், வெண்மை நிறமுடைய ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடல் வனப்பைக் கண்ட பனீ ஆத்தி குழுவைச் சேர்ந்த ஆமிர் பின் ரபிஆ ரளியல்லாஹு அன்ஹு, ‘இன்றுபோல் என்றும் முடிப் பொதிந்த கட்டான தேகத்தைக் கண்டதில்லை’ என்று கூறியதுதான் தாமதம், ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்படியே மயக்கமுற்று விட்டார்கள்.
இவ்விஷயம் உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ‘நபியே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸஹல் (ரளியல்லாஹு அன்ஹு) தலை தூக்க முடியாமல் அவதியுறுகிறார். அவர் விஷயத்தில் ஏதேனும் உபாயம் உண்டா?’ என (அங்குள்ளவர்கள்) கேட்டார்கள்.
‘இது சம்மந்தமாக யாரையேனும் நீங்கள் சந்தேகிக்கிறீர்களா?’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவ ‘ஆம்! ஆமிர் பின் ரபிஆ தான் அவரைப் பார்த்தார்’ எனக் கூறப்பட்டதும், ‘உங்களின் சகோதரரை யாரேனும் எதற்காக கொல்ல வேண்டும்? உங்களை ஆச்சரியத்தில் அழ்த்திடவல்ல ஏதாவதொன்றை காண நேர்ந்தால் ‘பாரகல்லாஹ்’ என மொழிந்தால் போதாதா?’ என ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி சற்று கோபமாகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
பின் ஆமிர் பின் ராபிஆ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை, ‘ஸஹ்னுக்காக குளித்திடவும்’ என கட்டளையிட்டு, (அதன்பின்) ஆமிர் பின் ராபிஆ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் முகம், இரு கைகள், இரு முழங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் ஓரங்கள் ஆகிய உறுப்புக்களையும் அவர்களது ஆடையின் உள்ளேயும் கழுவப்பட்ட நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து, அந்த நீரை ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்புறத்திலிருந்து ஒருவர் தலையிலும், முதுகிலும் கொட்டி (தண்ணீர் பிடித்த) அப்பாத்திரத்தையம் தலைகீழாகக் கவிழ்த்துப் போடச் செய்தார்கள்.
இப்படிச் செய்ததும் ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எவ்வித தீங்குமின்றி, தன் பயணத்தை மற்றவர்களுடன் தொடர்ந்தார்கள்’ என்ற நிகழ்ச்சியை இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் அஹமதிப்னு ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் நஸாயி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் இப்னு ஹிப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹிஆகியோர் ரிவாயத்துச் செய்கின்றனர்.
விதியை மாற்றுவதை மாற்றும் வலிமை வாய்ந்தது கண்திருஷ்டி. அதற்கான ஆதாரம்.
‘அல்லாஹ்வின் தூதரே! ஜஃபரின் குழந்தைகளுக்கு அடிக்கடி கண்பட்டு விடுகிறது. அவர்களுக்காக நான் மந்திரிக்கலாமா? என்று அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்! விதியை வென்று விடக்கூடிய ஒன்று இருக்குமானால் கண்ணேறு அதை வென்றுவிடும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைத் பின் ரிபாஆ அஸ்ஸுரகீ (ரலி), நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா 3510, திர்மிதி 2136)
விதியை எதுவும் மாற்றாது, மாற்ற முடியாது. அப்படி ஏதாவது ஒன்று இருந்திருந்தால் அதை (அந்த ஒன்றை) இந்தக் கண்ணேறு மாற்றும், விதியை மாற்றாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
கண்திருஷ்டியிலிருந்து மீள்வது எப்படி?
‘ஃபலக், நாஸ் அத்தியாயங்கள் இறங்கும் வரை கண்ணேறு, ஷைத்தான் ஆகியவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்விரு வசனங்களும் இறங்கிய பின் அதை எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டு விட்டார்கள்’ என்று அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா 3511, திர்மிதி 2135)
ஓதிப்பார்த்தல்:
கண்திருஷ்டியிலிருந்து மீள்வதற்கு ஓதிப்பார்க்க அனுமதி உண்டு. அதற்குரிய ஆதாரங்கள்.
‘விஷகடி, கண்ணேறு, சிரங்கு ஆகியவற்றுக்காக மந்திரிக்க நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 2132)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீய விளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள் அல்லது எனக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5738, இப்னுமாஜா 3512)
ஓதிப்பார்க்கும் முறை:
நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வொரு இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல்ஹுவல்லாஹுஅஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின் னாஸ் ஆகிய (112,113,114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம் பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), நூல்: புஹாரி 5017)
நோயாளிக்கு பின்வரும் துஆக்களை ஓதுவதன் மூலமாகவும் நிவாரணம் தேடலாம்.
1.ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
أذهب البأس رب الناس ، اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك ، شفاء لا يغادر سقما ،
بسم الله أرقيك والله يشفيك من كل ما يؤذيك ،
أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك
நோய்க்காக ஓதிப் பார்க்கும் போது நோயாளிக்கு முடியுமாயின் அவரே ஓதிக் கொள்ளலாம். அல்லது வேறொருவர் அவருக்காக ஓதலாம். அதே போன்று ஓதிப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் நோயாளிகளின் உடம்பில் ஊதி விடுவதும் அனுமதிக்கப்பட்டதாகும். ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் யாரும் நோய்வாய்ப்பட்டால் (நோய், கண்திருஷ்டி போன்றவற்றை விட்டும்) பாதுகாக்கும் வசனங்களை ஓதி ஊதிவிடுவார்கள். அவர்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்த அவர்களின் நோயின் போது நான் அவற்றை ஓதி அவர்களுடைய கையில் ஊதி அவர்களுடைய கையினால் அவர்களுடைய உடம்பைத் தடவி விடுவேன்,(முஸ்லிம்: 2192 )
புகாரியின் ஓர் அறிவிப்பில் அவர்கள் நோயுற்ற போது அவர்களே ஓதி ஊதிக் கொள்வார்கள். அவாகளுக்கு நோய கடுமையான போது நான் அவர்களின் கையில் ஊதி அவர்களுடைய கையால் அவர்களின் மேனியைத் தடவி விடுவேன். ஏனெனில் அவர்களுடைய கை என்னுடைய கையை விட பரக்கத் அதிகமானதாகும். இதே போன்று தண்ணீர் போன்றவற்றில் ஓதி நோயாளிகளுக்கு வழங்குவதும் ஸலபுகளிடத்தில அறியப்பட்ட விடயமாகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் தண்ணீரில் மந்திரித்து நோயாளிகளுக்கு வழங்குவதில் எந்த குற்றத்தையும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற செய்தி முஸன்னப் இப்னு அபீ ஷைபாவில் 23975 பதிவு செய்யப்பட்டுள்ளது.
أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ، ومن كل عين لامة
அல்லாஹ்வின் பரிபூரண வார்த்தைகளைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தான், விச ஜந்துக்கள், பலிக்கும் ஒவ்வொரு கண்ணின் கெடுதிகளை விட்டும் பாதுகாப்பத் தேடுகிறேன். (புஹாரி 3371)
2. நபிகளார் (ஸல்) ஹஸன், ஹுஸைன் (ரலி) அவர்களுக்காக பாதுகாப்பத் தேடி பின்வரும் துஆவைஓதினார்கள்.
أعيذكما بكلمات الله التامة من كل شيطان وهامة ، ومن كل عين لامة
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள், ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். ‘அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் – என்று கூறுவார்கள்.
ஸஹீஹ் புகாரி 3371
முடிவுரை
இது ஒரு புறமிருக்க முஸ்லிம்களில் சிலர் கண்திருஷ்டி போன்றவைகளுக்காக பாதுகாப்பு தேடும் விதத்தில் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத சிர்க்குகள் நிறைந்த சில வார்த்தைகளைக் கொண்டும் இன்னும் சிலர் அந்நியர்களிடத்தில் சென்று மந்திரங்களைச் செய்யுமாறு வேண்டுவதையும் பார்க்கமுடிகின்றது. இது முற்றிலும் தவறானதும் அல்லாஹ்வின் கோபத்தை ஈட்டித் தரக்; கூடியதுமாகும். எனவே, நமக்கு வரக்கூடிய நோய்களுக்கு சரீஆ அனுமதித்த முறையில் நிவாரணம் தேடி அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ள அல்லாஹ் நமக்குத் துணை புரிவானாக!
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
No comments:
Post a Comment