﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
🌼 *ஜும்ஆ குறிப்பு 13-04-18*🌼
🌹الصــلوة والسلام عليك يارسول الله ﷺ🌹
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
உலமா பெருமக்களுக்கான
பயான் குறிப்புத் தளம்
🌹🌹 *தலைப்பு-:-*
*"அஹ்லுல் பைத் இமாம் ஜஃபர் சாதிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி"*
🌸🌸 *தொகுப்பு:-*
*மௌலவி அல்ஹாபிழ் அ.முகம்மது வலியுல்லா அல்தாபி B.com..,MBA*
*தலைமை இமாம் இலுப்பூர் மதீனா பள்ளிவாசல், புதுகோட்டை மாவட்டம்*
*(தந்தை)*
*மௌலவி அல்ஹாஜ் M.அப்துல் மாலிக் ரஷாதி*
*பேராசிரியர்:-நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி, ஜங்ஷன் சேலம்*
https://jumuaamedai.wordpress.com/2018/04/08/அஹ்லுல்-பைத்-இமாம்-ஜாபர்/
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
உலமா பெருமக்களுக்கான
பயான் குறிப்புத் தளம்
*For Youtube channel subscribe:-*
*நமது Youtube channel*
https://www.youtube.com/channel/UCdBAIdZfGHKWQUGxMMOFZ4w
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
*"அஹ்லுல் பைத் இமாம் ஜஃபர் சாதிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி"*
ஏப்ரல் 12 2018
ரஜப் பிறை 26 1439
அஹ்லுல்பைத் இமாம் ஜாபர் சாதிக் (ரஹ்) அவர்கள்

முன்னுரை
اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَـنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَـنَجْزِيَنَّهُمْ اَحْسَنَ الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ
ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.
(அல்குர்ஆன் : 29:7)
فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَهُمْ فِىْ رَوْضَةٍ يُّحْبَرُوْنَ
ஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.
(அல்குர்ஆன் : 30:15)
பாத்திஹா தினம்
ரஜப் மாதம் பிறை-22 ஹஜரத் இமாம் ஜாபர் சாதிக் ரலி கீர் பூர்ணம் பாத்திஹா -உலகெங்கும் ஓதப்படுகிறது.
ரஜப் பிறை-22 ஹஜரத் ஜாபர் சாதிக் ஒலியுல்லாஹ் கந்தூரி- பெரிய நெசவு தெரு, காயல் பட்டினத்தில் நடைபெறுகிறது.
ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் நணபர்களுக்கும் உணவழிக்கும் ஆற்றல் இருக்குமேயானால் உணவு ( பூரி) செய்து உறவினர்கள் ஒன்றிணைந்து யாசீன் ஒதி துஆ செய்து உணவு பரிமாற்றம் செய்வதால் மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை..
அமல்கள் என்ற அடிப்படையில் நன்மையை மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது.
பூரணம் பாத்திஹா பெயர் காரணம்
நிகாஹ் எனும் திருமணத்தில் பிரியாணி பிரபல்யம் ..
நோன்பு காலத்தில் கஞ்சியை நோன்பு கஞ்சி என்று பிரபல்யம்..
ஆனதை போன்று இமாம் ஜாபர் சாதிக் (ரஹ் ) அவர்கள் நினைவு தினத்தில் பூரி பிரபல்யம் ஆகிவிட்டது..
காலபோக்கில் பூரி பாத்திஹா என்றும் பூரணம் பாத்திஹா என்றும் அழைக்கப்படுகிறது
பொதுவாக பாத்திஹாவில் பெற்றோர்கள் வலிமார்கள் ஷூஹதாக்கள் முன்னோர்கள் பெயர் குறிப்பிட்டு துஆ ஓதப்படும் அதே போன்று ரஜப் 22-ல் அஹ்லுல் பைத் இமாம் ஜாபர் சாதிக் ( ரஹ்) அவர்கள் பெயர் குறிப்பிட்டு துஆ ஓதப்படும். அவர்கள் வரலாறு நினைவு கூறப்பட இந்த தினம் பயன் படுகிறது.
வரலாறு நினைவு படுத்துதல்
وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ
(நபியே!) இறைத்தூதர்களின் வரலாறுகளிலிருந்து நாம் எடுத்துக் கூறும் இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் எப்படிப்பட்டவை என்றால், அவற்றின் மூலம் நாம் உமது இதயத்தை உறுதிப்படுத்துகிறோம். மேலும், இவற்றில் உமக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவும் கிடைத்தது. இறைநம்பிக்கையாளர்களுக்கு இவற்றில் அறிவுரையும் நினைவூட்டலும் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 11:120)
பிறப்பு & சிறப்பு
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த 12 இமாம்களில் ஆறாவது இமாமான ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 83 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள்.
குடும்பம்
அஹ்லுல்பைத் இமாம் ஜாபர் சாதிக் (ரஹ்) அன்னையின் பெயர் உம்முபர்வா என்பதாகும். அவர்கள் ஸெய்யிதினா அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முகம்மதின் மகன் காஸமின் மகளாவார். காஸம் என்பார் ஸெய்யிதினா அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கின் மற்றொரு மகன் அப்துற்றஹ்மானின் மகள் அஸ்மாவை மணமுடித்தே உம்முபர்வாவை ஈன்றெடுத்தார்கள். தமது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு தம் தந்தையாம் இமாம் ஜைனுல் ஆபிதீன் அவர்களை வேண்டி நின்றனர் முஹம்மது பாகிர் அவர்கள். அக் குழந்தைக்கு ஜஃபர் எனும் அழகுத் திருப்பெயரை சூட்டி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் உண்மைக்கு உறைவிடமாய் விளங்கிய இவர்களின் திருப் பெயரோடு சாதிக் என்னும்(உண்மையாளர்) என்ற பெயரும் ஒருங்கிணைந்து உலகம் முழுவதும் பெயர் பெற்றது.
கல்வி
தம்முடைய சிறு வயதில் தம் அருமை பாட்டனார் இமாம் ஜைனுல் ஆபிதீன் அவர்களிடமே இறைவனின் திருமறையையும், நபிகளாரின் அருள்மொழிகளையும் கற்றுத் தேர்ந்தனர். இவர்களுக்கு 11 ஆண்டும் 10 மாதமும் எட்டு நாட்களும் நிறைவுற்ற போது இவர்களின் பாட்டனார் இமாம் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மறைந்தார்கள். இவர்களுக்கு இவர்கள் தந்தையே இறைஞான செல்வங்களை வாரி வாரி வழங்கினர். தமது 31வது வயதில் இமாமின் பீடத்தில் அமர்ந்த இவர்களின் புகழ் எட்டுத்திக்கும் பரவியது. இவர்கள் நடத்திவந்த கல்லூரியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கல்வி பயின்றனர்.
திறமை & ஆற்றல்
இவர்கள் பிற்காலத்தில் தம் இல்லத்தில் தனித்திருந்து இறைவணக்கத்தில் ஈடுபடவும், தம்மைக் காண வருபவர்களுக்கு அறபோதம் வழங்கவும் செய்து வந்தார்கள். விண்ணியியலிலும், மருத்துவ இயலிலும் , இரும்பைப் பொன்னாக்கும் கீமியா வித்தையிலும் இவர்கள் திறன் பெற்று விளங்கினார்கள். இவர்கள் பல நூல்கள் எழுதியுள்ளனர். இவர்கள் எழுதிய மார்க்கச் சட்டதிட்டங்கள் பற்றிய நூலே ஷியாக்களின் பிக்ஹு கலைக்கு மூல நூலாக அமந்துள்ளது. கனவு விளக்கம் பற்றி ஒரு நூலும் தொகுத்துள்ளார்கள். இதுமட்டுமில்லாமல் இவர்கள் கவிஞராகவும் விளங்கினர்.
ஆடையில் சூபிசம்
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர் இமாம் ஜாபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் ஆன்மிக பெரியார்கள் எல்லாம் இவ்வுலகில் குறைவான சுகத்துடனே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மெலிதான ஆடைகளை அணியாமல் முரட்டுத்தனமான ஸூஃப் என்று சொல்லப்படும் உல்லன் ஆடைகளையே அணிவார்கள். இதனால் தான், அவர்களுக்கு ஸூஃபியாக்கள் என்று சொல்லப்படுகிறது. பெரும் செல்வந்தராக இருந்த இமாம் ஜாபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதிக்கப் பட்ட உயர்ரக ஆடைகளே அணிவார்கள். அதைக் கண்ட ஒருவர் நீங்கள் ஆன்மிக பெரியாராக இருந்தும் இவ்வுலக சுகத்திற்கு ஆசைப்படுகிறீர்களே என்றார். அதற்கு இமாம் அவர்கள் அணிந்திருந்த சட்டையை கழட்டினார்கள். உள்ளே, முரட்டுத்தனமான உல்லன் ஆடையையே அணிந்திருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் எனக்கு செல்வத்தை அளித்திருக்கிறான் நான் எளிய ஆடையை அணிந்து சென்றால் என்னை ஏழை என்று நினைத்து யாரும் என்னிடத்தில் உதவி கேட்க மாட்டார்கள். நான் செல்வந்தர் என்று காட்டுவதற்காக வேண்டி நான் உயர்ரக ஆடைகளை அணிகிறேன். அதைப் பார்த்து, இவர் செல்வந்தர் என்று நினைத்து என்னிடத்தில் உதவி கேட்பார்கள். இவ்வுலகில் குறைவான சுகம் பெற வேண்டும் என்பதற்காக தான் முரட்டு ஆடையை உள்ளே அணிந்து இருக்கிறேன் என்றார்கள்.
மாணவர்களுக்கு அறிவுரை
தம் மாணவர்களை நோக்கி, ‘நீங்கள் பயபக்தியுடையவர்களாகவும், அமானிதத்தை நிறைவேற்றக் கூடியவர்களாகவும், மக்களிடம் நன்முறையில் பழகுபவர்களாகவும், சுருக்கமாகப் பேசக் கூடிய சன்மார்க்க பிரசாகர்களாகவும் திகழுங்கள்’ என்று கூறினர். அதற்கு மாணவர்கள், சுருக்கமாக கூறி மக்களின் மனதை எவ்வாறு தொடுவது?’ என்று கேட்டனர். அதற்கு இமாம் அவர்கள்’ நீங்கள் இறைகட்டளைக்கு பணிந்து நேர்வழியில் நடப்பின் அதிகமாகப் பேச வேண்டியதில்லை.உங்களின் செயலே பெரும் முழக்கம் செய்துவிடும். அதுவே பெரும் பிரகாசமாகிவிடும்’. என்று மறுமொழி கூறினர்.
இன்சொல்லும், இனிய பண்பும் வாய்க்கப் பெற்ற இவர்கள் தமக்கு தீங்கு செய்தவர்களுக்கும் நல்லதே செய்யும் பண்பு பெற்று விளங்கினர். தம் உறவினர் ஒருவர் தம்மை இழிவாகப் பேசிய போதும், அவர்களின் கஷ்டநிலைக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே உதவி செய்தனர்.
ஒருவர் வந்து தங்கள் சிறிய தந்தையின் மகன் தங்களை கண்டபடி ஏசுகிறான் என்று சொன்னார்கள். உடனே அவர்கள் இரண்டு ரக்அத் தொழுது இறைவனிடம், ‘இறைவனே நான் அவரை மன்னித்து விட்டேன். எனவே நீயும் அவரை மன்னித்துவிடுவாயாக! என்று வேண்டினர். இதுகண்டு அந்த நண்பருக்கு வியப்பு ஏற்பட்டது. இமாம் அவர்கள் அவரை நோக்கி, ‘நம்மை ஒருவர் ஏசிவிடின் அதற்கு நாம் எழுபது விதங்களில் நற்காரணங்களை கற்பிக்க வேண்டுமேயன்றி, அவரை நாம் திரும்பவும் ஏசி விடக் கூடாது. அதற்கு நற் காரணம் ஒன்றையேனும் நாம் காணவிடில் அதற்கு ஏதேனும் நாம் அறியாமல் நற்காரணம் இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று அருள்மொழி கூறினர்.
நாத்தீகனுடன் தஃவா
ஒருநாள் இமாம் அவர்கள் கப்பலோட்டி (நாத்தீகன்) ஒருவனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, ‘நீ உன் கடற்பிரயாணத்தில் எப்போதாவது சிக்கியுள்ளாயா? என்று வினவினர். அதற்கு அவன் ஆம்! ஒரு தடவை நான் சென்ற கப்பல் புயலில் சிக்குண்டு உடைந்து, கடலில் மூழ்கிவிட்டபோது கப்பலில் உள்ள அனைவரும் இறந்துவிட நான் மட்டும் தத்தளித்து ஒரு மரத்துண்டை பிடித்துக் கரை சேர்ந்தேன் என்று விரிவாக எடுத்துரைத்தான். கப்பல் உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணியிருந்தாய். ஆனால் அந்த கப்பல் மூழ்கியபோது,நீ பிடித்த மரத்துண்டு உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணினாய். அதுவும் உன் கையைவிட்டு நீங்கிய போது, நிர்கதியாய் நீ தவித்துக் கொண்டிருந்த போது, எவரேனும் காப்பாற்றினால்தான் உயிர் பிழைக்க இயலும் என்று நீ நம்பினாயா? என்று வினவினர். அவ்விதமே நம்பினேன் என்று அவன் மறுமொழி பகர்ந்தான். அதற்கு அவர்கள் அவனை நோக்கி, ‘ அந் நம்பிக்கை உனக்கு எதன் மீது இருந்தது? உன்னைக் காப்பாற்றுபவர் யார்? என்று வினவினர்.அவன் பதில் சொல்லமுடியாமல் வாய்மூடி இருந்தான். ‘நிர்க்கதியாயிருந்த நீ உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எதன் மீது நம்பிக்கை கொண்டாயோ, அவன்தான் அல்லாஹ்! அவனே உன்னைகக் காப்பாற்றியவனாவான்’ என்று இமாம் அவர்கள் சொல்லி வாய்மூடும் முன் அவன் கலிமா சொல்லி முஸ்லிமாக மாறினான்.
அபூஹனீபா (ரஹ்) அவர்களுடன் பிக்ஹ் ஆய்வு
ஒருநாள் இமாம் அவர்கள் தங்களின் இல்லத்தில் அமர்ந்திருக்கும்போது, அவர்களை சந்திக்க இருவுர் வந்தனர். வந்தவர்களில் ஒருவர் மற்றவரை இமாம் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும்போது ‘இவர்கள் இராக் நாட்டின் சட்டமேதைகளில் ஒருவர்’ என்று கூறி வாய்மூடும் முன் இமாம் அவர்கள் அவரை நோக்கி, ‘அப்படியா! பகுத்தறிவு ரீதியில் மார்க்கத்தை அணுகும் நுஃமான் இப்னு தாபித் தானே இவர்’ என்று வினவினர். ஆம் அதுதான் என் பெயர். மக்கள் என்னை அபுஹனீபா என்றழைப்பர் என்றனர். இமாம் அவர்கள் அபுஹனீபா அவர்களை நோக்கி பல்வேறு கேள்விகணைகளைத் தொடுத்தனர். அதற்கு அவர்களும் பதிலுரைத்தனர்.
இமாம் அவர்கள் கேட்ட கேள்விகளில் முக்கியமானவை: மூத்திரம், விந்து இவற்றில் எது மிகவும் அசுத்தமானது? என்று இமாம் அவர்கள் வினவ, இமாம் அபூஹனீபா அவர்கள் மூத்திரம் என்றனர். மூத்திரம் பட்டால் அந்த இடத்தை கழுவினால் போதும். ஆனால் விந்து வெளிப்படின் அந்த இடத்தை கழுவினால் மட்டும் போதாது. குளித்து சுத்தமாகவும் வேண்டும் என்று இருக்க, நான் பகுத்தறிவு ரீதியாக பதிலளித்தால் இதற்கு மாற்றமாக அல்லவா நான் தீர்ப்புக் கூறியிருப்பேன் என்று இமாம் அபுஹனீபா அவர்கள் கூறினர்.
பின்னர், ஆணிலும், பெண்ணிலும் வலுவறறவர் யார்? என்று இமாம் ஜஃபர் சாதிக் அவர்கள் வினவ, ‘பெண்’என்று இமாம் அபுஹனீபா விடை பகர்ந்தனர். சொத்துரிமையில் பெண்ணுக்கு ஒரு பங்கு, ஆணுக்கு இரண்டு பங்கு என்பதை மாற்றி, பெண் வலுவற்றவளாகயிருப்பதால் அவளுக்கே சொத்துரிமையில் இரு பங்கு கிடைக்க தீர்ப்பளித்திருப்பேன். ஆனால் நான் அப்படி செய்யவில்லை என்று இமாம் அபுஹனீபா அவர்கள் கூறினர். இவ்வாறு தொழுகை,நோன்பு பற்றிய விளக்கங்களை கூறினர். இதுகேட்டு மகிழ்ந்த இமாம் ஜஃபர் சாதிக் அவர்கள் மகிழ்ந்து இமாம் அபுஹனீபா அவர்களைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டனர்.
அன்னவர்களை அணுகி அறிவுரை பெற்று ஆன்மீகப் பரிபக்குவம் பெற்றவர்களில் சுல்hனுல் ஆரிபீன் பாயஜீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். நான் நானூறு ஆசிரியர்களை அணுகி ஆன்மீகக் கல்வி பயின்றுள்ளேன். ஆனால் நான் ஜஃபர் சாதிக் அவர்களை சந்திக்காவிடின் ஒரு முஸ்லிமாகி இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்கள்.
பாதிரியார்களிடம் தஃவா பணியில்
ஒரு முறை ஹஜ்ரத். இமாம் ஜாபர் சாதிக் رضي الله عنه அவர்கள் ஒரு ஊருக்கு போய்க்கொண்டு இருந்த போது, மாபெரும் கிறிஸ்தவ பாதிரிமார்கள் கூட்டம் நடந்து கொண்டு இருந்ததைப் பார்த்து, ஆர்வமிகுதியால் அங்குசென்றார்.
சுமார் ஆயிரம் பாதிரியார்கள் கலந்துகொண்ட கூட்டம்அது, முஸ்லிம் ஒருவர் வருவதை உணர்ந்த தலைமை பாதிரி, இமாம் அவர்களை அழைத்து அவர் முஸ்லிமா என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.
பின்னர் அவரிடம் இஸ்லாம் கூறும் சொர்க்கத்தின் அமைப்பில் தனக்கு மூன்று சந்தேகங்கள் இருப்பதாலும் அதனை இமாம் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டும்என்றும் கேட்டார். இமாம் அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.
1)முதல்சந்தேகம்.:-
சொர்க்கத்தில் ஒரு மரம் இருப்பதையும் அதில் அனைத்து சொர்க்கவாசிகளும் எவ்வளவு கனிகளைப் பறித்தாலும் கனிகள் குறைவதே இல்லை என்று உங்கள் மதம் கூறுகிறதே அது நம்பும்படியாகவா இருக்கிறது,,,,,,?
அல்லாஹ்வால் முடியம் என்றுகூறாமல், புரியும்படியாக தகுந்த சாத்தியங்களுடன் பதில் கூறுங்கள் என்றார் பாதிரி..! இமாம்அவர்கள் அமைதியாகக்கூறினார்கள்,
மிக எளிமையான பதில்தான்,, ஒருமெழுகுவர்த்தியில் எத்தனை மெழுகுவ்ர்த்திகளை ஒளி ஏற்றினாலும் முதல் மெழுகுவர்த்தியில் ஒளி குறைவதில்லையே,,, பாதிரியார் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்,,,,
2)அடுத்த கேள்வி,,,,,:- சொர்க்கத்தில் உள்ள சொர்க்கவாசிகள் எதை உண்டாலும் எவ்வளவு உண்டாலும் மலஜலம் கழிப்பதில்லையாமே அதெப்படி சாத்தியம்,,,,,,, இமாம் அவர்கள் பதிலளித்தார்கள் தாயின் வயிற்றிலிருக்கும் சிசுவுக்கும் உணவளிக்கப்படுகிறது அது மலஜலம் கழிக்கிறதா என்ன.
உலக உதாரணங்களைக் கொண்டு பதிலளிக்கப்படுவதில் தலைமை பாதிரிக்கு திருப்தி,,,,, முகத்தில் சந்தோஷம் ,,,,, சரி,,,
3)மூன்றாவது சந்தேகத்தையும் தீர்த்து வையுங்கள்:- சொர்க்கத்தில் ஒரு சுனை இருக்கிறதாமே,,,, அதில் அறுசுவை நீரும் கிடைக்குமாமே ஒரே சுனையில் அதெப்படி முடியும்,,,
இமாம் சொன்னார்கள்,,,,, மனிதனின் கண்ணீர் உவர்ப்பு,, உமிழ்நீர் இனிப்பு,,, சிறுநீர் காரம்,,, மலம் வேறு சுவை,,, இதெப்படிஒரே ஒரே உடலில் சாத்தியமோ அப்படித்தான் இதுவும்,,,,
பதில்களைக்கேட்ட அத்தனை பாதிரிகளுக்கும் ஆச்சர்யம், திருப்தி,,, சபையில் ஒரே ஆரவாரம். தலைமை பாதிரி கூறினார்,,,,,
”லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ்” அவ்வளவுதான்ஒருவர் பின் ஒருவராக ஆயிரம் பாதிரிகளும் ஈமான் கொண்டனர்,,,,,,,, இஸ்லாம் இப்படி இமாம்களாலும்,,,,,,,, இறைநேசர்களாலுமே பரவியது,,,,,,,,,, ”’அல்லாஹு அக்பர்”’.
அரசர்கள் பொறாமை
அப்பாஸியக் கலீபா மன்ஸூர் அவர்களுக்கு இமாம் அவர்களின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்டு அவர்கள் மீது வெறுப்பு ஏற்படலாயிற்று. அவர்களின் ஆதரவாளர்களில் சிலர் அப்பாஸியக் கிலாபத்தை எதிர்த்து புரட்சி செய்வதையும், ஈராக் மக்கள் ‘ஜகாத்’ பணத்தை சேகரித்து அவர்களுக்கு அனுப்பிவைப்பதையும் கண்டு மன்னர் பொறாமையால் வெந்து அவர்களை ஒழித்துக் கட்ட தீர்மானித்து, ஹிஜ்ரி 147ம் ஆண்டு ஹஜ் செய்ய மக்கா வந்தபோது ஹஜ் கடமையை முடித்துவிட்டு மதீனா நகரம் வந்தவுடன் இமாம் அவர்களை அழைத்து வர தம் அமைச்சர் ரபீஉவை அனுப்பினார். ஆனாலும் மன்னரால் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டதை நிரூபிக்க முடியவில்லை.
எனவே அவர்களின் மாண்பினைப் போற்றி, அவர்களுக்குப் பரிசுகள் கொடுத்து அனுப்பிவைத்தார். ஆனாலும் இமாம் அவர்கள் மீது மன்னர் கொண்ட குரோதம் நீங்கவில்லை. மதீனாவில் அமைதியாக வணக்கவழிபாடுகளில ஈடுபட்டிருந்த இமாம் அவர்களை பக்தாத் அழைத்து வரச் செய்தர். இமாம் அவர்கள் அரண்மனைக்குள் நுழைந்ததும், மன்னர் அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களின் வேண்டுகோள்படி மதீனாவிற்கே அனுப்பி வைத்தார்.
மன்னர் சொன்னதற்கு நேர் மாறாக நடந்து கொள்வது பற்றி அமைச்சர் ரபீஉ கேட்டபோது, இமாம் அவர்கள் அரண்மனைக்குள் நுழைந்தபோது அவர்களின் தலைமேல் பெரும் பாம்பு படம் எடுத்து என்னை எச்சரிக்கை செய்வது போல் இருந்ததை கண்டு மருண்டு விட்டேன் என்றார்.
பின்னர் ஒருநாள் ஒற்றர்படைத் தலைவன் முஹம்மது பின் சுலைமானை அழைத்து, அவன் காதோடு காதாக மன்னர் ஏதோ சொல்ல அவன் அடுத்த கணம் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான். பின் மதினா சென்று இமாம் அவர்களை அடிக்கடி சந்தித்து அறிவுரை கேட்கும் வழக்கமுடையவன் போல் மாறினான்.
வபாஅத்
ஒருநாள் ஹிஜ்ரி 148 ரஜப் பிறை 15 அன்று அவன் திராட்சைப் பழத்தை ஒரு தட்டில் கொண்டு வந்து அவர்களைத் அருந்தக் கேட்டுக் கொண்டான். அவர்கள் அதை ஒவ்வொன்றாக அருந்தினார்கள். அதன்பின் அவன் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான். விஷம் வைத்து கொடுக்கப்பட்ட அந்த பழம் உள்ளே சென்றதும் தனது வேலையை செய்ய ஆரம்பித்தது. தாம் நஞ்சூட்டப்பட்டதை அறிந்து, தமது முடிவு நெருங்கிவிட்டதை அறிந்து தமது மகன் முஸல் காளிமை அழைத்து அறிவுரை பகர்ந்தார்கள். தம் நண்பர்கள், மாணவர்களுக்கு நல்லுரைகள் நல்கி விடைபெற்றார்கள்.
அவர்கள் ஹஜ் செய்தபோது அணிந்த இஹ்ராம் துணி மற்றும் அவர்களிடமிருந்த இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைப்பாகைத் துணியையும் கொண்டு அவர்களுக்கு கபனிட்டு ஜன்னத்துல் பகீஃயில் அவர்களின் தந்தையார், பாட்டனார் ஆகியவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
அஹ்லுல் பைத்துகளை பற்றிய ஹதீஸ்கள்
قَالُوْۤا اَتَعْجَبِيْنَ مِنْ اَمْرِ اللّٰهِ رَحْمَتُ اللّٰهِ وَبَرَكٰتُهٗ عَلَيْكُمْ اَهْلَ الْبَيْتِ اِنَّهٗ حَمِيْدٌ مَّجِيْدٌ
வானவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் கட்டளை குறித்து வியப்புறுகின்றீரா? இப்ராஹீமின் குடும்பத்தாரே! உங்கள்மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய வாழ்த்துக்களும் பொழிந்து கொண்டிருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் பெரும் புகழுக்குரியவனாகவும், பெரும் மாட்சிமை உடையவனாகவும் இருக்கின்றான்.”
(அல்குர்ஆன் : 11:73)
“மனிதர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் எம்மிடம் மரணத்தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்க போகிறேன். நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல் குர்ஆன் அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்லுல் பைத்துகள் என்ற என் குடும்பத்தார்களாகும். அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்துகொள்கிறேன்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
(முஸ்லிம், மிஷ்காத் 567)
கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்கள் (செய்த) தாங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தாங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் (ஒரு) பிரசங்கம் செய்தார்கள். (அந்தப் பிரசங்கத்தில்) மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல்பைத் என்ற என்னுடைய பிச்சளங்களையும் விட்டுச் செல்கிறேன் என்று கூறியதை நான் செவியுற்றேன் என்று ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(திர்மிதி, முஸ்னத் அஹ்மத்,மிஷ்காத்)
ஸெய்யதுனா அபூதர் رضي الله عنه அவர்கள் கஃபாவின் வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள். “யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன்.
(மிஷ்காத் 573, ஹாகிம்: 2 – 343)
நட்சத்திரங்கள் விண்ணில் உள்ளோருக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. எனது அஹ்லுல் பைத்துகள் பூமியிலுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள். ஆகவே எனது அஹ்லுல் பைத்துகள் போய்விடுவார்களானால் பூமியிலுள்ளவர்களும் (அழிந்து) போய்விடுவர் என நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
உங்களுக்கு நான் இரண்டு கலிபாக்களை விட்டு செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் திருவேதம். அது வானத்திற்கும் பூமிக்கும் மிடையே நன்கு தொடர்புடையாதயிருக்கும். அடுத்து என்னுடைய வழித் தோன்றல்களான அஹ்லு பைத்துகள். அந்த இரண்டும் ஹவ்லுல் கவ்ஸரை வந்தடையும் வரை பிரிந்து விடாது.
(அஹ்மத்: 5 – 182)
என் மறைவுக்கு பிறகு என் குடும்பத்தார்களுக்கு நல்லவரே உங்களில் நல்லவர்.
என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருப்பது அஹ்லு பைத்துகள்
கியாமத்து நாள் வரை சங்கிலித் தொடராக வந்து கொண்டிருப்பார்கள் நாம் அவர்களை கண்ணியபடுத்த வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.
அஹ்லுல் பைத்துகளை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி
முஃமீன்களே! உங்களுக்கு மத்தியில் நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எத்திவைக்க வேண்டியதை எத்தி வைத்ததற்காக எவ்வித பிரதி பலனையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என்றாலும் எனது குடும்பத்தார்களாகிய அஹ்லுல் பைதுகளிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும். என்பதனை தான் உங்களிடம் கேட்கிறேன். என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். ( சூரா: 23)
எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், எவர் அஹ்லுல் பைத்துகளாகிய உங்களை அல்லாஹ்வுக்காகவும், அவன் ரசூளுக்காகவும் பிரியம் வைக்க வில்லையோ அவருடைய இதயத்தில் ஈமான் நுழையாது.
(திர்மிதி, மிஷ்காத் 570)
அல்லாஹ்வின் அன்பைப்பெற விரும்பினால் என்னை அன்பு வையுங்கள். எனது அன்பை பெற வேண்டுமானால் என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள்.
(திர்மிதி, மிஷ்காத் 573)
எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், அஹ்லுல் பைத்துகளே! நம்மை எவராவது கோபப்படுத்திவிட்டால் அல்லாஹ் அவரை கண்டிப்பாக நரகில் நுழைத்து விடுவான்.
(முஸ்தத்ரக்: 3 – 150)
உங்களின் குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களின் மீது ஒழுக்கம் கற்பியுங்கள். உங்கள் நபியின் மீது அன்பு வைத்தல், நபியுடைய குடும்பத்தார்கள் மீது அன்பு வைத்தல், குர்ஆன் ஷரீஃப் ஓதி வருதல் என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
(தைலமி)
இப்போது கூறப்பட்ட நபிமொழிகளின் படி நாங்கள் அஹ்லுல் பைத்துகளிடம் அன்பாக நடந்துக்கொண்டால்தான் அல்லாஹ்வின் அன்பை அடைய முடியும் என்றும் அவர்களை பற்றிப்பிடித்து நடக்க வேண்டும் என்றும் அதாவது அவர்களின் சொல், செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடக்க வேண்டும். என்றும் உணர்த்துகிறது.
தொழுகையில் அஹ்லுல் பைத்துகள் மீது ஸலவாத்’
“நாயகமே! நாங்கள் எங்களின் தொழுகையில் உங்கள் மீது ஸலவாத்து சொல்லும் போது எவ்வாறு சொல்ல வேண்டும்?” என்று ஸஹாபா பெருமக்கள் கேட்க, அதற்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் ஸலவாதே இப்ராஹிமாவை ஒதிகாட்டி தனது குடும்பத்தாரின் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்.
(முஸ்லிம்: 405 வது ஹதீஸ் விளக்கம்)
ஒருவர் நிரப்பமான கூலியை பெறவேண்டும் என்று விரும்பினால் அவர், “இறைவா! நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மீதும், முஃமீன்களின் தாய்மார்களான அவர்களின் மனைவிமார்கள் மீதும், அவர்களின் பிச்சிளங்களின் மீதும், அவர்களின் அஹ்லுல் பைத்துகளின் மீதும் ஸலவாத்து சொல்வாயாக. என்று கேட்க வேண்டும். (மிஷ்காத் 87) எனவே தொழுகையில் பெருமானார் மீது ஸலவாத்து சொல்லும்போது அவர்களின் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்ல வேண்டும். என்று ஏவப்பட்டுள்ளோம். இந்த கருத்தை சுட்டிக்காட்டும் விதமாக, “ரசூலுல்லாஹ்வின் அஹ்லுல் பைத்துகளே! உங்களை நேசிப்பதே ஒவ்வொரு முஃமினுக்கும் இறைவன் கடமையாக்கி இருக்கிறான். என்று இறை வசனம் இறங்கி இருப்பதும் உங்கள் மீது ஸலவாத்து சொல்லாவிட்டால் தொழுகையே இல்லை என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதும் தாங்களின் உயர்வுக்கு போதுமான ஆதாரமாகும்” என்று இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார்கள்.
சமைப்பதையும் தெரிந்து கொள்வோம் பூரணம் செய்ய தேவையானது
வறுத்த வெள்ளை எள் – 2 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் – 1/2 முடி
சர்க்கரை – 3/4 டம்ளர்
நெய் – 2 தேக்கரண்டி
முந்திரி, பாதாம் – 6
மாவு தயாரிக்க:
மைதா மாவு – 1/4 கிலோ
ரவை – 1 /4 கப்
சோடா உப்பு -2சிட்டிகை
உப்பு – 2 சிட்டிகை
வெண்ணை – 2 மேசைக்கரண்டி
பூரணம் செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொண்டு அதில் ரவை, சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து வெண்ணை உருக்கி ஊற்றி நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம் போட்டு வறுத்து விட்டு வெள்ளை எள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக சர்க்கரையை சேர்த்து வதக்கி இறக்கவும்
கலவை சற்று கெட்டியாக இருக்கும் போதே எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாத்தியாக தேய்த்து அதை எடுத்து சோமாஸ் செய்யும் அச்சியில் வைத்து அதனுள் செய்து வைத்திருக்கும் பில்லிங்கை வைத்து மூடி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து செய்து வைத்திருக்கும் சோமாஸை போட்டு பொரித்து எடுக்கவும்.
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
No comments:
Post a Comment