#மஹான்களின்
#தர்பார்சென்றால்
#எதைக்கேட்க
#வேண்டும்..?
~¤~¤~¤~¤~¤~¤
அலி-ரலி அவர்களிடம்
மார்க்கம் கற்றவர்...
ஹஸன் பஸரீ-ரஹ்
அவர்களின் சீடர்...
புளைல் இப்னு
இயால்-ரஹ்
இப்னுசீரீன்- ரஹ்
இவர்களின்
ஆன்மீக குரு
ஆகிய...
#மஹான்அப்துல்
#வாஹிதுரஹ்
அவர்களிடம்...
சில ஏழைகள்
வறுமையைச் சொல்லி அழுதனர்...
"சரி..
போய்வாருங்கள்..
உங்கள்
வீடு தேடி வரும்..!"
என்றார்கள்.
அந்த ஏழைகள்
சந்தோஷமாக
வீட்டுக்கு சென்றதும்...
ஆச்சரியப் பட்டார்கள்...!
"ஒவ்வொருவரின்
வீட்டிலும் வீட்டுக்கு தேவையான
பொருட்கள்
இருந்தன..!"
"யார் கொண்டு வந்து கொடுத்தார்கள்...?"
எனக் கேட்டதும்...
மஹான்
அப்துல் வாஹிது
அவர்களின் நண்பர் என
வீட்டிலுள்ளோர் சொன்னார்கள்..
நன்றி சொல்ல
எல்லோரும்
சென்றனர்...
ஆனால் வீட்டில்
மஹான் இல்லை..
மஹானின்
மனைவியார்
என்ன விஷயம்?
எனக் கேட்க
அந்த ஏழைகள்
விபரத்தைச் சொன்னார்கள்.
மஹானின் மனைவி
அழகாக சொன்னார்கள்..
"காமிலான வலியிடம்
அழிந்து போகும்
இவ்வுலகப்
பொருளையா
கேட்டீர்கள்..?"
"அழியாத
அல்லாஹ்வை
அல்லவா
நீங்கள் கேட்டிருக்க வேண்டும்..!"
"அல்லாஹ் கிடைத்து விட்டால்...
அல்லாஹ் படைத்த
எல்லாம் கிடைத்துவிடுமே..!"
என்றார்கள்.
No comments:
Post a Comment