ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு
Tuesday, 22 November 2016
ஒரு சமயம் கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார். “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட *மையை* தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் *தற்பெரு“மை“*யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ *பொறா“மை“*யில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலரோ *பழ“மை“*யில் தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை. இவற்றையெல்லாம் *அரு“மை“*யான எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். “ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில *“மை“கள்* உள்ளன. இவை என்ன தெரியுமா? *கய“மை“*, *பொய்“மை“*, *மட“மை“*, *வேற்று“மை“* ஆகியவைதாம். கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது. “எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய *“மைகள்“* என்னென்ன தெரியுமா? *நன்“மை“* தரக்கூடிய *நேர்“மை“*, *புது“மை“*, *செம்“மை“*, *உண்“மை“*. இவற்றின் மூலம் இவர்கள் நீக்க வேண்டியது எவைத் தெரியுமா? *வறு“மை“*, *ஏழ்“மை“*, *கல்லா“மை“*, *அறியா“மை“* ஆகியவையே. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள் *கட“மை“* யாகவும், *உரி“மை“ யாகவும்* கொண்டு சமூகத்திற்குப் *பெரு“மை“* சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார். கூட்டத்தில் கைதட்டலும் உற்சாக ஒலியும் விண்ணைப் பிளந்தன. படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்தேன். இந்த அரு *மை* யான நல்ல *மை* விசயத்தை உங்கள் நட்பு வட்டாரத்திற்கு பரப்பலாமே !!! 😉😉😉✨✨
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment