دون“தலைவலின்னு ஒரு நாள் லீவ் எடுத்தே… ஓ.கே! கால் வலிக்கு ஏன் ரெண்டு நாள் லீவ் கேக்கறே?”
“தலை ஒண்ணுதான் இருக்கு; ஆனா கால் ரெண்டு இருக்கே…”
“சரி சரி… பல் வலி வராம பார்த்துக்கோ!”😜😀.
ஜோக்ஸ் ::: மைக்ரோசாஃப்ட் சான்ஃபிரான்ஸிஸ்கோ கிளையின் புதிய மேலாளர் பதவிக்கான நேர்முகம். ஏறக்குறைய 10000 பேர் கூடியிருந்தனர். அதில் ஒருத்தர் நம் ரமேஷ் ரங்கசாமி. அனைவரும் பரபரப்பாய் இருக்க, நம்மாளோ ஐஃபோனில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். பில்கேட்ஸ் அறைக்குள் நுழைய, அனைவரும் வணக்கம் கூறி அமர்கின்றனர். பில்: வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஜாவா தெரியாதவங்க வெளியே போகலாம். 2000 பேர் வெளியேறுகின்றனர். ரமேஷ் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார். "எனக்கு ஜாவா தெரியாது. இருந்தாலும் இங்கு இருப்பதால் எனக்கு ஒன்றும் நட்டமில்லை. என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம்!" பில்: 100 பேர் உள்ள நிறுவனத்தை நிர்வாகம் செய்த அனுபவம் இல்லாதவர்கள் வெளியேறலாம். 2000 பேர் வெளியேற, ரமேஷ் முன்பு போலவே சொல்லி, தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறார். பில்: பொது நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெறாதவர்கள் வெளியேறலாம். தற்போதும் 2000 பேர் வெளியேற, ரமேஷ் மீண்டும் தனக்குத்தானே அதே பதிலைச் சொல்லிக் கொள்கிறார். இப்படியே எல்லோரும் வெளியேற, கடைசியில் ரமேஷும் இன்னொருவரும் மட்டும் இருக்கிறார்கள். பில்: முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய மொழி தெரியாதவர்கள் வெளியேறலாம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க, "உங்கள் இருவருக்கும் ஆதி காலத்து மொழி தெரியுமெனில் அதில் எனக்கு உரையாடிக் காட்டுங்கள்" என்றார் பில். ரமேஷ்: எந்த ஊரு மாப்ளே? இன்னொருவர் : திருச்சி பக்கம் மச்சி! =================================================== ஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவன் அருகே.. சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான்.! அவன் இந்தியனை எப்படியும்.. ஏமாற்றி பணம் பறித்து விட.. வேண்டும் என..எண்ணினான்..! இந்தியனிடம் மெதுவாக பேச்சை.. ஆரம்பித்தான்..! சீனன்;- " அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது.. நமக்குள் போட்டி வைத்து.. நேரத்தை கடத்துவோமா..?" இந்தியன்;- "வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை..! எனக்கு தூக்கம் வருகிறது..!" சீனன்;- "அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று..நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்..! மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய்..நீங்கள் எனக்கு தரவேண்டும்..! போட்டிக்கு இப்போது சம்மதமா..? இந்தியன்;- "நான் தான் போட்டிக்கு வரவில்லை என்று சொன்னே'னே.. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்..? நான் தூங்கப் போகிறேன்..! சீனன்;- (விடுவதாக இல்லை) "சரி.. இப்படி வைத்து கொள்வோம்.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று.. நான் தோற்றால்.. 500 ரூபாய் உங்களுக்கு நான் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால்.. 50 ரூபாய் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும்.. இப்போது சம்மதமா..?? இந்தியன்;- "சரி..சம்மதம்..!" சீனன்;- " போட்டியை முதலில் நான் தொடங்குகிறேன்..! நன்றாக கவனியுங்கள்.. நிலவுக்கும்.. பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு..?? இந்தியன்;- " தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..!" சீனன்;- "மகிழ்ச்சி நண்பரே..!" இந்தியன்;- "நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..?" சீனன்;- "கேளுங்கள்..!" இந்தியன்;- "ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள்.. இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும்.. அது என்ன விலங்கு..?? சீனன்;-( அதிர்ச்சியானான்.. நீண்ட நேரம் யோசித்து விட்டு ) "தெரியவில்லை..500 ரூபாயை பிடியுங்கள்..!" இந்தியன் ரூபாயை வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டு.. தூங்க ஆரம்பித்தான்..! சீனன்;- "ஏய்.. ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு.. கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும் விலங்கு எது..? இந்தியன்;- தெரியவில்லை..50 ரூபாயை பிடியுங்கள்..!! கொய்யால யார்கிட்ட....
🤣🤣🤣🤣🤣
மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது "யோகா". மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது "தியானம்"...
யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
தோளுக்கு மேல வளர்ந்தாச்சு !
இனி இவனை அடிக்க முடியாதுன்னு பெத்தவங்க மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றதுதான்
*திருமணம்*
😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
🤣மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்...
ஆனால்,
பெண் வீட்டில் பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்...!
ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க...
😎😎😎😎😎
உங்கள் கணவரை நேசியுங்கள்...!
🤣அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால்
உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம்...
🤣மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா...?
என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்...
🤣உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்...
🤣இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா...?
உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்...
🤣உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு
வாங்கி தரவில்லையா...?
உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்...
🤣உங்கள் கணவரை நீங்கள் நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை...
ஏனென்றால்...
கணவனை கொல்வது
சட்டப்படி குற்றம்...
🤣🤣🤣🤣🤣
கணவன் சோகமாக வீடு திரும்பினான்.
மனைவி: *"ஏன், என்ன ஆச்சு?"*
கணவன்: *"மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர"*
மனைவி: *"தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்"*
தொலைக்காட்சி: *"இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது"*
மனைவி: *"இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா?"*
No comments:
Post a Comment