ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Monday, 25 April 2016

காஜா முஈனுத்தீன் வம்சாவழி

وجه معين الدين  جدتى رحمه الله             அப்பாஸியக் கலீபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களின் வழித்தோன்றல்கள் மீது தாங்க இயலாத கொடுமைகளை செய்து வந்தனர். பக்தாத்தில் வாழ்ந்து வந்த அவர்களின் வழித்தோன்றல்களில் சிலர் இஸ்ஃபஹானில் வந்து குடியேறி வாழ்ந்து வரலாயினர்.  அந்நகரில் வாழ்ந்து வந்த அந்த குடும்பத்தைச் சார்ந்த காஜா செய்யிது அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார் செசெய்யிது கியாஸுத்தீன் அவர்கள் ஹழ்ரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிசாவழியில் தோன்றிய செய்யிது தாவூது என்ற பெரியாரின் அருமைத் திருமகள் உம்முல் வரா என்ற செய்யிதா மாஹினூரை மணமுடித்திருந்தனர். அவர்களுக்கு ஹிஜ்ரி 530 ஆம் ஆண்டு ரஜப் பிறை 14 (கி.பி.1116 ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள்) வெள்ளிக்கிழமை ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு முயீனுத்தீன் (இஸ்லாத்தை வலுப் பெறச் செய்தவர்) என்று பெயரிட்டு அருமைபெருமையாக வளர்த்து வந்தனர்.  ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் வழித் தோன்றல்களில் ஒருவராவார்கள்.  “மீர்ஆதுல் அஸ்றார்” என்ற நூலில் கூறப்பட்டபடி அவர்களின் வம்சவழி பின்வருமாறு’  ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி (ரலியல்லாஹு அன்ஹு)  ஹாஜா கியாதுத்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)  ஹாஜா நஜ்முத்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது அப்துல் அஸீஸ் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இப்றாஹீம் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இமாம் மூஸல் காழிம் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இமாம் ஜஃபர் சாதிக் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இமாம் முஹம்மது பாகர் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இமாம் ஜெய்னு லாப்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இமாம் அலி (ரலியல்லாஹு அன்ஹு)   

No comments:

Post a Comment