ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Friday, 7 April 2017

மண வாழ்க்கை மலர்ந்திட

*அண்ணலாரின் வருகை அகிலத்திற்கு ஓர் அருட் கொடை!*

- தொடர் 122

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🌝 ரிலாக்ஸ் மார்னிங் 🌞

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*மா நபியின் மகிழ்ச்சிகரமான மண வாழ்க்கை!*

உஸமாதுப்னு ஜைத் رضي الله عنه
அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின்
தூதர் صلى الله عليه وسلم  (சிறுவனாக
இருந்த)என்னை பிடித்து தமது
ஒரு தொடையின் மீதும், ஹசன் رضي الله عنه  அவர்களை பிடித்து
மற்றொரு தொடையின் மீதும்
அமர்த்திக் கொண்டு
இருவரையும் கட்டி அனைத்து இருவர் மீதும் நான் அன்பு
வைக்கின்றேன். யா!அல்லாஹ்
இவர்கள் மீது அன்பு
செலுத்துவாயாக. (புஹாரி)

அஸ்வத் பின் யஸீத் رحمة الله عليه  அவர்கள்
கூறுவதாவது நான் ஆயிஷா رضي الله عنها
அவர்களிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் வீட்டில் என்ன வேலை
செய்து வந்தார்கள் என்று கேட்டேன். நபி صلى الله عليه وسلم  அவர்கள் தம்
வீட்டாருக்காக வீட்டு வேலை செய்து வந்தார்கள். (புஹாரி)

பாத்திமா رضي الله عنها  அவர்களின்
வீட்டிற்கு பெருமானார் صلى الله عليه وسلم
அவர்கள் வந்தார்கள்.  வந்தவுடன்
பாத்திமா,  அலி رضي الله عنهما , ஆகிய
இருவரையும் பார்த்து
சொன்னார்கள்....

இரண்டு பேரில்
வேலை பார்த்து
கலைத்துள்ளவர்கள் அமர்ந்து
கொள்ளுங்கள் மீதம் உள்ள வேலைகளை நான் கவனிக்கிறேன் அலி رضي الله عنه
சொன்னார்கள்...  பாத்திமா தான்
அதிகம் வேலை செய்து
களைத்துள்ளார்கள் என்று கூறிய போது மகள் பாத்திமா رضي الله عنها  அவர்களை அமரச்செய்துவிட்டு
மீதம் உள்ள வேலைகளை
பெருமானார் صلى الله عليه وسلم அவர்கள்
கவனித்தார்கள்.

இன்றைய காலத்தில் உள்ள ஆண்களை கவனியுங்கள்...
டீ போட
சொன்னாலும் கோபம்
வந்துவிடும்.

மற்றொரு ஹதீஸில்
பெருமானார் صلى الله عليه وسلم  அவர்கள்
தங்களுடைய செருப்பை தாமே தைத்து
இருக்கின்றார்கள் கிழிந்துவிட்ட
ஆடையை தாங்களே தைத்து
உள்ளார்கள்.

*நல்லுறவும்,சுதந்திரமும்*

(இல்லதரசிகளுடன் நடந்து கொண்ட முறை)

ஆயிஷா رضي الله عنها  அவர்கள்
அறிவிக்கின்றார்கள் நபி صلى الله عليه وسلم
அவர்கள் தம் மனைவிமார்களில்
ஒவ்வொருவருக்கும் இரவையும்,
பகலையும் பங்கி்ட்டு
இருந்தார்கள். (புஹாரி)
இன்று மட்டும் அல்ல அன்றும் தம்
மனைவிக்காக நேரம் கொடுத்து பேசிய தலைவர்களை காண
முடியாது. தலைவர்களை
விடுங்கள் சாதாரண மனிதன் கூட தம் மனைவிக்காக வாரத்தில்
ஒரு நாள் ஒதுக்கி பேசுவதற்கு
நேரம் இல்லை. அப்படியே
விடுமுறை என்று வந்தாலும்
கம்ப்யூட்டர், டிவி. என்று நேரம்
போய்விடுகிறது.
ஒரே ஒரு
மனைவியுள்ளவரின் நிலை இது.
ஆனால்...  பெருமானார் صلى الله عليه وسلم அவர்கள் 11
மனைவி மார்கள்
இரண்டு அடிமைப் பெண்கள்
ஆகியோர்டத்தில் நல்ல முறையில்
நடந்து
அவர்களுக்கென்று நேரத்தை
ஒதுக்கி மதிப்புக் கொடுத்து பேசி
இருக்கின்றார்கள்.

சற்று கவனியுங்கள்...

பெருமானார் صلى الله عليه وسلم அவர்களுடைய
மஸ்ஜிதிற்கும்,
வீட்டிற்கும் பல தூதுவர்கள்
வருவார்கள் ஸஹாபாக்கள்,
விருந்தாளிகள் என்று பல நபர்கள்
வந்து சென்றும் நபியின்
மனைவிமார்கள் கோபம்
கொள்ளவில்லை
ஆத்திரப்படவில்லை.  காரணம் நபி صلى الله عليه وسلم அவர்கள்  மனைவிமார்களுக்காக
நேரத்தை கணக்கிட்டு பங்கிட்டு
உள்ளார்கள்.

என் கணவர் அபூஸர்உ எத்தகையவர்
தெரியுமா ஆபரணங்களை அவர்
என் காதுகளில் ஊஞ்சலாடச்
செய்திருக்கிறார் ஆசையாக
உணவளித்து என்
கொடுங்கைகளை கொழுக்கச்
செய்துள்ளார் நான் உண்டாலும்
பருகினாலும் பெருமிதப்படும்
அளவிற்கு உண்ணுகிறேன்
பருகுகிறேன்...  நபி صلى الله عليه وسلم  அவர்கள்
சொன்னார்கள் உம்முஸர்விற்கு
அபூஸர்உ எப்படியோ உனக்கு
நானும் அன்பாக இருப்பேன்.
(புஹாரி)

மேலே கூறப்பட்ட ஹதீஸ் புஹாரி
தமிழ் பாகம் 6-5189 நீண்ட ஹதீஸ்
ஒருமுறை முடிந்தால்
படித்து பாருங்கள்
பெண்களின் உணர்வுகளை
புரிந்து கொள்ளலாம்...

பெருமானார் صلى الله عليه وسلم  அவர்கள்
பதினொரு பெண்கள் பேசிய இந்த
சம்பவத்தை ஆயிஷா رضي الله عنها
அவர்களிடம் உம்முஸர் இற்கு
அபூஸர்உ எப்படி இருந்தாரோ
அப்படியே நானும் உன்னிடம்
நடந்து கொள்கிறேன் என்று
கூறினார்கள்.

புஹாரி ஹதீஸ் நேரடியாக
பார்க்கும் போது ஆயிஷா رضي الله عنها
அவர்கள்தாம் பதினொரு பெண்கள்
பேசியதை நபி صلى الله عليه وسلم
பெருமானாரிடத்தில்
சொல்லியதாக தெரிகிறது.

இஷாவிற்கு பிறகு பேசுவது மக்ரூஹ் என
உலமாக்கள்
கூறுகின்றார்கள்.  காரணம்
சீக்கிரம் தூங்கி விரைவாக
தொழுகைக்கு எழ வேண்டும்
என்பதற்கு!
ஆனால் மேலே
கூறப்பட்ட ஹதீஸை வைத்து கணவன்
மனைவி பேசுவதில்
மக்ரூஹ் இல்லை என உலமாக்கள்
கூறுகின்றார்கள்.
இன்றைய நவீன காலத்தில்
கணவனோ மனைவியோ
பேசுவதில் ரசனை காண்பது மிகக்
குறைவு!  ஆனால்
நபியவர்களோ ஆயிஷா  رضي الله عنها
அவர்களை பார்த்து ஆயிஷா
ஏதாவது பேசுங்கள் என்று
கூறுவார்கள்.
இரண்டாவது விஷயம் நல்ல
ஆபரணங்களையும் நல்ல உடைகளையும்
தானே வாங்கி
கொடுப்பதாகவும் சொல்லி
அதை அணியவும் அனுமதி
கொடுத்துள்ளார்கள் .

புஹாரி ஹதீஸில் ஒரு நீண்ட
ஹதீஸ் பதிவாகி உள்ளது.
சுருக்கமாக எழுதுகின்றேன்.
ஆயிஷா رضي الله عنها  கூறுகின்றார்கள்.
என்னிடத்தில் சிவப்பு நிற ஆடை ஒன்று
இருந்தது.  மதினாவில்
புதிதாக திருமணம் செய்யப்பட்ட
பெண்கள் என்னுடைய அந்த சிவப்பு
ஆடையை இரவலாக
வாங்கி செல்வார்கள் (அந்த அளவிற்கு மிக
அழகான ஆடை அது)

*அண்ணலாரின் வருகை அகிலத்திற்கு ஓர் அருட் கொடை!*

- தொடர் 124

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🌝 ரிலாக்ஸ் மார்னிங் 🌞

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*மா நபியின் மகிழ்ச்சிகரமான மண வாழ்க்கை!*

*நபிகளாரின் குடும்ப*
*வெளி வாழ்க்கை!*

அபீசினியர்கள் தம் ஈட்டிகளால்
வீரவிளையாட்டு விளையாடிக்
கொண்டிருந்தார்கள்..
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் என்னை மறைத்தபடி இருக்க நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நானாக திரும்பிச்
செல்லும்வரை!
வயது குறைந்த இளம்பெண் எவ்வளவு நேரம் கேளிக்கை
விளையாட்டுக்களை கேட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டு
இருப்பாள் நீங்கள் மதிப்பிட்டுக்
கொள்ளுங்கள். (புகாரி)

மனதையும் உள்ளத்தையும்,
ஆரோக்கியத்தையும்
கெடுக்கக்கூடிய ஆபாசமான ஆடல் பாடல்களையே இன்றைய சமுதாயம் பார்த்து கெட்டு
போகின்றது.
ஆனால் நபி அவர்கள்
ஆயிஷா அவர்களுக்கு வீர விளையாட்டை பார்ப்பதற்கு அனுமதி அளித்தார்கள்.  மற்றொரு விஷயம் யாதெனில் ஆயிஷா رضي الله عنها அவர்கள்
கூறுகின்றார்கள் நான்
இளம் பெண் எவ்வளவு நேரம்
பார்த்திருப்பேன் என்பதை
மதிப்பீட்டுக் கொள்ளுங்கள்.
மற்றொரு ஹதீஸில் ஆயிஷா رضي الله عنها
போதுமா பார்த்தது என்று கேட்டதற்கு இன்னும் என்பதாக
வந்துள்ளது.
நாம் மனைவியை
கடற்கரைக்கோ அல்லது
ஆகுமாக்கப்பட்ட
சுற்றுப்பயணத்திற்கோ அழைத்து சென்றால் மனைவிக்கும்
குழந்தைக்கும் இயற்கை காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கு
அனுமதி கொடுக்க வேண்டும்.
இன்றைய நிலை ஒரு பொருளை மனைவி பார்த்து ரசித்து நல்லா
இருக்குது என்றால் ஆமா என்ன நல்லா இருக்கு என்ற சடைவுகள்
இன்று அதிகம்.

ஆயிஷா رضي الله عنها  அவர்கள்
கூறுகி்ன்றார்கள்...  நானும்
பெருமானாரும் ஒரு
பிரயாணத்தில் இருந்தோம். கால்
நடையாக நானும்
பெருமானாரும் ஓட்டபந்தயம்
நடத்தினோம்...

என்ற நிகழ்ச்சி ஏற்கெனவே நம் பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

உலகத்தலைவரின் குடும்ப
வாழ்க்கையை கவனியுங்கள்...
மனைவியோடு ஒன்றாக சாப்பிடுவது தேவைக்கு வெளியே செல்வது வெட்கமாக
இருக்கின்றது பலருக்கு ஆனால்,
பெருமானார் صلى الله عليه وسلم  அவர்கள்
ஓட்டபந்தயம் நடத்தி உள்ளார்கள்.
“ஒரு ஸஹாபி
பெருமானாரிடத்தில் வந்தார்.
நாயகமே என்னுடைய
விருந்தளிப்பை ஏற்று என் வீட்டுக்கு வாருங்கள்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கேட்டார்கள்...
நானும்
ஆயிஷாவுமா?

இல்லை. நீங்கள்
மட்டும்!

அப்படியென்றால் நான் வரவில்லை . அவர்
சென்றுவிட்டார் மீண்டும் வந்தார். நாயகமே விருந்தை
ஏற்றுக் கொள்ளுங்கள் நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கேட்டார்கள்...
என் மனைவி
ஆயிஷாவுமா இல்லை என்றார்.
மூன்றாவது முறையாக வந்து
கேட்ட போது நீங்களும்
ஆயிஷாவும் விருந்துக்கு வாருங்கள் என்றார்”

“நபி صلى الله عليه وسلم  அவர்கள் தம்முடைய
மனைவியை விருந்துக்கு
அழைத்துச் சென்றார்கள் .”
(முஸ்லீம்)

ஹூதைபிய்யா உடன்
படிக்கையின் போது
ஸஹாபாக்கள் நாயகமே ஏன்
காபிர்களுக்கு நாம் அடிபணிய வேண்டும்?  எதிர்த்து போர் செய்து மக்காவிற்குள்
செல்வோம் என்றார்கள்.
பெருமானார் صلى الله عليه وسلم  அவர்களுடைய
கட்டளையை தலைமீது வைத்து
மதிக்கும் ஸஹாபாக்கள்
மக்காவுடைய பற்றின்
காரணமாக நபியுடைய
சொல்லுக்கு அடிபணிய சற்று
தயங்கி நின்றன.
அச்சமயம் நபி صلى الله عليه وسلم  அவர்கள் உம்மு ஸல்மா رضي الله عنها  அவர்களிடத்தில்
ஆலோசனை செய்து ஏற்று நடந்து கொண்டார்கள்.
ஸஹாபாக்களும் உடனே நபி صلى الله عليه وسلم அவர்களைப் பின்பற்றி
செயல்பட்டார்கள்.
நபி அவர்கள்
மனைவியரிடத்தில் மஷ்வரா
செய்வார்கள் நாமும் மனைவி
இடத்தில் மஷ்வரா செய்தால் நம்மீது அவர்கள் மதிப்பு
கொடுப்பார்கள் அவர்களுக்கு
தேவை என்று வரும்போது
நம்மிடம் மஷ்ரா ஆலோசனை
செய்வார்கள்.
கணவன்  மனைவி
உள்ளங்கள் ஒன்றுபடும் போது
அல்லாஹ்வுடைய உதவி வரும்.
கைசேதம் ஏற்படாது.

கிண்டலாக ஒரு பழமொழி
உள்ளது...
பெண் புத்தி பின்புத்தி!
இதனுடைய சரியான விளக்கம்....
பின்னால் வரக்கூடிய நல்லது கெட்டதை புரிந்து நல்ல
முறையில் பெண்கள்
செயல்படுவார்கள்.  மஷ்வராயின்
முடிவு ஆண்கள் தான் செய்ய வேண்டும்.
நபிகளாரின்
தனித்தன்மைகளில் சில விருந்தாளிகள் மஸ்ஜிதுன்
நபவிக்கு வந்தால் நபி صلى الله عليه وسلم   அவர்கள்
முதலாவதாக தம்முடைய
வீட்டில் உணவு ஏதும் உள்ளதா என்று விசாரித்துவர
சொல்வார்கள்.
பெருமானார் صلى الله عليه وسلم அவர்களுடைய
மனைவி கதீஜா رضي الله عنها  அவர்கள் தீனுக்காக
இஸ்லாத்திற்காக அள்ளி வாரி
வழங்கிய செல்வம்
எண்ணிலடங்காது.
ஸஹாபாக்கள் நபி صلى الله عليه وسلم
அவர்களிடம் மனிதர்களிலேயே
உங்களுக்கு பிரியமானவர் யார்
என்று கேட்டார்கள். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் என் மனைவி ஆயிஷா என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்கள் மீது
முனாபிக்கீன்கள் அவதூறை
பரப்பிய போது நபி அவர்கள்
அடைந்த வேதனை சொற்களால்
சொல்ல முடியாத ஒன்று. இந்த நிகழ்ச்சியும் முன்பு குறிப்பிட்டிருந்தோம்.

அவதூறு பரப்பிய பிரச்சனை ஒரு
மாதத்திற்கு
இந்த சம்பவம் எதனை எடுத்து
சொல்கின்றது என்றால் தனக்கு
பிரியமான மனைவி மீது இவ்வளவு
பெரிய வதந்தியை
வீட்டிலோ அல்லது
குடும்பத்தில் மட்டுமோ இல்லை
மாறாக ஊர் முழுவதும்
முனாபிக்கீன்கள் பரப்பி விட்டும்
கூட பெருமானார் صلى الله عليه وسلم அவர்களும்
அவர்களின் மனைவி
ஆயிஷா رضي الله عنها  அவர்களும்
நிதானத்தை கடைபிடித்தார்கள்.
வெற்றி கண்டார்கள்.  குடும்ப வாழ்க்கையில்
மேலும் அதிகமான
சந்தோஷத்தை
பெற்றார்கள்.

ஒரு முறை பெருமானார் صلى الله عليه وسلم அவர்கள் வீட்டில்
அமர்ந்த வண்ணம்  ஆயிஷா رضي الله عنها
அவர்கள் பெருமானார் صلى الله عليه وسلم
அவர்களையே இடை இடையே
பார்க்கின்றார்கள் உடனே
கூறினார்கள்...  நாயகமே யூசுப் عليه السلام அவர்களின்
அழகை பார்த்து
விரலை வெட்டிக்
கொண்ட பெண்கள் உங்களை
கண்டிருந்தால் பார்த்தால் அவர்கள்
அவர்களுடைய உள்ளங்களையே
இதயங்களையே மறந்து குத்தி
இறந்து போய் இருப்பார்கள்.
எவ்வளவு அழகாக நீங்கள்
இருக்கின்றீர்கள். (மீஸ்காத்)

அல்லாமா குர்துபி رحمة الله عليه  அவர்கள்
கூறுகின்றார்கள் பெருமானார் صلى الله عليه وسلم  அழகு முழுவதும்
அவர்களின் மேனியில் அல்லாஹ்
காட்டிவிட்டால் நபி صلى الله عليه وسلم  அவர்களை
மனிதர்கள் யாரும் நேரடியாக
பார்க்க முடியாது
போயிருக்கும்.  அல்லாஹ்விடம்
நெருக்கமானவர் வலியுல்லாஹ்
ஒருவர் கூறுகின்றார்.
கணவன்,மனைவி தம்பதிகள்
தங்களுக்குள்ளே பார்த்து ரசித்துக்
கொண்டால் அல்லாஹ்
அவர்களின் அழகை இருவருக்கும்
அதிகப்படுத்திவடுகின்றான்.

ஸஃபிய்யா رضي الله عنها
இயற்கையாகவே தயாள குணம்
கொண்டாவர்கள்.  நன்றாக ருசியான
சமையல் செய்ய
தெரிந்தவர்கள். ஒரு முறை நபி صلى الله عليه وسلم ஆயிஷா رضي الله عنها  அவர்களுடன்
வீட்டிலே இருக்கின்றார்கள்.
ஸஃபிய்யா رضي الله عنها  அவர்கள் தாம்
செய்த உணவை ஆயிஷா رضي الله عنها
இருக்கும் வீட்டிற்கு
பெருமானாருக்காக அனுப்பி
வைத்தார்கள். பணிப்பெண்
கொண்டு வந்து கொடுத்த போது  கீழே
தட்டிவிட்டார்கள் பாத்திரம்
உடைந்து உணவு பொருள் கீழே
கொட்டிவிட்டது, நபி صلى الله عليه وسلم
அவர்கள் முன் வந்து கீழே விழுந்த
உணவை சேகரித்து உடைந்த
தட்டை ஆயிஷா رضي الله عنها  அவர்களிடம்
கொடுத்து ஆயிஷா
இதற்கு பதிலாக மற்றொரு
தட்டை அனுப்பி விடுவாயாக
என்று அமைதியாக
கூறினார்கள்.
பல சந்தர்ப்பத்தில்
ஸஃபிய்யா رضي الله عنها  உணவை
அனுப்புவது வழக்கம்.  அன்றைய
தினம் ஆயிஷா رضي الله عنها அவர்களுக்கு
கோபம் வந்து விட்டது.
(ஹயாதுஸ்
ஸஹாபா)

தம்முடைய மனைவியர்களுக்கு
மத்தியில் சிறிய பிரச்சனைகள்
ஏற்படும் போது பெருமானார் صلى الله عليه وسلم அவர்கள்
அன்பின் சிகரமாக
இருந்து அமைதியுடன்
செயல்பட்டு மனைவியர்களுடன்
அன்புடன் செயல்பட்டார்கள்
என்பதை இந்த ஹதீஸ்கள் சம்பவங்கள் நமக்கு  தெளிவுபடுத்துகின்றன.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி

கடலங்குடி.

9715394186

9688781800.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

97153 94186

9688781800.

ஒரு கற்பனை! ஒரு நிஜம்! ஒரு படிப்பினை!

▪ கற்பனை : அது ஒரு வறுமையில் வாடும் முஅத்தின் (தொழுகைக்கு அழைப்பு விடுப்பவர்) குடும்பம். பள்ளிவாயிலில் பாங்கு சொல்லி விட்டு, பல வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் உணவுகளைப் பகிர்ந்து சாப்பிடும் நிலை. ஓட்டு வீட்டில் சின்ன கைமேசையில் அன்று வசூலித்த ஊர் வரியை கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார் முஅத்தின்.

வறுமையால் தயாரிக்கப்பட்ட, பால் கலக்காத டிகாஷன் காஃபியைக் கொண்டு வந்து நீட்டினார் அவருடைய மனைவி. முஅத்தின் கீழே வச்சுட்டுப் போ என்று சாடை காட்ட, அவர் அதைத் தரையில் வைத்து விட்டு உள்ளே போனார்.

ஏதோ ஒரு அதிசயத்தைக் கண்டு விட்டு, அதைத் தன் வாப்பாவிடம் சொல்ல ஆவலுடன் ஓடி வந்தாள், அவருடைய நான்கு வயது மகள். காஃபியைக் கவனிக்கவில்லை. கால் பட்டுக் கொட்டி விட்டது. பயத்தில் அப்படியே நின்று விட்டாள். வாப்பா என்ன சொல்வாரோ என்று நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அந்தக் காஃபி, நம்ம வீட்டில் கொட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? (ஒரு சிறு கற்பனைதான smile emoticon:)

'சனியனே! அங்க என்ன கொள்ளை போகுதுன்னு போற... உன்னாலதான் காஃபி கொட்டிப் போச்சு' என்று நம் மனைவி மீது, நாம் சுடும் வார்த்தை களைக் கொட்ட,

'இவுரு பெரிசா சம்பாரிச்சுக் கிழிக்கிறாரரு... உடனே காஃபியக் குடிச்சா என்னவாம்' என்று நம் மனைவி, நம்மீது கடும் வார்த்தைகளைக் கொட்ட,

இரண்டும் நடக்காவிட்டால், நாமும் நமது மனைவி யும் நீதிபதியாக மாறி, 'எல்லாம் இந்த சனியனால வந்ததுதான்' என்று பிள்ளை மீது வார்த்தைக ளைக் கொட்ட,

ஒரு சொம்புத் தண்ணீர் ஊற்றிக் கழுவி விட்டால், காணாமல் போய் விடக்கூடிய காஃபிக் கொட்ட லுக்கு, கழுவவே முடியாத அளவுக்கு பெரும் வார்த்தைக் கொட்டல்களே அங்கே அரங்கேறி இருக்கும் இல்லையா?

ஆனால், அந்த முஅத்தின் வீட்டில் நடந்தது என்ன தெரியுமா உங்களுக்கு..?

காஃபி கொட்டிய கவலையை விட, கொட்டியதால் குழந்தை பயந்து நடுங்குறாளே என்று கவலைப் பட்ட முஅத்தின், 'அதை விடுடா கண்ணு...போனால் போகுது...ஆமா, ஏதோ சொல்ல வந்தியேடா, அத முதல்ல சொல்லு' என்று ஆறுதல் சொல்ல,

'இல்ல வாப்பா...காஃபியை நான்தான் கொட்டிட்
டேன். தப்பு என்னோடதுதான்...நான் பாத்து வந்து ருக்கணும்' என்று தவறைத் தன் பக்கம் மகள் திருப்ப,

'சேச்சே...வாப்பா நான்தான் தப்பு பண்ணினேன். உம்மா காஃபி கொடுத்ததும், நான் குடிச்சிருந்தா அது கொட்டியிருக்குமா, தப்பு என்னோடதுதான்' என்று முஅத்தின் சொல்ல,

உள்ளே இருந்து பதறியபடி வந்த உம்மா, 'அடடா, காஃபிய நீங்க குடிச்சுட்டு கொடுக்கிற வரைக்கும் நின்னு, வாங்கிட்டுப் போயிருக்கணும்...எனக்கு என்ன அவசரம் வந்தது...அதனால தப்பு என்னது தான்' என்று தப்பை தன் மீது போட்டுக் கொள்ள கொட்டப்பட்ட காஃபியே அங்கே புல்லரித்து நின்றது.

இது எந்த ஊரில் நடந்தது,
எந்தத் தெருவில் நடந்தது,
எந்த வீட்டில் நடந்தது,
அந்த வீட்டு எண் என்ன,
அந்த வாப்பா, உம்மா, மகள் யாரு

என்று பரபரத்து கேள்வி கேட்பதை விட, ஏன், அந்த வாப்பாவும் உம்மாவும் மகளுமாக நாம இருக்கக் கூடாது..? தயவு கூர்ந்து யோசியங்கள்!

▪ நிஜம் : ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது துணைவியருள் ஒருவரின் இல்லத்தில் தங்கி இருந்தார்கள்.

நபியவர்களுடைய மற்றொரு துணைவி ஒருவர், ஆசையுடன் உணவுப் பண்டம் தயாரித்து, அதை ஒரு தட்டில் வைத்து, நபியவர்களுக்காக தமது பணியாளர் ஒருவரிடம் கொடுத்தனுப்பினார்.

அப்போது நபியவர்கள், எவருடைய வீட்டில் தங்கி யிருந்தார்களோ அந்தத் துணைவி, ரோஷத்தில் அந்தப் பணியாளரின் கையில் இருந்த தட்டை, வேகமாகத் தட்டிவிட்டார். அது கீழே விழுந்து உடைந்துவிட்டது.

உடனே ஆத்திரப்படாமல் நபியவர்கள், அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்
கள். பிறகு, தட்டிலிருந்த உணவை, மீண்டும் அதி லேயே எடுத்துப் போட்டார்கள்.

அங்கிருந்த தோழர்களை நோக்கி, 'உங்கள் தாய் சற்று ரோஷப்பட்டுவிட்டார், வேறொன்றும் இல்லை' என்றும் புன்னகையுடன் கூறினார்கள்.

பின்னர், அந்தப் பணியாளரை சற்று நேரம் அங்கே இருக்கச் செய்து, தாம் தங்கியிருந்த வீட்டுக்காரத் துணைவியிடம் மற்றொரு தட்டைக்கொண்டு வரச் சொல்லி, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை மாற்றாகக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள். [அனஸ் (ரளி) • புகாரி - 5225]

🍄 படிப்பினை என்ன? .............................  நாமே எழுதிக்கொள்வோம் ... 

பார்த்ததில் பிடித்தது ....

No comments:

Post a Comment