Byசுல்தான் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மரணிக்கும் போது, ஒருவர் அவரிடத்தில் வந்து,
"நீங்கள் இஸ்லாத்துக்காக எத்துனையோ #போர்களில் கலந்து கொண்டுள்ளீர்கள். ஆனால், ஒரு யுத்தத்திலாவது ஷஹீதாவில்லையே!" என்று கூறினார்கள். அதற்கு சுல்தான் அவர்கள்,
"நான் எனது வாழ்க்கை முழுவதும் ஷஹீதாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், எனது எதிரியின் வாள் எனது #கழுத்தை தொடுவதில்லை" என்றார். காரணம் வினவிய போது சுல்தான் அவர்கள்,
"எனது தந்தை சிறுவயதில் என்னை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (குத்திஸ ஸிர்ருஹ்) அவர்களிடத்தில் கொண்டு சென்றார்கள். அப்போது குதுபு நாயகம் தனது #கைகளை எனது கழுத்தில் வைத்தார்கள். குதுபு நாயகத்தின் முபாரக்கான கரங்கள் பட்ட எனது கழுத்தில் எப்படி எதிரியின் வாள் படும்?" என்று கூறினார்கள்.
அல் மதத் யா ஷெய்ஹனா...
எகிப்தில் காதிரிய்யா தரீக்கத்தின் ஸாவியாக்களை முதலில் நிறுவியவர் சுல்தான் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்,
''ஷைஅன் லில்லாஹ் யா ஷைஹ் அப்துல் காதிர் ஜீலானி'' என்று தனது ஷெய்ஹான கௌதுல் அஃழத்தின் நாமத்தை தனது வாளில் பதித்திருந்தார். அந்த #வாள் இன்றும் Topkapi நூதனசாலையில் உள்ளது.
சூஃபியாக்கள் 6
தஸ்தகீர் (ரஹ்) இவர்களது இயற்பெயர் "சையது ஷாஹ் குலாம் தஸ்தகீர் சாவி " ஈரானிலுள்ள "சவா '' என்ற ஊரில் பிறந்தார்கள் அதனால் சாவி
இவர்களை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா மஸ்ஜிதைத் திறந்து வைப்பதற்காக "நவாப் முஹம்மது அலி வாலாஜா அழைத்து வந்த போது, கிப்லா சரியாக அமையவில்லை என்று தஸ்தகீர் அவர்கள் கூறினார்கள்
ஆனால் நவாப் அதை மறுத்து சரியாகத்தான் உள்ளது என்று கூறிய போது இவர்கள் தனது தலைப்பாகையை கழற்றி நவாப் தலையில் வைத்தபோது கிப்லா தவறாக இருப்பதை நவாப் தெளிவாக உணர்ந்தார்
ஒரு முறை இவர்களின் மாணவர்கள் 4 பேர் இவர்களிடம் வந்து மனிதனின் நிலை பற்றி கேட்டார்கள்
அதற்கு "நான் மரணித்த பின் எனக்கு ஜனாஸா தொழுகை யார் தொழ வைக்கிறாரோ அவர்களிடம இந்த கேள்வியை கேளுங்கள் என்று கூறினார்கள்
அவ்வாறே சில காலம் சென்ற பின் இவர்கள் மரணித்த பின் ஜனாஸா வாலாஜா பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு யார் தொழ வைப்பது என்று பிரச்சனையாக இருந்தது
அப்போது திடீரென்று ஒரு மனிதர் தனது முகத்தை மறைத்தவாறு முக்காடு போட்டு வந்து தொழவைத்து , துஆ ஓதி முடித்த பின்பு மேற்கு பக்கம் சென்றார்கள்
அப்போது மாணவர்கள் அந்த மனிதரிடம்
அந்த கேள்வியை கேட்க சென்ற போது அங்கு இருந்த அதே தஸ்தகீர் (ரஹ்) அவர்களைப் பார்த்து மயக்க முற்று விழுந்தார்கள்
இவர்களுடைய அடக்கஸ்தலம் கிருஷ்ணாம் பேட்டையில் டாக்டர் .நடேசன் சாலையில் உள்ளது
மாணவர்கள் கேடக நினைத்த கேள்வி "மனிதனின் நிலை"
"விண்ணிலும் மண்ணிலும் வலிமார்களுக்குத் தடை என்பது கிடையாது
அவர்கள் விரும்பினால் மரணத்திற்குப் பின்னரும் தம் சொந்த உடம்புடன் இப்பூமிக்கு வர முடியும் "
- தெளதுல் அஃலம் அப்துல் காதிர் ஜிலானி
ரஹ்மத் ராஜகுமாரன்
No comments:
Post a Comment