قيل إن العلم ثلاثة أشبار :
" إذا تعلم الإنسان الشبر الأول تكبّر
ثم إذا تعلم الإنسان الشبر الثاني تواضع
ثم إذا تعلم الإنسان الشبر الثالث علم أنه لا يعلم شيئاً "
حلية طالب العلم / بكر عبد الله أبو زيد / مطبعة اليمامة ص 79
கல்வி என்பது மூன்று ஜானளவுதான்
ஒருமனிதன் முதல் ஜானளவு கல்வியைக் கற்றவுடன்
தான் கல்விமான் என கர்வம் கொள்கிறான்.
ஒரு மனிதன் இரண்டாவது ஜானளவு கல்வியைக் கற்றதும்
கர்வம் நீங்கி பணிவுடையவனாகிறான்.
ஒரு மனிதன் மூன்றாவது ஜானளவு கல்வியைக் கற்றதும்
தான் ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கற்றுக்கொள்கிறான்.
இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்;
எனக்கு கல்விஞானம் அதிகரித்தபோதெல்லாம்
எனது அறியாமைப் பற்றி புரிதலும்
எனக்கு அதிகரித்தது.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹ் அன்ஹுமா அவர்கள் சொல்கிறார்கள்
தன்னை ஒரு கற்றறிந்த அறிஞன் என எண்ணத்துவங்கிய நிமிடம்
ஒரு மனிதன் முட்டாளாகிறான்.
---கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில்மன்பஈ
No comments:
Post a Comment