ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Monday, 27 February 2017

நபிகளாரின் மரணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு

*அண்ணலாரின் வருகை அகிலத்திற்கு ஓர் அருட் கொடை!*

- தொடர் 85

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🌝 ரிலாக்ஸ் மார்னிங் 🌞

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*மரணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு*

மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு புதன்கிழமை
உடல் நெருப்பாய் கொதித்தது.
வலியும் அதிகமானது. அவ்வப்போது நபி صلى الله عليه وسلم
அவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டது. அப்போது “பல
கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து ஏழு துருத்திகள் என் மீது ஊற்றுங்கள். நான் மக்களிடம்
சென்று ஒப்பந்தம் வாங்கப் போகிறேன்” என்று கூறினார்கள். தோழர்கள் நபி صلى الله عليه وسلم  அவர்களை ஒரு பெரிய பாத்திரத்தில் அமர வைத்து நீர்
ஊற்றினார்கள். நபி صلى الله عليه وسلم  “போதும்! போதும்!” என்று
கூறினார்கள். அப்போதுதான் நபி صلى الله عليه وسلم  அவர்களின்
சூடு தணியக் கண்டார்கள். தலையில் தடிப்பான
துணியைக் கட்டிக் கொண்டு போர்வையைப்
போர்த்தியவர்களாக மிம்பரில் வந்து அமர்ந்தார்கள்.
அதுதான் நபி صلى الله عليه وسلم  அவர்களின் கடைசி சபையாகும்.

அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு “மக்களே!
என்னிடம் வாருங்கள்” என்று கூறியபோது மக்கள் நபி صلى الله عليه وسلم  அவர்களை நோக்கி விரைந்து வந்தனர். அப்போது நபி صلى الله عليه وسلم  கூறியவற்றில் இதுவும் ஒன்று. “யூத
கிருஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம்
ஏற்படட்டும்! தங்களின் தூதர்களுடைய அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றி விட்டனர்.” மற்றொரு அறிவிப்பில்:
“யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ்
அழிப்பானாக! தங்களது தூதர்கள் அடக்கம்
செய்யப்பட்ட இடங்களை வணங்கும்
இடங்களாக மாற்றி விட்டனர். எனது கப்ரை வணங்கும் இடமாக ஆக்காதீர்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, முவத்தா மாலிக்)

தன்னிடம் பழிதீர்த்துக் கொள்ள மக்களிடம்
தன்னை ஒப்படைத்தார்கள். யாரையாவது நான்
முதுகில் அடித்திருந்தால் இதோ எனது முதுகை தந்து
விட்டேன். பழி தீர்க்கட்டும். யாரையாவது
கண்ணியம் குலைய திட்டியிருந்தால் இதோ நான் முன்
வந்துள்ளேன். அவர் பழிதீர்த்துக்
கொள்ளட்டும். பின்பு மிம்பலிருந்து இறங்கி
ளுஹ்ரைத் தொழ வைத்தார்கள். மீண்டும்
மிம்பரில் ஏறி முன்னர் உரை நிகழ்த்தியவாறே பழி தீர்த்துக் கொள்ள வேண்டுவோர் பழி தீர்க்கக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து “எனக்கு நீங்கள் மூன்று திர்ஹம் தர வேண்டும்” என்று கூறவே, “ஃபழ்லே!
நீங்கள் அதைக் கொடுத்து விடுங்கள்” என்று நபி صلى الله عليه وسلم  கூறினார்கள்.
பின்னர் அன்சாரிகளைப் பற்றி விசேஷமாக
சிறப்பித்துக் கூறினார்கள்: “அன்சாரிகளைப் பற்றி
நான் விசேஷமாக அறிவுரை கூறுகிறேன். அவர்கள் எனது ஈரலும் இதயமும் ஆவார்கள். அவர்கள் தங்களது கடமையை நிறைவேற்றி விட்டார்கள்.
அவர்களுடைய உரிமையும், சலுகையும் மீதமிருக்கிறது.
அவர்களில் நல்லோர்களின் செயலை ஏற்றுக்
கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்போரை
மன்னியுங்கள்.”

மற்றொரு அறிவிப்பில்,
“மக்கள் அதிகமாகினர். ஆனால் அன்சாரிகள்
குறைகின்றனர். இறுதியில் அவர்கள் உணவில் உள்ள
உப்பைப் போன்று குறைந்து விடுவார்கள். உங்களில்
ஒருவர் மற்றவருக்கு நன்மையோ, தீமையோ செய்யும்
அளவு அதிகாரம் பெற்றால்,
அன்சாரிகளில் நல்லோன் சொல்லை
ஏற்கட்டும். அவர்களில் தவறிழைப்போரை மன்னிக்கட்டும்.
(ஸஹீஹுல் புகாரி)

இவ்வாறு உபதேசம் செய்த பின்பு “ஓர்
அடியாருக்கு இவ்வுலகில் உள்ளவற்றை உங்களுக்கு
வழங்கட்டுமா? அல்லது மறுமையில்
என்னிடமுள்ளவற்றை உங்களுக்குத் தரட்டுமா? என்று
அல்லாஹ் வினவ, அதற்கு அந்த அடியாரின்
அல்லாஹ்விடமுள்ளதையே தேர்ந்தெடுத்துக்
கொண்டார்” என்று நபி صلى الله عليه وسلم
கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூ சயீத் رضي الله عنه  கூறுவதாவது:
நபி صلى الله عليه وسلم  அவர்களின் இப்பேச்சைக் கேட்ட அபூபக்ர் رضي الله عنه
அழ ஆரம்பித்து “எங்களது தந்தையரையும்
தாய்மாரையும் உங்களுக்கு அர்ப்பணமாக்குகிறோம்”
என்று கூறினார்கள். நாங்கள் அவரைக் கண்டு ஆச்சரியமுற்றோம். “இம்முதியவரைப் பாருங்கள்!
அல்லாஹ் ஓர் அடியாருக்கு உலக வசதிகளை
வழங்கட்டுமா? அல்லது தன்னிடம் மறுமையில்
உள்ளதை வழங்கட்டுமா என வினவினான்
என்றுதான் நபி صلى الله عليه وسلم  கூறினார்கள். அதற்குத்
தந்தையரும் தாய்மாரும் அர்ப்பணம் என்று
கூறுகிறாரே?” என்று மக்கள் பேசினர். அபூபக்ர் رضي الله عنه
எங்களில் மிகுந்த அறிஞராக இருந்தார்.
எனவேதான் இவ்வாறு கேட்கப்பட்ட அடியார்
இந்தத் தூதர்தான் என்பதை புரிந்து
கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி,
ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் நபி صلى الله عليه وسلم  கூறினார்கள்: “தனது நட்பாலும்
பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர் அபூபக்ர் ஆவார்.
என் இறைவனே! உன்னைத் தவிர
மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக்
கொள்வதாக இருந்தால் அபூபக்ரை உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன். என்றாலும் அவருடன்
இஸ்லாமிய சகோதரத்துவமும் அதன் நேசமும் எனக்கு இருக்கிறது. பள்ளியிலுள்ள எல்லா வீட்டினுடைய
வாசல் கதவுகளும் அடைக்கப்பட வேண்டும்
அபூபக்ருடைய வீட்டு வாசலைத் தவிர!” (ஸஹீஹுல்
புகாரி)

*நான்கு நாட்களுக்கு முன்பு*

மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்,
வியாழக்கிழமை நபி صلى الله عليه وسلم  அவர்களுக்கு வலி
கடுமையானது. மக்களை நோக்கி “வாருங்கள்! நான்
உங்களுக்கு ஒன்றை எழுதித் தருகிறேன். அதன்பின்
ஒருக்காலும் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
அப்போது வீட்டில் இருந்த பலல் உமர் رضي الله عنه  அவர்களும் ஒருவர். “நபி صلى الله عليه وسلم  அவர்களுக்கு வலி
அதிகமாகிவிட்டது. உங்களிடம் குர்ஆன் இருக்கிறது.
அல்லாஹ்வின் வேதமே உங்களுக்குப் போதுமானது”
என்று உமர் رضي الله عنه  மக்களிடம் கூறினார்கள்.
இதனால் அங்கிருந்தவர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை
நிலவியது. சிலர் “நபி صلى الله عليه وسلم  நமக்கு எழுதித் தரட்டும்”
என்று கூற, மற்றும் சிலர் உமர் رضي الله عنه  கூறியது போல
கூறினார்கள். இரு சாரார்களிடையே கருத்து வேற்றுமை
விவாதமாக மாறவே “நீங்கள் இப்போது
என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்” என நபி صلى الله عليه وسلم  கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அன்றைய தினம் நபி صلى الله عليه وسلم மூன்று   விஷயங்களை
குறிப்பிட்டார்கள்:
1) யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிக்குகள் ஆகியோரை
அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்ற
வேண்டும்.
2) இங்கு வருகை தரும் மக்களை நான் கவனித்து
உபசரித்தவாறே நீங்களும் உபசரித்து விருந்தோம்பல்
செய்ய வேண்டும்.
3) மூன்றாவது விஷயத்தை அறிவிப்பாளர்
மறந்துவிட்டார். அது இம்மூன்றில் ஒன்றாக
இருக்கலாம்: 1) அல்லாஹ்வின் வேதத்தையும் நபி
வழியையும் நன்றாகப் பிடித்துக்
கொள்ளுங்கள். 2) உஸாமாவின் படையை
அனுப்பி விடுங்கள். 3) தொழுகையையும் நீங்கள்
உரிமையாக்கிக் கொண்டவர்களையும்
பேணுங்கள்.
தனக்கு நோய் கடினமாக இருந்தும் அன்றைய தினத்தின்
(மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்
வியாழக்கிழமை) தொழுகை அனைத்தையும் நபி صلى الله عليه وسلم
அவர்களே தொழ வைத்தார்கள்.
அன்றைய தினத்தின் மஃரிபு தொழுகையில் ‘வல் முர்ஸலாதி
உர்ஃபன்’ என்ற சூராவை ஓதித்
தொழ வைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அன்றைய தினம் இஷா நேரத்தில் மேலும் நோயின் வேகம் அதிகமானது.
நபி صلى الله عليه وسلم  அவர்களால் பள்ளிக்கு
வரமுடியவில்லை. இந்நிலையைப் பற்றி ஆயிஷா رضي الله عنها
கூறுவதைக் கேட்போம். “மக்கள்
தொழுதார்களா?” என நபி صلى الله عليه وسلم
கேட்டார்கள். “இல்லை இறைத்தூதரே! தங்களை
எதிர்பார்க்கிறார்கள்” என்றோம். எனக்காக ஒரு பாத்திரத்தில்
தண்ணீர் வையுங்கள் எனக் கூற, நாங்கள்
தண்ணீர்  வைத்தோம். நபி صلى الله عليه وسلم  குளித்து  விட்டு
செல்வதற்கு முனைந்தார்கள். ஆனால், அவர்களை
மயக்கம் ஆட்கொண்டது. சிறிது
நேரத்திற்குப் பிறகு மயக்கம் தெளிந்து “மக்கள்
தொழுதார்களா?” என்றார்கள்.
நாங்கள் முதலில் கூறியது போல் இம்முறையும் பதில்
கூறினோம். மீண்டும் தண்ணீர் வரவழைத்து முன்னர் போல
குளித்தார்கள். பிறகு, நபி صلى الله عليه وسلم  அபூபக்ரை
தொழ வைக்கும்படி கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அப்போதிலிருந்து பதினேழு நேர தொழுகைகளை நபி صلى الله عليه وسلم
நோயுடன் இருக்கும் போது அபூபக்ர் رضي الله عنه மக்களுக்குத் தொழ
வைத்தார்கள்.
(வியாழன் இஷாவிலிருந்து திங்கட்கிழமை ஃபஜ்ரு
தொழுகை வரை) “இந்நாள்களில் அபூபக்ர் رضي الله عنه  அவர்களைத் தொழ வைக்க
சொல்ல வேண்டாம், காரணம், மக்கள்
அதைத் துர்குறியாக எடுத்துக் கொள்வர்”
என ஆயிஷா رضي الله عنها  மூன்று அல்லது நான்கு முறை
நபி صلى الله عليه وسلم  அவர்களிடம் கூறினார்கள். நபி صلى الله عليه وسلم அதனை
மறுத்து விட்டார்கள். “நீங்கள் தானே
யூசுஃபுடைய அந்தத் தோழிகள். அபூபக்ரே மக்களுக்கு
தொழ வைக்கட்டும்” என நபி صلى الله عليه وسلم
கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ்
முஸ்லிம்)

*அண்ணலாரின் வருகை அகிலத்திற்கு ஓர் அருட் கொடை!*

- தொடர் 86

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🌝 ரிலாக்ஸ் மார்னிங் 🌞

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋

*மூன்று  நாட்களுக்கு முன்பு...*

நபி صلى الله عليه وسلم  இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு
கூற, தான் கேட்டதாக ஜாபிர் رضي الله عنه
அறிவிக்கிறார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்!
உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது
நல்லெண்ணம் கொண்டவராகவே
தவிர மரணிக்க வேண்டாம்.” (தபகாத் இப்னு
ஸஅது, முஸ்னத் அபூதாவூது, முஸ்னத் அபூ யஃலா)

*இரண்டு  அல்லது ஒரு நாளுக்கு முன்பு...*

அது சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை. நபி صلى الله عليه وسلم
உடல் நலனில் முன்னேற்றத்தை
உணர்ந்தார்கள், இரண்டு பேர் உதவியுடன் தங்களது
அறையிலிருந்து பள்ளிக்கு வந்தார்கள். அப்போது அபூபக்ர் رضي الله عنه ளுஹ்ர் தொழ வைத்துக்
கொண்டிருந்தார்கள். நபியவர்களை அபூபக்ர் رضي الله عنه  பார்த்தவுடன் நகர்ந்து கொள்ள
முயன்றார்கள். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என
சைகை செய்தார்கள். பிறகு, என்னை
அபூபக்ர் அருகில் அமர வையுங்கள் என்று கூற, அவர்களை
அபூபக்ரின் இடப்பக்கத்தில் உட்கார
வைத்தார்கள். நபி صلى الله عليه وسلم தொழ வைக்க அவர்களின்
தொழுகையைப் பின்பற்றி அபூபக்ர் رضي الله عنه  தொழது  கொண்டு,
நபியவர்களின் தக்பீரை மக்களுக்கு கேட்கும்படி
சப்தமிட்டுக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

*ஒரு  நாள் முன்பு...*

நபி صلى الله عليه وسلم  மரணிப்பதற்கு ஒரு நாள் முன்பு,
அதாவது ஞாயிற்றுக்கிழமை தங்களிடமுள்ள
அடிமைகளை அனைத்தையும் உரிமையிட்டார்கள். மேலும்,
தங்களிடமுள்ள ஆறு அல்லது ஏழு தங்கக் காசுகளைத்
தர்மம் செய்தார்கள். தங்களுடைய
ஆயுதங்களையும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக
வழங்கினார்கள். அன்றிரவு நபி صلى الله عليه وسلم  அவர்களின்
வீட்டிலுள்ள விளக்கில் எண்ணெய் தீர்ந்து போகவே அதை ஒரு
பெண்ணிடம் கொடுத்தனுப்பி
அண்டை வீட்டாரிடம் எண்ணெயிட்டுத் தரும்படி
ஆயிஷா رضي الله عنها  கூறினார்கள். நபி صلى الله عليه وسلم
அவர்களின் கவச ஆடை முப்பது ‘சாஃ’ கோதுமைக்காக
ஒரு யூதனிடம் அடைமானமாக வைக்கப்பட்டிருந்தது.

*வாழ்வின் இறுதி நாள்*

அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه  அறிவிக்கிறார்கள்:
திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்ர் رضي الله عنه
அவர்களைப் பின்தொடர்ந்து ஃபஜ்ர்
தொழுது கொண்டிருக்கும் போது
திடீரென ஆயிஷாவுடைய அறையின் திரையை நபி صلى الله عليه وسلم
அவர்கள் நீக்கி மக்கள் அணி அணியாக
தொழுகையில் நிற்பதைப் பார்த்து
ஆனந்தமாகச் சிரித்தார்கள். தொழ
வைப்பதற்கு நபி صلى الله عليه وسلم  வருகிறார்கள் என்று எண்ணி
அபூபக்ர் رضي الله عنه  அவர்கள், தொழ வைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி
நகர்ந்தார்கள். நபி صلى الله عليه وسلم  அவர்களின் வருகையைப்
பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள்
தொழுகையில் நிலை குலைய ஆரம்பித்தனர். நபி صلى الله عليه وسلم அவர்கள் ‘உங்களது தொழுகையை
முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று
கூறிவிட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக்
கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு
தொழுகை நேரம் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு
கிட்டவில்லை. முற்பகல் நேரம் வந்தவுடன் நபி صلى الله عليه وسلم
ஃபாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை
இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன்
ஃபாத்திமா رضي الله عنها  அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக் கூறவே
ஃபாத்திமா رضي الله عنها  சிரித்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா رضي الله عنها  கூறுவதாவது:
இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள்
ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி صلى الله عليه وسلم
கூறியபோது நான் அழுதேன். அவர்களது
குடும்பத்தாரில் நான்தான் முதலில் அவர்களை
சென்றடைவேன் என்று நபி صلى الله عليه وسلم  கூறியபோது நான்
சிரித்தேன்” என்று ஃபாத்திமா رضي الله عنها பதில் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி)

மேலும், “அகில உலக பெண்களின் தலைவி
ஃபாத்திமா” என்று நபி صلى الله عليه وسلم   நற்செய்தி
கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)
நபி صلى الله عليه وسلم  அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான
நிலைமையைக் கண்ட ஃபாத்திமா رضي الله عنها  “எனது தந்தைக்கு
ஏற்பட்ட கஷ்டமே!” என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு
இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது
என்று நபி صلى الله عليه وسلم  ஆறுதல் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி)

ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு
அவர்களுடன் நல்ல முறையில் நடந்து
கொள்ள வேண்டுமென
அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து
அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும்
நல்கினார்கள்.
முன்பை விட  வேதனை அதிகமானது. கைபர் போரின் போது
உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட
விஷத்தின் விளைவை நபி صلى الله عليه وسلم  உணர
ஆரம்பித்தார்கள். “ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட
உணவின் வேதனையை அனுபவித்துக்
கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த
விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை
நான் உணர்கிறேன்” என்று நபி صلى الله عليه وسلم  கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி)

தங்கள் முகத்திலிருந்த போர்வையை நபி صلى الله عليه وسلم தூக்கி
எறிந்தார்கள். அவர்கள் மீது திரும்ப போர்த்தினால்
முகத்தில் இருப்பதை மட்டும் அகற்றி விடுவார்கள்.
இந்நிலையில் சிலவற்றை நபி صلى الله عليه وسلم  கூறினார்கள்.
அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது:

அல்லாஹ்வின் சாபம் யூத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்!
அவர்கள் தங்களது
இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை
வணங்குமிடமாக மாற்றிக்
கொண்டார்கள். அரபிகளின் பூமியில்
இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது " (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்)

தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக்
கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள்
என்று பலமுறை அறிவுறுத்தினார்கள். (ஸஹீஹுல் புஹாரி

*மரணத் தருவாயில்...*

இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா رضي الله عنها நபி صلى الله عليه وسلم  அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக்
கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா رضي الله عنها  கூறுவதாவது:
“நபி صلى الله عليه وسلم  என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில்
மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று
சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக்
இருந்தது. நபி صلى الله عليه وسلم  அவர்களை எனது மடியில்
கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள
மிஸ்வாக்கை நபி صلى الله عليه وسلم  அவர்கள் பார்த்தார்கள்.
அவர்கள் மிஸ்வாக் செய்ய
விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன்.
“நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?” என்று கேட்டபோது, “ஆம்!” என தலை அசைத்தார்கள்.
அதனை வாங்கிக் கொடுத்தேன். அது
அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது.

“நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?” என்று
கேட்டேன். தலை அசைத்து “ஆம்!” என்றார்கள். நான்
அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.”
இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: “நபி صلى الله عليه وسلم  மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல்
துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக்
கொண்டார்கள்.
“லாஇலாஹ இல்லல்லாஹ் இன்னலில்
மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.
மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன”
என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை
உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள்
என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா رضي الله عنها அவர்கள்
செவிதாழ்த்திக் கேட்டார்கள்.
நபி صلى الله عليه وسلم  அப்போது “இறைத்தூதர்கள்,
வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள்,
நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்...
அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன்
என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே!
உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி)

கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி صلى الله عليه وسلم
கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை
சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள்.
இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.

ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை
முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம்
ஏற்பட்டது. அப்போது நபி صلى الله عليه وسلم  அவர்களுக்கு 63
வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.
கவலையில் நபித்தோழர்கள்
நபி صلى الله عليه وسلم  அவர்களின் மரணச் செய்தி எங்கும்
பரவியது. மதீனா இருண்டுபோனது. இதைப் பற்றி “நபி صلى الله عليه وسلم  எங்களிடம் வந்த தினத்தை விட மிக அழகிய,
ஒளிமிகுந்த நாளை நான் கண்டதில்லை. நபி صلى الله عليه وسلم
மரணித்த தினத்தைவிட இருண்ட, வெறுப்பான
நாளை நான் கண்டதில்லை” என அனஸ் رضي الله عنه
கூறுகிறார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)

ஃபாத்திமா رضي الله عنها  “எனது தந்தையே! அழைத்த
இறைவனுக்கு பதில் அளித்துவிட்டீரே! எனது தந்தையே!
ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தங்களின்
தங்குமிடமாயிற்றே! எனது தந்தையே! உங்களின்
மரணச் செய்தியை நாங்கள் ஜிப்ரயீலிடம் கூற வேண்டுமே" எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரி )

*உமரின் நிலை*

உமர் رضي الله عنه  எழுந்து நின்று “சில நயவஞ்சகர்கள் நபி صلى الله عليه وسلم  இறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றனர்.
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை
மூஸா இப்னு இம்ரான் عليه السلام அவர்கள்  அல்லாஹ்வைச்
சந்திக்கச் சென்று நாற்பது நாட்கள் தனது
சமூகத்தாரை விட்டு மறைந்து இருந்த போது மக்கள்
மூஸா மரணித்து விட்டார் என எண்ணினார்கள்.
ஆனால், மூஸா عليه السلام திரும்பி வந்தார்கள்.
அவ்வாறே நபியவர்களும் தன் இறைவனைச் சந்திக்கச்
சென்றுள்ளார்கள். அல்லாஹ்வின் மீது
ஆணையாக! நபி صلى الله عليه وسلم  நிச்சயம் திரும்ப வருவார்கள்.
தான் மரணித்து விட்டதாகக்
கூறியவர்களின் கைகளையும் கால்களையும்
வெட்டுவார்கள்?” எனக் கூறினார்கள். (இப்னு
ஹிஷாம்)

*அபூபக்கரின் நிலை*

அபூபக்ர் رضي الله عنه  இந்நேரத்தில் மஸ்ஜிது நபவியிலிருந்து சற்று
தொலைவிலுள்ள ‘சுன்ஹ்’ என்ற
இடத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தத் துக்கமான
செய்தியைக் கேட்டவுடன் தனது
குதிரையில் ஏறி மஸ்ஜிது நபவிக்கு வந்து, யாரிடமும்
பேசாமல் நபி صلى الله عليه وسلم  அவர்களைக் காண்பதற்காக
ஆயிஷாவின் அறை நோக்கி நடந்தார்கள். நபி صلى الله عليه وسلم
ஹிபரா நாட்டு ஆடையால்
போர்த்தப்பட்டிருந்தார்கள். நபி صلى الله عليه وسلم  அவர்களின்
முகத்திலிருந்து போர்வையை அகற்றி முகத்தைக் கட்டிப்பிடித்து
முத்தமிட்டு அழலானார்கள். “என் தாயும் தந்தையும்
தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்.
அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணத்தைத்
தரமாட்டான். அல்லாஹ் உங்களுக்கு விதித்த முதல்
மரணத்தையே நீங்கள் அடைந்து
கொண்டீர்கள்” என்றும் கூறினார்கள்.
பின்பு அறையிலிருந்து வெளியேறி அபூபக்ர் رضي الله عنه மஸ்ஜிது நபவிக்கு வந்தார்கள். அங்கு உமர் رضي الله عنه
மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அபூபக்ர் رضي الله عنه “உமரே! அமருங்கள்”
என்றுரைத்தும் உமர் رضي الله عنه  அமர மறுத்து விட்டார்கள்.
அபூபக்ர் رضي الله عنه  மிம்பரில் ஏறி சப்தமிட்டு தஷஹ்ஹுத்
முழங்கினார். மக்கள் உமர் رضي الله عنه  அவர்களை விட்டு
நீங்கி அபூபக்ர் رضي الله عنه  அவர்களை நோக்கி விரைந்தனர்.
அப்போது அபூபக்ர் رضي الله عنه “உங்களில் யார் முஹம்மதை
வணங்கிக் கொண்டிருந்தாரோ! நிச்சயம்
முஹம்மது மரணித்தார் என்பதைத் தெரிந்து
கொள்ளட்டும்! உங்களில் யார்
அல்லாஹ்வை வணங்கினாரோ! நிச்சயமாக
அல்லாஹ் என்றென்றும் உயிருடன்
இருப்பவன் மரணிக்க மாட்டான். அல்லாஹ்
கூறுகிறான்:
முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல்
இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும்
(இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர்.
அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு
விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று
விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச்
சென்று விட்டால் அதனால் அவன்
அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி
விடமாட்டான். நன்றி அறிபவர்களுக்கு
அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத்
தருவான். (அல்குர்ஆன் 3:144)
என்று உரையாற்றினார்கள்.

இப்னு அப்பாஸ் رضي الله عنه  கூறுகிறார்கள்: “அபூபக்ர் رضي الله عنه
இந்த வசனத்தை ஓதிக் காட்டும் வரை
அல்லாஹ் இதனை இறக்கி வைத்ததை மக்கள் அறியாதது
போல் இருந்தனர். அபூபக்ரிடமிருந்து அதை செவியேற்ற
மக்கள் அதனையே திரும்பத் திரும்ப
ஓதினர்.”

இப்னுல் முஸய்ம்ப் رضي الله عنه  கூறுகிறார்:
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் رضي الله عنه அந்த
வசனத்தை ஓதியவுடன் அவர்கள்
கூறுவதுதான் உண்மை என நான் அறிந்து கொண்டேன்.  என்னுடைய கால்கள் சோர்ந்து
என்னால் நிற்க இயலவில்லை. அப்படியே பூமியில்
சாய்ந்து விட்டேன். நபி صلى الله عليه وسلم  இறந்து விட்டார்கள்
என்பதையும் அறிந்து
கொண்டேன்.” (ஸஹீஹுல் புகாரி)

Shaik Adam Dawoodi:
*அண்ணலாரின் வருகை அகிலத்திற்கு ஓர் அருட் கொடை!*

- தொடர் 88

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🌝 ரிலாக்ஸ் மார்னிங் 🌞

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*அடக்கம் செய்ய ஏற்பாடுகள்*

நபி صلى الله عليه وسلم  அவர்களை அடக்கம் செய்வதற்கு
முன்னதாக முஸ்லிம்களின் காரியங்களை
நிர்வகிக்கும் கலீஃபாவை நிர்ணயம் செய்வதில்
மக்கள் ஈடுபட்டனர். பனூ சாம்தாவின் வீட்டு வராண்டாவில் இது தொடர்பாக நடந்த விவாதங்களுக்கும் கருத்து
பரிமாற்றங்களுக்கும் பிறகு, முஹாஜிர்களும்
அன்சாரிகளும் ஒரு மனதாக அபூபக்ரை
கலீஃபாவாக நிர்ணயித்தனர். இந்த வேலையில்
திங்கட்கிழமையின் பகல் முழுதும் முடிந்து இரவும் முழுமையாக முடிந்தது.
அது வரை நபி صلى الله عليه وسلم  அவர்களின் புனித உடல் ஹிபரா போர்வையுடன்
இருந்தது. நபி صلى الله عليه وسلم  அவர்களின் குடும்பத்தார்கள்
அறையை மூடி வைத்திருந்தனர். செவ்வாய் பகல்
அன்று நபி صلى الله عليه وسلم  அவர்களின் ஆடையைக் களையாமல்
அப்படியே குளிப்பாட்டினர்.

இப்பணியில் அப்பாஸ், அலீ, ஃபழ்ல் இப்னு
அப்பாஸ், குஸம் இப்னு அப்பாஸ், நபி صلى الله عليه وسلم
அவர்களின் முன்னாள் அடிமை ஷுக்ரான்,
உஸாமா இப்னு ஜைத், அவ்ஸ் இப்னு கவ்லீ رضي الله عنهم ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்பாஸ், ஃபழ்ல், குஸம் رضي الله عنهما  ஆகியோர் நபி صلى الله عليه وسلم  அவர்களின் உடலைப் புரட்ட, உஸாமாவும்
ஷுக்ரானும் நீர் ஊற்ற, அலீ رضي الله عنه
குளிப்பாட்டினார்கள். அவ்ஸ் رضي الله عنه  நபி صلى الله عليه وسلم
அவர்களை தனது நெஞ்சின் மீது
சாய்த்திருந்தார்கள். (இப்னு மாஜா)

இவ்வாறே இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை
குளிப்பாட்டினார்கள். நபி صلى الله عليه وسلم  அவர்களைக்
குளிப்பாட்டுவதற்காக ஸஅதுப்னு கைஸமாவுக்குச்
சொந்தமான ‘கர்ஸ்’ என்ற கிணற்றிலிருந்து
நீர் கொண்டு வரப்பட்டது. இந்நீரையே நபி صلى الله عليه وسلم வாழ்நாளில் அருந்தி வந்தார்கள்.
(தபகாத் இப்னு ஸஅத்)

நபி صلى الله عليه وسلم  அவர்களை வெள்ளை நிற யமன்
நாட்டு பருத்தி ஆடையினால் (கஃபன்)
போர்த்தினார்கள். அதில் தைக்கப்பட்ட சட்டையோ
தலைப்பாகையோ ஏதுமில்லை. (ஸஹீஹுல் புகாரி,
ஸஹீஹ் முஸ்லிம்)

*அடக்கம்  செய்வது*

நபி صلى الله عليه وسلم  அவர்களை எங்கு அடக்கம் செய்வது
என்று கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்ர் رضي الله عنه
“இறைத்தூதர்களின் உயிர் எங்கு பிரிகிறதோ அங்குதான்
அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்”
என்று நபி صلى الله عليه وسلم  கூற, நான் கேட்டிருக்கிறேன்
என்றார்கள். உடனடியாக நபி صلى الله عليه وسلم மரணித்த
இடத்திலுள்ள விரிப்பை அகற்றி அங்கேயே அபூ தல்ஹா رضي الله عنه
குழி தோண்டி அதில் பக்கவாட்டில் ஒரு குழி
அமைத்தார்கள். மக்கள் பத்து பத்து பேர்
கொண்ட கூட்டம், கூட்டமாக நபி صلى الله عليه وسلم அவர்களின்
அறைக்குள் சென்று தனித்தனியாக
தொழுதார்கள்.
முதலில் நெருங்கிய குடும்பத்தார்களும், பின்பு
முஹாஜிர்களும், அடுத்து அன்சாரிகளும்,
தொடர்ந்து சிறுவர்களும், பின்னர்
பெண்களும் தொழுதனர். சிலர்,
“பெண்கள் முதலிலும் அடுத்து சிறுவர்களும்
தொழுததாக அறிவிக்கின்றனர்.
(முவத்தா மாலிக், தபகாத் இப்னு ஸஅத்)

இதே நிலையில் செவ்வாயும் முழுமையாக கழிந்து
புதன் இரவின் பெரும் பகுதி கழிந்தது.

இதைப் பற்றி
ஆயிஷா رضي الله عنها  கூறுகிறார்கள்:
“இரவின் நடுநிசியில் மண்வெட்டிகளின் சப்தத்தை
வைத்தே நபி صلى الله عليه وسلم  அடக்கம் செய்யப்பட்டதை
அறிந்து கொண்டோம்.”
இரவின் கடைசிப் பகுதியில் நல்லடக்கம்
நடைபெற்றதாகவும் ஓர் அறிவிப்பு உள்ளது.
(முஸ்னது அஹ்மது)

இன்ஷா அல்லாஹ்
இன்னும் தொடரும்....

தொகுப்பு...

S. S.  ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

9715394186

9688781800.

No comments:

Post a Comment