ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Monday, 28 May 2018

ஓட்டைப் பை

🉐 *ஓட்டைப் பை* 🉐

❓ _*நான் நம்முடைய நன்மைகளை ஓட்டைப் பையிலா சேகரிக்கிறோம் *_❓

#⃣ *ஓட்டைப் பையைப் பற்றி ஜாக்கிரதையாக இருந்துக் கொள்ளுங்கள்* #⃣

👉நீங்கள் அழகிய முறையில் *ஒளூ செய்கிறீர்கள்*...
❗ஆனால் *அதிகமான நீரை வீணாக்குகின்றீர்கள்* _(ஓட்டைப் பை)_🉐

👉நீங்கள் அதிகமாக *ஏழைகளுக்கு தர்மம் செய்கிறீர்கள்* ,
❗ஆனால் நீங்கள் அவர்களை *அவமானமும், வருந்தவும் செய்கிறீர்கள்*
_(ஓட்டைப் பை)_🉐

👉நீங்கள் *தஹஜ்ஜத் தொழுது, நோன்பு நோற்று அல்லாஹ்வுக்கு கட்டுபடவும் செய்கிறீர்கள்* ,
❗ஆனால் நீங்கள் உங்கள் *உறவுகளை துண்டித்து விட்டீர்கள்*. _(ஓட்டைப் பை)_🉐

👉நீங்கள் *நோன்பு நோற்று பொறுமையுடன் பசியையையும் தாகத்தையும் பொறுத்துக் கொள்கிறீர்கள்*,
❗ஆனால் நீங்கள் *பிறரை சபிக்கவும், அவமதிக்கவும் செய்கிறீர்கள்* _(ஓட்டைப் பை)_🉐

👉நீங்கள் *அபாயா அணிந்து ஹிஜாபைப் பேணுகிறீர்கள்*,
❗ஆனால் நீங்கள் *வலுவான வாசனைத் திரவியம் பூசுகிறீர்கள்* _(ஓட்டைப் பை)_🉐

👉நீங்கள் *குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் நேரம் செலவு செய்கிறீர்கள்*,
❗ஆனால் உங்கள் *அண்டை வீட்டாருக்கு நேரம் இல்லை. அவர்களை யாரென்றுகூட தெரிவதில்லை* _(ஓட்டைப் பை)_🉐

👉நீங்கள் *உங்களது விருந்தினர்களுக்கு மரியாதை செய்கிறீர்கள்*,
❗ஆனால் *அவர்கள் வீட்டை விட்டு சென்றதும் அவர்களைப் பற்றி புறம் பேசுகிறீர்கள்* _(ஓட்டைப் பை)_🉐

❗ *சுப்ஹானல்லாஹ்* _ நம்மை விட எவரும் நம்மை எடை போட்டு விட முடியாது, நமது நன்மைகள் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் சிறந்த முறையில் செல்கிறதா அல்லது நாம் நமது நன்மைகளை ஓட்டைப் பையில் சேகரிக்கிறோமா என்பதைப் பற்றி_*❓

⏰ஒரு நினைவூட்டல் முதலில் எனக்கும் பின்பு உங்களுக்குமாக⏰

No comments:

Post a Comment